அவள் கிளம்ப எத்தனிக்கையில் ஒரு பாலிதீன் கவரில் பனம்பழங்களைப் போட்டுக் கொடுத்தார் சௌந்தரவல்லி. “இதை அதிகமா சாப்பிடக்கூடாதுல. பிள்ளை மந்தமாகிடும்னு சொல்லுவாவ. அளவா சாப்பிடு” என்று அன்போடு சொல்லி அவளை வழியனுப்பிவைத்தார். ஈஸ்வரி வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது பவிதரன் அவளுக்காகக் காத்திருந்தான். சந்தோஷமிகுதியில் வேகநடை வைத்து வந்து அவனருகே திண்ணையில் அமர்ந்தவளை அவன் பார்த்த பார்வையில் அத்துணை காட்டம்! “சொல்லாம கொள்ளாம எங்க போன நீ? எழுந்திரிச்சதும் உன்னைக் காணலனு நான் பதறிட்டேன்டி” ஈஸ்வரி அசடு வழிந்தபடி […]
Share your Reaction

