பூஜை முடிந்த பிறகு அவர்களின் சம்பிரதாயப்படி உஷாவின் மடியில் தேங்காயைக் கொடுத்துவிட்டுப் பெரியவர்கள் ஆரத்தி எடுத்தனர். பின்னர் அவளுக்குப் பரிசுப் பொருட்களைக் கொடுத்து ஆசீர்வதித்துவிட்டுச் சென்றனர்.
அவர்கள் சும்மா சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! ஆனால் அவர்கள் அவந்திகாவிடம் வந்து “நீ எப்போ நல்ல செய்தி சொல்லப் போறம்மா?” என்று கேட்டு வைக்க அவள் கடுப்பானாள்.
உஷாவின் காதில் “இவங்கல்லாம் உன்னோட வளைகாப்புக்குத்தானேடி வந்தாங்க! வந்தோமா வாழ்த்திட்டுப் போனோமானு இல்லாம என்னை ஏன்டி மாட்டி விடுறாங்க?” என்று கேட்டவளையோசனையுடன் பார்த்தாள் உஷா.
“ஹனிபி! எனக்கு முன்னால உனக்கு மேரேஜ் ஆயிடுச்சுடி, அப்போ அவங்க கேக்கத்தானே செய்வாங்க?”
“அடியே நீயும் அவங்கள மாதிரியே பேசாதடி! உனக்கு டூ டேய்ஸ் முன்னாடிதான் என்னோட கல்யாணம் நடந்துச்சு. பட் ஆக்சுவல் ப்ராப்ளம் என்னன்னு உனக்கு நல்லா தெரியும்தானே? நீயே இப்பிடிச் சொன்னா என்ன அர்த்தம்?”
“இப்போதான் எல்லாமே நார்மல் ஆயிடுச்சே! இன்னும் எவ்ளோ நாள் லேட் பண்ணலாம்னு நெனைக்கிற நீ? ஒரு நிமிஷம் அங்க இருக்கிறவங்களைப் பாரு!” என்று சொல்லி அவர்களின் குடும்பத்தினரை நோக்கிக் கைகாட்டினாள் உஷா.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அங்க நிக்கிறவங்க என்னோட தாதி மட்டும் இல்ல. உன்னையும் அவங்க சொந்தப் பேத்தியாதான் பாக்குறாங்க! அவங்களுக்கு ஆசை இருக்காதா? கௌசிக்காவப் பத்தி யோசிச்சுப் பாரு! உன்னோட இந்தக் கல்யாண வாழ்க்கை என்னாகுமோனு ஒவ்வொரு நிமிஷமும் பயந்துட்டே இருந்தவங்க அவங்க! இன்னும் சொல்லிட்டே போகலாம்! பட் விஷயம் இதுதான்! நாங்க எல்லாருமே உன்கிட்ட இருந்து ஒரு குட் நியூஸை எதிர்ப்பாக்குறோம்!” என்று சொல்லி அடுத்து வந்த பெண்மணியிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டாள்.
அவர் ஏதோ சொல்ல வர அவந்திகா “உங்களுக்கு முன்னாடியே நெறையா பேரு கேட்டுட்டாங்க ஆன்ட்டி! என்னோட பதில் இதுதான். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று சிரித்தவாறே சொல்லி அவரை அனுப்பி வைத்தாள்.
இதற்கு மேல் வேலைக்கு ஆகாது என்று எண்ணியவள் ரித்திமாவை அங்கே நிற்கச் சொல்லிவிட்டு அவள் குடும்பத்தினருடன் சென்று அமர்ந்துகொண்டாள். அவர்களும் மாற்றி மாற்றி லெக்சர் அடித்து அவளது காதைத் தீய வைத்ததுதான் மிச்சம்!
ஒரு வழியாக நடந்து முடிந்த அந்த விழா உஷாவின் மனதுக்கு அளவுக்கடந்த சந்தோஷத்தையும் அவந்திகாவுக்குக் குழப்பத்தையும் பரிசாகக் கொடுத்தது!
மாலையில் வருண் ராகவ் கிஷோர் மூவரும் வீடு திரும்பும்போது அலங்காரங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு வீடு பழைய நிலைக்கு மாறியிருந்தது.
கிஷோர் நேரே வந்தவன் ரித்திமாவின் அம்மா அப்பாகிட்ட போய்க் ஏதோ பேச அவர்கள் அவனிடம் சிரித்தபடியே பேசியதைக் கண்டு ரித்திமாவுக்குத்தான் மினி ஹார்ட் அட்டாக் வந்து சென்றது!
அவந்திகாவிடம் “ஹனிபி! உன்னோட பிரதர் இன் லாவ கொஞ்சம் அடக்கி வைடி! என்னைப் ரொம்ப இம்சை பண்ணுறான் அவன்! இப்போ அங்க போயி என்ன பத்த வைக்கிறானு தெரியலயே” என்று படபடத்தாள்.
அவந்திகாவோ “அவன் மரியாதை தெரிஞ்சவன்டி! வீட்டுக்கு வந்தவங்ககிட்ட முகம் கோணாமப் பேசிட்டு இருக்கான்! உனக்கு என்ன பிரச்சனை?” என்று சாதாரணமாகச் சொன்னவள் அம்புவிடமும் அஜ்ஜுவிடமும் அரட்டையடித்துக் கொண்டிருந்த ராகவைக் கண்ணாலே தங்களின் அறைக்கு வருமாறு சைகை காட்டினாள்.
அவன் அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி அஜ்ஜுவிடமே கதையளந்து கொண்டிருந்தான். அவனது மனதில் “இப்போ நான் ரூம்குப் போனா காலைல பேசுன விஷயத்தை விளக்கமாக் கேப்பாளே! முடிஞ்ச வரைக்கும் டிலே பண்ணு ராகவ்! டயர்ட்ல அவளே இன்னும் கொஞ்ச நேரத்துல தூங்கிடுவா! அப்புறமா ரூம்குப் போறதுதான் நல்லது” என்று எண்ணிக்கொண்டான்.
அவந்திகாவும் அவனிடம் அந்த விஷயத்தைக் கேட்க எவ்வளவோ முயன்றும் அவன் பிடிகொடுக்காமல் ஒருவர் மாற்றி ஒருவரிடம் கதையளந்து கொண்டிருந்தான்.
மறுநாள் ஞாயிறு என்பதால் அவந்திகாவும் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று தங்களின் அறைக்குச் சென்றவள் குளித்துவிட்டுக் களைப்பில் உறங்கிவிட்டாள்.
கௌசல்யா ரகுவுடன் அஜ்ஜு அம்புவை வழியனுப்பிவிட்டுத் தங்களின் அறைக்கு வந்தான் ராகவ். அவன் நினைத்த மாதிரியே அவந்திகா தூங்கிக்கொண்டிருக்கச் சத்தம் எழுப்பாமல் ரெஃப்ரெஷ் ஆனவன் அமைதியாக வந்து படுத்துக்கொண்டான்.
அவன் அவந்திகாவின் புறம் திரும்பி அவளது முகத்திலிருந்த கூந்தல் கற்றையை ஒதுக்கிவிட அவள் விழித்துவிட்டான். கண்ணைத் திறந்து பார்த்தவளுக்கு இருட்டைத் தவிர எதுவும் தெரியாமல் போக டேபிளிலிருந்த விளக்கைப் போட்டாள்.
“இவ எப்பிடி முழிச்சா?” என்ற யோசனையுடன் அவளைப் பார்த்தவன் “வாட் ஜான்சி ராணி? தூங்கலயா நீ?” என்று கேட்டான்.
“நீ ஃபுல் மேட்டரையும் சொல்ற வரைக்கும் எனக்கு ஒரு பொட்டு தூக்கம் கூட வராது. சொல்லுடா! இன்னும் என்னல்லாம் நெனச்ச நீ?” என்று அவனது டி-ஷர்ட்டைப் பிடித்துக் கேட்டாள்.
அவளது செய்கையில் வந்த சிரிப்பை அடக்கியவன் “நான் என்னென்னமோ நெனச்சேன்! எல்லாத்தையும் உன்கிட்ட சொல்ல முடியுமா? லீவ் இட்” என்று சாதாரணமாகக் கூறிவிட்டுப் படுக்க முயல அவள் தூங்க விட்டால்தானே!
“அப்பிடிலாம் உன்னை விட முடியாது! இப்போவே சொல்லுற நீ” என்று அவள் மிரட்டவும் அவன் வேறு வழியின்றிச் சொல்ல ஆரம்பித்தான்.
“ஆக்சுவலி ஃபர்ஸ்ட் டைம் நீ என்னைத் திட்டிட்டுப் போனப்போ நான் நைட் ஃபுல்லா தூங்கவே இல்ல. பிகாஸ் என்னை யாருமே அப்பிடி இதுவரைக்கும் திட்டினது கெடையாது. ஒரு மிடில் க்ளாஸ் பொண்ணு இப்பிடித் திட்டிட்டாளேனு நான் ரொம்பக் கோவமா இருந்தேன்! அதான் வேணும்னே ஃப்ளவர் அரேஞ்ச்மெண்ட்டைச் சேஞ்ச் பண்ணச் சொன்னேன்” என்று சொல்லவும் அவள் வாயைப் பிளந்தாள்.
மனதிற்குள்ளேயே “அடேய் ஃப்ராடு! அப்போ அவ்ளோவும் டிராமாவா?” என்று எண்ணிக்கொண்டவள் ஒன்றும் கூறாது அவன் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தாள்.
“அப்புறமா ஃப்ளவர் வேர்ஹவுஸ் முன்னாடி நிக்குறப்போ ஒரு லாரி உன்னை இடிக்க வந்தப்போ நான் உன்னைக் காப்பாத்துறதுக்காகத் தூக்குனேன். அப்போதான் இந்தக் கண்ணுல நான் ஃபர்ஸ்ட் டைமா விழுந்தேன்! என்ன கண்ணுடா! சான்ஸே இல்ல” என்று அன்றைய நினைவில் சிலாகித்தவன் மீண்டும் தொடர்ந்தான்.
“பட் அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல மாட்டிப்பேன்னு நெனைக்கவே இல்ல! இன் ஃபேக்ட் அன்னைக்கு அந்த ரூம்ல உன்னோட முகத்தை ரொம்ப நெருக்கமாப் பாத்தப்போ என்னைப் ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணது உன்னோட கண்ணு அப்புறமா உன்னோட இந்தக் குட்டி லிப்ஸ்! அப்போவே கிஸ் பண்ணலாம்னு கிட்ட வந்தவன் திடீர்னு அறிவு வந்து என்னைக் கன்ட்ரோல் பண்ணிகிட்டேன்!” என்று சொல்ல அவந்திகா மனதிற்குள்ளேயே “இது எதுவும் புரியாம அவ்ளோ பச்சப்பிள்ளையாவா நான் இருந்திருக்கேன்” என்று அவளையே திட்டிக்கொண்டாள்.
“தென் அடுத்த நாள் மார்னிங் அந்த யெல்லோ லெஹங்கா, ரெட் அண்ட் ஒயிட் பேங்கில்ஸோட நீ அந்த கார்டன்ல நடந்து வர்றப்போ அப்பிடியே ஓடிப் போய் ஹக் பண்ணலாமானு தோணுச்சு! பட் சூழ்நிலை என் கையக் கட்டிப்போட்டதால அமைதியா இருக்க வேண்டியதாப் போச்சு” என்று அவன் அனைத்தையும் கூறி முடித்துவிட்டு அவளைப் பார்த்தான்.
அவள் எதுவும் கூறாமல் தலையணையை எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
“ஏன்டா எவ்ளோ திமிரு இருந்தா நான் கஷ்டப்பட்டுப் பண்ண ஃப்ளவர் அரேஞ்ச்மென்டை மாத்த டிராமா பண்ணிருப்ப? பாக்குறதுக்கு மைதாமாவு மாதிரி இருந்துட்டு மைன்ட் ஃபுல்லா டேர்ட்டி தாட்ஸ்” என்று பலமாக அடித்தாள் அவள்.
“ஏய்! நிறுத்து! வலிக்குதுடி!” என்று அவள் கையிலிருந்த தலையணையைப் பிடுங்கித் தூர எறிந்தான் அவன்.
“ஏன்டா! ஒரு தடவை கூடவா என்னைப் பாத்தா பாவமா தெரியல உனக்கு?”
“பாவமால்லாம் தெரியல! பட் என்ன இந்தப் பொண்ணு இவ்ளோ டியூப் லைட்டா இருக்கேனு தோணும்” என்று சொல்லவும் அவன் தோளில் அடிக்கப் போனவளை இறுக்கி அணைத்து அடிக்க விடாமல் தடுத்தான் ராகவ்.
கோபத்தில் சிவந்திருந்த கன்னங்களில் அழுத்தமாக அவன் முத்தமிட அவள் கையால் துடைத்துக்கொண்டாள்.
அதைப் பார்த்துச் சிரித்தவன் “நீங்க தொடச்சிட்டீங்கன்னா நான் குடுக்க மாட்டேனா?” என்று மறுபடியும் முத்தமிட்டு அவளை வெட்கத்தில் முகம் சிவக்க வைத்தான்.
சில நிமிடம் கழித்து அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்கவும் “கோவம் போயிடுச்சா கொழந்தைக்கு?” என்று அவள் நெற்றியில் முட்ட “போயிடுச்சே!” என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவனை அணைத்தபடி உறங்கத் தொடங்கினாள் அவந்திகா.
மறுநாள் காலையில் எழுந்தவள் வழக்கம் போலக் கீழே சென்று பார்க்கையில் வீட்டுப் பெண்கள் அனைவரும் ஹாலில் சோஃபாவில் அமர்ந்திருக்க அவந்திகா அவர்களைக் கேள்வியாகப் பார்த்துவிட்டு “எனக்குக் காபி குடிக்கணும் போல இருக்கு ராதிம்மா! ப்ளீஸ் போட்டுத் தர்றீங்களா?” என்று கேட்டு அவர் அருகில் அமர்ந்தாள்.
“அவந்திகா அது வந்து…” என்று பேச வந்தவரை “மூச்! இப்போ என்கூடக் கிச்சனுக்கு வர்றீங்க! காபி போட்டுத் தர்றீங்க! தட்ஸ் ஆல்!” என்று கூறிவிட்டு அவரைக் கையோடு அழைத்துக்கொண்டு கிச்சனுக்குள் சென்றவள் கிச்சனில் நடந்துகொண்டிருந்த கலவரத்தைக் கண்டு அதிர்ந்துவிட்டாள்.
ஒரு புறம் கோதுமை மாவு சிந்திக் கிடக்க, ஸ்டவ்வில் பால் கொதித்துப் பொங்கி வழிந்துகொண்டிருந்தது. இன்னொரு புறம் காய்கறித் தோல் குப்பை போல் கிடக்க அதில் கால் வைத்து வழுக்கி விழப்போனவளை ராதிகாதான் பிடித்து நிறுத்தினார்.
அங்கே குணால், மோகன், வருண், ராகவ், கிஷோர், அமர் ஐவரும் ஏப்ரனுடன் எதையோ தீவிரமாக டிஸ்கஸ் செய்துகொண்டிருக்க பாலாவும் செஃபும் ஒரு ஓரமாக நின்று அவர்களைக் கையைப் பிசைந்தபடி பார்த்துக்கொண்டிருந்தனர்.
“வாட் த ஹெல் இஸ் கோயிங் ஆன் ஹியர்? உங்களை எல்லாம் யாரு கிச்சனுக்குள்ள அலோவ் பண்ணது?” என்று கடுப்புடன் கேட்டவளைப் பார்த்ததும் குஷியானார் குணால்.
“அட சின்ன மருமகளே! வெல்கம் டு கிச்சன்!” என்றவரை வித்தியாசமாகப் பார்த்தவள் “என்னைக் கிச்சனுக்கு வரவேற்கிறது இருக்கட்டும்! நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்.
அதைக் கேட்டதும் ராகவ் “நீ சொன்ன வார்த்தைய நாங்க ஃபாலோ பண்ணிட்டு இருக்கோம்! புரியலயா? நீதானே சொன்ன, ஆம்பிள்ளைங்க கரண்டி பிடிச்சா ஒன்னும் தப்பில்லனு! எத்தனை நாள்தான் இவங்களே கஷ்டப்பட்டு நமக்குச் சமைச்சுப் போடுவாங்க! அதான் ஒரு சேஞ்சுக்கு இனி வீக்கெண்ட் நாங்க சமைக்கலாம்னு இருக்கோம்” என்று பெருமையாகச் சொல்லி முடித்தான்.
“என்னது? அப்போ எவ்ரி வீக்கெண்ட் கிச்சன்ல இப்பிடித்தான் கலவரம் நடக்குமா?” என்று விழிவிரித்து அவந்திகா கேட்க “டெஃபனிட்லி பாபி!” என்று சொல்லித் தோளைக் குலுக்கினான் கிஷோர்.
“ஹனிபி! உனக்குக் காபி வேண்டாமா?” என்று கேட்டு ஒரு கப்பை நீட்டிய வருணை விட்டுச் சிறிது தூரம் நகர்ந்தாள் அவந்திகா.
“நான் காபி குடிக்கிற பழக்கத்தையே விட்டுட்டேன்டா! என்னை விட்டுடு தெய்வமே!”
“அச்சோ! ஃபர்ஸ்ட் டைம் உனக்காகக் காபி போட்டேனே! நீ டேஸ்ட் பண்ணிச் சொல்லுவனு எவ்ளோ ஆர்வமா இருந்தேன் தெரியுமா?”
“பாய்சன் குடிச்சும் உயிர் பொழைக்கிற அளவுக்கு எனக்கு இம்யூனிட்டி பவர் இல்ல வருண்! ஐயாம் சாரி”
“வாட்? நான் போட்ட காபியப் பாத்தா நீ பாய்சன்னு சொன்ன?”
“சே சே! இல்ல மிஸ்டர் நெட்டைக் கொக்கு! ஈவன் பாய்சன் ஹேஸ் சம் ஆன்டிடோட்! பட் உன்னோட காபிக்கு அப்பிடி எதுவும் இல்லயே! ஃபர்ஸ்ட் அதக் கண்டுபிடிச்சுட்டுல்ல நீ காபி போடப் போயிருக்கணும்”
“ஆக்சுவலி மருமகளுக்கு நம்ம குக்கிங் ஸ்டைலப் பாத்து இன்செக்யூரிட்டி வருதுனு நெனைக்கிறேன்” என்று சொன்ன மோகனை ஒரு பார்வையால் அடக்கிய ராதிகா “நான் கண் மூடித் திறக்கிறதுக்கு முன்னாடி நீங்க அஞ்சு பேரும் வெளியே போயிடுங்க! அதுதான் உங்களுக்கு நல்லது” என்று பொறுமையை இழுத்துப் பிடித்துக் கூறினார்.
“மாம்! இந்த ஜான்சி ராணிதான சொன்னா…” என்று பேச வந்த ராகவை முறைத்தவர் “அவ உங்களை எங்களுக்கு ஹெல்ப் பண்ணத்தான் சொன்னா! இப்பிடி உபத்திரவப்படுத்தச் சொல்லல! நீதான் இவங்களுக்கு ஹெட்னு எனக்கு நல்லாவே தெரியும்! சீக்கிரமா இங்க இருந்து கெளம்புங்க!” என்று சொல்ல அனைவரும் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.
“அந்த ஏப்ரனைக் கழட்டி வச்சிட்டுப் போங்க! அத மாட்டுனா நீங்கல்லாம் குக் ஆயிடுவீங்களா?” என்ற ராதிகாவின் அதட்டலில் அதையும் கழட்டிவைத்துவிட்டுச் சென்றனர்.
“ஐயோ! சாஸும்மா! இதக் கிளீன் பண்ணுறதுக்கு மட்டும் ஒன் டே ஆகும் போல” என்று புலம்பியபடியே அவந்திகாவும் ராதிகாவும் கிச்சனைச் சுத்தம் செய்து முடித்தனர்.
வெளியே வரும்போது ராகவ் பேசிக்கொண்டிருந்தது அவர்களின் காதில் தெளிவாக விழுந்தது.
“நல்லதுக்கே காலம் கெடையாது பாபி! நாங்க எவ்ளோ எஃபோர்ட்ஸ் போட்டுக் குக் பண்ண ஆரம்பிச்சோம்! டாட் இஸ் ரைட்! அவங்க ரெண்டு பேருக்கும் நம்ம குக்கிங் ஸ்டைல் பாத்து இன்செக்யூரிட்டிதான்!” என்று சொல்லிக்கொண்டு திரும்பியவன் அங்கே இருந்த ராதிகாவையும் அவந்திகாவையும் பார்த்ததும் புன்னகைத்தான்.
“அட சீ சிரிக்காத! கிச்சனை நாசம் பண்ணிட்டு உனக்குச் சிரிப்பு ஒன்னுதான் கேடு! உங்களை எங்களுக்கு ஹெல்ப் பண்ணச் சொன்னா கிச்சனைக் கதம் பண்ணி வச்சிருக்கீங்க!” என்று அவர்களைக் காய்ச்சி எடுத்தவள் “இதுக்கு அந்தப் பருத்தி மூட்டை கொடவுன்லயே இருந்திருக்கலாம்” என்று தமிழில் முணுமுணுத்தாள்.
“ஜான்சி ராணி நீ தமிழ் பேசுனியா என்ன?”
“இல்ல ஹப்பி! நான் மேண்டரின்ல பேசுறேன்!”
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


