அட்சரம் 18

பழிகள் உரைக்காப் பக்குவமும் பிரிவின் வழிகளுக்கு வரையறையும் கசப்புகள் அகற்றும் கால அவகாசமும் நிதானமாய் அறிந்தனர் தமது நிசப்தம்தனில்! -அட்சரனின் வேதா இலக்கியாவுக்கு அத்துணை கோபம்! சஞ்சய் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் வீட்டுக்குக் கிளம்பினாள் அவள். “அவன் கோவத்துல கத்துறது புதுசாடி? அதுக்குப் போய் மூஞ்சைத் தூக்கிட்டுக் கிளம்புற” என்று அவளைத் தடுக்கப் பார்த்தான். “வழி விடு சஞ்சய்! இருக்குற கடுப்புல உன்னைக் கடிச்சிடுவேன் பாத்துக்க” மிரட்டியவளைக் கண்டு அவன் அஞ்சுவானா என்ன? “அது புருசன் பொண்டாட்டி … Continue reading “அட்சரம் 18”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 17.2

சதானந்தன் எப்படி கேப் புக் செய்யவேண்டுமெனச் சொல்லிக் கொடுத்தார் அவளுக்கு. “பைக் டாக்சியும் இருக்கு இதுல. உனக்குக் கார், ஆட்டோ, பைக் எது வசதியோ அதுல போகலாம். இப்ப நீயே புக் பண்ணு பாப்போம்” வேதவதியின் மனம் படபடவென அடித்துக்கொண்டது. எப்படியோ திருமூர்த்தி நகரிலிருந்து ஆழ்வார்ப்பேட்டைக்கு ரைட் ஒன்றை புக் செய்தாள். “பணம் எப்பவுமே லொகேசனுக்குப் போய் இறங்குனதுக்கு அப்புறமா பே பண்ணும்மா.” சிறிது நேரத்தில் ஆட்டோ வரவும் ஓ.டி.பி-யைச் சொல்லிவிட்டு ஏறினாள். “பத்திரமா போயிட்டு வாம்மா” … Continue reading “அட்சரம் 17.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 17.1

பிணைந்தவர் காதலில் பிழையெனத் தன்னை, இணைந்தவர் நடுவே இடியென உணர்ந்தாள்! உருகிய நேசத்தில் உதித்ததோர் தடையாய், கருகிய நெஞ்சோடு கலங்கினாள் பாவை! -அட்சரனின் வேதா “பரிட்சை எழுதக் கூட இங்க வர விருப்பமில்லனா அந்தளவுக்கு என் மக மனசு விட்டுப் போயிருச்சாங்க?” கனகவல்லி கலக்கத்தோடு கஜேந்திரனிடம் கேட்டார். முகத்தில் வாட்டம். “ஏன் அத்தை அப்பிடி யோசிக்குறீங்க? நான்தான் அவளை மெட்ராஸ்ல படிக்கச் சொன்னேன். அதுக்குக் காரணமும் இருக்கு அத்தை” யாழினி அப்போதுதான் மீனாட்சியிடம் சொல்லிவிட்டுக் கனகவல்லியின் வீட்டுக்கு … Continue reading “அட்சரம் 17.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 16

மையுலக மாயத்தில் மயங்கியவள் மெய்யுலக வீதியில் மெல்லடி பதித்தாள்! காகிதப் படகைக் கரையில் விடுத்து நிஜத்தின் நதியில் நீந்தப் பழகினாள்! -அட்சரனின் வேதா “பிருந்தாவோட கதைல நீ சொன்ன சேஞ்சஸ் எல்லாத்தையும் பாத்துட்டேன் அச்சு. இன்னும் ஒன் வீக் டைம் வேணும் எடிட் பண்ணுறதுக்கு” இலக்கியா சொல்லவும் சரியெனத் தலையசைத்தான். “கவிநேசன் புக் வேலை எல்லாம் முடிஞ்சுதா? அவரோட புக்குக்கு சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்குக்கான வேலைய சஞ்சய் எந்த லெவல்ல பண்ணிருக்கான்?” “கவிநேசன் புக்கோட ஒர்க் ஃபைனல் … Continue reading “அட்சரம் 16”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 15

மஞ்சமும் கூடமும் மயக்கம் தரவே, கஞ்சத்தனம் ஏனோ அவனின் சிரிப்பில்! பஞ்சணை வீட்டின் பகட்டை ரசிக்க, நஞ்சென முறைத்தே நச்சரிக்கிறானே! -அட்சரனின் வேதா ராஜேஸ்வரியை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். வந்ததிலிருந்து வீட்டில் கனத்த மௌனம் நிலவியது. இந்த மௌனத்திற்கான பிள்ளையார்சுழி மருத்துவமனைக்குச் சதானந்தன் பதறியடித்து வந்த நொடியில் போடப்பட்டது. வந்தவர் மகனிடம் தப்பித்தவறிக்கூட என்ன ஏதென்று விசாரிக்கவில்லை. நேரே வேதவதியிடம்தான் போனார். அவளும் நடந்ததில் ஒரு வரியைக் கூட மறக்காமல் புத்திசாலி மாணவி வகுப்பறையில் ஆசிரியரின் கேள்விக்கு … Continue reading “அட்சரம் 15”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 14.2

நக்கலாகச் சிரித்தபடி மாடிப்படியேறியவனின் செவிகளில் “நீ எங்கயும் போகக்கூடாது. இது உன் வீடு. அவன் செயினைக் கழட்டிட்டா எல்லாம் முடிஞ்சுதா? அது என்ன மோதிரம், வளையல் மாதிரி ஒரு நகைனு நினைச்சுக்கிட்டானா?” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி மைந்தனின் கோபத்தை இன்னும் அதிகமாக்கினார். அட்சரன் கோபத்தோடு அவனது அறைக்குப் போய்விட, வேதவதியிடம் அவளது உடைமைகளை அடுக்கி வைத்துவிட்டாளா என விசாரித்தார். “நான் பேக்கை எடுத்தப்ப அவங்க வந்துட்டாங்க” “சரி! நீ போய் ட்ரஸ் எல்லாத்தையும் வார்ட்ரோப்ல எடுத்து … Continue reading “அட்சரம் 14.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 14.1

பகட்டு நகரத்தின் பளபளப்பும் ஆணவன் பார்வையின் அலட்சியமும் அந்நிய இடத்தின் மருட்சியும் மொத்தமாய் அணை போட்டதில் பேதலித்து நின்றாளே சிற்றூர்ப்பெண்! -அட்சரனின் வேதா அட்சரன் ஹெல்வட்டாசுக்குக் கிளம்ப காரை எடுக்கும்வரை அவனது பெற்றோர் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. அருள்மொழி தகவல் சொன்ன நேரத்துக்குக் கிளம்பியிருந்தால் இந்நேரம் அவர்கள் வீட்டுக்கு வந்திருப்பார்கள். ஒருவேளை இரவில் பயணம் செய்ய வேண்டாமென முடிவெடுத்து ஏதேனும் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்திருக்கலாம் என்று மூளை சொன்னபோது அதை அட்சரனுக்கு ஒத்துக்கொள்ளவே தோன்றியது. ஏனெனில் அதெல்லாம் … Continue reading “அட்சரம் 14.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 13

தேன்மழைச் சாரலில் தேகமும் நனைய, கால்நடைப் பாதையில் காலங்கள் கரைய, பச்சை மலையை பிரிந்து செல்கையில், அச்சம் கொள்ளுதடி நங்கையின் மனமே! -அட்சரனின் வேதா “வேதாவை என் மருமகளா என்னோட அழைச்சிட்டுப் போறேன். அவ இனிமே எங்க பொறுப்பு. எந்தப் பிரச்சனையும் வராம நான் பாத்துக்குறேன். இது என் மகன் மேல சத்தியம் அண்ணா.” உணர்ச்சிவசப்பட்டக் குரலில் கஜேந்திரனுக்கு வாக்கு கொடுத்தார் ராஜேஸ்வரி. அருள்மொழி – வானதியின் மறுவீட்டுச் சடங்குக்காக வந்திருந்த விருந்தினர்கள், ஊர் மக்கள் முன்னிலையில் … Continue reading “அட்சரம் 13”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 12

விரும்பாமல் ஏறிய மாங்கல்யம் நெருப்பாய் தகித்தது அவன் மனம் பயத்தில் உறைந்தது பாவையின் இதயம் அயர்ந்து அதிர்ந்து அழகிய அந்தி! -அட்சரனின் வேதா வேதவதி தனது அறைக்குள் உணர்வுகள் மரத்துப்போன நிலையில் அமர்ந்திருந்தாள். ஜெயவிலாசத்தில் நடந்தேறிய கலவரங்கள் யாவும் கனவல்ல, நிஜம் என்பதை அவளது கழுத்தில் இருக்கும் மாங்கல்யம் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. எப்போது அது கழுத்தில் விழுந்ததோ அப்போது வீட்டுக்கு ஓடிவந்தவள் தான். தனது அறைக்குள் அடைபட்டுக்கொண்டாள். ஓடிவரும்போதே அவளது முதுகுக்குப் பின்னே ஊரார் அவளை ஏளனமாகப் … Continue reading “அட்சரம் 12”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 11

பழிகளின் சுமை தீயாய் தொடர விடாது பரவும் உன் விழிச்சினத்தீ! உறவில்லா உரிமையில்லா  நிலையில் கோபம் மட்டும் எவ்வகையில் அறம்? -அட்சரனின் வேதா ட்ரோன் மூலம் ஒளிபரப்பான காட்சியில் தன்னுடன் இருந்தவள் வேதவதி என்று அட்சரன் சொன்னதும், அவளது கண்கள் முதலில் பீதியுடன் பார்த்தது கனவல்லியின் முகத்தைத்தான். ‘என்ன இது’ என்பது போல மனம் துடிப்பதை கனகவல்லியின் முகபாவனை காட்டிக்கொடுத்துவிட, சிலையாய் சமைந்துவிட்டாள் வேதவதி. ‘அட்சரன் என்னதான் கூட்டத்தைச் சமாளித்தாலும் எனது பெற்றோரைச் சமாளிக்க வேண்டிய கடமை … Continue reading “அட்சரம் 11”

 

Share your Reaction

Loading spinner