அத்தியாயம் 38

பெண் சைக்கோபாத்கள் யாருக்கும் விசுவாசமாக இருக்கமாட்டார்கள். அனைவரையும் தனது தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வது தன் உரிமை என்ற மனப்பாங்கு அவர்களுக்கு இருக்கும். உங்களது துன்பங்களில் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். மகிழ்ச்சியில் அவர்கள் சிரிப்பதை நீங்கள் கண்கூடாகக் காணலாம். வேண்டுமென்ற அடுத்தவர்களின் உடமைகளைத் திருடுவதும் பெண் சைக்கோபாத்களில் சிலர் செய்வார்கள். தப்பித் தவறிப் பிடிபட்டுவிட்டால், தனக்குச் சாதகமாகச் சூழ்நிலையைத் திரித்து கட்டுக்கதை ஒன்றை கூறி தங்களது தகாத செயலைக் கூட நியாயப்படுத்துவார்கள். கடைசியில் உங்கள் மீதே பழியைத் திருப்புவார்கள். செய்த இழிகாரியத்துக்கு … Continue reading “அத்தியாயம் 38”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 37

பெரும்பாலான பெண் சைக்கோபாத்கள் அடுத்தவர்களை உணர்வுரீதியாக வதைப்பதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள். ஒரு பெண் சைக்கோபாத் தனது எதிராளியின் தன்னம்பிக்கையை உடைப்பது, அவர்களை கேலிக்கு ஆளாக்குவது, குடும்பத்தினர் மற்றும் தோழமை வட்டத்திடம் அந்த எதிராளியைப் பற்றித் தவறாகச் சொல்லி அவர்களை அந்த எதிராளிக்கு எதிராகத் திருப்பிவிடுவது போன்ற காரியங்களைச் செய்யத் தயங்கமாட்டார். யாராவது ஒருவரின் வாழ்க்கையை அழிக்கவேண்டுமென அந்த பெண் சைக்கோ முடிவு செய்துவிட்டால் அதில் வெறியோடு இறங்குவார். பெண் சைக்கோபாத்கள் ஆண் சைக்கோபாத்களை விட … Continue reading “அத்தியாயம் 37”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 35

சைக்கோபாத்கள் என்றாலே கொலைகாரர்கள், குற்றவாளிகளாகத் தான் இருக்கவேண்டுமென எந்தக் கட்டாயமுமில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சைக்கோபாத்கள் வன்முறையோடு இன்னும் பல குற்றவியல் செயல்களிலும் ஈடுபடுவதாக அவர்கள் கூறுகிறார்கள். அதீத மனக்கிளர்ச்சி, பழியைத் திசை திருப்பும் போக்கு, இதற சமூகவிரோதபோக்குகள் இவையனைத்தும் சேர்ந்து ஒரு சைக்கோபாத்தை மற்ற குற்றங்கள் செய்பவர்களை விட அபாயகரமானவனாகக் காட்டுகின்றன. இருப்பினும் மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கும், வன்முறை மனப்பான்மைக்கும் இடையே சில விசயங்கள் ஒத்துப்போகலாம். எல்லா சைக்கோபாத்களும் கொலைகாரர்கள் குற்றவாளிகளாக மாறுவதில்லை. அவர்களின் மூர்க்கத்தனத்தைத் தணிக்கவும் கட்டுப்படுத்திக்கொள்ளவும் தெரிந்தவர்கள் … Continue reading “அத்தியாயம் 35”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 34

சைக்கோபாத்களின் தனிமை, மறைக்கப்பட்ட துன்பங்கள், தன்னம்பிக்கையற்ற போக்கு போன்றவை வன்முறை மற்றும் குற்றவியல் நடத்தைக்கான தீவிரமான அறிகுறிகள் என்பதால் அவற்றை அடையாளம் காண்பது மிகமிக முக்கியம். ஒவ்வொரு சைக்கோபாத்தின் வாக்குமூலங்களைக் கேட்டறியும் போது தான் அவர்கள் எந்தளவுக்குப் பலகீனமாகவும் காயப்பட்டும் இருக்கிறார்கள் என்பது புரியும். இந்தச் சைக்கோபாத் குணங்களைத் தவிர்க்கவும், சிகிச்சை அளிக்கவும் இன்னும் நிறைய சைக்கோஃபார்மோதெரபி சிகிச்சை சோதனைகள், நியூரோ ஃபீட்பேக் மற்றும் ஒருங்கிணைந்த சைக்கோதெரபி ஆராய்ச்சிகள் கட்டாயம் தேவை. சைக்கோபாத்கள் பற்றி சமுதாயத்தில் இப்போதிருக்கும் … Continue reading “அத்தியாயம் 34”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 33

சைக்கோதெரபி மட்டும் மனப்பிறழ்வுக்குறைபாடான சைக்கோபதியைக் குணப்படுத்த போதாது. சைக்கோஃபார்மோதெரபியானது நரம்புயிரியல் செயல்பாடுகளை இயல்புக்குக் கொண்டு வர உதவியாக இருக்கும். லித்தியம் சமூகவிரோதப்போக்கு, முரட்டுத்தனம் மற்றும் தாக்கும் குணம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு பங்காற்றுகிறது. ஹோலண்டர் என்பவர், மனநிலையை நிதானமாக்கும் மருந்துகளான டைவல்ப்ரோயெக்ஸ், SSRI, MAOI மற்றும் நியூரோலெப்டிக்ஸ் போண்றவை முரட்டுத்தனம் மற்றும் விரோத மனப்பாங்குடன் கூடிய மனப்பிறழ்வு நோயாளிகளைக் கட்டுக்குள் வைப்பதில் சிறப்பாக வேலை செய்வதாக ஆவணப்படுத்தியுள்ளார். சைக்கோபதியை எந்தளவுக்கு சைக்கோஃபார்மாதெரபி குணமாக்கும் என்பது பற்றி இன்னும் … Continue reading “அத்தியாயம் 33”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 32

தேவையற்ற தூண்டுதல்கள் குறைந்த அளவிலான MAO மற்றும் கார்டிசோல், அதிகளவிலான கொனாடல் ஹார்மோன்களால் ஏற்படுகின்றன. எனவே பெரும்பான்மையான சைக்கோபாத்கள் இத்தகைய நரம்புயிரியல் குறைபாடுகளால் இயல்புக்கு மீறிய நடத்தைகளை வெளிப்படுத்துகின்றனர். இதுவே அவர்களுக்கும் இவ்வுலகிற்குமிடையே பிளவை உண்டாக்குகிறது. தேவையற்ற தூண்டுதல்கள், விரோதம், முரட்டுத்தனம் மற்றும் உணர்வுரீதியான வேதனைகளை வேண்டுமானால் சைக்கோதெரபியின் உதவியால் ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரலாம். மற்றபடி சைக்கோபதியைக் கண்டறியவும் கட்டுக்குள் கொண்டுவரவும் சைகோஃபார்மாதெரபி மற்றும் நியூரோ ஃபீட்பேக் எனப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட கருத்தறிக்கை அவசியம். நீண்டகால சைக்கோதெரபி … Continue reading “அத்தியாயம் 32”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 31

கடந்து போன பத்தாண்டுகளில், சைக்கோபதி உருவாவதற்கான சில காரணங்கள் பற்றிய நரம்புயிரியல் விளக்கங்கள் கிடைத்துள்ளன. உதாரணமாக தேவையற்ற தூண்டுதல்கள், பொறுப்பற்றத்தன்மை, விரோதம் மற்றும் முரட்டுத்தனம் இவையெல்லாம் நரம்பியல் இரசாயனங்களான மோனோமைன் ஆக்சிடஸ் (MAO), செரொடனின், 5-ஹைட்ராக்சிண்டோலேக்டிக் ஆசிட், ட்ரியைடோதைரனின், ஃப்ரீ தைராக்சின், டெஸ்டோஸ்டிரோன், கார்டிசோல், அட்ரினோகார்டிகோட்ராஃபிக் ஹார்மொண் மற்றும் ஹைப்போதலாமிக் – பிட்யூட்டரி – அட்ரினல் மற்றும் ஹைப்போதலாமிக் – பிட்யூட்டரி – கொனாடல் அச்சுகளில் உருவாகும் ஹார்மோன்கள் போன்றவற்றின் அசாதாரணமான சுரப்பு அளவுகளால் உண்டாகும் பிரச்சனைகள் … Continue reading “அத்தியாயம் 31”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 30

வன்முறையான சைக்கோபாத்கள் தங்களது மூர்க்கத்தனத்தை தங்கள் மீதே காட்டிக்கொள்ளும் அபாயமும் உள்ளது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சைக்கோபாத்கள் மனோதத்துவ சிகிச்சைக்குப் பிறகு தங்களது குணாதிசயம் கொடுத்த குற்றவுணர்ச்சியின் காரணமாக மிகவும் மோசமான முறையில் தற்கொலை செய்து இறந்துள்ளார்கள். அவர்கள் தங்களது உயிருக்கு மதிப்பே இல்லையென கருதுவதும், இனி வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறோமென ஒடுங்கிப்போவதுமே இத்தகைய கொடூரமான தற்கொலைகளுக்குக் காரணமாக அமைகிறது. -From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens சாந்திவனம்… நவநீதம் … Continue reading “அத்தியாயம் 30”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 29

தனிமையால் கொலை செய்வது நமக்கு வேண்டுமானால் நம்ப முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் டாமர் மற்றும் நீல்சன் இருவரும் தங்களது தனிமையையும் சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட தன்மையையும் சகிக்க முடியாத வேதனை என்கிறார்கள். அவர்கள் தங்களுக்கென ஒரு சாடிஸ்டான உலகத்தை உருவாக்கிக்கொண்டு தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களான நிராகரிப்பு, வன்கொடுமை, அவமானம், அலட்சியம் மற்றும் உணர்வுரீதியான பாதிப்புகளுக்குப் பழி தீர்க்கத் தொடங்கினார்கள். டாமரும் நீல்சனும் கொலை செய்வது தங்களுக்குச் சந்தோசத்தைத் தருவதில்லை என்கின்றனர். அவர்களிடம் சிக்கியவர்களை வதைப்பதும், தங்களது கட்டுப்பாட்டுக்குள் … Continue reading “அத்தியாயம் 29”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 28

டாமர் மற்றும் நீல்சன் இருவரும் தங்களது தனிமையைப் போக்கிக்கொள்ள துணை வேண்டுமென்பதற்காக தொடர் கொலைகளைச் செய்ததாகக் கூறியிருந்தார்கள். இருவருக்கும் நண்பர்கள் மற்றும் பழகியவர்கள் என யாருமில்லை. அவர்களுக்கும் சமுதாயத்துக்கும் உள்ள தொடர்பே ஓரினச்சேர்க்கை பார்களில் இருக்கும் அற்ப சொற்ப தருணங்கள் மட்டுமே. நீல்சன் கொலை செய்த பிறகு இறந்த உடல்களோடு பேசிக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பானாம். டாமர் கொலை செய்தவர்களின் உடலைச் சாப்பிடுவதன் மூலம் அவர்கள் தன்னுடன் இருப்பதாக நம்பியிருக்கிறான். இதன் மூலமாக அவர்கள் அவனோடு பிரிக்க முடியாதபடி … Continue reading “அத்தியாயம் 28”

 

Share your Reaction

Loading spinner