“இந்தப் பக்கம் ஓரமா கொத்தி விடுய்யா. தண்ணி நிக்க மாட்டேங்குது” ரத்தினவேலு மண்வெட்டியோடு நின்ற சரவணனிடம் மாமரத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையைக் காட்டி மண்ணைச் சரி செய்யுமாறு கூறிக்கொண்டிருந்தார். அவன் வேர்க்க விறுவிறுக்க தோட்டத்தில் வேலை செய்வதைப் பார்த்தபடியே சமையல்கட்டின் தோட்டத்தை நோக்கி இருக்கும் வாயிற்படியில் அமர்ந்து பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து கொண்டிருந்தாள் தேவயானி. சுற்றிலும் இருந்த எலுமிச்சை மரங்களில் பூத்திருந்த மலர்களிலிருந்து மிதந்து வந்த சிட்ரஸ் மணம் அவளது நாசிக்குள் நுழைந்து புத்துணர்ச்சியைக் கொடுத்துக்கொண்டிருந்தது. ஆழ்ந்து … Continue reading “மலர் 9”
Share your Reaction

