அவர்களை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் குழலி எதிர்பார்த்தார். திருமணத்தேதி, நேரம் எல்லாம் தெரிந்தும் நிலவழகியால் வராமல் இருக்கமுடியாதென நினைத்தவரின் எண்ணம் பொய்யாகவில்லை. அவர்கள் இருவரையும் கண்டதும் பவிதரனின் முகம் மாறுவதைக் கவனித்த ஈஸ்வரி அவனது கரத்தைப் பற்றி அழுத்தினாள். “உங்கம்மாவும் தங்கச்சியும்தானே? இது நம்மளோட சந்தோசமான தருணம். அவங்களும் நம்ம கூட இருந்தா தப்பில்லயே.” அவன் பதில் சொல்லாமல் இருக்கவும், “எந்தக் கருத்துவேறுபாடும் உங்களுக்கும் அவங்களுக்குமான உறவை முறிச்சிடாதுங்க. ப்ளீஸ்! சிரிங்க,” என்றாள் கெஞ்சும் தொனியில். ஷண்மதி […]
Share your Reaction

