காலையில் கண் மலர்ந்த அவந்திகாவுக்குக் கீழ்த்தளத்தில் இருந்த நான்கு ஆண்மகன்களின் உற்சாகச்சிரிப்பு காதில் விழவும் அவளுக்கும் இவ்வளவு நேரம் இருந்த சோம்பல் பறந்து போய்விட உற்சாகம் வந்துவிட்டது.
சோம்பல் முறித்தபடி அறையை விட்டு வெளியேறியவள் மாடியின் வராண்டாவில் போய் நின்றாள். நேற்றைய இரவில் கருப்பு வண்ண ஸ்கெட்சால் கோடிழுத்தது போல தெரிந்த மலைச்சிகரங்கள் இப்போது காலைக்கதிரவனின் பொன்நிறக்கதிர்களால் ஜொலித்துக் கொண்டிருந்தன. நீண்டுயர்ந்த மரங்களினூடே தெரிந்த அச்சிகரங்களை ரசித்தவளுக்குத் தூரத்தில் ஏதோ இரைச்சல் கேட்பது போல இருந்தது.
சொல்லப் போனால் இரவிலும் அந்த இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது தான். இடிமுழக்கம் போல பெரும்சத்தமும் இல்லாத அதே நேரம் சுவர்க்கோழியின் ரீங்காரமும் இல்லாத ஏதோ ஒரு மென்மையான இரைச்சல். செவிமடல்களைத் தாண்டி செவிப்பறையை மென்மையாகத் தீண்டிவிட்டுச் சென்ற அது என்னவாக இருக்கக்கூடுமென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் உந்தித் தள்ள கீழ்த்தளத்துக்குச் சென்றாள் அவந்திகா.
அவளைக் கண்டதும் நான்கு சிரிப்புச்சத்தத்தில் ஒன்று தானாக நின்றுவிட, அது யாரென்று அவன் முகம் பார்க்காமலே அறிந்து கொண்டவள் கிஷோரிடம் “இங்கே ஏதோ இரைச்சல் கேக்குதே? அது என்ன? என்னை அங்கே கூட்டிட்டுப் போறிங்களா?” என்று சிறுகுழந்தையின் ஆர்வத்துடன் கேட்க
கிஷோர் “இங்கே வாக்கபிள் டிஸ்டென்ஸ்ல ஒரு வாட்டர் ஃபால்ஸ் இருக்கு… கொஞ்சம் பெருசு தான்… பட் காட்டுக்கு நடுவுல இருக்கிறதால அனிமல்ஸ் நடமாட்டம் இருக்கும்… நாங்களே அங்கே அடிக்கடி போக மாட்டோம்” என்று சொல்லவும் அவந்திகாவுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன.
“வாட்? வாட்டர் ஃபால்சா? நான் என் வாழ்க்கையில இது வரைக்கும் வாட்டர் ஃபால்சை பார்த்ததே இல்லை தெரியுமா? ப்ளீஸ் என்னைக் கூட்டிட்டுப் போங்க” என்று அடம்பிடிக்க அவள் வந்ததும் சிரிப்பை நிறுத்திய ராகவ் இப்போது அவளை முறைக்கத் தொடங்கினான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவனைக் கண்டதும் அவந்திகா மனதிற்குள் “இவன் ஒருத்தன், எதுக்கெடுத்தாலும் முறைச்சிட்டே இருக்கான்” என்று சலித்துக் கொண்டாள்.
ராகவ் தொண்டையைச் செருமியவன் “யாரும் இப்போ வாட்டர் ஃபால்சுக்குப் போகப் போறது இல்லை” என்று ஆணையிடும் குரலில் சொல்லவும்
“ஏன் போகக்கூடாது? நான் போவேன்… எனக்கு ஆசையா இருக்கு… ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் நீ இப்பிடி எனக்கு ரூல் போடாதே மேன்…. இந்த அத்துவானக் காட்டுக்குள்ள டைம் பாஸ் ஆகாம நான் போரடிச்சுப் போயிருக்கேன்… இப்போ தான் ஒரு எண்டர்டெயின்மெண்ட் கிடைச்சிருக்கு… நான் போய் வாட்டர் ஃபால்சை பார்த்துட்டு மதியம் தான் வருவேன்” என்று பிடிவாதமாய் சொல்லிவிட்டு வாசல் பக்கம் செல்ல முயன்றவளை அவசரமாகக் கரம் பற்றி நிறுத்தினான் ராகவ்.
“ஆர் யூ கிரேசி? டைம்பாஸ் ஆகலைனு யாராவது வீணா ஆபத்தை விலை குடுத்து வாங்குவாங்களா ஜான்சி ராணி? அறிவு கெட்டத்தனமா உளறாம ஒழுங்கா மாடியில போய் பாட்டு கேளு, டான்ஸ் ஆடு.. அதுவும் போரடிச்சா படுத்து தூங்கு… ஆனா இனிமே உன் கால் வாசல் பக்கம் போகவே கூடாது” என்று கடினமான குரலில் உரைக்கவும் அவந்திகாவுக்கு சுருசுருவென்று கோபம் ஏற ஆரம்பித்தது.
கையை வேகமாக அவனிடமிருந்து உருவிக் கொண்டவள் ஆட்காட்டிவிரலை நீட்டி “இன்னொரு வாட்டி நீ எனக்கு ஆர்டர் போடாதடா… எரிச்சல்ல நான் எதுவும் சொல்லிடப்போறேன்… ஒரு நைட்லயே இவ்ளோ போரடிக்குதே, இன்னும் ட்வென்ட்டி ஒன் டேய்ஸ் இந்தப் பேய்பங்களாவையும், இந்த நாலு விடியாமூஞ்சிகளையும் பார்த்து நான் டைம்பாஸ் பண்ணனுமா? நான் ஃபாரஸ்டைச் சுத்திப் பார்க்கத் தான் போறேன்… வேணும்னா நீயும் என் கூட வா” என்று சொல்லிவிட்டு நிற்க
ராகவ் அவளது ஆட்காட்டிவிரலைப் பிடித்துக் கொண்டபடி “ஃபர்ஸ்ட் என் கிட்ட இப்பிடி விரல் நீட்டி பேசாதே… ஓகேயா? அப்புறம் என்ன சொன்ன? உன் கூட சேர்ந்து நானும் ஃபாரஸ்டைச் சுத்திப் பார்க்கணுமா? ஏய் நான் என்ன உன்னை ஹனிமூனா கூட்டிட்டு வந்திருக்கேன்? நானே இந்த ட்வென்ட்டி ஒன் டேய்ஸுக்கு அப்புறம் உன் ஃபேமிலியில இருக்கிறவங்களை எப்படி சமாதானம் பண்ணுறதுனு நினைச்சுக் குழம்பிப் போயிருக்கேன்… இதுல உனக்கு வாட்டர் ஃபால்ஸும், ஃபாரஸ்ட் விசிட்டும் தான் குறைச்சல்.. ஒழுங்கா சொல்பேச்சு கேட்டு உன் ரூமுக்குப் போயிடு… திஸ் இஸ் மை லாஸ்ட் வார்னிங்” என்று உறுமிவிட்டு அவள் விரலை விடுவித்தான்.
அவந்திகா விரலைத் தடவிக்கொண்டபடி “இதெல்லாம் நீ என்னைக் கிட்னாப் பண்ணுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்… அப்போ விட்டுட்டு இப்போ மண்டையை உடைச்சா என்ன அர்த்தம்? எனிஹவ் நீ சமாளிக்கிறதும், சாம்பார் வைக்கிறதும் உன் பாடு… அதுக்கு நான் என்ன பண்ணுறது?” என்று அலட்சியமாகத் தோளைக் குலுக்க அவளது இந்த அலட்சியபாவனையில் ராகவ் மட்டுமன்றி அவனது மூன்று சகோதரர்களுமே ஓய்ந்து போயினர்.
அமர் இப்படியே விட்டால் இன்று முழுவதும் இந்தச் சண்டை நீளும் என்று எண்ணியவன் ராகவிடம் “பய்யா! வாட்டர் ஃபால்ஸ் தானே! கூட்டிட்டுப் போயிட்டு வந்துடுங்களேன்… ஒன் ஹவர் தானே ஆகும்… எதுக்கு தேவையில்லாத ஆர்கியூமெண்ட்ஸ்?” என்று ராகவை அமைதிப்படுத்தி அப்படியே அவந்திகாவின் ஆசையையும் நிறைவேற்றிவிடும் நல்லெண்ணத்தில் கூற
அவந்திகா அவனை முந்திக் கொண்டு “சீச்சீ! இவன் கூட மனுஷி போவாளா? அங்கே போயும் சிடுமூஞ்சி சின்னப்பா மாதிரி மூஞ்சியை உர்ருனு வச்சுட்டிருப்பான்…. கிஷோர் நீ என்னோட வர்றியா?” என்று கிஷோரிடம் கேட்க
கிஷோர் ஆர்வத்துடன் “நான் தாராளமா…..” என்று சொன்னபடி எழுந்தவன் ராகவின் கூரியவிழிகள் என்ன சொன்னதோ குரலை இறக்கி “நான் போய் எப்பிடி உங்களோட வரமுடியும்?” என்று மறுக்க
அவந்திகா “ஏன்? வந்தா என்ன? ஓ! அனிமல்ஸ் நினைச்சுப் பயப்படுறியா? அதைலாம் நான் பார்த்துக்கிறேன்யா” என்று அவன் உயிருக்கு உத்திரவாதம் அளித்தாள்.
கிஷோர் மறுப்பாய்த் தலையசைத்தவன் “அனிமல்ஸ்லாம் ஒரு மேட்டரே இல்லை… எனக்கு வாட்டர் ஃபால்சுக்குப் போற வழி தெரியாது… ராகவ் பய்யாக்குத் தான் எந்த டேரக்சன்ல போகணும், எந்த ரூட்ல போகணும்னு தெளிவா தெரியும்” என்று கூறிவிடவே
அவந்திகா கடுப்புடன் “அவன் என்ன இந்தக் காட்டோட கூகுள் மேப்பா? இல்லை பிறக்கிறப்போவே மண்டைக்குள்ள கேம்பசோட பிறந்துட்டானா? நீ பொய் சொல்லாதே கிஷோர்.. இதோ நிக்கிறானே இவன் உன்னைக் கண்ணால மிரட்டுனதை நான் பார்த்துட்டேன்” என்று ராகவை நோக்கி கைநீட்டினாள்.
ராகவ் பெருமூச்சு விட்டபடி “அது தான் பார்த்துட்டல்ல… உன் ரூமுக்குப் போ” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு வீட்டின் வாயிலுக்குப் பூட்டு போட்டவன் சாவியைத் தனது ஷார்ட்ஸின் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டான்.
அவந்திகா தானே நினைத்தாலும் இனி இங்கிருந்து அகல முடியாது என்று எண்ணி முகம் சுருங்கிப் போனவள் “ஓகே! வெல்! நான் எங்கேயும் போகலை… ஆனா பாரு நீ என்னை கிட்னாப் பண்ணுனப்போ ஒரு விசயத்தை மறந்துட்ட… எந்தப் பொண்ணாலயும் இருபத்து நாலு மணிநேரம் இந்த சில்க் ஷேரியைக் கட்டிட்டு இருக்க முடியாது… அட்லீஸ்ட் நீ என்னோட மத்த லக்கேஜையும் சேர்த்து கிட்னாப் பண்ணிருக்கலாம்.. இட்ஸ் ஓகே… முடிஞ்சதைப் பத்தி பேசி எதுவும் ஆகப் போறது இல்லை… எனக்கு இப்போவே வேற டிரஸ் வேணும்… அது காமாசோமானு இருந்தா கூடப் பராவயில்லை… இந்த ஷேரியைச் சுத்திட்டு என்னால இருக்க முடியலை” என்று அடுத்தப் பிரச்சனையை ஆரம்பிக்கவும் ராகவுக்கு நிஜமாகவே ஆயாசமாக இருந்தது.
‘இவளைத் திருமணம் செய்யவிருந்தவன் தப்பிவிட்டான்; நான் தான் மாட்டிக்கொண்டேன்’ என்று எண்ணியவன் மிகுந்த பொறுமையுடன் “லுக்! மாடியில செகண்ட் ரூம் என் சிஸ்டர்சோடது… அங்கே வார்ட்ரோப்ல அவங்க டிரஸ் இருக்கும்… அதைப் போட்டுக்கோ” என்று உடை பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.
அவந்திகா இன்னும் மாடிப்படி ஏறாமல் நிற்பதைக் கண்டு உறுத்து விழித்தவன் பல்லைக் கடித்தபடி “இன்னும் என்ன வேணும் ஜான்சி ராணி?” என்று எரிச்சலடைய
அவந்திகா “டிரஸ் பிராப்ளம் சால்வ் ஆயிடுச்சு… ஆனா குளிச்சதுக்கு அப்புறம் எனக்குப் பயங்கரமா பசிக்கும்.. நீ பிரேக் ஃபாஸ்டுக்கு என்ன செய்யுறதா இருக்கேனு கேக்கத் தான் வெயிட் பண்ணுறேன்” என்று சாதாராணமாகக் கேட்கவே
ராகவ் எதுவும் பேசாமல் இடுப்பில் கைவைத்தபடி முறைக்க ஆரம்பிக்கவும் “ஓகே ஓகே! ட்வென்ட்டி ஒன் டேய்ஸ் இருக்கிறதை வச்சு அட்ஜெஸ்ட் பண்ணிப்போம்” என்று பெரியமனதுடன் கூறிவிட்டு அவனது முறைப்பு ஏற்படுத்திய கிலியை மறைப்பதற்காக மாடிப்படிகளில் அவசரமாக ஓடி மறைந்தாள் அவந்திகா.
ராகவ் அவள் சென்றதும் ஓய்ந்து போய் சோபாவில் தொப்பென்று விழுந்தவன் “பய்யா! ஐ காண்ட் மேனேஜ் திஸ் கேர்ள்… ரொம்ப தொந்தரவு பண்ணுறாளே” என்று சோர்வுடன் சொல்லிக் கொண்டான்.
அதைக் கேட்டு கிஷோர், அமர் மற்றும் வருண் நகைக்கத் துவங்க “நல்லா சிரிங்க… இப்போ சிரிக்கிறதுக்கு நீங்கலாம் பின்னாடி அனுபவிப்பிங்க கய்ஸ்” என்று விரக்தியுடன் சோபாவில் காலை நீட்டிப் படுத்துக் கொண்டான்.
அவர்கள் நால்வருக்குமே இருபத்தியோரு நாட்கள் இங்கேயே அடைந்து கிடப்பத்தில் இஷ்டமில்லை. ஆனால் என்ன செய்வது, அரசாங்கத்தின் கட்டளையை மீற முடியாதல்லவா!
அதே நேரம் ராகவ் சொன்னபடி அவனது தங்கையரின் அறைக்குள் நுழைந்திருந்த அவந்திகா உடைகளைத் தேடத் தொடங்கினாள். கைக்கு கிடைத்தவற்றை அள்ளிக் கொண்டவள் தனது அறைக்கு விரைந்தாள்.
முதலில் இந்தப் பட்டுச்சேலையை மாற்ற வேண்டும் என்று எண்ணியபடி உடைகளை அங்கே இருந்த வார்ட்ரோபுக்குள் திணித்துவிட்டு டவலுடன் குளியலறைக்குச் சென்றாள்.
அவள் அலுப்பு தீரக் குளித்துவிட்டு உள்ளேயே இணைந்திருந்த உடைமாற்றும் அறையில் ஆடையை மாற்றிக் கொண்டிருக்கும் போது ராகவின் போன் அடிக்க ஆரம்பித்தது. அந்தச் சத்தம் அவள் காதில் விழுந்தது போலவே ராகவின் காதிலும் விழுந்து வைக்க வேகமாக மாடியறையை நோக்கிச் சென்றவன் படுக்கையில் கிடந்த மொபைலை எடுத்து “ஹலோ” என்று பேச ஆரம்பித்தான்.
அந்த நொடியில் அவந்திகாவும் உடை மாற்றிவிட்டு போனை எடுக்க அவசரமாக வந்தவள் தரைவிரிப்பில் கால் சிக்கித் தடுமாறி விழப் போகவும், ராகவ் “ஹேய்! பார்த்து வா” என்ற கூவலுடன் அவளருகே சென்றவன் விழாமல் தாங்கிவிட அவந்திகா விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
ராகவ் அவளைத் தனது கரத்தில் தாங்கியிருந்தவன் அப்போது தான் குளித்து முடித்துவிட்டு பனிசிந்தும் மலராக ஒப்பனையின்றி மின்னிய அவளது முகத்தை நோக்கியவன் பயத்தில் இறுக மூடியிருந்த கண்களும், அதன் மேலே கரியவில்லாய் புருவங்களும், ஈரம் சொட்டிய கூந்தலும் இருந்தவளின் எளிமையான அழகில் இவ்வுலகை மறந்திருந்தான்.
முகத்தில் கிடந்த கூந்தல்கற்றையை ஒதுக்கிவிட்டவனின் கண்கள் இப்போது அவளது சிறிய செவ்விதழ்களில் நிலைக்க அந்நேரத்தில் பயம் நீங்கி கண்ணைத் திறந்தாள் அவந்திகா.
“நான் கீழே விழலையா?” என்று அவள் கேட்ட விதத்தில் ராகவுக்குச் சிரிப்பு வந்துவிட
இத்தனை நாட்கள் கடுமை காட்டியவனின் முகத்தில் அச்சிரிப்பு ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் பொருந்திக் கொள்ள, அவன் இதழோடு சேர்ந்து கண்களும் குறுஞ்சிரிப்பில் மலர்ந்தன.
இதழோடு சேர்ந்து விழியும் சிரிப்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கப்பெற்ற அழகு. அது அவனுக்கும் உள்ளது போலும் என்று எண்ணியவள் தன்னை அறியாது அவனது சிரிப்பில் முதல் முறையாக உறைந்து போனாள்.
ராகவ் அவள் கண் முன்னே சொடக்கிட்டவன் அவள் திடுக்கிடவும் நேரே நிறுத்திவிட்டு “ட்வென்ட்டி ஃபோர் ஹவர்சும் வாய்க்கு மட்டுமே வேலை குடுத்தா இப்பிடி தான்… மத்த ஆர்கன்ஸ் வேலை செய்யாம போயிடும்.. இன்னைக்கு உன் கண்ணு வேலை செய்யாத மாதிரி நாளைக்கு வேற எதாவது ஒரு ஆர்கன் ஸ்டிரைக் பண்ணிடப் போகுது ஜான்சி ராணி… பீ கேர்ஃபுல்” என்று கிண்டலாய்ச் சொல்லிவிட்டு அதன் இலவச இணைப்பாக ஒரு புன்சிரிப்பையும் அள்ளி வீசிவிட்டு அகன்றான்.
அவந்திகா அவன் சென்றதும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவள் “பெருமாளே! இந்தச் சிடுமூஞ்சிக்கு இவ்ளோ அழகா சிரிக்கத் தெரியுமா? சிரிச்சா கொஞ்சம் அழகா தான் தெரியுறான்” என்று சொல்லிவிட்டுச் சிரித்துக் கொண்டாள்.
ஆனால் அடுத்த நொடியே அவளது வயிறு கூப்பிட ஆரம்பிக்கவும் “ஹலோ பிரேக்பாஸ்ட் ரெடியா மிஸ்டர் கபூர்?” என்று கத்தியவளின் குரலில் கீழே முக்கியமான விஷயத்தைப் பேசிக் கொண்டிருந்த ராகவ் கடுப்புடன் தலையில் அடித்துக் கொண்டான்.
கிஷோரும் அமரும் சமையலறையில் உருட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடியே போனில் பேசியவனின் கவனம் வருணின் சோர்ந்து போன முகத்தில் விழவும் இவ்வளவு நேரம் இருந்த சிரிப்பு, கோபம், சலிப்பு எல்லாம் தூர ஓட இவனை எப்படி பழைய படி மாற்றுவது என்று சிந்தித்தபடி போனை பேசிமுடித்தான் ராகவ்.
அப்போது “இதுக்கு மேல என்னால வெயிட் பண்ண முடியாதுப்பா” என்று சொன்னபடி மாடிப்படிகளில் டிசர்ட்டும் த்ரீபோர்த் பேண்ட்டுமாய் இறங்கிய அவந்திகாவைக் கண்டதும் இவள் மூலம் முயற்சித்தால் என்ன என்ற எண்ணம் ராகவுக்குள் உதித்தது.
ஆனால் வருண் பிரதியுஷாவின் காதல் இணைவது அவ்வளவு சுலபம் இல்லையென்பது அவனுக்கு அப்போது புரியவில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


