2012ல் ஜூரிச் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் உளப்பிறழ்வுக்குறைபாடு அதாவது சைக்கோபதியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களைத் தங்களது சிரிப்பால் தந்திரமாகக் கையாளுவதாகத் தெரிய வந்துள்ளது. பிறரோடு நடைபெறும் உரையாடலைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அவர்கள் சிரிப்பைப் பயன்படுத்துவதாக அந்த ஆய்வில் புலனாகியிருக்கிறது. தாமஸ் தனது வலைப்பூவில் அவருக்குத் தினசரி தோன்றும் எண்ணங்களைப் பகிர்கிறார். அவரது வலைப்பூவின் வாசகர்களுக்கு அவரது தினசரி பதிவுகளும் வீடியோக்களும் ஆற்றுப்படுத்தும் இடமாக இருப்பதாகக் கூறுகிறார் அவர். ஏனெனில் அந்தப் பதிவைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களது குணநலன்களை அடையாளம் காணவும், தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் தைரியம் பெறுகின்றனர் என்கிறார் தாமஸ்.
-An article from BBC
பொன்மலை காவல்நிலையம்…
சிறப்பு விசாரணை குழுவுக்கென கொடுக்கப்பட்ட அலுவலக அறையில் முரளிதரனோடு அமர்ந்திருந்தாள் இதன்யா. அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தார் மகேந்திரன்.
அவளுக்குச் சல்யூட் அடித்தவர் “நான் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன்…. மார்த்தாண்டன் சார் கூட இந்த கேசை இன்வெஸ்டிகேட் பண்ணுனது நான் தான்… மேடம் வரச் சொன்னிங்கனு கான்ஸ்டபிள் சொன்னார்” என்றார்.
“யாஹ்! நீங்களும் மார்த்தாண்டனும் ப்ரிப்பேர் பண்ணுன சஸ்பெக்ட் லிஸ்ட் எனக்குத் தேவைப்படுது மகேந்திரன்… இந்த ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம்ல நீங்களும் ஒரு மெம்பர்… சோ அடிக்கடி சல்யூட் அடிச்சு கஷ்டப்படவேண்டாம்” என்றாள் இதன்யா.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அதில்ல மேடம்… நீங்க ஏ.சி.பி ரேங்க்”
“சோ வாட்? இந்த கேஸ் முடியறவரைக்கும் வீ ஆர் கொலீக்ஸ்… நம்மள்ல யாரும் ஹையர் ஆபிசர் இல்ல… என்ன முரளி சார் நான் சொல்லுறது சரிதானே?” என முரளிதரனிடம் வினவ
“யூ ஆர் ஆல்வேய்ஸ் ரைட் மேடம்” என்றார் அவர்.
மகேந்திரன் புன்னகையோடு அங்கிருந்து வெளியேறியவர் திரும்பி வந்த போது கையில் ஒரு கோப்பு இருந்தது.
“இது தான் நானும் இன்ஸ்பெக்டர் சாரும் ப்ரிப்பேர் பண்ணுன பழைய சஸ்பெக்ட் லிஸ்ட் மேடம்”
அதை இதன்யா வாங்கிக்கொள்ள முரளிதரனோ “அப்ப புது சஸ்பெக்ட் லிஸ்டும் இருக்குதா மகேந்திரன்?” என்று கேட்டபடி மகேந்திரன் அமர நாற்காலியைத் தள்ளினார்.
“ஆமா சார்! அது மார்த்தாண்டன் சார் கிட்ட இருக்கு… சார் இப்ப வந்துடுவார்”
மகேந்திரன் சொல்லிக்கொண்டிருந்தபோதே மார்த்தாண்டன் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தார்.
இதன்யாவுக்கும் முரளிதரனுக்கும் அவர் சல்யூட் வைக்க மகேந்திரனிடம் சொன்ன அதே வார்த்தைகள் மறுபிரயோகம் செய்யப்பட்டன.
“உங்களை நான் நேத்து ஜி.ஹெச்ல பாத்தேன்” என இதன்யா சொல்லவும் மார்த்தாண்டனிடம் மெல்லிய அதிர்ச்சி.
பின்னர் “இந்த கேஸ்ல நான் ரொம்ப இன்வால்வ் ஆகிட்டேன் மேடம்… அந்தப் பொண்ணைப் பாக்குறப்ப பெண்குழந்தையோட தகப்பனா மனசு திக்திக்குனு அடிக்குது” என்றார் அவர்.
“நீங்க சாதாரணமா இன்வால்வ் ஆகல… எமோஷ்னலி டீப்பா இன்வால்வ் ஆகிருக்கிங்க மார்த்தாண்டன்… நம்ம காக்கி உடுப்பை போடுறப்ப எமோசன்சை கழட்டி வச்சிடணும்… இல்லனா அதுக்கு நம்ம அடிமையா ஆகிடுவோம்… நம்மளால தெளிவா யோசிக்கமுடியாது… என் லெக்சரை கண்டுக்காதிங்க… புது சஸ்பெக்ட் லிஸ்ட் ஒன்னு இருக்குறதா மகேந்திரன் சொன்னார்…. அது கிடைக்குமா?”

அடுத்த நொடியே புதிதாகத் தயாரித்த சந்தேகப்படுவோர் பட்டியல் மற்றும் அவர்களின் விவரங்கள் அடங்கிய கோப்பு இதன்யாவிடம் கொடுக்கப்பட்டது.
பழைய சந்தேகப்படுவோர் பட்டியல் எதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதென வாசித்தவளுக்கு நிறைய கோணங்கள் விடுபட்டிருப்பதாகத் தோன்றியது.
“அந்தப் பொண்ணு கொல்லப்பட்ட முறை, அந்த ஊர்ல நடந்த சாத்தான் வழிபாடு, பொண்ணு மேல அப்பாக்கு இருந்த வெறுப்பு இது மூனு மட்டும் தான் நான் யோசிச்ச கோணம் மேடம்… அதனால சஸ்பெக்ட் லிஸ்டுல ராக்கி, ரோஷண், கலிங்கராஜன், கிளாரா நாலு பேரை மட்டும் வச்சிருந்தேன்… விக்டிமோட பாடில கிடைச்ச பயலாஜிக்கல் எவிடென்ஸ் எதுவும் சஸ்பெக்ட்ஸ் கூட மேட்ச் ஆகல…
இனியா கொலையானது ஏர்லி மானிங்… அந்த டைம்ல ராக்கி சக்கரவர்த்தி டீ எஸ்டேட்டோட சி.சி.டி.வி கண்ட்ரோல் ரூம்ல வேலை பாத்துக்கிட்டிருந்ததுக்கு ஸ்ட்ராங்கான அலிபி இருந்துச்சு…
அதே போல கலிங்கராஜனும் கிளாராவும் செவ்வாய்கிழமை இனியா காணாம போனதும் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிருக்காங்க… அவங்க ரெண்டு பேரும் அன்னைக்கு முழுக்க வீட்டை விட்டு வெளிய வரல… இனியாவோட பாடி காட்டுப்பாதை பக்கம் கிடைச்சப்ப தான் அவங்க வீட்டை விட்டு வெளிய வந்தாங்கனு வாட்ஸ்மேன் முருகையா சொன்னார்… அவங்க வீட்டு சி.சி.டி.வியும் அதை உறுதிபடுத்திச்சு…
கடைசியா இருந்த சஸ்பெக்ட் ரோஷண்… சாத்தான் வழிபாடு, கலிங்கராஜன் – கிளாராவோட ரோஷணோட உறவு, இனியாவ அவன் பலி குடுத்திருவேன்னு மிரட்டுனதா இனியா ஃப்ரெண்ட் குடுத்த வாக்குமூலம் இதெல்லாம் அவன் தான் குற்றவாளியா இருக்கணும்ங்கிற ஊகத்தை எனக்குள்ள ஏற்படுத்திச்சு… போதாக்குறைக்கு அவன் சொன்ன பொய் என் ஊகத்தை ஸ்ட்ராங்க் ஆக்குச்சு… ரோஷண் விவகாரத்துல இந்த சர்கம்ஸ்டான்சியல் எவிடென்சை அடிப்படையா வச்சு விசாரணைய ஆரம்பிச்சேன்… லை டிடெக்டிங் டெஸ்டுல அவன் மர்டரர் இல்லனு வந்துச்சு… இப்ப கேஸ் ஆரம்பிச்ச இடத்துல வந்து நிக்குது”
மார்த்தாண்டன் கொடுத்த விளக்கத்தை முழுவதுமாகக் கேட்டவள் புதிய சந்தேகப்படுவோர் பட்டியலை வாசிக்க ஆரம்பித்தாள்.
- நிஷாந்த்
- ஏகலைவன்
- பாதிரியார் பவுல்
- ராக்கி
ராக்கியின் நண்பன், ரோஷணுக்குச் சக்கரவர்த்தி தோட்டத்தில் வேலை வாங்கி கொடுத்தவன் என்ற முறையிலும், இனியாவின் தோழன் என்று ஒரு முறை சொன்னதாலும், தன்னைக் காணும்போது அவனது உடலில் தோன்றும் பதற்றத்தை வைத்தும் நிஷாந்தைச் சந்தேகப்படுவோர் பட்டியலில் இணைத்ததாகக் குறிப்பிட்டார் மார்த்தாண்டன். இனியாவைக் கடத்தி படுகொலை செய்த இருவரில் இவனும் ஒருவனாக இருக்கலாம் என்பது தனது ஊகம் என்றார்.
“வெல்! அண்ட் வாட் அபவுட் மிஸ்டர் ஏகலைவன்? அவருக்கும் நடந்த க்ரைமுக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்னு நீங்க நினைக்குறிங்க?” என இதன்யா வினவினாள்.
“நிஷாந்தோட மாமா இவர்… இனியாவோட பாடிய யார் காட்டுப்பாதைல போட்டதுனு செக் பண்ண இவர் எஸ்டேட் ஆபிசுக்குப் போனோம்.. அங்க சி.சி.டி.வி ஃபூட்டேஜ் டெலீட் ஆகிருந்துச்சு… அது ஸ்டோர் ஆகுற சிஸ்டம் பாஸ்வேர்ட் ராக்கி, ரோஷண், எஸ்டேட் மேனேஜர், ஏகலைவன் நாலு பேருக்கு மட்டும் தான் தெரியும்… சி.சி.டி.வி ஃபூட்டேஜை டெலீட் பண்ணுன சந்தேகத்துல நான் ராக்கிய அரெஸ்ட் பண்ணுனதை ஃபாதருக்கு இன்ஃபார்ம் பண்ணுனது இவரா தான் இருக்கணும்… இவருக்கு ஏன் சாட்சிய கலைச்சவன் மேல அவ்ளோ அக்கறை? இன்னொரு காரணம், ரோஷணுக்கு டிப்ரசன் டேப்ளட் குடுக்க வந்த ஆள் செங்கோடன் சக்கரவர்த்தி டீ எஸ்டேட்டோட கூலியாள்னு சொன்னான்… ஹைடோஸ் மாத்திரையும் ஹாக்ஷா ப்ளேடும் குடுத்துட்டுப் போனவன் அவன் தான்… அவனைப் பத்தி ரோஷண் மரணத்துக்கு அப்புறம் விசாரிச்சா செங்கோடன்னு ஒருத்தர் தன்னோட எஸ்டேட்ல வேலை பாக்கவேல்லனு ஏகலைவன் சாதிக்குறார்… ராக்கி, ரோஷண், கலிங்கராஜன், நிஷாந்த் இப்பிடி எல்லா சஸ்பெக்ட்சும் சந்திக்குற ஒரு புள்ளி ஏகலைவன்… சோ இனியாவ கொன்ன ரெண்டு பேர்ல இவரும் ஒருத்தரா இருக்கலாம்… இல்லனா அந்த கில்லர்ஸ் யாருனு இவருக்குத் தெரிஞ்சிருக்கலாம்”
முரளிதரன் பாதிரியாரை ஏன் சந்தேகிக்கிறீர்கள் என வினவ “அவர் ரோஷணையும் ராக்கியையும் வளர்த்தவர்… அவருக்கு இந்த மர்டர் பத்தி எதுவோ தெரிஞ்சிருக்கணும்… அதை வேணும்னு மறைக்குறார்னு தோணுது” என்றார் மார்த்தாண்டன்.
அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட இதன்யா “இந்த கேஸ் பத்தி எனக்குக் கிடைச்ச ரிப்போர்ட்ஸ் அண்ட் இந்த சஸ்பெக்ட் லிஸ்ட்ஸ் வச்சு நான் சிலரை விசாரிக்கணும் மார்த்தாண்டன்… அந்த விசாரணையை இனியாவோட வீட்டுல இருந்தே ஆரம்பிக்கப்போறேன்” என்றாள்.
தொடர்ந்து “எந்த ஒரு க்ரைமுக்கும் அடிப்படை காரணங்களா இருக்குறது பணம், அதிகாரவெறி, சில சிற்றின்ப இச்சைகளா தான் இருக்கும்… இது இனியா கேசுக்கும் பொருந்தும்… கலிங்கராஜனோட தொழில் போட்டி, ஒருதலைக்காதல் விவகாரம், இனியாவோட பணக்கார வாழ்க்கை இந்த மூனுல ஒன்னு தான் அவளோட மரணத்துக்குக் காரணமா அமைஞ்சிருக்கலாம்ங்கிற என்னோட அனுமானம்… இந்த அனுமானம் விசாரணை போற பாதையை பொறுத்து மாறவும் வாய்ப்பிருக்கு” என்றாள்.
“நம்ம முதல் வேலை என்ன இதன்யா மேடம்?”
“கலிங்கராஜனோட வீட்டுக்குப் போய் அங்க இருக்குற எல்லாரையும் விசாரிக்கப்போறோம்… யாரையும் விட்டு வைக்க வேண்டாம்… இதுல ஏ டூ இசட் நமக்குத் தேவையான அடிப்படை தகவல் கிடைச்சிடும்னு நம்புறேன்” என்றாள் அவள்.
“இனியாவோட பாடி கிடைச்ச இடத்தையும் ஒரு தடவை பாத்துடுறது நல்லது” என்றார் முரளிதரன்.
மற்ற மூவரும் அதற்கு சம்மதிக்க அடுத்த சில மணி நேரத்தில் சாந்திவனத்தில் இருந்தார்கள் நால்வரும்.
கலிங்கராஜன் மழித்த தலையும் சோர்வான முகமுமாக வரவேற்றார்.
“வாங்க மேடம்”
“உங்க வீட்டுல இருக்குற எல்லாரையும் நாங்க விசாரிக்கணும் கலிங்கராஜன்”
“விசாரிச்சா மட்டும் என் மக திரும்ப வரவா போறா?”
“உங்க மகளை எரிச்சதோட உங்களோட கவலை தீர்ந்திருக்கலாம் சார்… பட் எங்களால அப்பிடி இருக்க முடியாதே! நாங்க வாங்குற சம்பளத்துக்கு வேலை செஞ்சே ஆகணும்… ப்ளீஸ் என்கொயரிக்குக் கோ-ஆப்ரேட் பண்ணுங்க… உங்களுக்கு வசதிப்படலனா ஸ்டேஷன்ல என்கொயரிய வச்சுக்கலாமா?”
இதன்யா பணிவாகக் கேட்பது போல ஒலித்தாலும் உண்மையில் அது கலிங்கராஜனுக்கு தரப்பட்ட எச்சரிக்கையே! அவரும் புரிந்துகொண்டு அமர்ந்தார்.
“முரளி சார்! நீங்க இவரை விசாரிங்க… மார்த்தாண்டன் சார் நீங்க இவரோட மிசஸ் கிளாராவை என்கொயரி பண்ணுங்க… மகேந்திரன் சர்வண்ட்ஸ் கிட்ட விசாரிக்கட்டும்… இந்த வீட்டுல பசங்க நிறைய உண்டுனு கேள்விப்பட்டேன்… என் விசாரணைய நான் அங்க இருந்து ஸ்டார்ட் பண்ணுறேன்… அப்புறம், உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறேன் மகேந்திரன்”
கிளாராவும் குழந்தைகளும் வந்தார்கள்.
இதன்யா மூன்று குழந்தைகளையும் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தாள்.
“ஹாய் உங்க மூனு பேர் கிட்டவும் நான் சில கொஸ்டீன்ஸ் கேக்கணும்… யார் கரெக்டா ஆன்சர் பண்ணுறிங்களோ அவங்க என்ன கேட்டாலும் நான் வாங்கித் தருவேன்”
அவர்களில் இளையவனான நித்திலராஜன் “எனக்கு இனியாக்கா வேணும்… வாங்கி தருவிங்களா?” என கள்ளங்கபடமின்றி கேட்க ஒரு நொடி இதன்யாவின் முகம் மாறியது.
வேலையில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை! தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.
“இனியா அக்கா இப்ப உங்க கூட இல்ல தானே… அதுக்குக் காரணமானவங்களைக் கண்டுபிடிச்சு பனிஷ் பண்ணுவேன்… ஐ ப்ராமிஸ்… இப்ப சொல்லுங்க… உங்க இனியாக்காவுக்கு இந்த வீட்டுல யாரை ரொம்ப பிடிக்கும்?” என்றாள் அவள்.
“மிச்செல்லை தான் அக்காக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள் ஜென்னி.
“அப்ப உன்னைப் பிடிக்காதா?”
“என்னையும் பிடிக்கும்.. பட் மிச்செல் தான் ரொம்ப க்ளோஸ்… அப்புறம் முருகையா தாத்தாவையும் பிடிக்கும்”
“வெல்! இந்த வீட்டுல யாரை இனியாக்குப் பிடிக்காது?”
இதன்யா குழந்தைகளின் முகங்களில் எதுவும் மாற்றம் தெரிகிறதா என ஆராய ஆரம்பித்தாள்.
நித்திலராஜன் முந்திக்கொண்டு “அம்மாவை அக்காவுக்குப் பிடிக்காது” என்றான்.
“டேய்” மிச்செல் அவனை அதட்டினாள். இதன்யாவின் பார்வை அவள் பக்கம் திரும்பியதும் அமைதியாகிவிட்டாள்.
“ஏன் கண்ணா அக்காவுக்கு அம்மாவை பிடிக்காது?” நயமாக நித்திலராஜனிடம் விசாரிக்க ஆரம்பித்தாள்.
“அம்மா ஒரு தடவை அக்காவை கன்னத்துல ஸ்லாப் பண்ணிட்டாங்க” என்றான் அவன்.
“அப்பிடியா?” குழந்தைகளைப் போலவே அவள் கண்களை விரித்து கதை கேட்கும் பாணியில் பேசவும் ஜென்னி வாயைத் திறந்தாள்.
“ஆமா மேம்! இனிமே என் பெர்ஷனல்ல தலையிடாதனு சொல்லி அறைஞ்சாங்க” என்றாள் அவள்.
இதன்யா அதை கையோடு கொண்டு வந்த சிறிய நோட்பேடில் குறித்துக்கொண்டாள்.
“வேற யாரை பிடிக்காது?”
இரு குழந்தைகளும் யோசிக்க ஆரம்பித்தார்கள். இதற்கிடையே இதன்யாவின் பார்வை மிச்செல்லை நோட்டமிட்டது.
“ஜான் அங்கிள் – நவநீதம் ஆன்ட்டிய அக்காக்குப் பிடிக்காது… இன்னொரு தடவை இப்பிடி செஞ்சிங்கனா அப்பா கிட்ட சொல்லி வேலைய விட்டு அனுப்பிடுவேன்னு அக்கா ஒரு தடவை ஜான் அங்கிளைத் திட்டுனாங்க” என்றாள் ஜென்னி.
“ஓ” அடுத்த பாயிண்ட் கிடைத்துவிட்டது. ஆனால் கண்டிப்புக்கான காரணம் தெரியவில்லை.
“அப்புறம் குமாரி ஆன்ட்டியையும் பிடிக்காது” இது நித்திலராஜன்.
“ஏன்?”
“ஏன்னா அம்மாவும் ஏகலைவன் அங்கிளும் பேசுறதை அக்கா பாத்துட்டாங்கனு அம்மா கிட்ட போட்டுக் குடுத்து அடி வாங்க வச்சவங்க குமாரி ஆன்ட்டி தான்” இதை சொன்னவள் ஜென்னி.
இதன்யாவின் நோட்பேடில் அடுத்து ஒன்றல்ல இரண்டு பாயிண்ட்கள் இடம்பிடித்தன.
இத்தனைக்குப் பிறகும் அவர்களில் மூத்தவளான மிச்செல்லின் தயக்கம் இன்னும் தீரவில்லை.
“நீ எதையாச்சும் என் கிட்ட மறைக்கிறியா?”
“அது… வந்து..”
“சொல்லு!”
“அக்காக்கு நிஷாந்தை ரொம்ப பிடிக்கும்… ஒரு நாள் அப்பாக்கு அவ நிஷாந்த் கூட போன்ல பேசுற விசயம் தெரிஞ்சு இனிமே நீ போன் யூஸ் பண்ணக்கூடாதுனு திட்டிட்டாங்க.. அக்கா அன்னைக்கு நைட் முழுக்க அழுதுகிட்டே இருந்தா”
இனியாவின் மொபைல்! இதன்யாவுக்கு எதுவோ இடிக்கவும் “உன் அக்காவோட மொபைல் எங்க? அப்பா கிட்ட இருக்குதா?” என்று கேட்க
“என் கிட்ட தான் இருக்கு மேம்… இருங்க, எடுத்துட்டு வர்றேன்” என்று தனது மேஜையறையிலிருந்து எடுத்து வந்து கொடுத்தாள்.
மொபைலில் சுத்தமாக சார்ஜ் இல்லை.
“எனக்கு டூ டேய்ஸ் இந்த மொபைல்ல வேலை இருக்கு… அதுக்கு அப்புறம் இதை உன் கிட்ட குடுத்துடுவேன்… சரியா?” என்று இதன்யா சொல்லவும்
“குடுத்துடுவிங்க தானே மேம்? எனக்கு அக்கா ஞாபகமா இருக்குறது இந்த மொபைல் மட்டும் தான்” என்றாள் மிச்செல்.
“உனக்கு இனியாவ அவ்ளோ பிடிக்குமா?” என்று கேட்டாள் இதன்யா.
“ஆமா மேம்… வீ வேர் ஷேரிங் திஸ் ரூம்… ஐ மிஸ் ஹெர்” சொல்லும்போதே அழுதுவிட்டாள் அவள்.
பாவம்! அவளது பதினைந்து வயதுக்கு இனியாவின் மரணம் கொடுத்த அதிர்ச்சி மிகவும் அதிகமே! ஒரே அறையில் இத்தனை ஆண்டுகள் இருந்த சகோதரி நிரந்தரமாக இல்லை என்றால் அது மனரீதியாகவும் மிச்செல்லைப் பாதித்திருக்கும்.
இதன்யா மிச்செல்லை ஆதுரமாகப் பார்த்தாள்.
“கண்டிப்பா திருப்பிக் குடுத்துடுவேன்… நீங்க என் கிட்ட சொன்ன எதையும் நான் உங்க பேரண்ட்ஸ் கிட்ட சொல்ல மாட்டேன்… பிங்கி ப்ராமிஸ்” என்று தனது சுண்டுவிரலை நித்திலராஜனிடம் நீட்ட அவனும் சுண்டுவிரலால் அதைப் பிடித்துக்கொண்டான்.
“சப்போஸ் உங்க பேரண்ட்ஸ் உங்களைத் திட்டுனாங்கனா இந்தக் கார்டுல இருக்குற நம்பருக்குக் கால் பண்ணுங்க… அதுக்கு அப்புறம் அவங்களை நான் பாத்துக்குறேன்” என்று சொல்லிவிட்டுத் தனது கார்டை மிச்செல்லிடம் கொடுத்தவள் கிளம்பினாள்.
மற்ற மூவரும் அவர்களின் விசாரணையில் மூழ்கியிருக்க இதன்யா சாந்திவனத்தை விட்டு வெளியேறினாள். வாயிலில் முருகையா காவலாளி உடையில் நிற்கவும் அவரை மருத்துவமனையில் பார்த்தது ஞாபகம் வந்தது.
“வணக்கம் மேடம்! எங்க சின்னம்மாவ கொன்னவனை கண்டுபிடிச்சிடுவிங்கல்ல?” என வயோதிகத்தால் குழி விழுந்த கண்களில் ஏக்கம் மின்ன அவர் கேட்ட விதம் இனியாவின் மீது அவருக்கு இருக்கும் பாசத்தை உணர்த்தியது.
“எனக்கு நம்பிக்கை இருக்கு பெரியவரே… உங்க சின்னம்மாவோட பாடி கிடந்த இடத்துக்கு என்னை அழைச்சிட்டுப் போக முடியுமா?” என்று கேட்டாள் அவள்.
“வாங்கம்மா”
முருகையாவோடு காட்டுப்பாதைக்குக் கிளம்பிய இதன்யாவுக்குத் தெரியாது அங்கே போனதும் முக்கியமான தடயமொன்று சிக்கப்போகிறதென்று!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

