கோபத்தில் சிவக்கும் வதனம் நாணத்தில் சிவந்த மாயம் என்ன! வாதமும் விவாதமுமாய் நகர்ந்த வாழ்க்கை வர்ணஜாலமான மாயம் என்ன! புரியாமல் விழித்தவள் உன்னால் உணர்கிறேன் என் வாழ்வின் முதல் அழகிய குழப்பந்தனை! “நீ பார்த்த விழிகள்! நீ பார்த்த நொடிகள்! கேட்டாலும் வருமா! கேட்காத வரமா!” நன்றாக உறங்கிக்கொண்டிருந்த மதுரவாணியின் காதுக்குள் பாடல் சத்தம் கேட்டதும், கனவில் கேட்டது போல இருக்கவே கண்ணை மூடி உறக்கத்தில் ஆழத் துவங்கினாள் மதுரவாணி. ஆனால் பாடல் ஒலித்த இடமோ அவளது […]
Share your Reaction

