“வாட் த ஹெல்? கால் அமுக்கி விடணுமாமே! போடா! இன்னொரு தடவை என்கிட்ட இதே வார்த்தையச் சொன்னனு வச்சுக்கோ, காலுக்குப் பதிலா உன் கழுத்தை அமுக்கிக் கொன்னுடுவேன்! சரியான வளந்து கெட்டவன்” என்று கடுப்பாக உரைத்தவளின் கோபத்தை ரசித்தவன் இழுத்து அணைத்துக்கொண்டான்.
“உஷ்! எவ்ளோ கோவம்! ரொம்பச் சூடாகாத ஜானு!” என்று கிண்டலடித்தவனின் தோளில் பட்டென்று அடித்தாள் அவந்திகா.
“அச்சோ கை வலிக்கப் போகுது” என்று சொல்லி அவள் கையில் முத்தமிட்டான் அவன்.
“இப்போ என்னை விடப் போறியா இல்லயா?”
மாட்டேன் என்று அவன் தலையாட்டவும் அவனது தலைமுடியைப் பிடிக்க அவள் முயலவும் அவன் எக்கி நின்றான் (நீ சாதாரணமா நின்னாலே அவளுக்கு உன் தலை எட்டாது).
அவள் சிரமப்படுவதைக் கண்டு தூக்கிக்கொண்டவன் “ஜான்சி ராணி! இப்போ என் தலையை என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ” என்று சொல்லவும் அவள் அவன் முடியைப் பிடித்து இழுத்துக் கலைத்து விட்டாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவன் தலை கலைந்ததில் திருப்தியானவள் செல்லமாக அவன் தலையில் முட்ட அவன் அந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி அவள் இதழை மூடினான்.
சிறிது நேரத்தில் விடுவித்தவன் “இனிமே என்கூடச் சண்டை போடுவ” என்று குறும்பாகக் கேட்கவும் அவந்திகா “இதுக்குல்லாம் நான் பயப்பட மாட்டேன்டா” என்று சொல்லி அவன் தலைமுடியை மீண்டும் கலைக்க அவர்களின் சிரிப்பொலி அந்த அறையை நிறைத்தது….
உஷாவுக்கு ஏழாவது மாதம் நடந்துகொண்டிருப்பதால் அவர்கள் முறைப்படி வளைகாப்பு நடத்த ஏற்பாடுகள் செய்வதில் அவந்திகாவும் ரித்திமாவும் பிஸியாக இருந்தனர்.
வருணின் வீட்டிலேயே விழா நடத்துவதாக இரு குடும்பமும் சேர்ந்து முடிவெடுத்ததால் அதற்காக வீடு அலங்கரிக்கப்பட்டது. அது பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விழா என்பதால் வருண், கிஷோர், ராகவ் என்று யாருமே அதில் கலந்துகொள்ளவில்லை.
வழக்கம்போல் ரித்திமாவும் அவந்திகாவும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருந்ததால் விழாவுக்கு முந்தைய நாள் காலை வரையும் அவர்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்ததில் விழாவுக்குத் தயாராகவே இல்லை.
பின்னர் பிந்துவும் நேஹாவும் வந்து தாங்கள் மீதி வேலைகளைக் கவனித்துக்கொள்வதாகச் சொல்லவும் இருவரும் தயாராகுவதற்காகத் தங்கள் அறைக்குச் சென்றனர்.
ரித்திமா விருந்தினர் அறைக்குச் சென்று தயாராகி வெளியே வரவும் அலுவலகம் செல்லத் தயாராகக் கிளம்பிக்கொண்டிருந்த கிஷோர் எதிர்ப்பட்டான்.
“நாட் பேட்! மாடர்ன் டிரஸ்ல மட்டும் இல்ல ட்ரெடிஷனல் வியர்லயும் நீ நல்லாத்தான் இருக்க பேபி! என்ன ஹைட் தான் கொஞ்சம் ஓவர்! பட் அது கூட நல்லதுதான்! எதுனாலும் நேருக்கு நேர் பாத்துப் பேசிக்கலாம்” என்று அப்போதும் அவளைக் கலாய்த்தவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு அவள் கையில் வளையலைத் திணித்துக் கொண்டிருந்தாள்.
“இது வேற! என்னைப் ரொம்ப இம்சை பண்ணுது!” என்று சொல்லிக்கொண்டே கிஷோரை ஒரு பார்வை பார்க்கவும் அவனுக்கு அவள் தன்னைத்தான் கூறுகிறாள் என்பது புரிந்துவிட்டது.
இதற்கு எல்லாம் அவன் அசருபவன் இல்லையே! அவளது கையைப் பிடித்து வளையலை மெதுவாக மாட்டிவிட்டவன் “பொண்ணுங்களுக்குப் பொறுமை அவசியம்னு சொல்லி வச்சது ஏன் தெரியுமா? இந்த மாதிரி அவசரமா வளையல் மாட்டுனா ஒடஞ்சுக் கைல காயம் பட்டுடும்கிறதுக்குத்தான்! உன்னோட கைல காயம் பட்டுச்சுனா அது எனக்குத்தானே வலிக்கும்” என்று ராகத்துடன் கேலி செய்தபடி அவள் கையை விட்டான்.
“யூ நோ ஒன் திங்? எனக்கு இப்போலாம் உன் மேல கோவமே வர்றதில்ல கிஷோர்! ஏன்னா நீ இப்பிடி நடந்துக்கிறது எல்லாமே என்னைக் கோவப்பட வைக்கத்தான்னு எனக்கு நல்லாவே தெரியும்டா!” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.
“இப்போவும் நீ என்னைப் புரிஞ்சிக்கவே இல்லயே டியர்! இன்னைக்கு உன்னோட மாம் அண்ட் டாட் வருவாங்கதானே! அப்போ நான் கண்டிப்பா அவங்ககிட்ட நம்ம மேரேஜ் பத்திப் பேசப் போறேன்! பிகாஸ் இங்க எல்லாருமே என் பொறுமைய ரொம்பவே சோதிச்சிட்டீங்க” என்று அவன் அலட்சியமாகச் சொல்லவும் ரித்திமா அவன் பேச்சைக் கேட்டுத் திகைத்தாள்.
“எக்ஸ்கியூஸ் மீ! ஃபர்ஸ்ட் நானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஒத்துக்கல! இதுல அம்மா அப்பாகிட்ட பேசுனா மட்டும் என்ன ஆகப் போகுது? அவங்க என்ன சொன்னாலும் நான் தலையாட்டுவேனு நீ நெனச்சிருந்தா ஐயாம் ரியலி சாரி! நான் அப்பிடிலாம் பேரன்ட்ஸ் சொன்னாக் கண்ண மூடிட்டுக் கேக்குற பொண்ணு இல்ல. சோ இந்தப் பேச்சை மறந்துட்டு வேற வேலையப் பாரு!” என்றாள் அவள் அவசரமாக.
அவளது பதற்றத்தை ரசித்தவன் “அட என்னம்மா நீ? சரி! நீ சொல்லுற மாதிரியே இருக்கட்டும்! நான் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லு! நீ யாரையாச்சும் லவ் பண்றியா?” என்று கேட்க
“வாட்? அப்பிடிலாம் எதுவும் இல்ல” என்று தோளைக் குலுக்கினாள் ரித்திமா.
நிம்மதிப் பெருமூச்சுவிட்டவன் “தென் க்ரஷ் அந்த மாதிரி எதுவும்?” என்று கேட்டான் விடாப்பிடியாக.
“இல்ல” என்று அதற்கும் பொறுமையாகப் பதிலளித்தாள் அவள்.
“உங்க அம்மா அப்பா ஆல்ரெடி எந்தப் பையனையும் உனக்கு இவன்தான் புருஷன்னு டிசைட் பண்ணிட்டாங்களா?”
“நோ நோ!” என்று ரித்திமா பதற
“தென் யாருக்கும் தெரியாம எவனையாச்சும் கல்யாணம் பண்ணிகிட்டயா நீ?” அவனது இந்தக் கேள்வியில் அவளின் பொறுமை தூரச் சென்றது.
அவனை நெருங்கி “டேய்! தேவையில்லாம என் வாயைக் கெளறாதடா! உன்னைக் கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்லனா அதுக்கு அர்த்தம் இது எதாச்சும் ஒன்னாத்தான் இருக்கணுமா? இன்னொரு தடவை இப்பிடி ஏதாச்சும் பேசுனனு வச்சுக்கோ! அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என்று எச்சரித்துவிட்டுச் சென்றாள் அவள்.
அவள் சென்றதும் “இப்போ நான் என்ன கேட்டுட்டேனு இந்தப் பேச்சுப் பேசிட்டுப் போறா இவ? நான் சொன்ன எதுவுமே இல்லனா அப்புறம் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு என்னாவாம்? இந்தப் பொண்ணுங்களைப் புரிஞ்சுக்கத் தனியாக் கோர்ஸ் படிக்கணும் போல கிஷோர்!” என்று புலம்பிவிட்டுக் கீழே சென்றான் அவன்.
அதே நேரம் அவந்திகா அவளின் அறையில் தயாராகிக் கொண்டிருந்தாள்.
அவந்திகா வேகமாகத் தயாரானவள் வழக்கம் போலப் பின்னால் கயிறை முடிச்சிட எக்கி எக்கிப் பார்த்தும் முடியாமல் போகவும் “சை! இனிமே எந்த டிரஸ்லயும் நாட் வச்சு ஸ்டிச் பண்ணவே கூடாது! எட்டித் தொலைய மாட்டேங்குதே” என்று கண்ணாடி முன் நின்று திண்டாடிக்கொண்டிருந்தாள்.
அங்கே ராகவ் வரவும் “ஹப்பாடா! வந்துட்டான்டா!” என்று சந்தோஷத்துடன் திரும்பி “ராகவ்! கொஞ்சம் இந்த நாட்டை மட்டும் போட்டு விடு ப்ளீஸ்” என்று கேட்கவும் அவன் அருகில் வந்தான்.
“திரும்பு” என்று சொல்லி முடிச்சைப் போட்டுவிட்டவன் “ஏன் ஜான்சி ராணி! அதுதான் எட்டலையே, அப்போ எதுக்குப் ஃபேஷன்கிற பேருல இத வச்சு ஸ்டிச் பண்ணுற?” என்று கேலியாகக் கேட்டுச் சிரித்தான்.
“நானா வைக்கச் சொன்னேன்? இது ரித்தியோட செலக்சன்! எனக்கு லெஹங்கா சூஸ் பண்ணத் தெரியாதுனு அவளைக் கூட்டிட்டுப் போய் வாங்குனேன்! பட் எனக்கு இது கொஞ்சம் கூடக் கம்ஃபர்டபிளா இல்ல ராகவ்! எனக்கு என்னோட ஜீன்ஸ், டாப், லெகின்ஸ் தான் கரெக்ட். போட்டோமா போனோமானு இருக்கும்! இதப் பாரு! இத ஒழுங்காக் கட்டி முடிக்கிறதுக்குள்ள நான் கெழவி ஆயிடுவேன் போல”
“அப்போ உனக்கு ட்ரெடிஷனல் டிரஸ் பிடிக்காதா ஜான்சி ராணி?”
“பிடிக்காதுனு இல்ல. அதப் போட்டுட்டு என்னால மேனேஜ் பண்ண முடியாது. அவ்ளோதான்” என்று தோளைக் குலுக்கியவளைப் பின்னிருந்து அணைத்தபடியே கண்ணாடியைக் காட்டினான் அவன்.
“லுக் தேர்! பாக்க அப்பிடியே அப்சரஸ் மாதிரி இருக்க!” என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டான் அவன்.
“ஏய்! கண்ணு வைக்காத மார்ஷ்மெல்லோ! அப்புறம் என் அழகு கம்மியா ஆயிடும்”
“கண்ணு வைக்கிறதா? விட்டா நான் உன்னைக் கடிச்சுச் சாப்டுவேன் ஜானு!” என்று இறுக்கமாகக் கட்டிக்கொள்ள அவளோ “அய்யோ! மேன் ஈட்டரா நீ? தெரியாமக் கல்யாணம் பண்ணிகிட்டேனே!” என்று பொய்யாக ஆச்சரியம் காட்டிக் கண்ணை விரித்தாள்.
“உனக்கு ஃபங்ஷன் அட்டென்ட் பண்ணணும்கிற ஐடியா இருக்கா?” என்று அவன் ஹஸ்கி வாய்ஸில் கேட்கவும் அவந்திகாவுக்கு நிஜமாகவே ஆச்சரியமாக இருந்தது.
“அப்போ இவ்வளவு நேரம் நான் பாத்து பாத்து ரெடியானது எதுக்கு சார்? கேக்குறான் பாரு கேள்வி” என்று சொல்லிக்கொண்டே அவன் காதைத் திருகினாள்.
“ஏய் வலிக்குதுடி!” என்று சொல்லி அவள் கையை விலக்கியவன் “நீ இப்பிடிக் கியூட்டா கண்ணை விரிச்சுப் பாத்தா எனக்கு உன்னை இந்த ரூம்ம விட்டு அனுப்புற நெனைப்பு எப்பிடி வரும்?” என்று சொல்லி அவள் தலையில் தன் நாடியை வைத்துக் கேட்டவனின் முகபாவத்தைக் கண்ணாடியில் கவனித்தவள் முகம் சிவந்தாள்.
பின்னர் திரும்பி அவனைப் பார்த்தவள் “இதுக்கு முன்னாடி நான் நெறைய தடவை இதே மாதிரி பண்ணிருக்கேனே! அப்போலாம் சார்கு இப்பிடித்தான் தோணுச்சா?” என்று சொல்லிக் கண்சிமிட்ட அவன் அவளது தோளில் கைபோட்டபடியே அந்தத் தருணங்களை விளக்க ஆரம்பித்தான்.
“நல்லா நியாபகம் இருக்கு. ஃபர்ஸ்ட் டைம் ஜெய்ப்பூர்ல ரோட் கிராஸ் பண்ணுறப்போ லாரி இடிக்காம உன்னைத் தூக்குனப்போ நீ என்னை இப்பிடித்தான் பாத்த! அப்போவே இதே மாதிரிதான் எனக்குத் தோணுச்சு! தென் வீர்ப்பூர்ல அந்த வீட்டோட பெட்ரூம்ல இதே மாதிரி இந்தக் கண்ணு ரெண்டையும் விரிச்சுப் பாத்தப்போவும் இப்பிடித்தான் தோணுச்சு! என்ன பண்ணுறது? அப்போ அதெல்லாம் நான் வாய்விட்டுச் சொல்லியிருந்தா அந்த இடத்துலயே நீ என்னைக் காலி பண்ணிருப்ப! பட் இப்போ என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது!” என்றான் அவன் காலரைத் தூக்கிவிட்டபடி.
அவந்திகா அவன் கூறியதை ஆச்சரியத்துடன் கேட்டவள் “அஹான்! சோ அப்போவே உன்னோட மைன்ட்குள்ள இந்த மாதிரி தாட்ஸ் வச்சுட்டுத்தான் நீ என்கூட இருந்தியா? உன்னைப் போய் நான் ஜென்டில்மேன்னுலாம் நெனச்சேன் பாரு! என்னைச் சொல்லணும்” என்று முகம் சுருக்கிக் கூறினாள்.
“ஏய்! நான் ஒன்னும் முற்றும் துறந்த முனிவர் இல்ல! என் பக்கத்துலயே ஒரு அழகான பொண்ணை வச்சுகிட்டு அவளைப் பாக்காம இருக்கிறதுக்கு! இதுக்கே இப்பிடிச் சொன்னா இன்னும் நான் எவ்ளோவோ யோசிச்சேன்!” என்று ஓரக்கண்ணால் பார்த்தபடி அவளைச் சீண்ட ஆரம்பித்தான்.
சட்டென்று திரும்பியவள் “இஸிட்? அவசரமே இல்ல! நீ இப்போ ரெடியாகி ஆபிஸ் போ. எனக்கும் ஃபங்ஷன் இருக்கு பாரு! ஈவ்னிங் சார் வீட்டுக்குத்தானே வரணும்! அப்போ ஒரு லைன் விடாம என்கிட்ட சொல்லுற நீ” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
ராகவ் சிரித்துக் கொண்டே இருக்கவும் மீண்டும் உள்ளே வந்தவள் எப்போதும் போல எக்கி நின்று அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு “இதப் பாத்துட்டு நான் என்னவோ சமாதானம் ஆயிட்டேனு தப்பா நெனச்சிடாதே! ஈவ்னிங் நீ சொல்லியே ஆகணும்” என்று அவனை மிரட்டிவிட்டுச் சென்றாள்.
அவள் சென்றதும் “நீ இருக்கிற வரைக்கும் என் லைஃப்ல என்டர்டெயின்மென்ட்க்குப் பஞ்சமே இருக்காது ஜானு!” என்று ரசனையுடன் கூறிவிட்டு அலுவலகம் செல்லத் தயாரானான் ராகவ்.
அதே நேரம் கீழே விழா ஜகஜோதியாக ஆரம்பமானது.
அன்றைய விழாவின் கதாநாயகி சிவப்பு நிற லெஹங்காவில் ஆபரணங்கள் மின்ன அமர்த்தி வைக்கப்பட்டிருந்தாள். அவள் அருகில் பிந்துவும் நேஹாவும் இருந்து அவளைப் பார்த்துக்கொள்ள ரித்திமா வந்தவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.
அவந்திகா பூஜைக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். உஷாவின் குடும்பத்தினர் வரவும் அவள் ஓடிச் சென்று கல்யாணி தேவியை அணைத்துக்கொண்டாள். அனைவரையும் உள்ளே அழைத்து வந்து அமர வைத்தவள் மைதிலியிடம் “மம்மி! எப்பிடி எங்க அரேஞ்ச்மென்ட்ஸ்? பக்காவா இருக்கா?” என்று கேட்க அவரோ “ரொம்ப அழகா இருக்கு, என் குட்டிமா மாதிரியே” என்று அவளது முகவாயைப் பிடித்துக் கொஞ்சினார்.
அதற்குள் சுமித்ரா, பிரியா, ராதிகா, வீணா என்று வீட்டுப் பெரியவர்கள் வரவும் அவர்கள் வழக்கமான கதைகளைப் பேச ஆரம்பித்தனர். ராஜ்வர்தனும் ரன்வீரும் குணால் மோகனுடன் சேர்ந்து பிசினஸ் கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர்.
ரித்திமா அவந்திகாவிடம் “ஹனிபி! வேர் இஸ் கௌசிக்கா? அவங்களும் அண்ணாவும் எப்போ வருவாங்கடி?” என்று கேட்க அவளோ “இன்னைக்கு அம்புவும் அஜ்ஜுவும் லீவுக்கு வர்றாங்கடி! சோ அவங்களையும் கூட்டிட்டுத்தான் வருவாங்க” என்று கூறிவிட்டுப் புரோகிதருக்கு இன்னும் என்ன வேண்டும் என்று கேட்கச் சென்றாள்.
ஒரு வழியாக அவர்களும் வந்துவிட விழா இனிதே பூஜையுடன் ஆரம்பித்தது..
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


