சில குறிப்பிட்ட வழக்குகள் பெண் சைக்கோபாத்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் காட்டுகின்றன. அவற்றில் ஒன்று தான் ஆமி என்ற இருபது வயதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கொலைக்குற்றவாளியின் வழக்கு. ஆமியைப் பரிசோதித்த போது அவளுக்கு ‘ஆன்டி சோசியல் பெர்ஷனாலிட்டி டிஸ்சார்டர்’ எனப்படும் சமூக விரோத மனப்பாங்கு நோயோடு மனப்பிறழ்வுக்கான அறிகுறிகளும் இருந்ததாகக் கண்டறிப்பட்டது. அதீத மனப்பிறழ்வுக்கான அனைத்து அறிகுறிகளும் அப்பெண்ணுக்கு இருந்தன என சோதித்தவர்கள் கூறினார்கள். அவள் தனது பதின்வயதிலேயே சமூகவிரோத மனப்பாங்கை வெளிப்படுத்தியிருக்கிறாள். அடிக்கடி வீட்டை விட்டுக் காணாமல் போவது, போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதென பலமுறை செய்திருக்கிறாள். கொலைக்கான ஆயுள் தண்டனை ஆமிக்குக் கிடைக்கும் முன்னரே நிறைய முறை திருட்டு மற்றும் ஏமாற்றியதற்கான குற்றங்களைச் செய்து சின்ன சின்ன தண்டனைகளையும் பெற்றிருந்தாள். அவளது வழக்கை வைத்து ஆய்வறிக்கை தயார் செய்த நபர் ஆமி வஞ்சகமும் கர்வமும் கொண்டவளாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். செய்த தவறுகளுக்குப் பொறுப்பேற்க மறுத்தவளுக்குப் பச்சாதாபமோ கழிவிரக்கமோ அறவே கிடையாது என்கிறார் அந்நபர். உடல்ரீதியான வன்முறை மற்றும் அநாகரிக வார்த்தை பிரயோகத்தை மனவலிமையற்ற பிற கைதிகள் மீது உபயோகித்து அடாவடித்தனத்தோடு நடந்திருக்கிறாள். சில இடங்களில் ஆமி ஆதிக்கவாதியாகவும், கட்டுப்பாட்டாளராகவும் நடந்திருக்கிறாள். இன்னும் சில இடங்களிலோ தான் நினைத்ததை நடத்திக்கொள்ள பாலியல் கவர்ச்சியை ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறாள் அவள்.
– An article from Psychology today
சைபர் காவல் நிலையத்திலிருந்து முத்துவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட மொபைலின் ஐ.எம்.ஈ.ஐ எண்ணை வைத்து அது கடைசியாக ஸ்விட்ச் ஆப் ஆன இடம் பொன்மலை என்ற தகவல் ஃபேக்ஸ் மூலம் கிடைத்தது.
கூடவே அந்த சிம்கார்ட் வாங்கப்பட்டது நிஷாந்தின் பெயரில் என்பதுவும் வந்த செய்தியில் கூடுதலாக இருந்த தகவல். மடிக்கணினி பற்றிய செய்திகளைச் சேகரித்தவண்ணம் உள்ளோமென கூறியிருந்தார் டெக்னிக்கல் உதவி ஆய்வாளர்.
அச்செய்தி வந்த உடனே மார்த்தாண்டன் இதன்யாவிடம் கொண்டு வந்து காட்டினார்.
இதன்யாவின் முகம் அச்செய்தியைப் பார்த்த்தும் பல்வேறு விதமான உணர்வுக்கலவைகளுக்குட்பட்டது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஈ.டி.எஸ் என்பவன் யாரோ ஒருவன் என்ற ரீதியில் தானே விசாரணையின் போது நிஷாந்த் கூறியிருந்தான். ஆனால் அவனது ஆதார் எண்ணை வைத்து வாங்கிய சிம்மை உபயோகித்த மொபைலில் இருந்து தான் ஈ.டி.எஸ் என்ற முகப்புத்தக கணக்கு தொடங்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டும் இருக்கிறது. அந்த எண்ணிலிருந்து யாருக்கும் ஒரு முறை கூட அழைப்பு போகவும் இல்லை. யாரிடமிருந்தும் அழைப்பு வரவில்லை. பொன்மலை எல்லையைத் தாண்டி அந்த மொபைல் எங்கும் செல்லவில்லை. காரணம் வேறு எந்த ஊர் டவரிலிருந்தும் அந்த மொபைலுக்கு இணைப்பு வரவில்லை.
தெள்ளத்தெளிவாக டெக்னிக்கல் உதவி ஆய்வாளர் அனுப்பிய செய்தி மீண்டுமொரு முறை நிஷாந்தை இனியாவின் வழக்கில் சந்தேகப்படுவோர் பட்டியலில் சேர்த்துவிட்டது.
“இனியா கூட பிசிக்கல் ரிலேசன்ஷிப் வச்சுக்கிட்ட கேஸ்ல இன்னும் ஹியரிங் போகுது மேடம்… அவன் இந்த ஊரைத் தாண்டி வேற எங்கயும் போகமுடியாது.. ஸ்டேசனுக்கு அழைச்சுட்டு வந்து விசாரிச்சா உண்மைய சொல்லிடுவான் மேடம்… இன்னும் என்னென்ன உண்மைய நம்ம கிட்ட மறைச்சிருக்கான்னு தெரியல”
மார்த்தாண்டன் கூற இதன்யாவோ அவசரப்படவேண்டாம் என்றாள்.
“அவன் ரொம்பத் தெளிவா உண்மைய மறைச்சது வரைக்கும் ஓ.கே…. ஆனா அவனோட மொபைல் எப்பிடி முத்து வீட்டுக்குப் போச்சுனு தெரியணுமே… முத்து குடுத்த வாக்குமூலத்தை வச்சு பாத்தா அவன் ஒருதலையா காதலிச்ச பொண்ணோட காதலன் நிஷாந்த் மேல கொலைவெறியோட இருந்திருக்கான்னு தெரியுது… அப்புறம் எப்பிடி அவனோட மொபைலைத் தன் வீட்டுல வச்சுப்பான்? எதுவோ இடிக்குதுல்ல மார்த்தாண்டன்?”
இதன்யாவும் மார்த்தாண்டனும் தீவிரமாக யோசிக்கும்போதே மகேந்திரனோடு வந்தார் முரளிதரன்.
அவர்கள் இருவரும் ரோஷணின் சாத்தான் வழிபாட்டுக்குழுவிலிருந்த இதர உறுப்பினர்களிடம் எதேச்சையாகப் பேசுவது போல தகவல் சேகரித்துவிட்டுத் திரும்பியிருந்தார்கள்.
வந்ததும் சைபர் காவல் நிலையத்திலிருந்து கிடைத்த செய்தியை இதன்யா கூற அவர்களும் யோசனையில் ஆழ்ந்தனர்.
முரளிதரன் தனது ஊகத்தைக் கூறலாமா எனக் கேட்க மூவரும் அவர் என்ன சொல்லப்போகிறார் என கவனிக்கத் தொடங்கினார்கள்.
“இந்த மொபைல் நிஷாந்தோடதா இருக்குற பட்சத்துல அவனுக்கும் முத்துக்கும் இடையில நல்ல நட்பு இருந்து, போலீஸ் கிட்ட நிஷாந்த் மாட்டிக்கக்கூடாதுங்கிற நல்லெண்ணத்தால முத்து அவன் வீட்டுல ஒளிச்சு வச்சிருந்திருக்கலாம்”
“அதுக்கான வாய்ப்பு இல்லனு தோணுது சார்” என்றார் மார்த்தாண்டன்.
“அப்ப இந்த ஆங்கிள்ல யோசிங்க… நிஷாந்த் மேல அக்கறை இருக்குற யாரோ அவன் மொபைலை முத்து கிட்ட குடுத்திருக்கலாம்… அவங்க சொல்லுறதை தட்ட முடியாத இடத்துல முத்து இருந்திருக்கணும்” என முரளிதரன் கூறவும் இதன்யாவுக்கு எதுவோ உறுத்தியது.
நிஷாந்த் மீது அக்கறையுள்ளவர்கள் அவனது அன்னை சாவித்திரி, நண்பன் ராக்கி, மாமா ஏகலைவன் மூவரும் தான்.
இதில் யார் முத்துவிற்குக் கட்டளையிடும் இடத்தில் இருப்பவர்?
“கவலைப்படாத தம்பி… எங்க கம்பெனி ஆட்ல ஆக்ட் பண்ணுற பாலிவுட் ஆக்ட்ரஸ் அவங்களுக்கு பெர்ஷனல் மேக்கப் மேன் அண்ட் ஹேர்ட்ரஸர் வேணும்னு சொன்னதா மார்க்கெட்டிங் மேனேஜர் விளையாட்டா சொல்லிட்டிருந்தார்… ஐ வில் ரெகமண்ட் யுவர் நேம் டு ஹெர்… டோண்ட் கிவ் அப் யுவர் ட்ரீம்ஸ்” என்று முத்துவுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டுப் போன ஏகலைவன்தான் இதன்யாவின் மூளைக்கு உறுத்தலை உண்டாக்கியவன்.
அதை மூவரிடமும் கூறினாள் அவள்.
“ஏகலைவன் உதவுவார்ங்கிற நம்பிக்கைல முத்து நிஷாந்தோட மொபைலை அவன் வீட்டுல வச்சிருந்திருப்பான்னு சொல்ல வர்றிங்களா மேடம்?”
“மொபைல் மட்டுமில்ல லேப்டாப்பும் தான்”
நிதானமாக இதன்யா சொல்லவும் “அது எப்பிடி இவ்ளோ கன்ஃபார்மா சொல்லுறிங்க மேடம்?” என கேட்டார் மார்த்தாண்டன்.
இதன்யா அங்கிருந்த போர்டின் அருகே போய் நின்று கொண்டாள்.
நிஷாந்த் – இனியா – முத்து என மூவரின் பெயரையும் எழுதியவள் சற்று இடைவெளி விட்டு ஏகலைவனின் பெயரைக் குறிப்பிட்டாள்.
“நிஷாந்த் இனியாவை காதலிச்சிருக்கான்… இந்தக் காலத்து ஜென்ரேசன் காதல்ல சீரியஸா இருக்குறதில்ல… ஈ.டி.எஸ்ங்கிற பேர்ல அவ கிட்ட பேசி காதல்ல சீரியசா இருக்காளா இல்ல விளையாடுறாளானு செக் பண்ணுறான்… இனியாவும் சீரியசா லவ் பண்ணுறான்னு தெரிஞ்சதும் அந்த ஈ.டி.எஸ் ஐடியை அவன் யூஸ் பண்ணுறதை நிறுத்திடுறான்… அவங்க காதல் முத்துவுக்கும் அது தெரியும்… முத்துவுக்கு பாலிவுட் ஆக்ட்ரஸ் கிட்ட ரெகமண்ட் பண்ணுறதா ஏகலைவன் வாக்கு குடுத்திருக்கார்… அதுக்காக மும்பைல இருந்து முத்துவை கான்டாக்ட் பண்ணவும் செஞ்சிருக்காங்க… வேலை உறுதியானப்ப தான் இனியா இறந்த கேஸ் வருது… முத்துவுக்குக் காதலிய கொன்னவன் ரோஷண்ங்கிற எண்ணம்… அவனைச் சூசைட் பண்ணுறதுக்குத் தூண்டிவிட்டு அதுல ஜெயிச்சிச்சிட்டான்… அடுத்து நம்ம கஸ்டடிக்கு எடுத்த ஆளு நிஷாந்த்… நிஷாந்தைக் காப்பாத்த ஏகலைவன் சி.சி.டி.வி ஃபூட்டேஜை அழிச்சிருக்கார்…. அடுத்து அவருக்கு இருந்த சவால் ஈ.டி.எஸ்சா இருந்தவன் நிஷாந்த் தான்ங்கிறதுக்காக ஆதாரத்தை மறைக்கணும்… யார் கிட்ட உதவி கேக்கலாம்னு யோசிக்கிறப்ப முத்து ஞாபகத்துக்கு வர்றான்… சோ அவன் கிட்ட மொபைலையும் லேப்டாப்பையும் குடுத்திடுறார் ஏகலைவன்… இது என்னோட ஊகம்”
இதன்யா முடிக்கவும் மார்த்தாண்டன் எழுந்தார். அவரது கோணம் சற்று மாறுபட்டிருக்கும் என்பதால் கேட்கத் தயாரானாள் அவள்.
“நிஷாந்த், முத்து ரெண்டு பேருமே இனியாவ காதலிக்குறாங்க… இனியா நிஷாந்தை மட்டும் தான் காதலிச்சா, அவன் கிட்ட தன்னை ஒப்படைச்சா… ஒருவேளை அதை முத்து பாத்திருக்கலாம்… அவ மேல வந்த கோவத்துல பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி அவளைக் கொன்னுருக்கலாம்… நிஷாந்த எப்பிடி பழிவாங்கலாம்னு அவன் யோசிச்ச நேரத்துல ரோஷண் இந்தக் கேஸ்ல மாட்டிட்டான்… அவனால கல்ட் குரூப் பத்தி போலீசுக்குத் தெரிய வந்துச்சுனா நம்ம மாட்டிப்போம்ங்கிற பயத்துல ஹைடோஷ் மாத்திரை ஹாக்சா ப்ளேடை வச்சு அவன் கதைய முடிச்சிட்டான்… அடுத்து நிஷாந்த் மாட்டுனப்ப ஏகலைவன் அவனைக் காப்பாத்த மொபைலையும் லேப்டாப்பையும் முத்து கிட்ட குடுத்திருக்கார்… மனசு முழுக்க அவன் மேல கோவம் இருந்தாலும் கனவு நிறைவேற உதவுற மனுசனுக்காக முத்து அதை தன் வீட்டுல வாங்கி வச்சிருக்கான்… அவனுக்குப் பிடிக்காத ஃபாதரைப் போலீஸ் முன்னாடி சந்தேகத்துக்குரிய ஆளா காட்ட நினைச்ச மாதிரி நிஷாந்தையும் காட்ட நினைச்சவன் முருகையாவ கொன்னதுக்கு அப்புறம் வேணும்னே அந்த மொபைலையும் லேப்டாப்பையும் வீட்டுலயே விட்டுட்டுப் போயிருக்கான்… காரணம் எப்பிடியும் போலீஸ் வீட்டைச் சோதனை போடுறப்ப அது ரெண்டும் மாட்டும்… நிஷாந்தும் மாட்டுவான்… முத்துவோட வெறியும் அடங்கும்… இது தான் என் யூகம்”
இதுவும் யோசிக்கக்கூடிய பாயிண்ட் தானே. மூர்க்கனான முத்து ஏன் இனியாவைக் கொலை செய்திருக்கக் கூடாது? அந்தப் பாயிண்டையும் குறித்துக்கொண்டாள் இதன்யா.
ஆனால் கொலையாளிக்குரிய குணநலன்களாக இதன்யா குறித்து வைத்த பாயிண்டுகளில் தடவியல் அறிவு கொண்டவன் என்ற பாயிண்ட் மட்டும் முத்துவுக்குப் பொருந்தவில்லை. அவ்வளவு அறிவுள்ளவன் முருகையாவையும் தடயமின்றி கொன்றிருக்கலாமே என்றார் முரளிதரன்.
மற்றபடி முத்துவுக்கும் மனப்பிறழ்வுக்கான அறிகுறி இருக்கிறது. இனியாவுக்குப் பரிச்சயமானவன். ரோஷணுடன் இருந்ததால் பத்ராவுக்கு அவனையும் தெரியும். சாத்தான் குழுவில் முக்கிய இடத்திலிருந்தவன். இனியாவின் காதலை ஜெயிக்க முடியாத ஏமாற்றம் அவனுக்குள் இப்போதும் இருக்கிறது. எனவே தடவியலறிவு என்ற ஒரு புள்ளியில் மட்டும் யோசிக்க வேண்டாம் என்பது மார்த்தாண்டனின் வாதம்.
மகேந்திரன் மட்டும் எதுவும் பேசாமல் இருக்கவும் இனியாவுக்கு ஏமாற்றம்.
“நீங்க ஏன் சார் சைலண்டா இருக்கிங்க? உங்க பாயிண்டை சொல்லுங்க” என்று கேட்டாள் அவள்.
அவரோ தயக்கத்தோடு “நம்ம எல்லாரும் நம்ம கிட்ட பிடிபடுறவங்க தான் கில்லர்னு தப்பா நினைக்குறோமோ?” என்க
“அப்ப இவங்க யாரும் கில்லர் இல்லனு சொல்லுறியாய்யா?” என்றார் மார்த்தாண்டன்.
“முரளி சார் சொன்ன பாய்ண்ட் தான் எனக்குள்ள ஓடுது… கில்லரால ஃப்ராக்சன் ஆப் செகண்ட்ல யோசிச்சு ஒரு கொலைய தடயமில்லாம செய்ய முடியுது… அவனுக்குப் புத்தி சாதுரியம் அதிகம் இருக்கு” – மகேந்திரன்.
“முத்துவும் இதை செஞ்சிருக்கானே… ரோஷணை தற்கொலைக்குத் தூண்டுன விதமும், முருகையாவ கொன்ன விதமும் அதுக்குச் சாட்சி… முருகையா விவகாரத்துல அவன் மாட்டுனது கூட ஜானோட அஜாக்கிரதையால தான் இருக்கும்… இல்லனா அந்தக் கொலையையும் தடயமில்லாம செஞ்சிருப்பான்” என்றார் மார்த்தாண்டன் பதிலுக்கு.
“அப்ப ரோஷண் கொலைல எப்பிடி அவனோட ஃபிங்கர் பிரிண்ட்ஸ் சிக்குச்சு? முத்து கில்லர் இல்ல… இனியாவ கொன்னவன் ஒருத்தன் தான்.. ஆனா அந்தக் கொலை நடந்த தடயத்தை மறைக்க அவனுக்கு ஒரு டீமோட உதவி தேவை… அந்த டீமும் அவனை மாதிரியே சைக்கோத்தனமான ஆளுங்க உள்ள டீமா இருந்திருக்கனும்… அவனுக்குத் தலைமைப்பண்பு இருக்கணும்… ஆசைக்காட்டி வேலை வாங்க தெரிஞ்சவனா இருக்கணும்… முக்கியமா பேச்சு சாமர்த்தியத்தால அவனுக்கு வேண்டியதை அடுத்தவங்க கிட்ட நிறைவேத்திக்க தெரிஞ்ச ‘மேனிபுலேட்டட் மைண்ட்செட்’ உள்ளவனா இருக்கணும்”
மகேந்திரன் நிதானமாகச் சொல்லவும் இதன்யாவின் மூளை மீண்டும் ஏகலைவனையே நினைவூட்டியது. ஏனெனில் இவ்வழக்கில் அவர்கள் கஸ்டடிக்கு எடுத்த அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் ஏகலைவனோடு தொடர்பு இருந்தது.
ரோஷணின் சாத்தான் வழிபாட்டுக்குழு பற்றிய உண்மை தெரிந்தும் அவனைப் பணிலிருந்து விலக்காமல் வைத்திருந்தது கூட ஐயத்தைக் கிளப்பும் விசயம் தானே!
பாதிரியாரின் விவகாரத்தில் தேவையில்லாமல் உறுதியாய் இருந்து அது சப்பென போனது போல ஏலைவன் மீதான தனது சந்தேகக் கண்ணோட்டமும் புஸ்சென போய்விடக்கூடாது என்பதற்காக அமைதி காக்க முடிவு செய்தாள் அவள்.
மடிக்கணினியின் சீரியல் எண்ணை வைத்து அதை விற்ற முகவர் மற்றும் வாங்கியவரின் மின்னஞ்சல் விவரம் மட்டும் கிடைக்கட்டும். பின்னர் விசாரணை குழுவினரிடம் தனது சந்தேகத்தைச் சொல்லி ஏகலைவனோடு அவன் மருமகனையும் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிக்கலாமென தீர்மானித்தாள் இதன்யா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

