
பூபாலனும் வான்மதியும் இப்போது புத்தக வடிவில்🤩
'இது வானின் பூபாளம்' அருணோதயம் பதிப்பகம் வெளியீடாக வந்தாச்சு மக்களே🤩
அருணோதயம் மூலம் வரும் எனது 11வது நாவல் இது.
விலை : ரூ. 440/-
புத்தகம் வாங்க : 7200836063
கதையிலிருந்து சில வரிகள்...
வேகமாக நடந்து வீட்டுக்குள் போய்விடலாமென முயன்றவளுக்குக் குமட்டல் அதிகமாகிவிட கைகளால் வாயைப் பொத்திக்கொண்டாள்.
இன்னும் டொம் டொம் இசையுடனானப் பாடல் நிற்கவில்லை.
வாந்தி வரும் உணர்வு! தலை சுற்றல்! இதயத்தசை இறுக்கம்! எல்லாம் சேர்ந்து அவள் சரிந்து விழப்போகையில் யாரோ பின்னே நின்று அவளது கையைப் பற்றி நிறுத்தினார்கள்.
கூடவே அவளது இரு தோள்களையும் பலமான கரங்கள் அழுத்துப் பிடித்ததில் வலி எடுக்க, அதற்கு முன்பாக அந்தக் கரங்களின் ஸ்பரிசத்துக்குச் சொந்தக்காரன் யார் என்று மூளை அலர்ட் செய்ததில் வான்மதி திடுக்கிட்டுத் திரும்பினாள்.
அவளெதிரே ஆராய்ச்சிப்பார்வை வீசிய இடுங்கிய கண்களும், இறுகிய மோவாயும், எள்ளலா குறும்பா என வகையறிய முடியாதச் சிரிப்புமாக நின்றிருந்தான் அவன்.
வான்மதியின் இதயத்தசைகள் இறுகிய வலியை இன்னும் கூட்டியது அவன் நின்ற விதம்.
“வானுமா”
அந்நேரத்தில் கோபமாக ஒலித்தது பகவதியின் குரல். அன்னையின் குரல் கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது வான்மதிக்கு.
வேகமாக அவனது பிடியை அவள் உதற, நின்றவனின் விழிகளிலோ கோபத்தின் சீற்றம்!
அதற்குள் பகவதியும் அங்கே வந்துவிட்டார்.
மகளை இழுத்துத் தன்னருகே நிறுத்திக்கொண்டவர் “எவ்ளோ தைரியம் இருந்தா எங்க வீட்டுக்கு வந்திருப்பிங்க?” என்று கோபத்தோடு ஆரம்பிக்கவும்
“உஷ்! எதுக்குக் கத்துறிங்க? ஆல்ரெடி ஸ்பீக்கர் சத்தம் வேற காதைச் செவுடாக்குது” என்றவன் சுண்டுவிரலால் காதுமடலைத் தீண்டிக் காட்டப் பொறுமையிழந்தார் பகவதி.
“வெளியே போங்க”
“என் கிட்ட அப்புறமா கத்துங்க பகவதியம்மா! முதல்ல உங்க பொண்ணைப் பாருங்க” என்றான் அவன்.
வான்மதி ஏற்கெனவே தலைச்சுற்றலும் குமட்டலுமாக நின்றவள் அன்னை ஆராய்ச்சிப்பார்வை பார்த்ததும் “நான் வீட்டுக்குள்ள போறேன்மா” என அவஸ்தையுடன் சொல்ல
“உனக்கு என்ன பண்ணுது வானும்மா?” எனப் பதறினார் அவர்.
வான்மதி பதில் சொல்லும் முன்னரே குறுக்கிட்டது அங்கே நின்றவனின் குரல்.
“புள்ளத்தாச்சி பொண்ணுக்கு என்ன பண்ணுமோ அதெல்லாம் பண்ணுது அவளுக்கு. பாத்துப் பத்திரமா அழைச்சிட்டுப் போங்க”
கிண்டலாய்ச் சொன்னவன் நாக்கினால் உட்பக்கத்துக் கன்னத்தசையை உந்திக் காட்ட வான்மதியோ பதறிப்போனாள்.
“வானு! என்ன சொல்லுறாரு இவரு?” எனப் பகவதி பதற
“ம்மா…” என்றவளுக்குக் குமட்டல் அதிகமாக வாயைப் பொத்திக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவிட்டாள்.
பகவதி பேயறைந்த முகத்தோடு நிற்க அவரது கண் முன்னே சொடக்கு போட்டான் அவன்.
அவர் திகைக்கவும் “வந்த வேலை முடிஞ்சிடுச்சு பகவதியம்மா. நான் கிளம்புறேன்” என்று கிண்டலாய்ச் சொல்லிவிட்டுக் கரங்களை மேலே உயர்த்திச் சோம்பல் முறித்தபடி அங்கிருந்து கிளம்பினான் அவன்.
வீட்டின் முற்றத்தைத் தாண்டி நிறுத்தப்பட்டிருந்த ஸ்ப்ளெண்டரில் ஏறி அமர்ந்து அதைக் கிளப்பியவனின் விழிகள் அனிச்சையாக மேல்தளத்தை ஏறிட்டன.
அங்கிருக்கும் அறைக்கான ஜன்னல் வீட்டின் முற்றத்தை நோக்கி இருக்குமென அறிந்தவன் அவன்! அந்த அறை யாருடையது என்பதையும் அறிந்தவன் அவன்!
இதோ இப்போது ஜன்னல் கம்பிகளினூடே தெரியும் உருவம் யாருடையது என்பதையும் அறிவான்! எல்லாம் அறிந்தவன் அறியாமல் விட்ட விசயமும் ஒன்று உண்டு.
அதை அவன் மட்டுமா அறியாமல் போனான்? இதோ ஜன்னல் வழியே அவனை எவ்வித உணர்ச்சிகளுமின்றி வெறிக்கிறாளே வான்மதி அவளும்தானே அறியாமல் போனாள்!
“வீட்டோட இளவரசி, மகாராணினு சொல்லுவாங்க. ஆனா அவளுக்கு எதுல்லாம் ஒத்துக்காதுனு கூட தெரியல. இந்தக் குடும்பத்துக்காகத்தானே எல்லா பிரச்சனையும் பண்ணுனா? இப்ப அனுபவிக்கட்டும்!”
கோபமும் வெறுப்புமாகச் சொல்லிவிட்டுப் பைக்கை உதைத்துக்கொண்டு கிளம்பினான் பூபாலன்!
*****
புத்தகத்தை வாங்கிப் படித்து உங்க கருத்தைப் பகிர்ந்துக்கோங்க மக்களே 🤩
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



