யுத்தம் 12

“அரசியலைப் பொறுத்த வரை எந்த ஒரு நிகழ்வும் தற்செயலாக நடப்பதில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்குமாயின் அது கட்டாயமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றாக மட்டுமே இருக்குமென நீங்கள் அறுதியிட்டுக் கூறலாம்”                                            -ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் வானதி அருள்மொழியிடம் அளித்திருந்த கட்சிப்பிரமுகர்கள் பற்றிய அறிக்கையானது அவனுக்குள் பெரும் குழப்பத்தை உண்டாக்கி இருந்தது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து வேட்பாளர் தேர்வு நடைபெறுமாயின் கட்டாயம் அது கட்சிக்குள் அதிருப்தி அலையை உண்டாக்கும் என்று யூகித்தவன் அவள் இரண்டாம் கட்ட […]

 

Share your Reaction

Loading spinner

துளி 11

“நான் வர்றதுக்குள்ள யாருப்பா நிச்சயதார்த்தத்தை ஆரம்பிச்சது?” என்றபடி உள்ளே வந்த அபிமன்யூவை ஸ்ராவணியின் விழிகள் கூறு போட அவன் அதை கண்டுகொள்ளாதவனாய் முன் வரிசையில் ஒரு நாற்காலியை இழுத்துபோட்டு விட்டு அமர்ந்துவிட்டு அஸ்வினையும் உட்காருமாறு கண்காட்ட அவன் சங்கடத்துடன் அமர்ந்தான். “என்ன பாத்துட்டே இருக்கிங்க ஐயரே? நல்ல நேரம் முடியறதுக்கு முன்னாடி பத்திரிக்கையை வாசிங்க” என்று கட்டளையிட விக்ரமின் குடும்பத்தார் ஸ்ராவணியின் கேள்வியாய் நோக்க நிச்சயப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. அதற்கு பின் ஸ்ராவணியிடம் பட்டுச்சேலையை கொடுத்து மாற்றி வருமாறு […]

 

Share your Reaction

Loading spinner

துளி 10

மேனகா காலையிலேயே ஏர்ப்போர்ட்டில் சென்று ஸ்ராவணியின் பெற்றோரை அழைத்து வர சென்று அங்கே  காத்திருந்தாள். வேதாவும், சுப்பிரமணியமும் மேனகாவை கண்டதும் “குட்டிம்மா” என்று புன்னகையுடன் அழைக்க அவள் வேகமாக சென்று அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் அணைத்து கொண்டாள். “எப்பிடி இருக்கிங்க அத்தை? நீங்க மெலிஞ்சு போயிட்டிங்க. நமக்கு அமெரிக்காலாம் செட் ஆகாதுனு நான் தான் சொன்னேன்ல மாமா. நம்ம சொல்லுறதை கேக்காம போனாங்கல்ல அதுக்கு இது தேவை தான்” என்று வேதாவை கிண்டலடிக்க சுப்பிரமணியம் அவளுக்கு […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 10

“அதிகாரம் மனிதர்களைக் கெடுப்பதில்லை. மாறாக அதிகாரமளிக்கக் கூடிய உயர்பதவிகளில் அமரும் முட்டாள்களே அந்த அதிகாரத்தைக் கெடுத்து துஷ்பிரயோகம் செய்கின்றனர்”                                                      -ஜார்ஜ் பெர்னாட்ஷா அருள்மொழி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த செய்தி அவனது கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியலையை உண்டாக்கியது. அவன் வெளியே வந்த தினத்தை மாவட்டம் தோறும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்து கொண்டாடிய வீடியோவெல்லாம் செய்தி தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகி ஆளுங்கட்சியினரின் வயிற்றெரிச்சலைச் சம்பாதித்தன. ராமமூர்த்தி இனி கட்சித்தலைமை தனக்குத் தான் என்று நம்பிக் கொண்டிருந்த […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 9

“தவறுகளைச் செய்யத் தூண்டுவது அதிகாரமல்ல, பயம் மட்டுமே! அதிகாரத்திலிருப்பவர்களை அந்த அதிகாரத்தை இழந்துவிடுவோமோ என்ற பயம் தான் தவறுகளைச் செய்யத் தூண்டுகிறது. அதிகாரத்தின் மீதான பயமோ அதற்குட்பட்டவர்களைச் சிதைத்துவிடுகிறது”                                                             -ஆங் சான் ஷ்யூகி அருள்மொழியின் பதினான்கு நாட்கள் சிறைவாசம் அவனுக்கு ஏகப்பட்ட படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்தது. சிறைவாசத்தின் இடையே கட்சிப்பிரமுகர்களுக்கு அவனைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது கூட முக்கியச் செய்தியாக சில நாட்களுக்குப் பேசப்பட்டது. அவனது வழக்கறிஞரும் யாழினியும் அகத்தியனுடன் அருள்மொழியைச் சந்திக்க இரு முறை […]

 

Share your Reaction

Loading spinner

துளி 8

பார்த்திபன் கட்சி அலுவலகத்திலிருந்து கோபத்துடன் வெளியேறியவர் நேரே காரில் சென்று வீட்டில் இறங்கினார். வீட்டின் அமைதி அவர் மனதுக்கு சங்கடத்தை தர  யோசனையில் சுருங்கிய நெற்றியை தடவியபடி வீட்டினுள் நுழைந்தவரின் பார்வையில் முதலில் பட்டது சோஃபாவில் வெறித்த முகத்துடன் சிலை போல அமர்ந்திருக்கும் மனைவியும் அவரை தேற்றிக் கொண்டிருக்கும் மகளும் தான். ஹாலில் டிவி ஓடிக்கொண்டிருக்க சகாதேவன் கையை பிசைந்தபடி அஸ்வினுடன் நிற்க அபிமன்யூ அவரை போலவே கண்ணை மூடி நெற்றியை தடவியபடி இன்னொரு சோஃபாவில் அமர்ந்திருந்தான். […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 8

“முட்கள் மற்றும் பொல்லாதவர்களை சமாளிக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவர்களை நசுக்குவது, மற்றொன்று அவர்களிடமிருந்து விலகி இருப்பது”                                                               -சாணக்கியர் அருள்மொழியின் கைது தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. செய்தி தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் அவன் பேசிய வீடியோவை ஒளிபரப்பி மக்களைப் பரபரப்பாக வைத்துக் கொண்டன. தொலைக்காட்சி சேனல்களை நடத்துபவனின் கைதை அவனது சேனல்கள் சும்மாவா விடும்? தந்தையையும் தமையனையும் இழந்து அரசியலில் அடியெடுத்து வைத்து மக்கள் மனதில் இடம்பெற ஆரம்பித்த ஒரு இளம் அரசியல் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 7

அபிமன்யூவுடன் பேசிவிட்டு இடத்தை காலி செய்த ஸ்ராவணியின் காதில் பார்த்திபன் விஷ்ணுவுடன் பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் தெளிவாக விழுந்தது. அவர் பேசிக்கொண்டிருந்தார் என்று சொல்வது பெரும் தவறு. அவர் விஷ்ணுவை மறைமுகமாக மிரட்டிக்கொண்டிருந்தார் என்பதே உண்மை. “ஏன் தம்பி உனக்கு இந்த வேண்டாத வேலை?  அழகான குடும்பம், அன்பான மனைவினு ரொம்ப அருமையை போய்கிட்டு இருக்கிற வாழ்க்கைய நீயா ஏன் சீரியஸா மாத்திக்கிற?  உனக்கு ஒரு அழகான பெண்குழந்தை இருக்கிறதா பேசிக்கிறாங்க. பத்திரமா பாத்துக்கோங்க தம்பி. நாட்டுல என்னென்னவோ […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 7

“குரைக்கிற ஒவ்வொரு நாயின் மீதும் நின்று கல்லெறிந்து கொண்டிருந்தால் நீ உன் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது”                                                           -வின்ஸ்டன் சர்ச்சில் இந்தியன் பொலிட்டிக்கல் கவுன்சிலின் தலைமை அலுவலகம்… தமிழக முன்னேற்ற கழகத்திற்காக அமைக்கப்பட்ட ‘நாளை நமதே’ என்ற தேர்தல் முழக்கத்துடன் அமைக்கப்பட்டிருந்த இணையதளத்தின் செயல்பாடு ஆரம்பித்த தினம் அன்று! அந்த இணையதளமானது மக்களுடன் நேரடியாக கட்சியை இணைக்கும் ஒரு முயற்சி! அதில் அவசர உதவி எண்ணுடன் தளத்தில் பயனராக பதிவு செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டிருந்தது. நேரடியாக […]

 

Share your Reaction

Loading spinner

துளி 6

தேர்தல் திருவிழா ஜரூராக நடைபெற ஸ்ராவணி அதில் கவனத்தை செலுத்தாமல் அவளின் வேலையை கவனிக்க தொடங்கினாள். அவளுக்கு விஷ்ணு கொடுத்த வேலை ஒரு முக்கிய நபரை பற்றிய தகவல்களை திரட்டுவது. அதற்காகத் தான் அவள் ஒரு முக்கியமான அதிகாரியை சந்திக்க சென்று கொண்டிருந்தாள். அந்த அலுவலகத்தினுள் நுழைந்தவள் “ஏ.சி.பி சாரை பாக்கணும்” என்று கேட்க அவர்கள் அவளை பற்றிய விவரத்தை கேட்கவும் தன்னுடைய ஐ.டி கார்டை எடுத்து காட்டினாள் ஸ்ராவணி. “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மேடம்” என்றபடி […]

 

Share your Reaction

Loading spinner