‘தி பீஸ்ட் ஆப் சாத்தான்’ என்ற இத்தாலிய சாத்தான் வழிபாட்டு குழு 1988 முதல் 2004 வரை சாத்தான் வழிபாடு என்ற பெயரில் தொடர் கொலைகளையும் குரூரச் செயல்களையும் செய்து வந்தார்கள். அந்தக் குழுவின் உறுப்பினர்களான ஆண்ட்ரியா இசிடோன் வால்பே, நிக்கோலா ஒனூசன் சபோனே, பாவ்லோ ஓஜி லியோனி, மேரியோ ஃபெரோசிட்டி மாசியோனே, பியட்ரோ வெட்ரா க்வர்ரரி, மார்கோ கில் ஜாம்போலோ, எரோஸ் காவோஸ் மான்டிரஸ்சோ மற்றும் எலிசபெட்டா பல்லாரின் போன்றோர் இந்த அனைத்து கொடூர கொலைகளையும் செய்துள்ளனர். இக்குழுவினரால் நிகழ்த்தப்பட்ட தொடர்கொலைகள் ‘போருக்குப் பிந்தைய இத்தாலியில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் குற்றங்களில் ஒன்று’ என பி.பி.சி தெரிவித்தது. இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பத்திரண்டு பேர். அனைத்துமே திட்டமிட்ட குற்றங்கள். சாத்தான் வழிபாடு என்ற பெயரில் இரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட குரூரமான கொலைகள் இவை. இந்த பீஸ்ட் ஆப் சாத்தான் குழுவினர் தங்களை ஒரு இசைக்குழுவினராகக் காட்டிக்கொண்டார்கள். கூடவே தங்களது குழு ஒரு கல்ட் குழு என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். தங்களை ஒருங்கிணைத்த விசயங்கள் என அவர்கள் கூறியது செக்ஸ், போதைபொருள், ஆயுதங்கள் மற்றும் மரணம்.
-From Internet
முரளிதரனின் தலைமையில் மார்த்தாண்டனும் மகேந்திரனும் அவர்களின் குழுவினரோடு ஒருங்கிணைத்து காட்டின் நடுவே இருக்கும் குகைப்பகுதியை நெருங்கிவிட்டார்கள்.
இதற்கிடையே காட்டு இலாகாவினருக்கு அழைத்த முரளிதரன் ரிசர்வ் ஃபாரஸ்ட் பகுதிக்கு ஏகலைவன் வந்ததாகத் தெரிந்ததா என விசாரித்தார்.
“யாரும் இந்தப் பக்கம் வந்ததா தெரியல சார்… அனிமல்சை வாட்ச் பண்ண கேமராஸ் வச்சிருக்கோம்… அப்பப்ப அதை செக் பண்ணிட்டிருக்கோம்… நீங்க சொல்லுற மாதிரி ஏகலைவன் இந்தப் பக்கம் வந்திருந்தா கட்டாயம் கேமரால ரெக்கார்ட் ஆகிருக்கும்… அப்பிடி எந்த ஃபூட்டேஜும் கிடைக்கல சார்… அவர் வந்ததா தெரிஞ்சா உங்களுக்கு கட்டாயம் இன்ஃபார்ம் பண்ணுவோம்”
ஃபாரஸ்ட் ரேஞ்சர் இவ்வாறு சொல்லிவிட இப்போது என்ன செய்வதென அவர் யோசித்தபோது கிட்டத்தட்ட அவர்கள் காட்டு குகையை நெருங்கியிருந்தார்கள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நான் முதல்ல உள்ள போய் பாக்குறேன் சார்… மத்த யாரும் வரவேண்டாம்” என்று இரகசிய குரலில் கிசுகிசுத்த மார்த்தாண்டன் காலில் போட்டிருந்த பூட்ஸ்களைக் கழற்றிவிட்டு துப்பாக்கியைப் பிடித்தபடி பூனை போல குகைக்குள் பதுங்கி பதுங்கி சென்றார்.
வெளியே நின்றவர்களுக்கு இதயம் துடிப்பது ஹை-டெசிபலில் கேட்டது. அவர்களுக்கு அது ஒரு திக் திக் தருணம் தான்.
கொடூரமாகக் கொலை செய்த சைக்கோ ஒருவன்! அவனைப் பிடித்தே தீரவேண்டிய கட்டாயம்! அவனால் இதன்யாவின் உயிருக்கு என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்ற நிலை!
அனைவரும் நெஞ்சு படபடக்க நின்ற போது குகைக்குள் இருந்து “சார்” என்ற குரலோடு வெளியே ஓடோடி வந்தார் மார்த்தாண்டன்.
அனைவரும் என்னவோ ஏதோ என பதற அவரோ “உள்ள யாருமே இல்ல சார்… அந்தச் சாத்தான் சிலை மட்டும் தான் இருக்கு” என்றார் மூச்சு வாங்க.
அப்படி என்றால் இதன்யா எங்கே? அவளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஏகலைவன் எங்கே?
அனைவரும் குழம்பிய தருணத்தில் தூரத்தில் எங்கே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.
அதைக் கேட்டதும் முரளிதரனின் மூளைக்குள் எண்ணற்ற கேள்விகள்!
“திடீர்னு என்ன துப்பாக்கி சுடுற சத்தம் கேக்குது? ஒருவேளை காட்டுக்குள்ள வேட்டைக்காரங்க யாரும் மிருக வேட்டைக்கு வந்திருக்காங்களா?” என ஒரு காவலர் கூற
“வாய்ப்பு இருக்குய்யா… போன வாரம் கூட மான் வேட்டைக்கு வந்த ரெண்டு பேரை ஃபாரஸ்ட் ரேஞ்சர்ஸ் அரெஸ்ட் பண்ணுனாங்க” என்றார் இன்னொருவர்.
ஆனால் மகேந்திரனோ கட்டாயம் வேட்டைக்காரர்களின் துப்பாக்கி சத்தம் இல்லை என்றார்.
“அந்தத் துப்பாக்கி சத்தம் கிழக்கு திசைல கேட்டுது… ரிசர்வ் ஃபாரஸ்ட் நம்ம நிக்குற இடத்துல இருந்து வடக்குல இருக்கு… ஏதோ தப்பா நடக்குது சார்” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கையில் இரண்டாம் முறையாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கவும் முரளிதரன் உஷாராகி விட்டார்.
“காட்டு குகையில ஏகலைவன் இல்ல… இதன்யா மேடம் அவன் தன்னை இங்க கொண்டு வருவான்னு நினைச்சு தகவல் சொல்ல வச்சிருக்கலாம்… ஆனா ஏகலைவன் அவங்க ஊகத்தை உடைச்சிட்டான்… இப்ப அவங்க இருக்குற இடம் இங்க இருந்து கிழக்கு திசைல இருக்கு… அது மட்டும் தான் இப்ப என்னோட ஊகம்… இப்பவே ஹாஸ்பிட்டல் கிட்ட இருக்குற ஸ்குவாடை அந்த திசைக்குப் போகச் சொல்லுறேன்” என்றார் அவர்.
மார்த்தாண்டன் ஏதோ யோசித்துவிட்டு “சார் அந்த திசைல ஏகலைவனோட எஸ்டேட் தான் இருக்கு… அந்த எஸ்டேட்டோட சரிவுல தான் இரகசியப்பாதை ஒன்னும் இந்தக் காட்டுக்குள்ள வருது… அதோ அப்பிடி போனா வரும் சார்” என்று கை காட்டினார்.
“குட்! நீங்க உங்க டீமோட அங்க போங்க… நானும் மகேந்திரனும் இதோ இந்தப் பாதை வழியா போய் ஏகலைவனோட எஸ்டேட்டைச் சோதனை போடுறோம்… க்விக், வீ ஹேவ் நோ டைம்” என்று பரபரத்தவர் மகேந்திரனின் குழுவோடு ஊருக்குச் செல்லும் காட்டுப்பாதையை நோக்கி ஓட ஆரம்பித்தார்.
மார்த்தாண்டன் தனது குழுவோடு இரகசியபாதையை நோக்கி வேகமாகச் சென்றார்.
அதே நேரம் இதன்யாவை ஏகலைவன் அடைத்து வந்திருந்த இன்னொரு குகையில் அவன் முழங்காலுக்குக் கீழே சுட்ட இதன்யா அவனது கையால் கழுத்து நெறிக்கப்பட்டு மூச்சுக்காற்றுக்குப் போராடிக்கொண்டிருந்தாள்.
அவளது போராட்டத்தையும், தவிப்பையும் விழி பிதுங்க இராட்சசத்தனமான சந்தோசத்தோடு ரசித்துக்கொண்டிருந்தான் அவன்.
“உன்னை யாராலயும் காப்பாத்த முடியாது இதன்யா… இந்த ஏகலைவனுக்கு ஏமாற்றத்தைக் குடுத்த யாரும் உயிரோட நடமாட முடியாது… தேவா மறுபடி வந்துட்டாங்கிற நம்பிக்கைய ஏன் எனக்குக் குடுக்குறிங்க? ஏன் என் கண்ணு முன்னாடி வேற எவனோ ஒருத்தன் கூட இழைஞ்சு எனக்குத் துரோகம் பண்ணுறிங்க? ஏன் என் கையால துடிதுடிச்சு சாகுறிங்க? அன்னைக்கு இனியா… இன்னைக்கு இதன்யா… யூ விமென் ஆர் ப்ரெய்ன்லெஸ் க்ரியேச்சர்ஸ்… என் கையால சாகுறதுக்குனே பிறந்திருக்கிங்க நீங்கல்லாம்”
இதன்யாவின் கண்கள் சொருகின. காற்றுக்குழாயை நொறுக்குவது போல அவனது பிடி இறுகியிருக்க அனைத்தும் முடிந்துவிட்டதென அவள் நம்பிக்கையிழந்த சமயத்தில் ஏகலைவனின் பிடி தளரத் துவங்கியது.
இதன்யாவின் கழுத்தைப் பிடித்திருந்த கரத்தை தளர்த்தியவன் “ஆஆஆ” என்று வேதனையோடு பின்னந்தலையை அழுத்திக்கொண்டு மடிந்து முழங்காலிட இதன்யா மூச்சுத்திணறலோடு தரையில் சரிந்தாள்.
ஏகலைவன் பின்னந்தலையைப் பற்றிகொண்டு வேதனையில் முகம் சுளித்தபடி திரும்பிப் பார்த்தான்.
அங்கே கண்களில் வெறுப்பும் கோபமுமாக கையில் சிறு பாறைதுண்டு ஒன்றை ஏந்தியபடி நின்றுகொண்டிருந்தான் நிஷாந்த். அவனுடன் பயத்தில் திருதிருவென விழித்தபடி நின்று கொண்டிருந்தான் ராக்கி..
“நிஷாந்த்.. ஏன்டா?” கையை நீட்டி கேட்டான் ஏகலைவன். அவன் முகத்தில் வருத்தமும் ஏமாற்றமும்!
நிஷாந்தோ அவனைக் கவனியாமல் ராக்கியிடம் “மேடமைத் தூக்குடா… அவங்களுக்கு என்னாச்சுனு பாரு” என்று சொல்ல அவனும் இதன்யாவிடம் ஓடினான்.
“ஏய் அவ கிட்ட போகாத” என்று எழும்ப முயன்ற ஏகலவனைப் பார்த்து ராக்கி பயந்து நடுங்க நிஷாந்த் ஓடிச் சென்று இதன்யா நழுவ விட்ட துப்பாக்கியை எடுத்து ஏகலைவனைக் குறி வைத்தான்.
“நகராதிங்க மாமா… ஒரு இன்ச் நகர்ந்தாலும் உங்களைச் சுட்டுருவேன்” என்று கத்தினான் அவன்.
“நீ ஏன்டா நிக்குற… மேடமை கவனி” என்று ராக்கியை இதன்யாவைப் பார்க்கும்படி கூறினான்.
நிஷாந்த் ஏகலைவனைத் தனது பிடியில் வைத்திருக்க ராக்கி இதன்யாவிடம் ஓடினான்.
அவளும் ஒரேயடியாக மூர்ச்சையாகிவிடவில்லை. ஏகலைவனின் அரக்கத்தனமான செயலால் அவளது தொண்டை எலும்புகள் நொறுங்கிய போன்ற வலியோடு பெரிய மூச்சுகளை எடுத்துவிட்டபடி எழுந்து நிற்க முயற்சித்தாள்.
அவள் தடுமாறியபோது ராக்கி வந்து பிடித்துக்கொள்ள சமாளித்து நின்றவள் மூவரையும் பார்த்தபோது மங்கலான பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவானது.
காலில் குண்டு துளைத்த காயத்தோடு பின்னந்தலையில் வழிந்த உதிரமுமாக மடிந்து அமர்ந்திருந்த ஏகலைவன்!
கொலைவெறியோடு அவனை நோக்கி துப்பாக்கியால் குறிவைத்தபடி நின்று கொண்டிருந்த நிஷாந்த்!
ஒரு காலத்தில் அவளால் மோசமானவனாகச் சித்தரிக்கப்பட்டு இன்று துணையாக நிற்கும் ராக்கி!
உலகம் எவ்வளவு விசித்திரமானது, அதில் வாழும் மனிதர்கள் எத்துணை வினோதமானவர்கள் என்பதை அனுபவத்தில் அறிந்து கொண்டாள் இதன்யா.
“ஏன் மாமா என் இனியாவைக் கொன்னிங்க?” கோபமாக வெறியோடு கேட்டான் நிஷாந்த்.
ஏகலைவன் தலையை அழுத்தியபடி நிமிர்ந்தவன் பதில் சொல்லாமல் அரக்கத்தனமாகச் சிரித்தான்.
“சிரிக்காதிங்க… ஒரு உயிரைக் கொன்னுட்டு எப்பிடி உங்களால சிரிக்க முடியுது? ஏன் இப்பிடி பண்ணுனிங்க மாமா?” என்று கேட்டவனின் குரல் அழுகையில் உடைந்தது.
அவன் அழ அழ ஏகலைவனின் சிரிப்பின் தீவிரம் அதிகமானது. நிஷாந்துக்கு அவனது சிரிப்பில் வெறி பிடித்தது. காதலியை இழந்தவன் அவன்! கள்ளங்கபடமற்ற பெண்ணவளோடு எவ்வளவு அழகான வாழ்க்கையை வாழவேண்டுமென கனவு கண்டிருந்தான்! அனைத்து கனவுகளும் நிர்மூலமாகக் காரணகர்த்தா அவனது மாமன்!
இதோ பேய்ச்சிரிப்பு சிரிக்கிறானே இந்த இராட்சசன்! மலரைவிட மென்மையான அவனது இனியாவை இரக்கமின்றி சிதைத்துக் கொன்ற மிருகம்!
இனியாவின் பூமுகம் பூஞ்சிரிப்போடு மனக்கண்ணில் தோன்றிய அடுத்த நொடி வெறியோடு ஏகலைவனை நோக்கி துப்பாக்கியை குறி வைத்தான்.
“நீ உயிரோடவே இருக்கக்கூடாது! என் இனியாவை கொன்ன உன்னை என் கையால கொன்னு பழி தீர்த்துக்கப்போறேன்! இந்தத் துப்பாக்கில இருக்குற ஒவ்வொரு தோட்டாவும் உன் உடம்பைச் சல்லடையாக்கி உன் உயிரைக் குடிக்குறதை பாத்து ரசிக்கப்போறேன்!”
முற்றிலும் வேறொருவனாக மாறி நின்ற நிஷாந்தைப் பார்த்து அவனது தோழன் ராக்கி வாயடைத்துப்போய்விட இதன்யா அவனைத் தடுக்க முயன்றாள்.
“நோ நிஷாந்த்… இவ…னைச் சட்டம் தண்…டிக்கும்… நீ…. இவனால கொலை….காரன் பட்….டம் சுமக்….க வே….ண்டாம்… சொ…ன்னா கேளு”
இதன்யா வலித்த தொண்டையோடு நிஷாந்தின் மனதை மாற்ற பேசினாள். ஆனால் அவனோ சொல்வதைக் கேட்பவனாகத் தெரியவில்லை.
தீர்மானத்தோடு துப்பாக்கியின் விசையை அழுத்தப்போனவனைப் பார்த்து “இனியா உயிரை விடுறப்ப கடைசியா உன் பேரை தான் சொன்னா” என்றான் ஏகலைவன் குரூரமானச் சிரிப்போடு.
நிஷாந்த் ப்ரேக் போட்டாற்போல நின்றுவிட அவனை நோகடித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டியவனாக “நீ தொட்ட உடம்பை வேற யாரும் தொடக்கூடாதுனு எவ்ளோ போராடுனா தெரியுமா? அப்ப நான் என் கையால அவ உடம்பு முழுக்க அந்த ஹாக்சா ப்ளேடால குத்துனேன்… என் தேவாவா இத்தனை நாள் ஆராதிச்ச ஒருத்தியோட அழகான முகத்தை இதே கையால ஆசிட் ஊத்தி சிதைச்சேன்… அப்பவும் அவ தன்னை யாரும் தொட்டுடக்கூடாதுனு போராடுனா… அவ முகத்துல இருக்குற தோலை உறிச்சேன்… அதுக்கு அப்புறம் அவளால போராட முடியல… அப்ப ரோஷணை அவ கூட செக்சுவல் இண்டர்கோர்ஸ் வச்சுக்கச் சொன்னேன்.. அவன் பலவந்தப்படுத்துனப்ப அரையுயிரா அவ துடிச்சதை இதோ இந்தக் கண்ணால தான் ரசிச்சேன்… நிஷாந்த்னு சொன்னபடி அவ உயிரை விட்டதை இதே காதால கேட்டுச் சந்தோசப்பட்டேன்… ஆமாடா! இனியாவை அணுவணுவா சித்திரவதை பண்ணி சாவோட விளிம்புக்குக் கொண்டு போய் ரோஷணை வச்சு அவளை செக்சுவல் அப்யூசுக்கு ஆளாக்குனது நான் தான்… உன்னால என்னை என்ன செய்யமுடியும்?” என்று அகங்காரத்தோடு கத்தியவன் மீண்டும் சிரித்தான் அந்த குகையே அதிரும் வண்ணம்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

