வாசல் கடக்காத வாசனை மலரிவள் நேசம் அறியாத நேயக் கனவிவள் துளிதுளியாய் பெருகும் அன்பின் ஊற்றிவள் கரையைத் தொடாத அமைதிக் கடலிவள் துடிக்கும் இதயத்தின் ஓசையைக் கேட்டவறிவாளா? -அட்சரனின் வேதா பரிகாரப் பூஜை அது இதுவென்று எல்லாம் முடிந்த பிறகு, அருள்மொழியையும் வானதியையும் அருகருகே அமர வைத்துவிட்டார்கள். ஏன் என்று கேட்க முடியாமல் கடனே என்று அவர்கள் அமர்ந்திருக்க, சரியாக அந்நேரத்தில் இலக்கியாவும் சஞ்சயும் வந்துவிட்டார்கள். மணமக்கள் இருவருக்கும் அவர்கள் நெருங்கிய நண்பர்கள் என்பதால் வரவேற்புக்குக் குறைவில்லை. […]
Share your Reaction

