காற்றுக்கு வாசம் இல்லையாம்! யார் சொன்னது? நான் சுவாசிக்கும் சுதந்திரக்காற்றுக்குத் தனிவாசம் உள்ளதே! நதியூர்… தரணி போற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் திருவைகுண்டத்தை அடுத்த சிறுகிராமம். இன்னும் நகரத்தின் நாகரிகச்சாயம் பூசப்படாத ஊர். அழகிய தாமிரபரணி நதி ஊரைச் செழிப்பாக்கிக் கொண்டு பாய, வயல்வெளிகள், அழகிய ஓட்டுவீடுகள், ஆங்காங்கே ஆடுமாடுகளின் சத்தம் என கிராமத்தனம் அழகாய் மின்னும் அச்சிறுகிராமம், இன்றைய இரவு சீரியல் விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலித்தது. கூம்புவடிவ ஒலிபெருக்கிகளில் சீர்காழி கோவிந்தராஜன் தனது கணீர் குரலில் […]
Share your Reaction

