அகம் 11

“இப்ப எல்லாம் நான் கடிகாரம் ஓடுறதைக் கவனிக்குறதே இல்ல. அன்பான உலகத்துல நேரக்கணக்குக்கு அவசியமில்லனு நினைக்குறேன். சிலரோட செலவளிக்குற நேரம் நம்ம வாழ்க்கைய அழகாக்குதுனா அங்க கடிகாரத்துக்கு ஓய்வு குடுக்குறது நல்லதுதானே?”      -பவிதரன் அர்ச்சகர் தாலியை எடுத்துக் கொடுக்க அட்சதை மழையில் நனைந்தபடி அதை மதுமதியின் கழுத்தில் கட்டினான் தர்ஷன். இருவரது மனமும் அம்மனிடம் வேண்டிக்கொண்டது என்னவோ ஒரே ஒரு விசயத்தைத்தான். “இந்த வாழ்க்கை எங்களுக்கு எந்தச் சோதனையையும் குடுத்துடாம காப்பாத்துங்க. நாங்க இனியாச்சும் இயல்பான […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 10

“அதிகாரத்தால ஒருத்தரை எரிக்க முடியும். ஆனா அன்பால மட்டும்தான் அவங்களை உருக வைக்க முடியும். அன்பால உண்டாகுற ஆதிக்கம் கூட அழகு. அதே நேரம் அதிகாரத்தால வளைக்க நினைக்குற ஆதிக்கம் ரொம்ப ஆபத்தானது. அந்த ஆதிக்கத்தை ஏத்துக்குறப்ப கிடைக்கிற அமைதியை விட நிமிர்ந்து நின்னு போராடுறப்ப கிடைக்குற பதற்றமும், கோவமும் ரொம்ப அற்புதமா இருக்கும் தெரியுமா?”       -ஈஸ்வரி “பொண்ணா மலர்? இன்னைக்கு வெள்ளிக்கிழமை. மகாலெட்சுமியே ஆதிராவுக்கு மகளா பிறந்திருக்கா” மொபைலில் மலர்விழியோடு பேசிக்கொண்டிருந்த அன்னையைப் பார்த்தபடியே […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 9

“அவ என்னைத் தள்ளி நிறுத்துறதா நினைக்குறா. ஆனா அவளால என்னை அலட்சியப்படுத்த முடியல. என்னைப் பத்தி ரொம்ப அதிகமா யோசிக்குறா. அந்த யோசனை தான் அவளோட சண்டைக்காரி இயல்பை மீறி அவளைத் தடுமாற வைக்குது. ஒருத்தர் நம்மளைத் தவிர்க்க நினைக்குறது கூட பேரன்போட அடையாளமா தெரியும்னு இன்னைக்குத்தான் நான் புரிஞ்சிக்கிட்டேன். என் மேல அவளுக்கு இருக்குற ஃபீலிங்சைக் கையாளத் தெரியாம       அவ என்னைத் தள்ளி நிறுத்துறா. எத்தனை நாள் இந்தப்  போராட்டம்னு பாக்கலாம்”      -பவிதரன் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 8

“வயசுக்கோளாறுல எல்லாரோட மனசுலயும் சின்ன சலனம் வரலாம். ஏதோ ஒரு ஈர்ப்பு யாரை நோக்கியோ நம்மளை ஈர்க்க பார்க்கலாம். ஆனா, அந்த இடத்துல நம்மளோட சுயமரியாதை கொஞ்சமா குறைஞ்சிடும்னு தெரிஞ்சாலும், அந்த ஈர்ப்பை நான் வேரோட கிள்ளி எறிஞ்சிடுவேன். வசதிகளும் வெளிச்சங்களும் ஒருத்தரை அழகா காட்டலாம். ஆனா அந்த வெளிச்சம் என் கௌரவத்தைச் சுட்டெரிக்குற அளவுக்குப்  போக நான் எப்பவுமே அனுமதிக்கமாட்டேன்.” -ஈஸ்வரி மதுமதியின் திருமணத்தை எளிமையாக வைத்துக்கொள்ளலாமென மாணிக்கவேலுவும் தர்ஷனின் அன்னையும் முடிவெடுத்திருந்தார்கள். பெரிய மண்டபம், […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 7

“ஒரு சின்ன பற்றுதலுக்காக ஏங்கி நிக்குற மனசு கிடைச்ச துணை பிடிச்சுக்கத் துடிக்கும். அந்தத் துணை ரொம்ப ஜாக்கிரதையோட விலகி நின்னா என்ன செய்யுறது? ஒரு கோவிலோட ராஜகோபுரத்தை தூரமா நின்னு ரசிக்குற ஒருத்தனா விலகி நின்னுடட்டுமா? இல்லனா அழகான நதியோட குளுமையை அதுல படகா மாறி நீந்தி அனுபவிக்கட்டுமா? ரொம்ப குழப்பம் எனக்குள்ள. யார் ஒருத்தியோட விலகல்ல என் தேடலுக்கான விடை இருக்குதோ அவளை நான் எப்பிடி அணுகுறதுங்கிறதுதான் இப்ப எனக்குள்ள இருக்குற பெரிய குழப்பம்” […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 6

“ஒருத்தரோட பிரசன்னமும், மௌனமும் கூட மனசை ஆட்டுவிச்சிடும்னு சமீபநாட்கள்ல எனக்குப் புரியுது. நான் நினைச்சா இதெல்லாம் தேவையில்லனு அவங்க கிட்ட பேசிட முடியும். ஏன் நான் இதையெல்லாம் ஒரு தவிப்போட ரசிக்குறேன்? ஒருத்தரோட ஆர்வமான பார்வையும் பேச்சும் என் நிதானத்தோட வேர் வரைக்கும் ஊடுருவுதுனு தெரிஞ்ச அப்புறமும் நான் எதுவும் செய்யாம அமைதியா இருக்குறேன். இதுக்கெல்லாம் அர்த்தம் எனக்கும் அவங்க மேல ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்குங்கிறதுதானே? ஆனா ஒன்னு, இந்த ஈர்ப்பை நானும் என் மனசும் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 4

“கடலுக்கு அடியில இருக்குறப்ப அலைகளோட வலிமை யாரோட கண்ணுக்கும் தெரியாது. அது கரையை மோதுறப்பதான் அதோட ஆவேசமும் வலிமையும் உலகத்துக்குத் தெரிய வரும். அதே மாதிரிதான் மனவுறுதியும். நமக்குள்ளவே அதை மறைச்சு வச்சிருக்குறப்ப உலகத்தோட பார்வைக்கு அது தெரியாது. ஏதோ ஒரு சோதனையான சூழல்ல அதை நாம வெளிப்படுத்துறப்பதான் அந்த மனவுறுதியை இந்த உலகம் பாக்கும். பாராட்டும்” -ஈஸ்வரி ஓல்ட் காபி ஹவுஸ், வல்லக்கடவு, திருவனந்தபுரம்… கேரளா பாணி கூரையோடு கூடிய பெரிய வீட்டின் வராண்டா போல […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 2

“அன்புங்கிறது மனசுக்குள்ள பூட்டி வைக்க வேண்டிய இரகசியமில்ல. அதை மௌனமா வெளிப்படுத்துனா யாருக்குப் புரியும்? ஒருத்தரோட அன்பு கூண்டுப்பறவையா மனசுக்குள்ள பதுங்கியிருக்குறதைவிட சிறகடிச்சு வானத்துல பறக்குற சுதந்திரப் பறவையா வெளிப்படையா தெரியுறப்ப தான் அதுக்கான வலிமை அதிகமாகுது” -ஈஸ்வரி முற்பகல் பதினோரு மணி வெயில், அந்தப் பழைய ஓட்டு வீட்டின் திண்ணையில் தங்கத்தைப் பூசியது போலப் படர்ந்திருந்தது. மக்கள் எல்லம் அவரவர் அலுவலைக்  கவனித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஊரே நிசப்தத்தில் ஆழ்ந்திருக்க, அந்த வீட்டின் பின்வாசலில் இருந்த கொய்யா […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 1.1

“தனிமைங்கிறது ஆளுங்கள் யாரும் நம்ம கூட இல்லாம தனியா இருக்குற நிலை இல்ல. உண்மையான தனிமை என்ன தெரியுமா? அன்பு நிறைய இருந்தும் சம்பந்தவங்க கிட்ட பேச முடியாத மௌனம்தான்”      -பவிதரன் அந்தி வானத்தின் இளஞ்சிவப்பு கொஞ்சம் கொஞ்சமாய் விடைபெற்று கொண்டிருந்த நேரம் அது. தோட்டத்தில் இருக்கும் வேப்பமரம் ஒன்றின் கீழ் நின்று கொண்டிருந்தான் அவன். நல்ல உயரமும் அதற்கேற்ற உடற்கட்டுமாய் முப்பதைத் தொடப் போகிறான். அடர்சிகையானது தோட்டத்து விருட்சங்களின் தயவால் வீசிய காற்றினால் கொஞ்சம் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 100 (இறுதி)

கேரளாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் சாத்தான் வழிபாடு நடத்தும் குழுக்கள் இருப்பதாக காவல்துறையின் அறிக்கைகள் கூறுகின்றன. இதில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் என்கிறது இவ்வறிக்கை. இதில் கலந்துகொள்வதற்கான நோக்கங்கள் – அதீத சக்தி வேண்டும், பணக்காரனாகும் ஆசை, எதிரிகளை அழிக்க வேண்டும் – இவையே ஆகும். இதை எல்லாம் சாத்தான் செய்வார் என்று அவர்கள் அழுத்தமாக நம்புகின்றனர். இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களுக்கு பெரிய போதைப்பொருள் […]

 

Share your Reaction

Loading spinner