“வானதி, நீ ஏற்கனவே ஐரோப்பா போயிட்டு வந்ததுனால உனக்குச் சீக்கிரம் விசா கிடைச்சிடும். சூப்பர் பிரயாரிட்டி முறையில ஆர்.டி ஹாலிடேஸ் மூலமா அப்ளை பண்ணிருக்கேன். நாளைக்கு பயோமெட்ரிக் முடிஞ்சா, மறுநாள் உன் கையில விசா இருக்கும்!” என்றான் அருள்மொழி.
அவளோ அதைக் கண்டுகொள்ளாமல், “எங்கப்பா கட்சியை முழுங்கப் பாக்குறார்னு உனக்குத் தோணுதா? என் அண்ணன் கட்சியோட அடுத்தக்கட்ட தலைவரா வர்றதுல உனக்கு விருப்பமில்லையா?” எனச் சாந்தமாய் வினவினாள்.
“நான் ஹனிமூன் பத்தி கேட்டதுக்குச் சம்பந்தமில்லாம நீ உன் அப்பாவையும் அண்ணனையும் இழுக்குற. அவங்க மேல எனக்குக் கசப்புணர்வு இருக்குறதுக்கான காரணத்தைத் தெரிஞ்சுக்க உனக்கு இன்னும் பக்குவம் வரல. நான் தான் சொன்னேனே, சில உண்மைகளை உன்னால ஏத்துக்க முடியாது. நீ ரொம்ப ஹர்ட் ஆகிடுவ. அப்பிடி நீ ஹர்ட் ஆகுறதுல எனக்கு விருப்பமில்ல. இனிமே இதைப் பத்தி நாம பேசிக்க வேண்டாம் வானதி.”
“ஓஹ்! இன்னைக்கு அகத்தியனுக்காக நீ என்கிட்ட கை ஓங்குனியே, அப்ப நான் ஹர்ட் ஆவேன்னு உனக்குத் தோணலையா?” என கேலியாக வினவினாள்.
“நீ பேசுனது அநாகரிகமான வார்த்தை. இதே மாதிரி தான் அன்னைக்கு எதிர்க்கட்சித் தலைவரையும் பேசுன. உன் அப்பா மேல இருக்குற கண்மூடித்தனமான அன்பால அடுத்தவங்களை மரியாதைக்குறைவா பேசுறது தப்பு. நான் உன் புருஷன்ற அதிகாரத்துல கை ஓங்கல. பிடிக்குதோ பிடிக்கலையோ நாம ஒரு காலத்துல ஃப்ரெண்ட்ஸ். அந்த உரிமைல தான் கை ஓங்குனேன். அதுக்குச் சாரி. ” என்றான் அருள்மொழி.”
மன்னிப்பைக் கூட அதிகாரத் தொனியில் கேட்டுவிட்டுப் படுத்தவனை ஆச்சரியம் கப்பிய விழிகளால் பார்த்தாள் வானதி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
காலையில் பரபரப்பாக ஜஸ்டிஸ் டுடேவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த வானதியை இறுகிய தாடையோடு பார்த்துக் கொண்டிருந்தான் அருள்மொழி.
‘நேற்று இரவு படித்துப் படித்துச் சொல்லியும் இவள் வேலைக்குக் கிளம்புகிறாள் என்றால் எவ்வளவு திண்ணக்கம் இருக்க வேண்டும்?’
வானதி அவன் தன்னைப் பார்ப்பதை அறிந்துகொண்டாள்.
“ரொம்ப பசிக்குதுனா போய் பிரேக்பாஸ்ட் சாப்பிடு. எதுக்கு என்னைத் திங்குற மாதிரி பாக்குற?” நக்கல் தொனியில் அவள் கேட்கவும்,
“அப்பிடியே உன்னைச் சாப்பிட்டாலும், யூ வில் பி த வொர்ஸ்ட் பிரேக்பாஸ்ட்” என்று சூடாய்ப் பதில் வந்தது அவனிடமிருந்து.
ஐடி கார்டைக் கழுத்தில் போட்டுக்கொண்டவள், வாயை இழுத்துச் சிரித்து வைத்தாள் அவனை வெறுப்பேற்ற வேண்டுமென.
“நீ கேனிபலிசத்துக்கு (மனிதக்கறி உண்ணுவது) மாறுனது தெரிஞ்சிருந்தா உன்னைக் கல்யாணம் பண்ணியிருக்கமாட்டேனே.”
அருள்மொழி பொறுமையிழந்து எழுந்து வந்தவன் அவளது கையைப் பற்றினான்.
“நீ வேலைக்குப் போ, ஊர் சுத்தப் போ, எங்க வேணும்னாலும் போ. ஆனா ஈவினிங் இங்க வந்தாகணும். சொன்னேனே பயோமெட்ரிக்ஸ் வைக்கணும்னு. இன்னைல இருந்து ரெண்டு நாள் கழிச்சு நைட் நமக்கு பிளைட். நாம ஹனிமூன் போறோம். எனக்கு ஓர் எமர்ஜென்சி. புரியுதா?”
வானதி உதட்டை ஒரு பக்கம் வளைத்தவளாய் அவனது கரத்தை விலக்கினாள்.
“எமர்ஜென்சிக்கெல்லாம் ஹனிமூன் போவாங்களா? புதுசா இருக்கேப்பா” என்றவள், “ஹனிமூனும் கிடையாது, சனிமூனும் கிடையாது. வேணும்னா நீ மட்டும் போய் தனிமூன் கொண்டாடிட்டு வா. நீ சொன்னா நான் கேக்கணுமா? இந்த ஒரு தாலியக் கட்டிட்டு நீ ஓவரா ஆடுற” என்றவள் கழுத்தைத் தொட்டபோது அங்கே தாலி இல்லை.

உடனே பரபரப்படைந்தாள் வானதி. இப்போது அருள்மொழியின் முகத்தில் நமட்டுச் சிரிப்பு பூத்தது. அவளது பரபரப்பும் பதற்றமும் ரசனையை ஊட்டின அவனுக்கு.
“என்ன? தாலியக் காணுமா?”
நக்கலாய்க் கேட்டவன், அவள் பரிதாபமாய்த் தலையசைத்ததும் வலப்பக்கச் சுவரிலிருந்த ஏ.சி இணைப்புக்கான பிளக்கைக் காட்டினான்.
“அதோ அங்கு தொங்குது பாரு! அதுவா உன் தாலி?”
ஏதோ வானத்து நிலாவைக் குழந்தைக்குக் காட்டுவது போல அவள் உயரத்துக்குக் குனிந்து மேல் நோக்கிக் கை நீட்டிச் சொல்லவும் வானதிக்கு அவ்வளவு கடுப்பு. தாலி பிரித்துக் கோர்த்தபோது அணிவித்த முகப்புச் செயின் ஊஞ்சல் போல ஆடிக்கொண்டிருந்தது அந்தப் பிளக்கில் மாட்டியவாறு!
“ஏன் அவ்ளோ உயரத்துல மாட்டி வச்சிருக்க? எடுத்துக் குடு.” “நீ சொன்னா நான் கேக்கணுமா?” என அவளை மாதிரியே பேசி வானதியை எரிச்சல் மூட்டியவன், “ஆள் இருக்குறது ஆழாக்கு சைஸ், ஆனா திமிர் மட்டும் ஈபிள் டவர் சைஸ். தாலி டிஸ்டர்பா இருக்குனு கழட்டிவைக்குறது உன் உரிமை. ஆனா தங்கம் விக்குற விலையில தரையிலயா போட்டுட்டுப் போவ? யாராச்சும் ஸ்டாப்ஸ் கிட்ட சொல்லி எடுத்துக்க” என்றான் நக்கலாய்.
“அவங்க கிட்ட சொன்னா அசிங்கமா நினைக்கமாட்டாங்க? ஏதோ நான் தாலியைத் தூக்கிப் போட்டு வீசி விளையாடுன மாதிரி” என்றவள் சோஃபாவைப் பிளக்கிற்கு நேராக இழுத்து அதன் கைப்பிடியில் ஏறப்போக, அதற்குள் தொங்கிக்கொண்டிருந்த தாலியை எடுத்துக்கொண்டான் அருள்மொழி.
“ஏடாகூடமா ஏறி விழுந்து தொலைச்சிடாத. கீழ இறங்கு.”
அதட்டலோடு இறங்குமாறு அவன் சைகை காட்டவும், உர்ரென்ற முகத்தோடு இறங்கியவள் அவனிடமிருந்து தாலி செயினைப் பறித்துக் கழுத்தில் போட்டுக்கொண்டாள்.
“நான் அத்தை கிட்ட பேசிட்டேன். நாம இன்னும் ரெண்டு நாள் கழிச்சு ஹனிமூன் போறது உறுதி.”
ஆணை போலச் சொல்லி முடித்தவன், அவள் நகர்த்திய அதே சோஃபாவைச் சரியான இடத்தில் போட்டுவிட்டு அதில் அமர்ந்து கொண்டான்.
வானதி அங்கேயே நிற்கவும் “என்ன பாக்குற? பொண்டாட்டி கூட ஹனிமூன் போகாம சைட் சிக் கூடவா போவாங்க?” என்று அவன் விஷமமாகக் கேட்டதும் முகத்தைச் சுழித்தாள் அவள்.
“அப்பிடியே சைட் சிக் கூட போயிட்டாலும்… உனக்கெல்லாம் நான் பொண்டாட்டியா அமைஞ்சதே பெரிய விஷயம். இதுல சைட் சிக் வேற. நீ எவளையும் வச்சுத்தான் பாரேன்.”
கடுகடுத்தவள் தனது பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் வானதி. அறையின் வாயில் வரை போனவள் திரும்பி அருள்மொழியை முறைத்தாள்.
“ஹனிமூனுக்கு வந்து தொலையுறேன்!”
சிடுசிடுப்பாகச் சொல்லிவிட்டு அவள் செல்ல, சோஃபாவில் அமர்ந்திருந்தவன் மொபைலில் எதையோ தட்டச்சு செய்தபடி சிரித்தான் வாய் விட்டு.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

