அகம் 25.2

“என்ன விசயம்?” ஈஸ்வரி வினவவும் தனது அடுத்த திட்டம் பற்றி அவளிடம் விவரித்தான் ஆர்வமாய். உம் கூட கொட்டாமல் அதைக் கேட்டு முடித்தவள் “இதெல்லாம் எதுக்கு என் கிட்ட சொல்லுறிங்க? எனக்கும் உங்க வேலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? நான் தான் சொன்னேனே, இனி எந்த விதத்துலயும் நான் உங்களுக்குத் துணையா நிக்கமாட்டேன்னு. மறந்து போச்சா?” என்று கேட்டு அவனைத் திகைக்க வைத்தாள். பவிதரனின் முகத்தில் கலக்கம். “உன் கிட்ட சொல்லாம வேற யாரு கிட்ட சொல்லுறதுடி?” […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 25.1

“உளி தன்னை அடிக்கடி அடிக்குறதால பாறைக்கு அது மேல செம கோவமாம். கோவம் ஒரு பக்கம் இருந்தாலும் உளி தன்னைச் சிலையா செதுக்குறதுக்கு வடிவம் குடுக்க இசையுமாம் அந்தப் பாறை. அதே மாதிரிதான் உனக்குத் துணையா நிக்கப் போறதில்லனு சொல்லிக்கிட்டே என்னோட புதுத் தொழிலுக்குச் சின்ன சின்ன உதவிய செஞ்சிட்டிருக்கா ஈஸ்வரி. அவளோட கோவத்துக்கும், அவ செயலுக்கும் சம்பந்தமேயில்ல. உதடு தான் கடுகடுனு வார்த்தைய விடுதே தவிர மனசு முழுக்க பாசம் நிறைஞ்சிருக்கு என் சண்டைக்காரிக்கு” –பவிதரன் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 6

தோளைத் தீண்டும் உன் ஸ்பரிசத்தோடு மனதைத் தீண்டும் உன் நினைவும் சேர முகமூடிக்குப் பின் மறைந்திருப்பவளே யாரடி நீ தேவதையே! ப்ளூ பேர்ல் ரெஸ்டாரண்ட்… மதுசூதனன் தனுஜாவைச் சாப்பிடச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் மலர் அலங்காரம் செய்யும் பெண்களைப் பார்த்துப் பேசிவிட்டு வருவதாகச் சொல்ல, அவளோ அவனுக்காகக் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டாள். அவளைத் தாங்கள் வழக்கமாகச் சாப்பிடும் மவுண்டன் வியூ பாயிண்ட் உள்ள இடத்திற்குப் போகச் சொல்லிவிட்டுத் தனது போனில் எதையோ நோண்டிக் கொண்டே வந்தான். அதே நேரம் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 5

திடுமென இடி முழங்கி மின்னல் வெட்டிப் பெய்த கோடை மழையே! புயலாய் வீசியென்னை வேரோடு சாய்த்தவளே! யாரடி நீ தேவதையே! மதுரவாணியோடு சேர்ந்து ஊட்டிக்கு ஷாப்பிங் வந்திருந்தனர் யாழினியும் சங்கவியும். கூடவே குட்டீஸ்களும், ஸ்ரீரஞ்சனி, ராகவியும் அடக்கம். முதலில் மதுரவாணி பிடிவாதம் பிடித்தபடி அழகுநிலையத்துக்குள் நுழைந்தனர் அனைவரும். சங்கவி மட்டும் அவளுடன் நின்றிருந்தாள். அழகுநிலையப் பெண் மதுரவாணியின் நீளக் கூந்தலைத் தோள் அளவுக்கு வெட்ட ஆரம்பித்த போது சங்கவிக்கு ரத்தக் கண்ணீர் வராத குறை தான். இந்த […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 24

“ஆம்பளைங்களுக்கு ‘The Sandwich Syndrome’னு ஒன்னு பிறவிலயே உண்டு. அது கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் தீவிரமாகிடும். நல்லா கவனிச்சிங்கனா, ‘எங்கம்மாக்கும் பொண்டாட்டிக்கும் இடையில நான் சிக்கித் தவிக்குறேன்’னு நிறைய ஆம்பளைங்க சொல்லுறதைக் கேட்டிருப்பிங்க. அது பொய் இல்ல. ஜோக்கும் இல்ல. இது அவங்களோட இயல்பான மனநிலை. மகன், கணவன்ங்கிற ரெண்டு நிலைப்பாட்டுக்கும் நடுவுல என்ன முடிவு எடுக்குறதுனு தெரியாம அவங்க தவிப்பாங்க. அதனால ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோங்க லேடீஸ், அவங்க குடும்பத்துக்குள்ள ஒரு தகராறு வருதுனா கண்டும் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 4

சொந்தமானவர்களைக் கைநழுவ விட்டே பழகியதாலோ என்னவோ சொந்தமானது கைநழுவி விடுமோ என்ற பதைபதைப்பு; அது அஃறிணையாக இருந்தாலும் கூட! மதுரவாணி எப்போதும் அவள் தங்கும் மாடியறைக்குள் சரணடைந்தவள் அந்த ஊரின் குளிரையும் தாண்டி பயணத்தால் உண்டான கசகசப்பைப் போக்க குளிக்கச் சென்றாள். வெதுவெதுப்பான நீரில் நீராடி உடை மாற்றியவள் நீண்ட கூந்தலை நீவி விடுகையில் குடும்பத்தினரின் நினைவு மெதுவாய் அவள் மனதில் எட்டிப் பார்த்தது. இந்நேரம் அவளது வீடு அல்லோலப்பட்டிருக்கும். அம்மாவையும் அழகியையும் நினைத்தால்தான் கண்ணைக் கரித்துக் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 3

தெளிவான குளத்தில் யாரோ கல்லை விட்டெறிய வட்ட அலைகளாய் எழும் உன் நினைவுகள்…. குளம் தெளிந்த பின்னும் அலை ஓயவில்லை! மனம் தெளிந்த பின்னும் உன் நினைவு அகலவில்லை! மதுசூதனனின் தட்டில் இன்னும் இரண்டு இட்லிகளை வைத்துச் சாம்பாரை தாராளமாக ஊற்றினார் மைதிலி. அவர் இவ்வளவு அமைதியாக இருப்பது ஏதோ பெரிய வாக்குவாதம் ஆரம்பிக்கப் போவதற்கான அறிகுறி என முன்னரே கணித்ததாலோ என்னவோ ராமமூர்த்தியும் வைஷாலியும் அமைதியாக இட்லியில் கவனமாயினர். மைதிலி மகன் சாப்பிடுவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவர் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 23

“சைக்காலஜிக்கல் ஓனர்ஷிப் அப்பிடினா என்னனு தெரியுமா? ‘நீ என்னுடையவள்’னு சொல்லுறதில்ல அது. ‘நீதான் நான்’னு சொல்லுறோமே அதுதான் சைக்காலஜிக்கல் ஓனர்ஷிப். ஒருத்தரைப் பத்தி யாருக்குமே தெரியாத நுணுக்கமான விசயங்கள் கூட நமக்குத் தெரிஞ்சிருக்கும். அவரைப் பத்தி நமக்கு எல்லாம் தெரியும்ங்கிற எண்ணமே அவங்க மேல எனக்கு எல்லாவித அதிகாரமும் இருக்குங்கிற விசயத்தை உலகத்துக்கு இன்டைரக்டா சொல்லும். அப்ப அந்த நபர் மேல நமக்குச் சைக்காலஜிக்கல் ஓனர்ஷிப் இருக்குனு அர்த்தம். உதாரணமா நீங்களும் உங்க லைஃப் பார்ட்னரும் ஒரு […]

 

Share your Reaction

Loading spinner

அலை 2

யாருமற்ற கானகத்தில் நடந்து செல்ல ஆசை! துணையாய் எனது கனவுகள் மட்டும் போதும்! கோயம்புத்தூர் சந்திப்பு… நேரம் காலை ஏழு மணி முப்பது நிமிடங்கள். வழக்கமான நேரத்தைவிட அன்றைய தினம் இரயில் இருபது நிமிடங்கள் தாமதமாகக் கோவை சந்திப்பை அடைந்திருந்தது. இரயில் நின்றதும் நடைமேடையில் இறங்கினாள் மதுரவாணி. தாவணி காற்றில் படபடக்க நீண்ட கருநாகம் போன்ற பின்னலை முன்னே தூக்கிப் போட்டிருந்தவள் பின்னே தள்ளிவிட்டபடி நடக்கத் தொடங்கினாள். கையில் போன் இல்லை. அதை வீட்டிலேயே வைத்துவிட்டுத்தான் பேருந்து […]

 

Share your Reaction

Loading spinner

அலை 1

காற்றுக்கு வாசம் இல்லையாம்! யார் சொன்னது? நான் சுவாசிக்கும் சுதந்திரக்காற்றுக்குத் தனிவாசம் உள்ளதே! நதியூர்… தரணி போற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் திருவைகுண்டத்தை அடுத்த சிறுகிராமம். இன்னும் நகரத்தின் நாகரிகச்சாயம் பூசப்படாத ஊர். அழகிய தாமிரபரணி நதி ஊரைச் செழிப்பாக்கிக் கொண்டு பாய, வயல்வெளிகள், அழகிய ஓட்டுவீடுகள், ஆங்காங்கே ஆடுமாடுகளின் சத்தம் என கிராமத்தனம் அழகாய் மின்னும் அச்சிறுகிராமம், இன்றைய இரவு சீரியல் விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலித்தது. கூம்புவடிவ ஒலிபெருக்கிகளில் சீர்காழி கோவிந்தராஜன் தனது கணீர் குரலில் […]

 

Share your Reaction

Loading spinner