கடற்கரை மணலில் எழுதிய பெயர்களாய் அலை வந்ததும் அழியக் கூடியவை அல்ல கல்வெட்டில் பதிக்கப்பட்ட எழுத்துகளாய் காலம் கடந்தும் நிற்கும் உன் நினைவுகள் நதியூர்… ரத்தினவேல் பாண்டியனின் வீட்டில் எப்போதும் போல அவரது ஏவலாட்களின் அரவம் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டின் இளவரசி காணாமல் போய் வெகுநாட்களாகி விட்டது. இன்னும் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க இயலாது அவர்கள் திரும்பி வரும்போதெல்லாம் அழகம்மையின் ஏச்சுப்பேச்சையும் வாங்கிக் கட்டிக் கொண்டனர். சரவணனும் கார்த்திக்கேயனும் அவ்வப்போது அழகம்மைக்குப் பதிலடி கொடுத்தாலும், தன் பேத்தி […]
Share your Reaction

