“மனிதர்கள் அழுவதற்கு காரணம் அவர்களின் பலவீனம் அல்ல! அவர்களது மனவுறுதி நீண்டகாலம் அத்தகைய சோகங்களை தாங்கிவிட்டது என்பதால் தான்!”
-ஜானி டெப்
மவுண்ட் கல்லூரியின் கலையரங்கு…
மாணவர்களுக்கும் அருள்மொழிக்குமான கலந்துரையாடலில் நேரம் போனதே தெரியவில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் கேள்வி கேட்டே வளர்ந்தவர்கள்! அவர்களை எந்தவொரு விசயத்திற்கும் சம்மதிக்க வைப்பது கடினம்!
அதை அன்றைய கலந்துரையாடலில் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டான் அருள்மொழி. அவனை நோக்கி வைக்கப்பட்ட கேள்விகள் அப்படிப்பட்டவை!
அவனது கல்லூரிப்பருவம், அரசியல்வாதியின் மகனாக இருந்தும் ஏன் அரசியலில் நுழையாமல் தொழிலதிபராக மாறினான், அவனது தந்தை மற்றும் தமையனின் மறைவுக்குப் பின்னர் அவனது அரசியல் பிரவேசம், அவனது சிறை நாட்கள் என எதையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஸ்டார்ட்டிங்ல பாலிடிக்ஸ்ல இன்ட்ரெஸ்ட் இல்லாம இருந்த உங்களுக்கு ஏன் இப்ப இவ்ளோ ஆர்வம்?”
கேள்வி கேட்ட மாணவியை நோக்கி புன்னகைத்துவிட்டு “பிகாஸ் ஐ லைக் அட்வென்சர்… அண்ட் ஐ ஹேட் ரொட்டீன் லைஃப்ஸ்டைல்… நியூ ஃபீல்ட்ல இறங்கி அதுல பெருசா எதாச்சும் சாதிக்குறப்ப வர்ற த்ரில் ரொம்ப ஸ்பெஷல்… அத அனுபவிக்கிறப்ப கிடைக்குற சந்தோசம் அலாதியானது… அண்டர் மை மேனேஜ்மெண்ட், யூனிகார்ன் குரூப் இன்வெஸ்டட் இன் வேரியஸ் ஃபீல்ட்ஸ்… அதுல எல்லாராலயும் விமர்சிகப்பட்டது எங்க ஐ.பி.எல் டீம்… பட் வீ வொன் அவர் மெய்டன் ஐ.பி.எல்… அப்ப கிடைச்ச த்ரில் என்னை பிசினஸ்ல நிறைய சாதிக்க வச்சுது… அதே த்ரில்ல பாலிடிக்சும் எனக்குக் குடுக்கும்னு நம்புறேன்” என்றான் அருள்மொழி.
அந்த மாணவி அமரவும் மற்றொரு மாணவன் எழுந்தான்.
“இது கொஞ்சம் பெர்ஷ்னலான கேள்வி தான் சார்… பட் நீங்க உண்மையான பதிலை சொல்லுவிங்கனு நம்புறேன்”
“இவ்ளோ சொன்னதுக்கு அப்புறமும் நான் பொய் சொன்னா பொலிடீசியன்னாலே பொய் தான் சொல்லுவாங்கனு நீங்க நினைக்கிறது உண்மை ஆகிடுமே… சோ தாராளமா கேள்வி கேளுங்க… என்னால முடிஞ்ச உண்மைய சொல்லுறேன்”
“நீங்க காலேஜ்ல படிச்சப்ப ஒரு பொண்ணை லவ் பண்ணுனீங்கனு இங்க ஒரு ரூமர் உலாவுது… அது உண்மையா சார்? அந்தப் பொண்ணு இப்ப எங்க இருக்காங்க? இப்பவும் அந்த லவ் இருக்குதா?”
அவன் அவ்வாறு கேட்கவும் அருள்மொழி நகைக்க அங்கே இருந்த மாணவிகளோ அவன் பொய் என்று சொல்லட்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை நடத்தியது வேறு விசயம்!
நகைத்து முடித்தவன் “நான் லவ் பண்ணுனது உண்மை தான்! அந்தப் பொண்ணு எனக்கு ரொம்ப பக்கத்துல தான் இருக்காங்க” என்று சொல்லி அங்கிருந்தவர்களின் ஆர்வத்தைத் தூண்டிவிட மொத்த அரங்கிலும் சலசலப்பு ஆரம்பித்தது.
அதை அமைதியாக ரசித்தவனின் கண்கள் வானதியிடம் வந்து நிலைக்க அவளோ கண்கள் தெறித்து விழுமளவுக்கு அதிர்ந்து போய் அவனையே நோக்கினாள்.
“பக்கத்துலனா எங்க சார்? இந்த ஆடிட்டோரியத்துலயா?” அதே மாணவன் ஆர்வம் ததும்ப கேட்கவும் இல்லையென மறுத்து அவனுக்கு ஏமாற்றத்தையும் வானதிக்கு நிம்மதியையும் ஒருசேர அளித்த அருள்மொழி
“அவங்க என் ஹார்ட்ல இருக்காங்க… அத மீன் பண்ணி சொன்னேன்… இப்போ ஹேப்பியா?” என்று கேட்கவும் அந்த மாணவன் மகிழ்ச்சியாய் தலையசைத்து விட்டு அமர்ந்தான்.
இன்னும் சில சுவாரசியமான கேள்விகளுடன் கலந்துரையாடல் முடிவடைய தன்னிடம் செல்பி எடுக்க வந்த மாணவர்களுக்கு கை குலுக்கி அனுப்பி வைத்தவன் பாதுகாவலர்கள் சூழ கலையரங்கை விட்டு வெளியேறினான்.
அன்று கல்லூரியில் பாதி வேலை நாள் என்பதால் மாணவர்கள் உடனே கிளம்பிவிட விடுதியில் இருக்கும் மாணவர்கள் அங்கே சென்றதும் கல்லூரி அமைதியானது.
கல்லூரியின் அலுவலக அறைக்கும் வகுப்புக்குச் செல்லும் வழிக்கும் இடையே நடந்து வருகையில் யாழினியின் மொபைலுக்கு அழைப்பு வரவும் அவள் விலக தனியே நடந்து வந்த வானதி அருள்மொழியை எதிர்கொண்டாள்.
அவனது பாதுகாவலர்களைத் தேடியவளுக்கு கேண்டீன் பக்கம் கை காட்டி பதிலளித்தவன்
“டூ யூ ஹேவ் எனி சூப்பர்நேச்சுரல் பவர்?” என கேட்க
“நோ… ஏன் கேக்குற?” என்றாள் வானதி.
அருள்மொழி வெகு நிதானமாக “ஐ கான்ட் பிலீவ் யுவர் வேர்ட்ஸ்… பிகாஸ் யூ கர்ஸ்ட் மீ அட் திஸ் ப்ளேஸ்… டூ யூ ரிமெம்பர் தட் இன்சிடெண்ட்?” என்று வினவ வானதியின் முகம் மாறியது.
ஆம்! இதே பாதையில் வைத்து அவள் அருள்மொழியைச் சபித்திருக்கிறாள்! அதற்கு காரணமும் அவன் தான்! அன்றைய தினம் அவன் பேசியதை நினைவு கூர்ந்தவளுக்கு இப்போதும் தனது செய்கையில் குற்றம் ஒன்றும் தெரியவில்லை.
அன்று இதே வழியில் தான் தனது உடைமைகளுடன் கண்கள் கலங்கி மனம் வலிக்க நடந்து வந்தாள் வானதி.
அன்றும் இதே போல தான் அருள்மொழி எதிர்பட்டான். கால்பந்து பயிற்சி உடையுடன் நின்றவன் குனிந்து அவளது முகத்தை ஆராய்ந்துவிட்டு
“என்னாச்சு? மேடம்ஜியோட கண்ணு கலங்கிருக்கு, மூக்கு சிவந்திருக்கு… அட கன்னத்துல கூட டியர்ஸ் மார்க்… வாட் ஹேப்பண்ட் பேபி?” என்று கேட்க அவளுக்கோ மனமெங்கும் வேதனை!
வானதி கண்ணீருடன் தடுமாறவும் சீட்டியடித்தான் அருள்மொழி. அவள் கல்லாய் நிற்கவும்
“ஐ நோ எவ்ரிதிங்… உன் அப்பாவும் அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்களாமே” என்று கூறிவிட்டு மீண்டும் சீட்டியடித்தவன் இரு கரங்களையும் கிரிக்கெட் மட்டை போல சேர்த்து இல்லாத பந்தை வானை நோக்கி அடித்துக் காட்டினான்.
பெற்றோரை இழந்த துக்கத்திலிருந்த வானதிக்கு அவனது கேலியைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
அழுகையோடு அவனை ஏறிட்டவள் “இந்த நிலமைல கூட கிண்டல் பண்ணுறல்ல? இன்னைக்கு நான் நிக்குற இதே நிலமைல நீயும் ஒரு நாள் நிப்ப அருள்… உன் கண்ணெதிர்ல நீ பாசம் வச்சிருக்குறவங்க உன்னை விட்டுட்டு போவாங்க… இப்ப நான் அனுபவிக்குற வேதனைய நீயும் அப்ப அனுபவிப்ப” என்று வெறி பிடித்தவளைப் போல கத்திவிட்டு அவனைத் திரும்பி கூட பாராது உடைமைகளுடன் ஓடி மறைந்தாள்.
இப்போது நினைவலைகள் அவளை நிகழ்காலத்தில் தூக்கி வீசவும் இயல்புக்குத் திரும்பினாள் வானதி.
தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அருள்மொழியை வெறித்தவள் “ஐ வோண்ட் கெட் பேக் மை வேர்ட்ஸ்… அண்ட் ஐ வோண்ட் அப்பாலஜைஸ் ஃபார் மை ஆக்சன்ஸ்… நான் அன்னைக்குச் சபிக்கலனாலும் உன் அப்பாவும் அண்ணாவும் இறந்ததை தடுத்திருக்க முடியாதுனு உனக்கே தெரியும்… அப்புறம் ஏன் பழசைலாம் நியாபகப்படுத்துற அருள்? வாட் டு யூ வாண்ட்?” என்று நேரடியாக வினவ அவன் பதிலளிக்கவில்லை.
அவனுக்குமே தெரியும் இதெல்லாம் பழைய சமாச்சாரங்கள் என்று. ஆனால் எதை சொல்லி அவளது மனவுறுதியை உடைப்பது என யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அடுத்தடுத்து விசயங்கள் மாட்டவும் சும்மா இருப்பானா? ஆனால் இம்முறையும் அவள் உறுதியாகத் தான் நின்றாள், கற்சிலை போல.
பின்னர் கல்லூரி முதல்வரால் முன்னாள் மாணவர்களுக்கான பிரத்தியேக அறையில் அமர வைக்கப்பட்டவனுக்கு பழச்சாறுடன் மரியாதை அளிக்கப்பட்டது.
அவனுடன் வானதியும் மொபைல் பேச்சை முடித்துக்கொண்ட யாழினியும் கூட அவ்வறையில் அமர வைக்கப்பட்டு உபசரிக்கப்பட்டனர்.
வானதி பழச்சாறை அருந்தி முடித்தவள் அருள்மொழியிடம் “நீங்க இங்கயே இருங்க சார்… நான் ரேங்க் ஹோல்டர்ஸ் போர்டை பாத்துட்டு வந்துடுறேன்” என்கவும் முதல்வர் அவளை யோசனையாய் ஏறிட்டார்.
“உங்களுக்கு எங்க காலேஜ் ரேங்க் ஹோல்டர் போர்ட் பத்தி எப்பிடி தெரியும்?”
“நானும் இந்த காலேஜ்ல தான் படிச்சேன் சார்”
“இசிட்? விஷ் பேட்ச்?” என்று வினவியவரிடம் தான் படித்த கல்வியாண்டை கூறினாள் அவள். இருப்பினும் அவரால் கண்டுகொள்ள முடியவில்லை எனவும் அருள்மொழி அவளை கேலியாய் பார்த்தான்.
அவனது கேலிப்பார்வையின் அர்த்தம் ‘இது தான் உனது நிலை’ என்பதே!
“நான் இடையில ட்ராப் அவுட் ஆயிட்டேன் சார்… அப்புறம் தான் ஸ்டடீசை கண்டினியூ பண்ணுனேன்… அந்த வருசம் நான் தான் யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர்” என்று அவருக்கு மட்டும் பதிலளித்தவள் அந்த பெயர்ப்பலகையைக் காண சென்றுவிட்டாள்.
அதன் முன்னே நின்றவள் இரண்டாயிரத்து பத்தாவது வருடத்தில் தரவரிசைப்பட்டியலில் இருந்த யுவராஜின் பெயரைப் பார்த்ததும் கண் கலங்க ஆரம்பித்தாள்.
“சவுத் இந்தியாவுலயே பெஸ்ட் மீடியா ஹவுஸ்ல இண்டர்ன்ஷிப் பண்ணுறதுக்கான சான்ஸ் கிடைச்சிருக்குடி பாண்டா… அத கம்ப்ளீட் பண்ணி அங்கயே ரிப்போர்ட்டர் ஆகணுங்கிறது தான் என்னோட கனவு… அதுக்கப்புறம் நீயும் நல்ல ஜாப்ல செட்டில் ஆனதுக்கு அப்புறம் ஆசை தீர லவ் பண்ணி சலிச்சதும் மேரேஜ் பண்ணிக்கலாம்”
“அவ்ளோ நாள் ஆகுமா யுவா?”
“ம்ம்… உன்னால என்னை பிரிஞ்சு இருக்க முடியாதுல்ல… அதுக்கும் ஐயா கைவசம் ஒரு ஐடியா வச்சிருக்கேன்… என்னனு கேளு பாப்போம்”
“என்ன ஐடியா?”
“நீ உன்னோட யூஜிய முடிச்சிட்டு சென்னைக்கு வந்துடு… நானும் அங்க தான இருப்பேன்… அப்புறம் என்ன? லிவின் ரிலேசன்ஷிப் தான்”
குறும்பாய் பேசி கண் சிமிட்டியவனை துரத்திக்கொண்டு தான் ஓடியது இங்கே தானே! எவ்வளவு கனவுகள்! எத்தனை வருங்காலத்திட்டங்கள்!
வானதியால் இதற்கு மேலும் பொறுக்க முடியாது அவளது கண்ணீர் சுரப்பிகள் வேலையை ஆரம்பித்த நேரம் “ஓ! இங்க நின்னு உன்னோட யுவா நேமை ரசிக்கிறீயா? அது சரி, இனிமே உன்னால பேரை மட்டும் தான ரசிக்க முடியும்” என்ற அருள்மொழியின் குரல் அவள் செவியில் விழுந்து வைத்தது.
வேகமாக திரும்பியவள் மெய்யாகவே அழ ஆரம்பித்திருந்தாள். அதே நேரம் அவளால் அமைதியாக அழ மட்டுமே முடியவும் இல்லை.
அருள்மொழியைக் கண்ணீர் நிரம்பிய விழிகளால் ஏறிட்டாலும் அவள் உடல்மொழி என்னவோ நிமிர்வாக தான் இருந்தது.
“உனக்கு இப்ப என்ன வேணும்? உன் முன்னாடி நான் கூனி குறுகி நிக்கணுமா? அது நடக்கவே நடக்காது… நீ என்ன நினைக்கிற? இந்தக் கண்ணீருக்கு உன்னோட பேச்சு தான் காரணம்னு நினைக்கிறியா? நோ மிஸ்டர் அருள்மொழி… ஒரு பொண்ணோட கண்ணீர் விலைமதிப்பு இல்லாதது… அதை வாழ்க்கைல முக்கியமான பெர்சன்காக மட்டும் தான் எந்த ஒரு பொண்ணும் சிந்துவா… என்னோட கண்ணீர் என் யுவாக்கு மட்டும் தான் சொந்தம்… என்னை அழவைக்கிற சக்தி உனக்கும் இல்ல,.. உன்னோட வேர்ட்சுக்கும் இல்ல… அது என் யுவாக்கு மட்டும் தான் இருக்கு… இன்னைக்கு அவன் உயிரோட இல்ல… பட் ஐ கேன் ஃபீல் ஹிம்… ஹி இஸ் லிவிங் இன் மை ப்ரீத்… ஹி இஸ் ஸ்பீக்கிங் த்ரூ மை ஹார்ட் பீட்… என்னைக்கு நான் செத்துப் போறேனோ அன்னைக்குத் தான் என் யுவா இந்த உலகத்த விட்டு போவான்… நீ அப்ப மட்டும் இல்ல, இப்பவும் என் யுவா கிட்ட தோத்து தான் நிக்குற அருள்… யூ ஆர் அ லூசர்”
அருள்மொழியால் ‘லூசர்’ என்ற வார்த்தையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“ஷட்டப்! உன்னை மாதிரி ஒருத்திய காதலிச்சேன்ல நான் லூசர் தான்… யூ நோ வாட்? எனக்கு அந்த யுவா மேல வெறுப்பு வர்றதுக்குக் காரணமே நீ தான்டி… உன் மேல இருந்த லவ் அவன் மேல எனக்கு வெறுப்பா மாறுச்சு… ஒன்னு இல்ல, ரெண்டு தடவை அவன் கிட்ட நான் தோத்திருக்கேன்… அந்த யுவா உன்னைய காதலிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே உன்னை பாத்த டே ஒன்ல இருந்து நான் உன்னை லவ் பண்ணுனேன்… என் கிட்ட உன் மொபைல் நம்பர் இருந்துச்சு… ஆனா போன் பண்ணி ஸ்டாக்கர் மாதிரி பிஹேவ் பண்ண நான் விரும்பல… உன் கிட்ட ஜெண்டில்மேனா நடந்துக்க தான் ஆசைப்பட்டேன்… ஆனா அதுக்கு பரிசா எனக்குக் கிடைச்சது தோல்வி தானே… என்னால அதை மறக்கவே முடியாதுடி… நான் இல்ல, இந்த உலகத்துல இருக்குற யாராலயும் முதல் காதலையும் முதல் தோல்வியையும் மறக்கவே முடியாது”
அவன் இவ்வாறு கூறவும் வானதிக்கு அதிர்ச்சி! அவளுக்கும் தெரியும் ஒரு காலத்தில் அவன் தன்னை காதலித்தான் என்பது. காதலை தெரிவித்தவனிடம் தானும் யுவராஜூம் நான்கு மாதங்களாக காதலிப்பதாக அவள் கூறவும் அவன் விலகிவிட்டானே! விலகி விட்டான் என்று தான் அவள் எண்ணியிருந்தாள்.
ஆனால் அப்படி இல்லை போல! அவனது காதல் கிடைக்காத ஏமாற்றத்தை யுவராஜின் மீது வெறுப்பாக மாற்றிக்கொண்டுள்ளான்! அவனது அன்றைய வேதனைக்காக தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இப்போது தன்னை கலங்க வைக்க எண்ணுகிறான்!
“கொஞ்சம் யோசி அருள்… என்னைக்கோ நடந்ததை இன்னைக்கு இழுத்து வச்சு பேசுறதால நடந்த எதுவும் மாறாது… இனி நடக்கப்போறது எதுவும் நம்ம கையில இல்ல… முதல் காதலை மறக்க முடியாதுனு நானும் ஒத்துக்கிறேன்… ஆனா அந்தக் காதல் உனக்குள்ள உயிரோட இல்ல… உன் மனசுல இப்ப இருக்குறது எல்லாம் நீ காலடி எடுத்து வச்ச இந்த அரசியல்ல ஜெயிக்கணும்ங்கிற எண்ணம் மட்டும் தான்… என்னை பாக்குறப்ப அக்கேஷ்னலா வர்ற இந்தக் கோவம் சீக்கிரமே உன்னை விட்டுப் போயிடும் அருள்… நிர்மலமான மனசுல தான் காதல் வாழும்… அது உன் கிட்டவும் இல்ல, என் கிட்டவும் இல்ல… சோ நம்ம பழசை மறந்துட்டு ப்ரசண்டுக்கு வருவோம்… உனக்கும் எனக்கும் வேண்டியது ஒன்னே ஒன்னு தான்… அது அப்கமிங் எலக்சன்ல நீ வின் பண்ணணும்ங்கிறது தான்… அத பத்தி மட்டும் யோசிப்போம்… நான் தெளிவாயிட்டேன்… நீயும் தெளிவாயிடுவனு நம்புறேன்”
இவனது சிறுபிள்ளைத்தனமான செய்கைகள் எதுவும் தன்னை காயப்படுத்தாது என்பது இப்போது அவனுக்குப் புரிந்திருக்கும் என்று நினைத்தாள் வானதி.
அருள்மொழியோ விருப்பும் வெறுப்பும் இல்லாத இரண்டுங்கெட்டான் உணர்வில் ஆழ்ந்துவிட்டான். தனது செய்கைகள் அவளைப் பாதிக்காது எனும் போது இனியும் தான் அவளை உடைக்க எண்ணுவது வீண் என புரிந்து விட்டது அவனுக்கு!
“உஃப்” என்றபடி மூச்சை வெளியிட்டவன் தனது சிகையை அழுத்திக்கொண்டு தலையை உலுக்கினான். ஏதோ முடிவுக்கு வந்தவனாக தனது கரத்தை அவளிடம் நீட்டினான்.

“நீ சொல்லுறத நான் ஏத்துக்கிறேன் வானதி”
வானதி அவனது கரத்தைப் பற்றிக்கொண்டவள் “தேங்க்யூ… அண்ட் ஐ ரியலி ஃபீல் பேட் ஃபார் யுவர் ஃபாதர் அண்ட் ப்ரதர்” என்கவும்
“பழசை பேச மாட்டேனு சொல்லிட்டு ஏன் நீயே ஆரம்பிக்கிற? லீவ் தட்… இப்ப ரிசார்ட்டுக்குக் கிளம்புனா என்னோட ஷெட்யூலுக்குக் கரெக்டா இருக்கும்… ஷால் வீ கோ?” என்றவன் அவளது பதிலை எதிர்பாராது தரிப்பிடத்தை நோக்கி சென்றுவிட்டான்.
செல்பவனை வெறித்தவள் தனது ஸ்லிங்கிலிருந்து டிஸ்யூவை எடுத்து முகத்தை அழுந்த துடைத்தபடி களப்பணியாளர்களின் பொறுப்பாளரை மொபைலில் அழைத்தபடி அங்கிருந்து கிளம்பினாள்.
வெறுப்பைச் சுமந்து கொண்டு திரிபவர்கள் பொறாமையாலும் சுய-நம்பிக்கையின்மையாலும் தங்களுக்குத் தாங்களே விஷத்தன்மை கொண்ட சிறை ஒன்றை கட்டிக்கொண்டு அதில் வாழ்கின்றனர். அந்தச் சிறையானது அவர்களது சொந்த திறமையைக் கூட நம்ப முடியாதளவுக்கு அவர்களைக் குருடாக்கி விடும்!
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction