காலையில் எழுந்த அவந்திகா பழைய நியாபகத்தில் தரையில் காலை ஊன்றப் போனவள் பின்னர் நினைவு வந்தவளாகக் கட்டிலிலேயே அமர்ந்தாள். அவளுக்குக் காலில் இன்னும் வலி இருக்கவே எழும்பாது ராகவ் வருவதற்காகக் காத்திருந்தாள்.
ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு அறைக்குள் வந்தவனிடம் எப்படிப் பேசுவது என்று தெரியாமல் விழித்தவளை நெருங்கியவன் அவளைத் தூக்கிச் சென்று குளியலறையில் விட்டு ஆடையையும் கையில் கொடுத்தவன் “உனக்கு ஹாஃப் அன் ஹவர் டைம் ஜான்சி ராணி! அதுக்குள்ள குளிச்சிட்டு என்னைக் கூப்பிடுற!” என்று கட்டளையிட்டுவிட்டுக் கதவை வெளிப்புறம் தாழிட்டுவிட்டுச் சென்றான்.
சரியாக அரை மணிநேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டதும் திறந்தவன் உள்ளே சென்று அவளைத் தூக்கிக் கொண்டு வந்தவன் டிரஸ்ஸிங் டேபிளில் அமர வைத்தான்.
கையில் ஒரு டவலை எடுத்தவன் அவள் தலையைத் துவட்ட ஆரம்பித்தான்.
அவந்திகா “ராகவ்! முடி சீக்கிரமா ட்ரை ஆயிடும்! எதுக்கு வேஸ்டா துவட்டுற?” என்று கேட்டுக்கொண்டே நிமிர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஜான்சி ராணி! இன்ஜூரிஸ் வேணா ஹீல் ஆயிருக்கலாம். பட் இன்னும் கொஞ்ச நாளுக்குத் தலைல ஈரம் தங்காமப் பாத்துக்கணும்னு டாக்டர் சொன்னது உன் மண்டைல ஏறவே இல்லயா?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“திட்டாமத் தலையத் துவட்டு மேன்! எங்க சித்தி சொல்லுவாங்க! தலை துவட்டுறப்போ திட்டிட்டே இருந்தா கொழந்தைங்க வளர மாட்டாங்கலாம்”
“நீ கொழந்தையா? உன்னை எல்லாம் இத்தனை வருஷம் சமாளிச்சதுக்குக் கௌசிம்மாக்கு நோபல் ப்ரைஸ் குடுக்கணும்”
“அஹான்! போடா! நான் என்ன அவ்ளோ டார்ச்சராப் பண்றேன்? நீ ஒன்னும் தலை துவட்டி விட வேண்டாம் போ!” என்று அவன் கையைத் தட்டிவிட முயன்றாள்.
முடியாமல் போகவே உர்ரென்று முகத்தை வைத்துத் தலையைக் கொடுத்திருந்தவளைப் பார்த்துச் சிரிப்புதான் வந்தது ராகவுக்கு! ஈரம் போகத் தலையைத் துவட்டியவன் அவளின் எதிரே முழந்தாளிட்டு அமர்ந்தான்.
அவள் அசிரத்தையாகப் பார்க்கவும் “என்ன ஜான்சி ராணிக்குக் கோவமா?” என்று சொல்லி அவளது மூக்கைத் தன் விரலால் பிடிக்கவும் அவள் முகத்தைச் சுருக்கியபடியே அவன் கையைத் தட்டிவிட்டாள்.
பின்னர் “ஐயாம் சீரியஸ்லி ஸ்பீக்கிங்! இந்த வேலைலாம் நீ பண்ண வேண்டிய அவசியம் இல்ல ராகவ்! நீ யாராச்சும் நர்ஸ் அப்பாயின்ட் பண்ணு! அவங்க எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க” என்று நிதானமாகக் கூறினாள் அவந்திகா.
“நோ வே! யார நம்பியும் நான் உன்னைப் பாத்துக்கிற பொறுப்பைக் குடுக்கப் போறதில்ல ஜான்சி ராணி! இந்த விஷயத்துல நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன்” என்ற அவனது குரலில் தெரிந்த பிடிவாதம் அவளை அயற்சி அடைய வைத்தது.
“ராகவ்! நீ ஆபிஸ் போவியா? இல்ல என்னைப் பாத்துப்பியா? உனக்கு ஆல்ரெடி ஆயிரம் டென்ஷன் இருக்கும். இதுல இந்த வேலைலாம் நீ பண்ண வேண்டிய அவசியம் இல்லன்னுதான் நான் சொல்லுறேன்”
“சப்போஸ் உனக்குப் பதிலா எனக்கு இப்பிடி ஆயிருந்தா அப்போ நீ என்னை நர்ஸ் கையில் ஒப்படைச்சிட்டுப் போயிருப்பியா அவந்திகா? எப்பிடி ஹஸ்பென்ட்கு வைஃப் உதவியா இருக்கணுமோ அதே மாதிரிதான் ஹஸ்பென்ட்டும். முடியாத சமயத்துல வைஃப்கூடவே இருந்து பாத்துக்க வேண்டியது ஒரு ஹஸ்பென்டோட கடமை. மத்தவங்க எப்பிடினு எனக்குத் தெரியாது அண்ட் எனக்கு அதப் பத்திக் கவலையும் இல்ல. நான் இப்பிடித்தான்” என்று சொல்லிவிட்டுச் செல்பவனைத் தடுக்க அவளால் முடியவில்லை.
குளித்துவிட்டு வெளியே வந்தவனிடம் “ராகவ்! நான் வேணாச் சரி ஆகுற வரைக்கும் சித்திகூட இருக்கவா?” என்று கேட்டவளுக்குப் பதிலளிக்காமல் அவன் அவனது வேலையைப் பார்த்தான்.
அவந்திகாவுக்குத் தான் வீணாக அவனுக்குச் சுமையாக இருக்க வேண்டாம் என்ற எண்ணம். அதே போல் ஒவ்வொரு விஷயத்துக்கும் அவனை அழைக்கவும் தயக்கமாக இருக்கவே நர்ஸ் ஏற்பாடு பற்றி அவனிடம் பேசினாள் அவள். ஆனால் ராகவின் பிடிவாதத்தைப் பார்த்ததும் அவளால் எதுவும் செய்ய இயலாது போயிற்று.
ராகவ் அவளுக்குப் பதிலடி கொடுத்தவன் நேரே கீழே சென்று அவர்கள் இருவரின் காலையுணவை அவர்களின் அறைக்கே கொண்டு செல்லுமாறு சொல்லிவிட்டுக் கிஷோரைப் பார்க்க அவனது அறைக்குச் சென்றான்.
அவனிடம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு விஹான் டெலிகாமைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அவனது அறைக்குத் திரும்பினான்.
அறையில் அவந்திகா குழப்பத்துடன் காத்திருக்க மெதுவாக அவள் அருகில் வந்தவன் தட்டில் உணவை வைத்துவிட்டு “சாப்டலாமா?” என்று அவளை எதுவும் நடக்காத மாதிரி கேட்டுவிட்டு அவளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தான்.
அவள் ஏதோ சொல்ல வர உதட்டில் கை வைத்து அமைதி என்று காட்டிவிட்டு அவளுக்கு ஊட்டிவிட்டான் ராகவ். அப்படியே அவனும் சாப்பிட்டுவிட்டு எழுந்தவன் அவள் மீண்டும் ஏதோ சொல்ல வரச் சரி கேட்போம் என்று அவள் அருகில் அமர்ந்து சொல்லுமாறு சைகை செய்தான்.
“ராகவ்! நான் சித்திகூட இருந்துட்டுச் சரியானதும் இங்க வர்றேனே” என்று அவள் கூறவும் எரிச்சலானான் ராகவ்.
இருந்தாலும் பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் “லிசன்! ஒரே விஷயத்தை அடிக்கடி பேசுறது எனக்குச் சுத்தமாப் பிடிக்காது! நல்லாக் கேட்டுக்கோ! நீ எங்கேயும் போகப் போறதில்ல! இங்க என்கூடதான் இருக்கப் போற! நான்தான் நீ சரியாகுற வரைக்கும் உன்னைப் பாத்துக்கப் போறேன்! அன்டர்ஸ்டான்ட்?” என்று கேட்டுவிட்டு அவளைப் பார்த்தான்.
அவந்திகா “நீ சொல்லுறதெல்லாம் சரிதான். பட் ஐயாம் நாட் அ கிட் அண்ட் யூ ஆர் நாட் மை பேபிசிட்டர்!” என்று கடினமான குரலில் கூற ராகவ் சிரித்தான்.
சிரித்தபடியே அருகில் வந்தவன் “பட் ஐயாம் யுவர் ஹஸ்பென்ட்” என்று சொல்லவும் இப்போது எரிச்சல்படுவது அவந்திகாவின் முறையாயிற்று.
“நேத்தில இருந்து நான் உன் ஹஸ்பென்ட்ங்கிற வார்த்தைய நீ நூறு தடவையாச்சும் சொல்லிருப்ப! எனக்கு அதைக் கேட்டு கேட்டே என் காது வலிக்குது! நீ ஹஸ்பென்டாவே இருந்துட்டுப் போ! அதுக்காக இப்பிடி ஹெல்ப் பண்றேனு சொல்லி என்னைத் தர்மசங்கடப்படுத்தாத ராகவ்”
“நீ முட்டாள்தனமா எதாவது யோசிச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்ல! நீ உன் இஷ்டத்துக்கு உளறிட்டே இரு! ஐ டோன்ட் கேர்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
அன்று மட்டும் அல்ல! அவளுக்குக் கால் சரியாகும் வரை அவளைக் குழந்தையைக் கவனிப்பது போல ராகவ் பார்த்துக் கொண்டான். ஒரு கட்டத்துக்கு மேல் அவந்திகாவுக்கும் அவன்கூடவே இருப்பது பிடித்துவிட அவள் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருக்கப் பழகினாள்.
மருத்துவர் இனி அவள் தாராளமாக நடக்கலாம் என்று அவளது ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் பார்த்துவிட்டுக் கூறிவிட்டார். ஆனால் இன்னும் கொஞ்ச நாட்களுக்குக் காலுக்கு முடிந்தவரை அதிக வேலை கொடுக்க வேண்டாம் என்று மட்டும் அறிவுறுத்தினார்.
அதற்கிடையே விபத்து பற்றிய புகாரை விசாரித்த காவல்துறைக்கு லாரியைப் பற்றியோ டிரைவரைப் பற்றியோ சின்னத் தகவல் கூடக் கிடைக்கவில்லை.
ராகவ் காரில் பிரேக் துண்டிக்கப்பட்டதைப் பற்றி அறிந்துகொள்ள கார் சர்வீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று விசாரித்தான். ஆனால் அவனது காரைச் சர்வீஸ் செய்த மெக்கானிக் அவன் காரை எடுத்துச் சென்ற மறுநாளே வேலையை விட்டு நீங்கி வெளியூர் சென்றுவிட்டதாகச் சர்வீஸ் ஸ்டேஷன் ஓனர் கூறவும் அவன் சலிப்படைந்தான். இருந்தாலும் மீண்டும் அவனைப் பார்த்தால் தனக்குத் தகவல் தெரிவிக்குமாறு கூறிவிட்டு வந்தான்.
வருண் ஆஸ்திரேலியாவில் இருந்து பிசினஸ் மீட்டை முடித்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டான். அவன் உஷாவைப் பார்த்துக் கொள்ளவே ரித்திமா அவளைப் பார்க்க அவர்களின் வீட்டுக்குப் போவதை முடிந்தளவு தவிர்த்தாள்.
நீண்ட நாட்களுக்குப் பின் அலுவலகம் செல்வதற்காகத் தயாரானாள் அவந்திகா.
கண்ணாடி முன் நின்று தோள் அளவு வளர்ந்த கூந்தலைத் தடவித் திருப்திப்பட்டுக் கொண்டாள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராகவ் “போதும் ஜான்சி ராணி! எத்தனை தடவை நீ இழுத்துப் பார்த்தாலும் அதே நீளம்தான் இருக்கும்!” என்று அவளைக் கிண்டலடிக்க அவந்திகா அவனைப் பார்த்து உதட்டைச் சுழித்துவிட்டு மீண்டும் கண்ணாடியைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அவனும் கோட்டை மாட்டியவன் இன்னும் கண்ணாடி முன் நின்றுகொண்டிருந்தவளை இழுத்துக்கொண்டு சென்றான். அலுவலகத்தில் அவளை இறக்கிவிட்டவன் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்திவிட்டு அவனது அலுவலகம் நோக்கிக் காரைச் செலுத்தினான்.
அவந்திகா அவன் கார் செல்லும் வரை காத்திருந்தவள் அலுவலகத்தில் நுழைந்தாள். அலுவலகத்தில் நுழைந்ததும் அவந்திகா ரித்திமாவைத்தான் தேடினாள். அவள் போன் பேசிக்கொண்டு உள்ளே நுழையவும் “எங்க போன ரித்தி?” என்று கேட்டாள் அவந்திகா.
அவள் கையிலிருந்த ஜிலேபியைக் காட்டவும் ஆர்வத்துடன் அருகில் வந்து வாங்கிக்கொண்டாள் அவந்திகா.
“ரித்தி! எவ்ளோ நாளாச்சு ஜிலேபி சாப்பிட்டு? குடுடி” என்று இருவரும் சாப்பிடத் தொடங்கினர்.
இருவரும் சாப்பிடும்போது யாரோ வரும் அரவம் கேட்கவும் வாசலைப் பார்த்தனர் இருவரும்! அங்கே நின்றவர்களை அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
“ஹாய் மிஸஸ் அவந்திகா கபூர்! ஒரு வழியா எழுந்து நடக்க ஆரம்பிச்சிட்டீங்க போல!” என்று நக்கலாகக் கேட்டுக்கொண்டு நின்றவன் சிராஜ்!
அவனைப் பார்த்ததும் கையிலிருந்த ஜிலேபியைத் தட்டில் போட்டுவிட்டு எழுந்தாள் அவந்திகா. அவள்கூடவே எழுந்த ரித்திமாவைப் பார்த்தவன் “நீங்க யாரு? உங்களை நான் பாத்ததே இல்லையே” என்று கேட்க அவந்திகா கடுப்பானாள்.
ரித்திமா “அது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம்! அடுத்தவங்க ஆபிஸ்க்குள்ள வர்றப்போ பெர்மிஷன் கேக்கணுங்கிற பேசிக் மேனர் கூட இல்லாதவனுக்குல்லாம் நான் யாருனு சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூற அவனோ சிரித்தபடியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
அவந்திகா “நான் கோவப்பட்டு ராகவுக்குக் கால் பண்ணுறதுக்கு முன்னாடி இங்க இருந்து கெளம்புனா உங்களுக்கு நல்லது” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.
“வொய் ஆர் யூ வெயிட்டிங்? கால் ஹிம். அவன் இங்க வரட்டும்! வந்து என்ன பண்ணுவான்? என்னை அடிப்பானா? அவனால அது மட்டும்தான் பண்ண முடியும்! பட் என்னால என்ன பண்ண முடியும்னு இத்தனை நாள்ல உங்களுக்குப் புரிஞ்சிருக்கணுமே மிஸஸ் கபூர்!”
“என்ன உளறிட்டு இருக்கீங்க?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டவளைப் பார்த்து அலட்சியமாகச் சிரித்தான் அவன்.
“4 மாசம் பெட்ல படுத்தும் இன்னும் அந்தத் திமிர் கொஞ்சம் கூடக் கொறையவே இல்லையே? ஓகே! சுத்தி வளைச்சுப் பேச விரும்பல மேடம்! உங்களுக்கு நடந்த ஆக்சிடென்டுக்கு நான்தான் காரணம்! பட் இதுல டார்கெட் பண்ணவன் தப்பிச்சிட்டான்.. அது ஒன்னுதான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு! அதுல அவன் பொண்டாட்டி இன்ஜூர்ட் சிவியர்லினு கேட்டதுக்கு அப்புறமா ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சு. ஏன் தெரியுமா? நீன்னா அவனுக்கு உயிர்! உன் மேல ஒரு தூசி பட்டாக் கூட என்னை உயிரோட விட மாட்டேன்னு ராஜஸ்தான்ல என்கிட்ட சவால் விட்டான். இப்போ பாரு! அவன் பொண்டாட்டி அவனோட உயிரை 4 மாசம் நடக்கவிடாமப் பொழப்பாளா இல்லையானு தெரியாத நெலைமைக்கு நான் கொண்டு வந்தேனு கூடத் தெரியாம லாரி டிரைவரையும் மெக்கானிக்கையும் தேடிட்டுச் சுத்திட்டு இருக்கான் உன் புருஷன்!” என்றான் சிராஜ் திமிருடன்
அவன் சொன்னதைக் கேட்டு அவந்திகாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தாலும் அதை அடக்கியபடியே “அவனுக்குத் தெரியாத வரைக்கும் உனக்கு நல்லது மிஸ்டர் மெஹ்ரா! மரியாதையா வெளியே போ!” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்ப “தெரிஞ்சாலும் எதுக்கும் ஆதாரம் இல்லையேமா! ஆக்சுவலி நான் இந்தப் பக்கமா வந்தது வேற ஒரு வேலையா! பட் ராகவோட கார் ஆபிஸ் வாசல்ல நிக்கிறதப் பாத்ததும் தான் ஸ்ட்ரைக் ஆச்சு! எனி ஹவ் இப்போ நீங்களும் நல்லபடியா உடம்பு தேறிட்டீங்க! இப்போ என்னோட அடுத்த மூவ் என்னவா இருக்கும்னு நீங்க யோசிக்கணும்கிறதுக்காகத்தான் நான் இவ்ளோ தூரம் பேசிட்டு இருக்கேன் மிஸஸ் ராகவ்!” என்றான் தெனாவட்டாக.
“உனக்கும் நான் ஒரு விஷயம் சொல்லணும் மிஸ்டர் மெஹ்ரா! தொழில் போட்டி இல்லாம எந்த மனுஷனாலயும் முன்னேற முடியாது! ஆனா அதப் புரிஞ்சிக்காம இப்பிடிக் கேவலமாக் கேம் பிளே பண்ணாம உங்க பிசினஸ்ல கான்சென்ட்ரேட் பண்ணா அட்லீஸ்ட் என்னோட ராகவுக்கு அடுத்த இடத்தையாச்சும் நீங்க இந்த ஃபீல்ட்ல பிடிக்கலாம்! இல்லன்னா ரொம்பக் கஷ்டம்!” என்று தோளைக் குலுக்க ரித்திமா அதைக் கேட்டுக் கிளுக்கென்று சிரிக்க அவமானத்தில் சிராஜ் முகம் கடினமுற அவர்களைப் பார்த்துவிட்டு விறுவிறுவென்று வெளியேறினான்.
அவன் சென்றதும் ரித்திமா “இவன் ஏன்டி இப்போ வந்து தேவையில்லாமப் பேசிட்டுப் போறான்? பட் அவனுக்கு ஓவர் திமிருதான். உன்னை ஆக்சிடென்ட் பண்ணுனத உன்கிட்டயே சொல்லிட்டு அவனை எதுவும் பண்ண முடியாதுன்னு தெனாவட்டா சொல்லிட்டுப் போறான் பாரு. நீ ஃபர்ஸ்ட் ராகவ்கிட்ட இதப் பத்திச் சொல்லிடு” என்று சொல்ல அவந்திகா மறுத்தாள்.
“அவன் தேவையில்லாம டென்ஷன் ஆவான். இத அவ்ளோ பெரிய இஸ்யூ ஆக்க வேண்டாம். அதான் நான் சரியாயிட்டேனே! இப்போ போய்ச் சொன்னா தேவையில்லாத பிரச்சனைதான் வரும். அதால ராகவோட கவனம் பிசினஸ்ல இருந்து டைவர்ட் ஆகும். அதுதான் இந்த சிராஜும் எதிர்ப்பாக்குறான்! சோ இது ராகவுக்குத் தெரியாம இருக்கிறதே நல்லது” என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் அவந்திகா.
ஆனால் அந்த விஷயம் அன்று முழுவதும் அவளின் மூளையில் ஓடிக்கொண்டே இருந்தது. டிவி ஓடிக்கொண்டிருக்க அதைக் கவனிக்காமல் புருவத்தைச் சுழித்து யோசித்துக்கொண்டிருந்தவளை ரொம்ப நேரமாகக் கவனித்துக் கொண்டிருந்தான் ராகவ். அவள் அருகில் அமர்ந்தவன் தோளில் கை போட்டு “என்னாச்சு ஜான்சி ராணிக்கு? எதோ பயங்கரமா ப்ளான் பண்ணுற போல” என்று சொல்லி அவளது தலையில் செல்லமாக முட்டினான்.
“அப்பிடிலாம் ஒன்னும் இல்லயே!” என்று சமாளித்தவளைப் பார்த்தவன் “என்னைக்காச்சும் எனக்குத் தெரிஞ்சுத்தானே ஆகணும்” என்று சொல்ல அவள் சிரித்துச் சமாளித்தாள்.
“எப்போ பாரு என்ன டிவி மொபைல்னு இருக்க நீ? புருஷன்னு ஒரு ஜீவன் இருக்குங்கிற நியாபகமே உனக்குச் சுத்தமா இல்ல ஜானு! ஃபர்ஸ்ட் அத ஆஃப் பண்ணு”
“ப்ளீஸ் ராகவ்! நான் சாங் பாத்துட்டு இருக்கேன்டா! ஒரே ஒரு சாங் ப்ளீஸ்”
“நோ வே” என்று எழுந்து சென்று டிவியை ஆஃப் செய்யவும் கடுப்பானவள் “சை! இந்த வீட்ல ஒரு சாங் கூடப் பாக்க முடியல” என்று பல்லைக் கடித்தாள்.
“ஃபர்ஸ்ட் ஒரு பொண்டாட்டியா உன்னோட கடமையச் செய் ஜான்சி ராணி! அப்புறமா டிவி பாக்கலாம்”
“இப்போ நான் எந்தக் கடமையடா செய்யல?”
“ஒரு பொண்டாட்டியா நீங்க இதுவரைக்கும் என்னங்க செஞ்சுருக்கீங்க?” என்று குறும்பாகப் பார்க்கவும் பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து அவன் மீது எறிந்தாள் அவள்.
“காலைல எழுந்திருச்சதும் காபி குடுத்திருக்கியா ஒரு நாளாச்சும்? சரி அத விடு! ஒரு நாள் எனக்குச் சாப்பாடு ஊட்டி விட்டிருப்பியா நீ?”
“நீ என்ன கொழந்தையாடா உனக்கு ஊட்டிவிட?”
“ஏய்! பேச்சை மாத்தாத! ஆபிஸ் போயிட்டு நம்ம ஹஸ்பென்ட் டயர்டா வருவானே! அவனுக்கு அட்லீஸ்ட் கால் அமுக்கி விடுவோம்னாச்சும் உனக்குத் தோணிருக்குதா? வெரி பேட் ஜான்சி ராணி”
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


