உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கவலை இருக்காது என்றும், அடுத்தவர்களின் எண்ணங்கள் அவர்களைப் பாதிக்காது என்றும் அந்நோயால் பாதிக்கப்பட்ட விக்டோரியா என்ற பெண்மணி கூறுகிறார். உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ‘Us’ என்ற ஆன்லைன் கம்யூனிட்டியைப் பற்றி அவர் குறிப்பிட்டார். அந்தக் கம்யூனிட்டியானது பெரும்பாலும் எழுத்தாளர் எம்.இ.தாமசின் வலைப்பதிவுகளை மையமாகக் கொண்டிருக்கும் என்கிறார் அவர். எழுத்தாளர் எம்.இ.தாமஸ் என்பவர் சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே மிகவும் பிரபலம். டெக்சாஸ் ஏ&எம் பல்கலைகழகத்தின் தடவியல் உளவியலாளர் ஜான் ஈடன்ஸ் நடத்திய உளப்பிறழ்வு குறைபாட்டு ஆய்வில் 99 சதவிகித மதிப்பெண்களை பெற்றவர் இந்த எம்.இ.தாமஸ் என்பது விக்டோரியா கூறிய அடுத்த தகவல்.
-An article from BBC
மார்த்தாண்டனை எஸ்.பி எச்சரித்தது போலவே ரோஷணின் லாக்கப் மரணம் குறித்த சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்தன. அவை மார்த்தாண்டன் மீது துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு அதிகமென காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
வெகு விரைவில் விசாரணைக்குழு அமைக்கப்படும் என்ற தகவல் மார்த்தாண்டனின் செவிகளுக்கு அரசல்புரசலாக வந்த வண்ணம் இருந்தது.
மாவட்ட காவல்துறை இனியாவின் மரணத்திலுள்ள முடிச்சுகளை அவிழ்க்க தவறியதோடு குற்றவாளியென தவறான நபரைக் கைது செய்து அவருக்கு உளவியல்ரீதியான பிரச்சனை இருப்பது தெரிந்து மனரீதியான துன்புறுத்தலைக் கொடுத்து அந்நபரைத் தற்கொலைக்குத் தூண்டியது என்று சமூக வலைதளங்களில் பெரும் பிரச்சனை ஒன்று வெடித்தது.
“செத்துப் போன மகராசி கூடவே இன்னொருத்தனையும் அழைச்சிட்டுப் போயிட்டா” என்று ‘விக்டிம் ஷேமிங்’ செய்யும் கும்பல் நக்கல் கமெண்ட்களைப் போட்டு தங்களது மனவக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
எல்லா பிரச்சனையிலும் ஊசி நுழைய இடம் கொடுக்காமல் நூல் நுழைந்திருக்குமா என்று பழைய பஞ்சாங்கம் பேசும் பிற்போக்குத்தனமான ஆணாதிக்க மனங்கள் இனியாவின் நடத்தையை மோசமாகப் பேசி ரோஷணை தியாகியாக சமூக வலைதளத்தில் கொண்டாடிக்கொண்டிருந்தன.
போதாக்குறைக்கு ஏகலைவன் கலிங்கராஜனுக்கு வாக்கு கொடுத்தபடி அரசியல் வட்டாரத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு இனியாவின் சடலத்தை அவளது பெற்றோரிடம் ஒப்படைக்க இனியும் தாமதிக்கக்கூடாதெனக் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கவைத்தான்.
மார்த்தாண்டனுக்குத் தன் மீது துறை ரீதியான விசாரணை வந்தால் கூட சமாளித்துக்கொள்ளலாம் என்ற மனநிலை தான். அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று இனியாவின் சடலத்தை அவசரமாக வாங்கி இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்யத் துடிக்கும் அவளது பெற்றோரின் நரிப்புத்தியைத் தான்.
பொன்மலைவாசிகளில் யாரைப் பார்த்தாலும் மார்த்தாண்டனுக்குக் கொலையாளியாகவே தெரிந்தார்கள். அதில் விதிவிலக்கு ரசூல் பாயும் முருகையாவும் மட்டுமே. அவர்களை நம்பலாமென உள்மனம் சான்றிதழ் கொடுத்தது.
இந்நிலையில் காவல் ஆணையர் இனியாவின் சடலத்தை அவளது பெற்றோரிடம் ஒப்படைப்பதில் மார்த்தாண்டனுக்கு என்ன தயக்கமென வினவினார்.
“ஃபர்ஸ்ட் அடாப்சில நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டதா எனக்குச் சந்தேகம் இருக்கு சார்”
“ஃபர்ஸ்ட் அடாப்சினு அழுத்திச் சொல்லுறதை பாத்தா எனக்கு உறுத்துதே மார்த்தாண்டன்”
“இனியாவோட அடாப்சி விவகாரத்துல எனக்குச் சில சந்தேகம் இருந்ததால சீஃப் டாக்டரை மீட் பண்ணப் போனேன் சார்… அங்க டாக்டரோட சேர்ந்து அடாப்சி செஞ்ச ஜூனியர் ஒருத்தர் எனக்குச் சில உண்மைகளைச் சொன்னார்… அந்த உண்மை வெளிய வந்துச்சுனா அவரோட வேலைக்குக் கூட ஆபத்து வரலாம்னு தெரிஞ்சே சொன்னார் சார்… இந்த கேஸை பொறுத்த வரைக்கும் மர்டர் நடந்தப்ப கிடைச்ச பயாலஜிக்கல் எவிடென்ஸ், டி.என்.ஏ எதுவும் நம்ம டிப்பார்ட்மெண்டோட சஸ்பெக்ட் லிஸ்டுல இருக்குறவங்களோட ஒத்துப்போகல… அதோட அங்க கிடைச்ச பயாலஜிக்கல் எவிடென்ஸ் எல்லாம் கண்டாமினேசன் ஆகிடுச்சுனு சொன்னார்… இதுக்கு ஒரே தீர்வு இனியாவோட பாடிய செகண்ட் அடாப்சிக்கு அனுப்புறது மட்டும் தான்னு அவர் அழுத்திச் சொன்னார்… இப்ப சொல்லுங்க சார், இனியாவோட பாடியை கண்டிப்பா அவங்க பேரண்ட்ஸ் கிட்ட ஒப்படைச்சே ஆகணுமா?”
காவல் ஆணையரும் நெற்றியைத் தடவி யோசித்தார்.
“நீங்க இந்த கேஸ்ல எமோஷ்னலா இன்வால்வ் ஆகுறிங்கனு தோணுது மார்த்தாண்டன்… நம்ம சர்வீஸ்ல எத்தனை கேஸை பாத்திருப்போம்… நடக்கப்போறது எதுவும் நம்ம கையில இல்ல”
மார்த்தாண்டனின் முகத்தின் ஒரு நொடி வேதனை மின்னியது.
“எனக்கும் பொண்குழந்தை இருக்கு சார்… பதினேழு வயசு சாகுறதுக்கான வயசு இல்ல… யாருமே அவளுக்கு நீதி கிடைக்கணும்னு யோசிக்கல சார்… அது என் மனசை அறுக்குது… யூனிஃபார்ம் போட்டா உணர்வுகளைக் கழட்டி வச்சிடணும்னு பிடிவாதமா இருக்குறவன் நான்… ஆனா இந்தக் கேஸ்ல என்னால அப்பிடி இருக்க முடியல”
காவல் ஆணையருக்கே அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
“இந்த விவகாரம் நம்ம கையை மீறி போயாச்சு மார்த்தாண்டன்… இனிமே ஏதாச்சும் மிராக்கிள் நடந்தா தான் உண்டு… இன்னும் ஒன் வீக்ல உங்களை விசாரிக்க என்கொயரி கமிசன் வரும்… பயப்படாதிங்க… சைக்காலஜிஸ்ட் குடுத்த ஸ்டேட்மெண்டை வச்சு பாத்தா உங்க மேல ஆக்சன் எடுக்கமாட்டாங்கனு தோணுது”
காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து கிளம்பி பொன்மலை காவல் நிலையத்துக்கு வந்தவர் அங்கே கான்ஸ்டபிளிடம் வழக்கம் போல உரையாடிக்கொண்டிருந்த முருகையாவைப் பார்த்ததும் “உனக்காக யோசிக்கவும் சிலர் இருக்காங்கம்மா” என மானசீகமாக இனியாவிடம் கூறிவிட்டுத் தனது இருக்கையில் அமர்ந்தார்.
தலையிலிருந்த தொப்பியைக் கழற்றி மேஜை மீது வைத்தவர் ஆழ்ந்த யோசனையில் இறங்கினார்.
அந்த யோசனையின் விளைவாக இனியாவின் மரணம் உண்டாக்கிய குழப்பமெனும் காரிருளை விலக்கிவிட்டு ஒளியாய் உதித்தது ஒரு உபாயம்.
சற்றும் தாமதிக்காமல் “பெரியவரே கொஞ்சம் இங்க வாங்க” என்று அழைத்தார்.
முருகையா ஓடோடி வந்தார்.
“சொல்லுங்க சார்”
“வாங்க டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்… அடுத்த வாரத்துக்கு அப்புறம் இந்த ஸ்டேசன்ல நான் இருப்பேனோ இல்லையோ”
மெதுவாய் காவல்நிலையத்திலிருந்து வெளியேறியவர் மற்றவர் பார்வையிலிருந்து மறைந்தது உறுதியானதும் முருகையாவிடம் பேச ஆரம்பித்தார்.
“பெரியவரே இனியா கேஸ்ல இதுக்கு மேல நியாயம் கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்ல… இந்த நிலமைய மாத்தணும்னா நான் ரசூல் பாயைப் பாக்கணும்… உங்க ஊர் ஆளுங்க யாருக்கும் சந்தேகம் வராதபடி அவரைப் போலீஸ் குவாட்டர்ஸ்ல என்னை மீட் பண்ணச் சொல்லுறிங்களா?”
“கட்டாயம் சொல்லுறேன் சார்.. சின்னம்மாக்குக் கிடைக்க வேண்டிய நியாயத்துக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்… இப்பவே பாயை பாத்து பேசிடுறேன்” என்றவர் “அப்புறம் சார், உங்க வேலைக்கு எதுவும் ஆகாது… உங்களை மாதிரி நல்ல அதிகாரிங்க இல்லனா என்னை மாதிரி சாமானியனுக்குப் போலீசு மேல உள்ள நம்பிக்கையே போயிடும்… உங்களை வேலைய விட்டு தூக்கணும்னு நினைக்குறவங்க மனசை பொன்மலை முருகன் மாத்துவான்… நீங்க உங்க கையால எங்க சின்னம்மாவ கொன்னவனை கைது பண்ணுவிங்க… நம்பிக்கையா இருங்க… நான் போயிட்டு வர்றேன்” என்று நம்பிக்கை கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.
மீண்டும் காவல்நிலையத்துக்குள் வந்த மார்த்தாண்டனிடம் விசாரணை கமிசனுக்குக் காரணம் பாதிரியார் பவுலும் ராக்கியும் தான் என்று பொருமித் தீர்த்தார் மகேந்திரன்.
“விடுய்யா… நீயோ நானோ இத்தனை வருசத்துல எவன் கையில இருந்தும் லஞ்சம் வாங்கல… பொய்ச்சாட்சி ஏற்பாடு பண்ணி கேஸை முடிச்சதில்ல… நியாயமா நடந்ததுக்கு தக்க கூலிய ஆண்டவன் குடுப்பான்” என்றார் மார்த்தாண்டன்.
அன்றிரவு பொன்மலை காவலர் குடியிருப்பிலுள்ள மார்த்தாண்டனின் வீட்டிற்கு அவரைச் சந்திக்க ஊரார் அறியாவண்ணம் வந்தார் ரசூல் பாய்.
அவரைப் பார்த்ததும் மார்த்தாண்டன் முகம் பிரகாசித்தது.
“வாங்க பாய்” என வரவேற்றார்.
ரசூல் பாய் சோர்ந்து போய் காணப்பட்டார். மார்த்தாண்டன் நீட்டிய தண்ணீரை வாங்கி பருகியவரிடம் பழைய சுறுசுறுப்பு இல்லை.

“என்னாச்சு பாய்? உடம்பு எதுவும் சரியில்லையா? நான் உங்களை இங்க கூப்பிட்டு அலைய வச்சிட்டேனா?”
“அப்பிடிலாம் ஒன்னுமில்ல சார்… உடம்புக்கென்ன? மனசு தான் சரியில்ல… வீட்டுல என் மவ சாப்பிடாம தூங்காம அழுதுக்கிட்டே இருக்கா… பெத்தப்பிள்ளை இப்பிடி இருக்குறப்ப எந்த தகப்பனுக்கு நிம்மதி இருக்கும் சொல்லுங்க… என் மவளும் இனியாவும் நெருங்குன தோழிங்க…. பப்ளிக் எக்சாம் வரப்போகுது, என் கூட போட்டி போட்டு படிக்க இனியா இல்லைனு சொல்லி அழுறவளை நான் எப்பிடி பழையபடி மாத்தப்போறேன்னு தெரியல சார்… இனியா பொண்ணு போறப்ப என் மவளோட சந்தோசத்தையும் எடுத்துட்டுப் போயிட்டா”
முகம் கசங்க உரைத்தார் ரசூல் பாய். மார்த்தாண்டனால் அவரது வேதனையைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆறுதலாகத் தோளில் தட்டிக் கொடுத்தார்.
“உங்க கிட்ட ஒரு உதவி கேக்க தான் வரச் சொன்னேன் பாய்” என்றார்.
“சார் நீங்க இன்ஸ்பெக்டர்… உங்களுக்கு நான் உதவி பண்ணுறதா? என்ன சார் பேசுறிங்க?”
“அடுத்த வாரம் இந்த இன்ஸ்பெக்டர் வேலை இருக்குமாங்குறதே டவுட் தான் பாய்”
“சார்?”
“ரோஷண் லாக்கப்ல கையை அறுத்துக்கிட்டு இறந்தான்ல, நானும் என் டீமும் குடுத்த சைக்காலஜிக்கல் டார்ச்சரால அவன் தற்கொலை பண்ணிக்கிட்டான்னு மேலிடத்துல யாரோ புகார் பண்ணிருக்காங்க.. என் மேல டிப்பார்ட்மெண்டல் என்கொயரி வரப்போகுது… இந்த வேலைய விட்டுப் போறதுக்குள்ள இனியாவுக்கு நியாயம் கிடைச்சிடுங்கிற நம்பிக்கையோட போக விரும்புறேன் ரசூல் பாய்… அதுக்கு உங்க உதவி எனக்குத் தேவை”
“நான் என்ன செய்யணும்னு மட்டும் சொல்லுங்க சார்”
ரசூல் பாய் முனைப்போடு கேட்டதும் மார்த்தாண்டன் தனது திட்டத்தை அவரிடம் விவரித்தார்.
“கண்டிப்பா செய்றேன் சார்… இப்பவே இதுக்கான வேலைய ஆரம்பிக்கிறேன்… இந்த மாதிரி கேஸ்ல கோர்ட் டிலே பண்ணமாட்டாங்க”
“இன்னொரு விசயம் பாய்.. இந்த விசயம் நமக்குள்ள இருக்கட்டும்… உங்களையும் முருகையாவையும் தவிர வேற எந்தப் பொன்மலைவாசிங்க மேலயும் எனக்கு நம்பிக்கை இல்ல… எல்லாரும் சந்தர்ப்பவாதிங்க… முக்கியமா இனியாவோட பேரண்ட்ஸ், ஃபாதர் பவுல், ஏகலைவன் சக்கரவர்த்தி இவங்க மேல எனக்குத் துளி கூட நம்பிக்கை இல்ல… யார் கிட்டவும் இதை பத்தி நீங்க பேசவேண்டாம்… என் கைக்குக் கிடைக்க வேண்டிய ஆதாரங்கள் நழுவிப்போக காரணம் என்ன தெரியுமா? நான் இதை தான் செய்யப்போறேன்ங்கிறதை இவங்க எல்லாரும் ஊகிச்சு ஒருத்தருக்கு ஒருத்தர் பரஸ்பரமா ஒற்றர் வேலை செஞ்சது தான்… அதே தப்பு இன்னொரு தடவை நடந்துடக்கூடாது”
“நீங்க சொல்லுறவங்க பொன்மலையில பெரிய மனுசங்க சார்” என்றார் ரசூல் பாய்.
“காசும் பணமும் வயசும் ஒருத்தரை பெரியமனுசனா ஆக்காது பாய்… அவங்க நடவடிக்கையும் செயலும் தான் அந்தப் பேரை வாங்கி குடுக்கும்… அதை வச்சு பார்த்தா என் பார்வைல இவங்க யாருமே பெரிய மனுசங்க இல்ல… பெரிய மனுசங்க போர்வைல ஒளிஞ்சிருக்குற சந்தர்ப்பவாதிங்க”
மார்த்தாண்டன் கூறவும் ரசூல் பாய் புரிந்துகொண்டார். அவரது திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதாக வாக்களித்துவிட்டுக் கிளம்பினார் பாய்.
மறுநாளே காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து கலிங்கராஜனுக்கு அழைப்பு வந்தது. மகளின் சடலத்தை ஒப்படைப்பது பற்றிய பேச்சுக்காக அழைக்கிறார்கள் என்று கருதி அங்கே போனவருக்குக் கிடைத்தது அதிர்ச்சி மட்டுமே!
“உங்க மகளோட வழக்குல மாவட்ட காவல்துறை மேலயும், போஸ்ட் மார்ட்டம் பண்ணுன டாக்டர் குரூப் மேலயும் நம்பிக்கை இல்லனு யாரோ ஒருத்தர் மதுரை ஹைகோர்ட் ப்ராஞ்ச்ல பெட்டிசன் போட்டிருக்காங்க கலிங்கராஜன்… அந்த கேசுக்கு வரப்போற தீர்ப்பைப் பொறுத்து தான் விக்டிமோட பாடியை உங்க கிட்ட ஒப்படைக்கணுமா வேண்டாமானு டிசைட் பண்ண முடியும் சார்”
“அதுல எப்ப தீர்ப்பு வரும் கமிஷ்னர் சார்? அது வரைக்கும் என் மகளோட சடலம் என் கைக்கு வராதா?”
“இதுக்கே அங்கலாய்க்கிறீங்க… தீர்ப்பு மட்டும் பெட்டிசன் போட்டவருக்குச் சாதகமா வந்துச்சுனா அழுதுடுவிங்கபோல”
கமிஷ்னர் மனதிலிருந்த புகைச்சலைக் காட்டினார்.
கலிங்கராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இங்க பாருங்க கலிங்கராஜன்… அந்த பெட்டிசன் போட்ட ஆள் இனியாவோட பாடிய செகண்ட் அட்டாப்சிக்கு அனுப்பணும்னு கேட்டுருக்கார்… மாவட்ட காவல்துறை இந்த கேஸ்ல உருப்படியா எதுவும் செய்யாததால கேஸை க்ரைம் ப்ராஞ்சுக்கு மாத்தணும், அதுக்கு ஒரு போலீஸ் டீமை போடணும்னு நிறைய வேண்டுகோள் வச்சிருக்கார்… ஜட்ஜ் அவர் கேட்டதுலாம் சரிதான்னு நினைச்சு தீர்ப்பு குடுத்தார்னா இந்த கேஸ் எங்க அதிகாரத்துக்குள்ள வராது… க்ரைம் ப்ராஞ்ச் ஆபிசர் ஒருத்தர் கைக்குப் போயிடும்… அவரும் அவரோட டீம் ஆளுங்களும் எங்க ஆளுங்க மாதிரி சாஃப்டா விசாரணையை ஹேண்டில் பண்ணமாட்டாங்க”
காவல் ஆணையர் சொன்ன செய்தியில் மாரடைப்பு வராத குறையாக வீடு வந்து சேர்ந்தார் கலிங்கராஜன். அங்கே நடந்ததைக் கேட்ட கிளாராவுக்கு இன்னும் இந்தக் குழப்பம் தொடருமா என்ற அங்கலாய்ப்பு.
பெற்றோரின் பேச்சை ஒட்டுக்கேட்டு இனியாவின் வழக்கில் உண்மை புலனாகும்வரை அவர்கள் நினைப்பது நடக்கக்கூடாதென விடிய விடிய மிச்செல்லும் ஜென்னியும் செய்த ப்ரேயர் வீண் போகவில்லை.
ஆம்! மனுதாரரின் மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி இனியாவின் படுகொலை வழக்கை இனி குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று தீர்ப்பு வழங்கினார். அதற்கான குழு வெகு சீக்கிரத்தில் அமைக்கப்படவேண்டுமென மாநில குற்றப்பிரிவுக்கு ஆணை பிறப்பித்தார். அதோடு இனியாவின் சடலத்தை இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு அனுப்பும்படி ஆணையிட்டார்.
அவரது ஆணை சீக்கிரத்தில் அமுலாக்கப்பட்டது. மாநில குற்றப்பிரிவில் அனுபவம் வாய்ந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரைத் தலைமையாகக் கொண்டு சிறப்பு விசாரணை குழு (Special Investigation Team – SIT) ஒன்று அமைக்கப்பட்டது. அந்த அதிகாரியின் பெயர் இதன்யா வாசுதேவன் ஐ.பி.எஸ்!
இனியாவின் இறுதி நிமிடங்களில் அரங்கேறிய கொடூரத்தை நிகழ்த்தியவன் யாரென இதன்யா கண்டறிவாளா?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

