அட்சரம் 3

வேண்டாம் என நீ வேரறுத்த போதும், மீண்டும் முளைத்தேன் மீட்சி கொண்டே! துளிர்த்த பின்னே துணை எதற்கு? தனித்து வளருவதே தவம் எனக்கு! –அட்சரனின் வேதா “அப்படி என்ன சொல்லி வச்ச அச்சு? ஒரே அழுகை அந்தப் பொண்ணு. பாக்கவே பாவமா இருந்துச்சுடா. முகமெல்லாம் சிவந்து போச்சு.” ஸ்ரீமயாவின் கதை நிராகரிக்கப்பட்ட பிறகு நடந்த அனைத்தையும் அட்சரனிடம் சொல்லிவிட்டு, ஆதங்கமாய் வினவினார் ராஜேஸ்வரி. அட்சரன் அசட்டையாய்த் தோள்களைக் குலுக்கினான். “அவ எழுதுனது என்னவோ அதைத்தான் சொன்னேன். அந்தப் … Continue reading “அட்சரம் 3”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 2.2

வேண்டுமென்றே அவளைப் பயமுறுத்த நமட்டுச் சிரிப்போடு கேட்டாள் ஒரு பெண். “அட! நீ வேற வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க மாட்டியா ரோஜா?” என்று அந்தப் பெண்ணை அடக்கிய கனகவல்லி, “யாழினி வீட்டுல உக்காந்து டைப் பண்ணு. மத்த இடத்துக்குப் போனா இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வா” என மகளை அனுப்பிவைத்தார். அதென்ன யட்சன் கதை என்று யோசித்தவளாய் யாழினியின் வீட்டுக்கு நடை போட்டாள் வேதவதி. தையல் வகுப்பு இப்போது ஆரம்பித்தால் மதிய உணவுக்கான நேரம் வரை தொடரும். … Continue reading “அட்சரம் 2.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 2.1

உயிரே அடங்கும் உன் குரலில் பேச்சிழந்ததே இந்தப் பெண்மை! விதையற்று விழுந்தேன் மண்ணில் என் எழுத்துகள் தோற்றம் கணமிதுவோ? -அட்சரனின் வேதா “இன்னைக்குக் காலேஜ் லீவு. கொஞ்சம் எனக்கு ஒத்தாசையா வீட்டுவேலை செஞ்சா, நான் டெய்லரிங் கிளாசுக்கு வர்ற பிள்ளைங்களுக்குச் சீக்கிரமா கிளாஸை முடிச்சிடுவேன். ஆனா உங்க செல்ல மகாராணி இன்னைக்கும் பின்வாசல் திண்ணைல உக்காந்து டொக்கு டொக்குனு அந்த லேப்டாப்பைத் தட்டிக்கிட்டிருக்கா. நாலு மனுஷ மக்காகிட்ட பேசுனா தானே தைரியம் வரும்? எப்பவும் லேப்டாப்பே கதினு … Continue reading “அட்சரம் 2.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 1.2

“ஹாய்டா அச்சு! சீக்கிரமே வந்துட்ட?” “ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்க வர்றேன்.” “காலைல ஏர்போர்ட்ல என்னடா வேலை உனக்கு?” என்றபடி அலுவலக அறைக்குள் இருந்து குரல் கொடுத்தாள் இலக்கியா. “அருள் வந்திருக்கான்.” அவன் பதில் சொன்னதும் இருவரும் அவனிடம் வந்துவிட்டார்கள். “என்னடா சொல்லுற? எப்ப வந்தான்? உன்கிட்ட மட்டும் சொன்னானா? அப்ப நாங்கல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் யாரோதானே?” இருவரும் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுக்கவும், அமைதியாயப் பார்த்துவிட்டு சோஃபாவில் சரிந்தான் அட்சரன். “அவன் ஏதோ பிளான் வச்சிருக்குறதா … Continue reading “அட்சரம் 1.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 1.1

மைவிழிப் பார்வையில் மையல்கள் பூக்க கைவளை ஓசையிடக் கதைகள் கோர்க்க சின்னஞ்சிறு புன்னகை சிந்தும் கதிரே! வண்ணத் தமிழால் வரிப்பேன் உன்னையே! –அட்சரனின் வேதா சென்னையின் இதயப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் காலை நான்கே முக்கால் மணிக்கே அந்த டியூப்ளக்ஸ் வீடு சுறுசுறுப்பாகியிருந்தது. வீட்டின் தலைவியான ராஜேஸ்வரி சமையலறையில் காபி போட்டுக்கொண்டிருக்க, அதன் நறுமணத்தில் கண் விழித்துவிட்டார் அவரது கணவரான சதானந்தன். சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் இயங்கி வரும் ‘ராஜி சூப்பர் மார்க்கெட்’டின் உரிமையாளரான அவர், ஏழு மணிக்கு … Continue reading “அட்சரம் 1.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 100 (இறுதி)

கேரளாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் சாத்தான் வழிபாடு நடத்தும் குழுக்கள் இருப்பதாக காவல்துறையின் அறிக்கைகள் கூறுகின்றன. இதில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் என்கிறது இவ்வறிக்கை. இதில் கலந்துகொள்வதற்கான நோக்கங்கள் – அதீத சக்தி வேண்டும், பணக்காரனாகும் ஆசை, எதிரிகளை அழிக்க வேண்டும் – இவையே ஆகும். இதை எல்லாம் சாத்தான் செய்வார் என்று அவர்கள் அழுத்தமாக நம்புகின்றனர். இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களுக்கு பெரிய போதைப்பொருள் … Continue reading “அத்தியாயம் 100 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 99

கேரளாவில் பதினான்கு மாவட்டங்களில் சாத்தான் வழிபாட்டு குழுவினர் தங்களுக்கென சர்ச்களை நிர்மாணித்துள்ளதாக ராஜிவ் சிவசங்கர் கூறுகிறார். இத்தகைய சர்ச்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட, கைவிடப்பட்ட வீடுகளிலும் அப்பார்ட்மெண்ட்களிலும் செயல்படுகின்றன. இவர்கள் ‘சாத்தான் சேவா’ என்ற நிகழ்வை செய்கிறார்கள். அந்நிகழ்வின் போது சாத்தான் உங்களைப் பணக்காரர் ஆக்குவார், எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவைப்பார் என்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயலுகிறார்கள். அதிலும் தொழில் நொடிந்த பிசினஸ்மேன்கள் தான் இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களின் இலக்கு என்கிறார் … Continue reading “அத்தியாயம் 99”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 96

2017ல் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கேடல் ஜேசன் ராஜா என்பவர் தனது பெற்றோர், சகோதரி மற்றும் உறவுக்காரப்பெண்மணியை சாத்தான் வழிபாட்டிற்காக கோடாரியால் வெட்டிக் கொலை செய்து அக்கொலையை தீவிபத்து போல சித்தரித்து அதில் தானும் மரணித்தது போல ஒரு டம்மியை வைத்து நாடகமாடிய சம்பவம் மாபெரும் அதிர்வலையை உண்டாக்கியது. அவரை இரயில் நிலையத்தில் கைது செய்து விசாரித்தபோது சாத்தான் வழிபாட்டில் ஒரு பகுதியாக ஆன்மாவை உடலில் இருந்து பிரிக்கும் சோதனையை அவர்களை வைத்து செய்ததாகக் கூறியுள்ளார். சாத்தான் … Continue reading “அத்தியாயம் 96”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 95

2004ல் போலீசுக்கு உதவிய விக்கி ஹட்சசன் என்ற பெண்மணி காவல்துறையினரின் அவசரத்தாலும், தங்களுக்குச் சாதகமாக சாட்சி சொல்லவில்லை என்றால் கொலைவழக்கில் அவரையும் குற்றவாளியாக்கிவிடுவோமென்ற மிரட்டலாலும் தான் மிஸ்கெல்லி, எகோல்சுக்கு எதிராக பாலிகிராப் சோதனையில் பேசியதாகக் கூறினார். 2007ல் கொலை செய்யப்பட்ட சிறுவர்களின் உடலில் கட்டியிருந்த ஷூ லேஷ்களில் இருந்த தலைமுடி டி.என்.ஏ சோதனைக்காக அனுப்பப்பட்டது (90களில் இச்சோதனை கிடையாது). அதில் எகோல்ஸ், பால்ட்வின், மிஸ்கெல்லி மூவரது டி.என்.ஏவோடும் அந்த தலைமுடியிலிருந்த டி.என்.ஏ ஒத்துப்போகவில்லை. அதற்கு மாறாக அந்த … Continue reading “அத்தியாயம் 95”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 94

விக்கி ஹட்சசன் காவல்துறையினருக்கு உதவ முன்வந்தார். அதன் அடிப்படையில் சாத்தான் வழிபாடு நடக்கும் இடத்திற்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்பதைக் கண்காணித்து அதில் சந்தேகப்படும்படியான நடத்தை கொண்ட மிஸ்கெல்லி என்ற பதினேழு வயது இளைஞனின் பெயரைக் குறிப்பிட்டார். மிஸ்கெல்லி, எகோல்ஸ் இருவரும் கலந்துகொண்ட சாத்தான் வழிபாடு கூட்டத்தில் அவரும் கலந்துகொண்டு அங்கே நடந்தவற்றை காவல்துறையினரிடம் கூறியுள்ளார். கூடவே அவருக்கு உண்மை கண்டறியும் சோதனையான பாலிக்ராப் டெஸ்டும் நடந்துள்ளது. அதன் மூலம் காவல்துறையினர் மிஸ்கெல்லியை விசாரிக்க ஆரம்பித்தார்கள். முதலில் குற்றத்தின் … Continue reading “அத்தியாயம் 94”

 

Share your Reaction

Loading spinner