மனநல மருத்துவர்கள் பீட்டா – ப்ளாக்கர்களை குறுகிய கால ஆன்சைட்டி அறிகுறிகளைக் குணப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். இத்தனைக்கும் பீட்டா – ப்ளாக்கர்கள் அதற்கான மருந்துகளே இல்லை என்றாலும் அவை குறைந்த பக்க விளைவை உண்டாக்குவதாலும், ஆன்சைட்டியின் தீவிரம் குறைவு என்பதாலும், சில சூழல்களில் ஆன்சைட்டியால் உண்டாகும் அடிப்படை உடலியல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த அவற்றை பயன்படுத்துகின்றனர். உதாரணமாக சிலருக்கு சில போபியாக்கள் உண்டு. அந்த போபியா அவர்களைத் தாக்கும்போது காரணமின்றி ஏற்படும் அளவுக்கதிகமான பயத்தால் உண்டாகும் அதிவேக இதயத்துடிப்பு, ட்ராமா மற்றும் பதற்றத்தைப் போக்க இந்த பீட்டா – ப்ளாக்கர்களை மனநல மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள்.
-From the website of National Institute of Mental Health
இதன்யா சென்னைக்குச் செல்வதற்கு தேவையான உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
அவளருகே முபீனா சோகமே உருவாய் நின்று கொண்டிருந்தாள்.
“ஜஸ்ட் டூ டேய்ஸ்ல திரும்பிடுவேன் முபீ… டோண்ட் வொரி” என்று அவளது சோகத்துக்கு ஆறுதல் கூறியவாறு தனது க்ளட்சை எடுத்து உள்ளே வைத்தாள் இதன்யா.
“அது வரைக்கும் நான் கம்ப்யூட்டர் க்ளாஸ் போகக்கூடாதாம்… அம்மா ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க… வாப்பா கிட்ட சொன்னா, அம்மாவோட பயத்தைக் காரணம் காட்டி அவரும் என்னை ரெண்டு நாள் லீவ் போடச் சொல்லுறார்கா… நம்ம ஊருக்கு பஸ் வருது, அதுல போயிட்டு பத்திரமா வீட்டுக்கு வந்துடுவேன்னு சொன்னாலும் கேக்க மாட்றாங்க ரெண்டு பேரும்.. இன்னைக்கு டேலில ஒரு இம்பார்டெண்ட் ஃபீச்சர் பத்தி சொல்லிக் குடுக்கப் போறாங்க… அதை நான் மிஸ் பண்ணிடுவேன்கா”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நான் உன்னோட டேலி மேம் கிட்ட பேசுறேன்… உன் பேரண்ட்சோட பயம் நியாயமானது முபீ… அவங்க பயத்துக்குக் காரணமும் இருக்கு… இன்னும் பொன்மலைல இயல்பான சூழ்நிலை திரும்பல… ஓப்பனா சொல்லணும்னா இனியாவோட மர்டர்ல அக்யூஸ்டுக்குத் தண்டனை கிடைச்சிட்டதா நம்ம எல்லாரும் நினைச்சிட்டிருக்குறது ஒரு அழகான பொய்… இந்தக் கேஸ் இன்னும் முடியல… அவ மர்டருக்குக் காரணமான எல்லாரும் சட்டத்தால தண்டிக்குற படுற வரைக்கும் பொன்மலைல இருக்குற ஒவ்வொரு பெண்குழந்தையும் பாதுகாப்பா இருக்க வேண்டியது அவசியம்… நான் எதை மீன் பண்ணுறேன்னு உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்”
நிதானமாக இதன்யா எடுத்துக்கூறியதும் அரைமனதாகச் சமாதானமானாள் முபீனா.
வீட்டின் வெளியே மகேந்திரனின் குரல் கேட்டது.
“மேடம் பைக் கொண்டு வந்திருக்கேன்”
இதன்யா ஒரு ஷோல்டர் பேக்பேக்கை மட்டும் எடுத்துக்கொண்டாள்.
அதோடு வெளியே வந்தவள் முபீனாவை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்துவிட்டு முருகையாவின் வீட்டுக்கதவைப் பூட்டினாள்.
சாவியை மகேந்திரனிடமே கொடுத்துவிட்டாள்.
“நான் வர்ற வரைக்கும் இந்தச் சாவி ஸ்டேசன்லயே இருக்கட்டும் மகேந்திரன்”
“சரி மேடம்… பேக்கைக் குடுங்க”
“நானே போட்டுக்குறேன்… உங்களுக்கு ஏன் சிரமம்?”
“அட நானா தூக்கிச் சுமக்கப்போறேன்? இங்க இருந்து பைக்ல போகப்போறோம்… பஸ் ஸ்டாண்ட் போனதும் பேக்கை நீங்க வாங்கிக்க போறிங்க… அவ்ளோ தானே?”
இதன்யாவிடமிருந்து ஷோல்டர்பேக்பேக்கை வாங்கிக்கொண்ட மகேந்திரன் தன் தோளில் போட்டுக்கொண்டு பைக்கை கிளப்ப இதன்யா பின்னே அமர்ந்து கொண்டாள்.
“நீங்க திரும்பி வர்றப்ப உங்களுக்குத் தேவையான டீடெய்ல்ஸ் தயாரா இருக்கும் மேடம்”
“நம்ம செய்யுற விசயம் யாருக்கும் தெரியக்கூடாது மகேந்திரன்”
“கண்டிப்பா தெரியாது மேடம்… உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? நிஷாந்தோட கேஸ் ஜெயிச்சிடுச்சு… கேரளால இப்பிடி ஒரு கேஸ் போன வருசம் நடந்துச்சுல்ல, அதை காட்டி லாயர் கேஸை ஜெயிக்க வச்சிட்டார்… நேத்து தான் ஜட்ஜ்மெண்ட் வந்துச்சு… அவங்கம்மா ஊர்க்காரங்களுக்கு ஸ்வீட் குடுத்தாங்க… ஒரு பொண்ணு அவனால இறந்து போயிருக்கு… அந்தக் குற்றவுணர்ச்சி கொஞ்சம் கூட இல்ல அந்தப் பொம்பளைக்கு… மனசாட்சி குத்தாது போல”
“விடுங்க மகேந்திரன்.. பையனைப் பெத்த அம்மாக்கள் ரொம்ப சுயநலமானவங்க,… தன் மகனோட நலன் மட்டும் தான் அவங்க கண்ணுக்குத் தெரியும்… பொள்ளாச்சி இஷ்யூல எல்லா ஆதாரமும் இருந்தப்ப கூட மகனுக்காக ஜாமீன் எடுக்க வந்து ப்ரஷ் ரிப்போர்ட்டர்ஸ் கிட்ட சண்டை போட்ட அம்மா ஞாபகம் இல்லையா? சாவித்ரி அம்மாக்கு இனியா யாரோ ஒருத்தி… ஆனா நிஷாந்த், அவங்களோட மகனாச்சே! எனி ஹவ், இனிமே அவனைக் கையில பிடிக்க முடியாது… இந்நேரம் சார் அவரோட ஒரிஜினல் லவ்வர் கூட பார்ட்டி பண்ணிட்டிருப்பார்”
“அந்த ராஸ்கலைப் பாக்குறப்பலாம் இருக்குற நாலு நல்லி எழும்பை உடைச்சு விடலாமானு வெறியாகுது… போலீசா போயிட்டோமே, அதான் அமைதியா பாக்காத மாதிரி கடந்து வந்துடுறேன்”
மகேந்திரனோடு பேசிக்கொண்டே பயணித்ததில் இதன்யாவுக்குத் திருநெல்வேலியைச் சீக்கிரம் அடைந்துவிட்டதாகத் தோன்றியது.
பேருந்து நிலையத்தில் இறங்கியவள் ஷோல்டர் பேக்பேக்கை வாங்கி மாட்டிக்கொண்டாள்.
“கவனமா இருங்க மகேந்திரன்… அவங்களுக்குச் சந்தேகம் வராம இதைச் செய்யுங்க… டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணுறேன்னு உங்க பாதுகாப்பை டீல்ல விட்டுடாதிங்க… பீ கேர்ஃபுல்”
“கண்டிப்பா மேடம்… நீங்க பத்திரமா போயிட்டுவாங்க”
மகேந்திரனிடமிருந்து விடைபெற்று சென்னை செல்லும் பேருந்தில் ஏறியமர்ந்தாள் இதன்யா.
முந்தைய தினம் வங்கி மேலாளரிடம் பேசியபோது அவர் சொன்ன தகவல்கள் அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஊட்டின.
“உங்க அக்கவுண்டுல குளறுபடி நடந்த அன்னைக்கு நம்ம பேங்கோட மெயின் சர்வரை யாரோ ஹேக் பண்ணிருக்காங்க மேடம்… ரொம்ப திறமையான ஹேக்கர்ஸ் குரூப்பா இருக்கணும்னு சைபர் க்ரைம்ல சொல்லுறாங்க… அவங்க ஹேக் பண்ணி அடுத்த சில நிமிசத்துல உங்க அக்கவுண்டுக்கு சில குறிப்பிட்ட கார்பரேட் கம்பெனிஸ்ல இருந்து கோடிக்கணக்குல பணம் ட்ரான்ஸ்ஃபர் ஆகிருக்கு… இதுல இன்னொரு ஆச்சரியம் என்னனா சைமல்டேனியஸா அந்த கம்பெனிசோட அக்கவுண்ட்ஸ் இருக்குற பேங்க் சர்வர்சும் முடங்கிருக்கு… இது வெல்-ப்ளாண்ட் ஹேக்கிங்கா தோணுது… அவங்களோட டார்கெட் உங்க அக்கவுண்டுக்கு கோடி கணக்குல பணப்பரிவர்த்தனை செஞ்சு உங்களை சட்டத்துக்கு முன்னாடி தப்பான போலீஸ் ஆபிசரா காட்டுறது மட்டும் தான்னு தோணுது.. ஏன்னா எங்க பேங்க்லயோ அந்த கம்பெனிஸோட பேங்க்லயோ வேற எந்த அக்கவுண்ட்ஹோல்டரோட ஃபண்டும் முறைகேடா காணாம போகல… எந்த சஸ்பீசியஸ் ட்ரான்சாக்சனும் நடக்கல… அவங்களோட சோல் டார்கெட் நீங்க மட்டும் தான்”
இதை கேட்ட பிற்பாடும் அவள் பொன்மலையிலேயே இருந்துவிட்டால் அவள் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றம் நிரந்தர களங்கமாக அவளது பணிவரலாற்றில் இடம்பெற்றுவிடும்.
எனவே தான் தீர்மானித்தபடியே இதன்யா சென்னைக்குக் கிளம்பிவிட்டாள்.
கிளம்பும் முன்னர் தான் சிறைச்சாலையில் சந்தித்த இருவரும் நடந்துகொண்ட விதத்தை மார்த்தாண்டன் மற்றும் மகேந்திரனிடம் பகிர்ந்துகொண்டாள்.
அவர்களிடம் ஒரு முக்கியமான பணியையும் ஒப்படைத்திருந்தாள். அதை தான் கவனமாகச் செய்யுமாறு மகேந்திரனிடம் கேட்டுக்கொண்டாள்.
கண்ணை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டவள் சென்னைக்குப் போனதும் சைபர் க்ரைம் அலுவலகத்திற்கு நேரே சென்று குற்றவாளியைக் கண்டுபிடிக்க அழுத்தம் கொடுக்கவேண்டுமெனத் தீர்மானித்தாள். கூடவே முரளிதரனிடம் பேராசிரியர் தேவநாதனையும் அவரது மகளையும் கண்காணிக்கும்படி சொல்லியிருந்தாள்.
அது குறித்து அவளை நேரில் சந்தித்துப் பேசினால் சரியாக இருக்குமென அவரும் கூறியிருந்தார்.
இந்த இரண்டு வேலைகளையும் முடித்து பொன்மலைக்குத் திரும்பிய பிற்பாடு இரகசிய விசாரணையைத் தொடரவேண்டும் என்பது அவளது திட்டம்.
பயணத்தில் கூட அதை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தவள் சென்னை மண்ணை மிதித்து வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் வழக்கைத் தவிர்த்து உன் சொந்த வாழ்க்கையையும் கொஞ்சம் கவனி என்று விதி கட்டளையிட்டது.
ஆம்! வீட்டின் லிவிங் அறைக்குள் அவள் காலடி எடுத்து வைத்தபோது மயூரியின் குரல் இனிமையாக ஒலித்தது.
“நாங்க எவ்ளோ சொல்லிப் பாத்துட்டோம் மாப்பிள்ளை… இதன்யா அவ பிடிவாதத்துல இருந்து இறங்கி வர்ற மாதிரி தெரியல… இன்னும் கொஞ்சநேரத்துல அவ வீட்டுக்கு வந்துடுவா… ஃபைனல் ஹியரிங் இன்னும் ரெண்டு நாள்ல இருக்குங்கிறதை கூட இந்த சஸ்பென்சனால அவ மறந்துட்டா”
அடுத்து ஒலித்தது அவளது கணவன், திருத்தம் முன்னாள் கணவன் ப்ராணேஷின் குரல்.
“சஸ்பென்சன் பத்தி நான் வேணும்னா மினிஸ்டர் கிட்ட பேசி பாக்கட்டுமா?”
எனக்குப் பணியிடைநீக்கம் கிடைத்ததற்கு சந்தோசப்படும் முதல் ஆள் இவனே, பணியிடைநீக்கத்துக்குப் பதிலாக பணிநீக்கம் செய்திருந்தால் இன்னும் குதூகலித்திருப்பான். ஆனால் இங்கே வந்து உத்தம கணவன் உற்ற நண்பன் வேசம் போடுகிறான்.
இதன்யாவுக்குள் சுறுசுறுவென கோபம் மூண்டது. இப்போது கத்தலாம். கோபம் கொண்டு வார்த்தைகளை வாரியிறைக்கலாம். ஆனால் அவ்வாறு செய்தால் அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையின் பாதிப்பு இன்னும் அவளுக்குள் மிச்சமிருக்கிறது என்று அவளது பெற்றோர் அர்த்தம் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் மட்டுமா? ப்ராணேஷ் கூட அவ்வாறு எண்ணலாமே!
எனவே சாமர்த்தியமாகப் பேசி என் வாழ்க்கையில் நீ இல்லை என்று சொல்லி அவனை வெளியே துரத்திவிடும் திட்டத்தோடு கோபத்தை மனதுக்குள் போட்டு பூட்டிவிட்டு லிவிங் ரூமுக்குள் நுழைந்தாள் இதன்யா.
அவளைப் பார்த்ததும் மெல்லிய பரபரப்பு தொற்றிக்கொண்டது அங்கிருந்த மூவருக்கும்.
சலனமே இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக “ஹலோ” என்று சொல்லி முறுவலித்தவளைப் பார்த்து அங்கிருந்த மூவரும் குழம்பிப் போயினர்.
அவளது இயல்புக்கு இந்நேரம் அங்கே ஒரு குருஷேத்ரம் ஆரம்பித்திருக்க வேண்டும். அதற்கு மாறாக முறுவலித்த முகத்தோடு நின்றவளிடம் “ஹாய்” என்றான் ப்ராணேஷ்.
தொடர்ந்து “ஜர்னி எப்பிடி இருந்துச்சு?” என்று விசாரிக்க வேறு செய்தான்.
“நாட் பேட்” என்றவள் “நான் கொஞ்சம் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன்… அப்புறம் நம்ம பேசலாம்” என்று சொன்னபடி தன் அறைப்பக்கம் திரும்பியதும் மயூரி அவசரமாக மகளை நெருங்கினார்.
“மாப்பிள்ளைய எதுவும் சொல்லிடாத… நாங்க தான் அவரை வரச் சொன்னோம்…. இன்னும் ரெண்டு நாள்ல ஃபைனல் ஹியரிங்.. எங்களால எங்க மக வாழ்க்கை வீணா போறதை தாங்கிக்க முடியல… அதனால…”
“ம்மா”
இதன்யா இடைமறித்ததும் கப்சிப்பென வாயை மூடிக்கொண்டார் மயூரி.
வாசுதேவன் மகளிடம் கண்களால் கெஞ்சினார். தந்தை சொல் தட்டாத மகள் உண்டா என்ன?
“ஐ அம் டயர்ட்பா… குளிச்சுட்டு வந்துடுறேன்” என்றவள் ப்ராணேஷிடம் திரும்பி “உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்… வெயிட் பண்ணுவிங்க தானே?” என்று கேட்க
“ஐ வில்” என்றான் அவன்.
அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் இதன்யாவும் தன் அறைக்குள் வந்துவிட்டாள்.
வந்தவளுக்குத் தன்னை எண்ணி அத்துணை ஆச்சரியம்! எப்படி என்னால் இவ்வளவு அமைதியாக இச்சூழலைக் கையாள முடிந்தது?
குளித்து முடித்து உடைமாற்றி வரும் வரை அவளுக்காகக் காத்திருந்த ப்ராணேஷுக்கும் அந்த ஆச்சரியம் இருக்கும் போல. வராண்டாவில் ஊஞ்சலினருகே அவளுக்காக காத்திருந்தான்.
இதன்யா கட்டை கூந்தலைச் சிலுப்பியபடி கூடை ஊஞ்சலில் அமர்ந்தவள் “இன்னும் ரெண்டு நாள்ல ஹியரிங் இருக்கு… நான் அதை மறந்தே போயிட்டேன்… திஸ் கேஸ் இஸ் ஈட்டிங் மை ப்ரெயின்” என்றாள்.
“கேஸ் முடிஞ்சிட்டதா அங்கிள் சொன்னாரே?”
“வெளிப்பார்வைக்கு அப்பிடி தெரியுது… பட் லாட் ஆப் பசில்ஸ் ஆர் தேர்… அது எல்லாத்துக்கும் விடை கண்டுபிடிச்சா தான் என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த கேஸ் முடியும்… அதை விடுங்க.. என்ன சொன்னாங்க என் பேரண்ட்ஸ்?”
பேச்சை மாற்றி தனது ஐயத்தை அவனிடமே கேட்டாள் இதன்யா.
“நம்ம முடிவை ரீ-கன்சிடர் பண்ண சொல்லுறாங்க”
“வாட்ஸ் யுவர் ஒபீனியன்?”
நிதானமாக மார்பின் குறுக்கே கைகளைக் கட்டியபடி வினவினாள் இதன்யா.
“ஐ நீட் செகண்ட் சான்ஸ்”
“ஃபார் வாட்?” அசராமல் புருவம் உயர்த்தி கேட்டவளை அயர்ச்சியாய் பார்த்தான் அவன்.
“ஃபார் வாட் மீன்ஸ்? ரொம்ப அவசரமா டிவோர்ஸ் பண்ணி என்ன செய்யப்போறோம்னு யோசிச்சா உனக்கே அந்தக் கேள்விக்கான ஆன்சர் புரியும் இதன்யா” என நிதானமாகப் பதிலளித்தான்.
இதன்யா மென்மையாகப் புன்னகைத்தாள்.
“அந்தக் கேள்விக்கான ஆன்சரை ரியாலிட்டில பாத்தவ நான்… அதனால தான் மறுபடி சான்ஸ் குடுக்கணுமானு யோசிக்குறேன்”
“இத்தனை மாசப்பிரிவு எனக்குள்ள சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கு இதன்யா… இந்த தடவை நீ குடுக்குற சான்சை நான் வேஸ்ட் பண்ணமாட்டேன்”
இதன்யாவால் சட்டென பதில் பேச முடியவில்லை. காரணம் அவளது திருமண வாழ்க்கை கொடுத்த அனுபவம்.
அதைப் புரிந்துகொண்டவனாக ப்ராணேஷே தன் நிலையை விளக்க ஆரம்பித்தான்.
“டெக்னிக்கலி இந்த கேஸ் முடிஞ்சு போச்சு… ஆனாலும் இதுல என்னவோ இருக்குனு உனக்குத் தோணுது… அதை தெரிஞ்சிக்க தான் நீ மறுபடியும் அந்த ஊருக்குப் போயிருக்குற… அதே மாதிரி தான் நம்ம மேரேஜ் லைஃப் முடிஞ்சிட்டதா உனக்குத் தோணலாம்… பட் நம்ம உறவுக்குள்ள இன்னும் என்னவோ இருக்குனு எனக்குள்ள ஒரு இன்ஸ்டிங்ட் சொல்லுது… அதனால தான் மறுபடியும் ஒரு சான்ஸ் குடுத்துப் பாப்போமேனு நான் டிசைட் பண்ணுனேன் இதன்யா… இப்ப உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்”
நிதானமாக அவன் கொடுத்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்தது. இப்போது இப்படி பேசிவிட்டு நாளையே மாற்றிப் பேசினால் கஷ்டப்படப்போவது இதன்யா தானே?
முன்ஜாக்கிரதையோடு தன் பதிலைச் சொல்ல ஆரம்பித்தாள் அவள்.
“செகண்ட் சான்ஸ் குடுக்குறது கஷ்டமில்ல ப்ராணேஷ்… ஆனா எப்பவும் வேலையில எனக்கு இருக்குற டெடிகேசன் குறையாது… இப்ப கூட பாருங்க, கேஸை பத்தி யோசிச்சதுல பெர்சனல் லைஃப்ல முக்கியமான ஒரு விசயத்தை மறந்துட்டேன்… அதே மாதிரி நாளைக்கு இன்னொரு கேஸ் வரலாம்… அதோட தீவிரத்துல நான் நம்ம வெட்டிங் ஆனிவர்சரிய மறந்துடலாம்… பர்த்டே பார்ட்டிக்கு லேட்டா வரலாம்… அப்ப நீங்க என்னை ஃபேமிலி லைஃபுக்குத் தகுதியில்லாதவங்கிற மாதிரி பாத்திங்கனா நான் குடுத்த செகண்ட் சான்சோட வேல்யூ போயிடும்… இஃப் யூ வாண்ட் தி செகண்ட் சான்ஸ், யூ ஷூட் ஹேவ் டூ அண்டர்ஸ்டாண்ட் மை வொர்க் நேச்சர்… இதுக்கு சம்மதம்னா..”
“எனக்கு ஓ.கே இதன்யா” யோசிக்காமல் அவன் சம்மதம் சொன்ன வேகம் எத்துணை தூரம் அவன் திருமணவுறவுக்காக மெனக்கிடுகிறான் என்பதை இதன்யாவுக்குப் புரியவைத்துவிட்டது. அவன் கேட்ட இரண்டாம் வாய்ப்புக்கான சம்மதமாக அவள் இதழிலும் புன்னகை ஒன்று துளிர்த்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

