அன்று மாலை அவர்களின் ரிசப்ஷன்….
மூன்று மணி வாக்கில் பியூட்டிஷியன்ஸ் வந்து உஷாவையும் அவந்திகாவையும் தயார்படுத்த ஆரம்பித்தனர்.
அவந்திகாவோ “இவ்ளோ ஹெவி மேக் அப் என்னால போட்டுக்க முடியாது., இந்த லெஹங்கா வெயிட் என்னோட வெயிட்ட விட ஓவரா இருக்கு. இதப் போட்டா நான் கீழ விழுந்து புதையல்தான் எடுக்கணும். இவ்ளோ ஜுவல்ஸ் என்னால போட்டுக்க முடியாது” என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் மறுப்பு சொல்ல அவளை மட்டும் சமாளித்துத் தயார்படுத்தவே 3 மணி நேரம் பிடித்தது.
இருவரும் தயாராகி ரிசப்ஷன் நடக்கும் ஹோட்டலுக்குக் காரில் சென்று இறங்க ரித்திமா அவர்களை அழைத்துச் சென்றாள். அவர்களுக்கு முன்னரே குடும்பத்தினர் அனைவரும் அங்கே சென்றுவிட ராகவும் வருணும் மட்டுமே மிஸ்ஸிங்.
அவந்திகா “இந்த உலகத்துல ரிசப்ஷனுக்கு ஹஸ்பெண்ட் இல்லாம வந்த வைஃப்ஸ் நம்ம மட்டும்தான் உஷா. எங்கதான் போனாங்க இந்த வருணும் ராகவும்?” என்று கடுப்பாகிவிட்டாள்.
அந்த ஹோட்டல் முழுவதும் இன்று அவர்களின் ரிசப்ஷனுக்காக புக் செய்யப்பட்டதால் எங்கும் உறவினர்களும் விருந்தினர்களும் நிறைந்திருக்க மோகனும், குணாலும் கூட இவ்வளவு நேரமாகியும் மகன்கள் இல்லாமல் இரு மருமகள்களும் தனியே நிற்பதைப் பார்த்து டென்ஷனாகித் தங்கள் மனைவிகளின் காதைக் கடித்துவிட்டு மருமகள்கள் பக்கம் வந்தனர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மோகன் “என்னம்மா மருமகள்களே! வாசலையே பாத்தா எப்பிடி? இந்த மாமனார் கிட்ட ஆசீர்வாதம் வாங்குற ஐடியா இருக்கா இல்லையா?” என்று கேட்க இருவரும் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்.
அவந்திகா “அங்கிள்! நாங்க வரதட்சணையா எதக் கொண்டு வர்றமோ இல்லையோ கண்டிப்பா ஆளுக்கு ஒரு வாட்ச் வாங்கிட்டுதான் வருவோம். அட்லீஸ்ட் அதைக் கையில போட்டதைப் பாத்தாச்சும் உங்க பசங்க இனிமே பங்சுவாலிட்டியா வருவாங்க” என்று கிண்டலடிக்க வாய்விட்டுச் சிரித்த குணால் மோகனின் தோளில் விளையாட்டாகத் தட்டி “இந்த ஐடியா கூட நல்லா இருக்குடா தம்பி” என்று கேலி செய்தார்.
இவ்வாறு வீட்டினர் ஒவ்வொருவரும் அவர்கள் இருவரும் தனிமையை உணரக்கூடாது என்று அவர்களைச் சிரிக்க வைக்க ஏதாவது பேசிக் கொண்டிருந்தனர்.
ராகவும் வருணும் சாவகாசமாக 6 மணிக்கு வர உஷா “வாங்க! வாங்க! நீங்க ரெண்டு பேரும்தான் அங்கிளோட பசங்களா?” என்று கிண்டலாகக் கேட்க வருண் அவளைத் தனியே அழைத்துச் சென்று சமாதானப்படுத்தத் தொடங்கினான்.
அவந்திகாவின் அருகில் வந்த ராகவ் “என்னாச்சு ஜான்சி ராணி! நீ இவ்ளோ சைலண்டா இருக்க! திருந்திட்டியா என்ன?” என்று கிண்டலாகக் கேட்டான்.
அவள் அமைதியைத் தொடரவும் “கம் ஆன் அவந்திகா! டோண்ட் பி காம்! ஆக்சுவலி என்ன நடந்துச்சுனா..” என்று அவன் சொல்ல வரும்போது நிறுத்து என்று கையால் சைகை செய்தாள் அவந்திகா.
“இப்போ நான் உன்கிட்ட எந்த எக்ஸ்ப்ளனேஷனும் கேக்கல. எனக்கு அது அவசியமும் இல்ல. இது உன்னோட ரிசப்ஷன். நீ சீக்கிரம் வர்றதும் லேட்டா வர்றதும் உன்னோட இஷ்டம். எனக்கும் இந்த டிராமாக்கும் சம்மந்தமே இல்ல., எனக்கு எப்போ இதுலாம் முடியும், வீட்டுக்குப் போகலாம்னுதான் தோணுது” என்று பொரிந்து தள்ளிவிட்டாள்.
அவளுடைய பேச்சில் எரிச்சலடைந்தவன் “வாட்? என்னோட ரிசப்ஷனா? அப்போ நீ இங்க எதுக்கு வந்த? ஃபுட் சர்வ் பண்ணவா?” என்று கேட்டு அவளை முறைக்க அவளும் சளைக்காமல் “யூ நோ வாட்! இப்பிடி உன்கூட ஸ்டேஜ்ல நிக்கிறதுக்கு அது எவ்ளோவோ மேல்” என்று வாதிட்டாள்.
“ஷட் அப் அவந்திகா! என்ன நடந்துச்சுனு தெரியாம வாய்க்கு வந்தபடி பேசாத., ஓகே” என்று ராகவ் சீற பதிலுக்கு அவளோ “நான் பேசாம சைலண்டாதான இருந்தேன்., நீதான் தேவையில்லாம என்னைப் பேச வைக்கிற ராகவ்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிக்கொண்டாள்.
ராகவ் பொறுக்க முடியாமல் புலம்ப அது அவள் காதில் விழுந்து தொலைத்தது.
“காட்! ஐ காண்ட் மேனேஜ் திஸ் கேர்ள்”
“தென் வொய் டிட் யூ மேரி மீ?”
இப்படி அவர்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது அமர் அவர்கள் இருவரையும் போட்டோ செஷனுக்காக அழைத்துச் சென்றான்.
அங்கே சென்றபின் அவந்திகா இன்னும் டென்ஷன் ஆனதுதான் மிச்சம். அந்த போட்டோகிராபர் ‘மேடம் இப்பிடி நில்லுங்க, தோள்ல கை வைங்க’ என்று அவளை மாற்றி மாற்றி நிற்க வைத்ததில் அவள் கடுப்பானாள்.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்தவள் “ஏன் சார் என்னை இப்பிடி டார்ச்சர் பண்றீங்க? நீங்க சொல்லுற மாதிரிலாம் என்னால போஸ் குடுக்க முடியாது” என்று கூறிவிட்டாள்.
போட்டோகிராபரோ “மேடம் மேரேஜ்லாம் லைஃப்ல ஒன் டைம் தான் நடக்கும்., அதோட மெமரிஸ நீங்க உங்க குழந்தைங்களுக்கும் காமிக்க வேண்டாமா? இன்னைக்கு உங்களுக்குக் கஷ்டமா இருக்கலாம்., பட் உங்க பொண்ணுகிட்டயோ பையன்கிட்டயோ இந்தப் போட்டோஸ் வீடியோஸ் காமிக்கிறப்போதான் இதோட சந்தோஷம் உங்களுக்குப் புரியும்” என்று ஒரு விளக்கம் அளித்தார்.
இதைக் கவனித்த உஷா வந்து அவளின் காதில் ஏதோ சொல்ல அவந்திகா தலையாட்டிவிட்டு ராகவின் அருகில் சென்று ஒழுங்காக போஸ் கொடுக்க ஆரம்பித்தாள். முதல்முறையாக ஒரு ஆண்மகனுடன் நெருக்கமாக இருப்பது அவளுக்குப் பதற்றத்தைக் கொடுக்கவே அது அவளது முகத்தில் பிரதிபலித்தது.
டென்ஷனுடன் ராகவைப் பார்க்க அவன் சாதாரணமாகத்தான் இருந்தான். அவள் அவனைப் பார்த்ததை அறிந்து திரும்பியவன் அவளை நேருக்கு நேராகப் பார்த்துப் புன்னகைத்தான்.
வழக்கம் போல இதயத்தை ஊடுருவும் அவனது புன்னகையில் தன்னை மறந்தாள் அவந்திகா. அவளின் இதழ்களும் விரிய கன்னம் குழிய அழகாகப் புன்னகைத்தாள் அவந்திகா.
இந்தத் தருணத்தை வீணாக்க விரும்பாத போட்டோகிராபர் அதைப் புகைப்படமாக்கினார்.
அந்தச் சமயத்தில் ராகவ் மீதிருந்த கோபம் போன இடம் தெரியாமல் மறைந்திருக்கத் தன்னைக் கட்டிப் போட்ட அவனது சிரிப்பில் தொலைந்து போனாள் அவந்திகா.. ராகவோ புன்னகையில் மின்னிய அவளது முகத்தையும், அழகிய குட்டி செவ்விதழையும், ஆளை விழுங்கும் அந்தக் கன்னக்குழிகளையும் பார்த்து மெய்மறந்து நின்றான்..
இருவருக்கும் பார்வையை விலக்கும் எண்ணமே வரவில்லை போலும். இவ்வளவு நேரம் சண்டை போட்டவர்களா இவர்கள் என்று அமரே ஆச்சரியப்பட்டுப் போனான்.
“பய்யா! போலாமா” என்று அவன் ராகவின் அருகில் வந்து கேட்டபோதுதான் ராகவ் இந்த உலகிற்கு வந்தான்.
அவனிடம் தலையாட்டிவிட்டு அவந்திகாவின் இடையைப் பற்றி அழைத்துச் சென்றான். நல்ல வேளை, அவள் அப்போது சுயநினைவில் இல்லை. இருந்திருந்தால் அந்த அழகான தருணம் ஒரு சண்டைகாட்சியாக மாறியிருக்கும்!
ராகவே அவள் அமைதியைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனான். வந்தவர்களை அறிமுகப்படுத்தியபோது சின்னச் சிரிப்புடன் அவள் வணக்கம் சொன்ன விதம், அவனது நண்பர்களிடம் வெளிப்படுத்திய மரியாதை இதையெல்லாம்தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த இருகுடும்பத்தாரும் அவந்திகா சமாதானமாகிவிட்டதாகக் கருதி நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ரிசப்ஷன் முடியும் வரை எல்லாம் நன்றாகத்தான் சென்றது…
அமர் அவர்கள் இருவரையும் பீச் ரிசார்ட்டிற்குச் செல்லும்படி சொல்லும் வரை…
ரிசப்ஷன் முடிந்து வீட்டுக்கு வந்த மணமக்கள் நால்வருக்கும் திருஷ்டி கழித்துவிட்டு அவர்களை ஹாலில் அமரவைத்தார் சுமித்ரா.
பெரியவர்கள் சென்றுவிட இளையவர்கள் மட்டும் இருந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். சுமித்ராவின் அறையிலிருந்து வெளியே வந்த அமர் வருணிடம் அவர்கள் இருவருக்கும் பாட்டி கொடுத்த பரிசு என்று கூறி சுவிட்சர்லாந்து செல்வதற்கான ஃப்ளைட் டிக்கெட்டுகளை நீட்டவும் வருணுக்கு இன்ப அதிர்ச்சி!
அவர்களின் உடைமைகளை ஏற்கெனவே பிந்துவும் நேகாவும் தயாராக வைத்திருக்கக் கிஷோர் அவர்களை ஏர்போர்ட்டில் விடுவதாக ஏற்பாடு.
அனைவரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பும் முன் அவந்திகாவிடம் வந்த உஷா “நான் வர்ற வரைக்கும் குட் கேர்ளா இருப்பதானே?” என்று கேட்க அவந்திகா சந்தோஷமாகப் புன்னகைத்து “யூ டோன்ட் வொர்ரி. நான் நீ வர்ற வரைக்கும் யார்கூடவும் சண்டை போட மாட்டேன். ஒரு நல்ல மருமகளா நடந்துப்பேன். நீ எந்தக் கவலையும் இல்லாம ஹனிமூன என்ஜாய் பண்ணு” என்று சொல்லிவிட்டு அவளை அணைத்துவிட்டு வழியனுப்பினாள்.
அவர்கள் சென்றதும் வீட்டிற்குள் வந்தவர்கள் தங்கள் அறைக்குச் செல்லப் படியேறும் போது வந்த அமர் “பய்யா! தாதி உங்க ரெண்டு பேரையும் நம்ம பீச் ரிசார்ட்ஸுக்குப் போகச் சொன்னாங்க” என்று சொல்லிச் சாவியைக் கையில் கொடுக்க அவந்திகா ஷாக் ஆகிவிட்டாள்.
ஆனால் முகத்தில் காண்பிக்காமல் அவர்களின் அறைக்குச் சென்றவள் அணிந்திருந்த அணிகலன்களைக் கோபத்தில் கழற்ற காதில் போட்டிருந்த பெரிய ஜிமிக்கியின் நுனி அவளின் ஆடையில் சிக்கிக்கொண்டதைக் கவனிக்காமல் வேகமாகக் கழற்றினாள்.
அது வராமல் ஆடையிலே மாட்டிக்கொள்ள வலியில் கத்தவும் ராகவ் “ஏன் இவ்ளோ வேகமாகக் கழட்டுற? கொஞ்சம் கூடப் பொறுமை கெடையாதா உனக்கு?” என்று அவளைக் கடிந்துகொண்டே அதை மெதுவாகக் கழற்றி அவள் கையில் வைத்தான்.
அவளின் காதுமடல் சிவந்திருப்பதைப் பார்த்துவிட்டு அதை மெதுவாகத் தடவிவிட அவந்திகா கோபத்தில் அவன் கையைத் தட்டிவிட்டாள்.
அதே கோபத்துடன் “என்னால எங்கேயும் உன்கூட வர முடியாது” என்று சொல்லிவிட்டு வளையல்களைக் கழற்றத் துவங்கினாள்.
“பட் தாதி நம்ம அங்க போகணும்னு சொல்லிருக்காங்க”
“சோ வாட்? நான் அங்க வரப்போறதில்ல”
“வந்தா நீ ஒன்னும் கொறஞ்சு போக மாட்ட அவந்திகா” என்று அவன் சொல்லவும் டிரெஸ்ஸிங் டேபிளை விட்டு எழுந்தவள் “எனக்கு வர்றதுக்கு இஷ்டம் இல்ல ராகவ்” என்று அமைதியாகக் கூறினாள்.
“அன்ஃபார்சுனேட்லி உன்னோட விருப்பத்தைக் கேட்டு இங்க எதுவுமே நடக்கல. பட் நீ அதை ஏத்துக்கிட்ட. லைக்வைஸ் இதையும் ஏத்துகிட்டுத்தான் ஆகணும்” என்றான் கட்டளையிடும் தொனியில்.
“இஸிட்? இன்னும் எத்தன விஷயத்தை நான் பிடிக்கலைனாலும் ஏத்துக்கணும் ராகவ்? என்னால முடியல., இந்த ஒரு மேரேஜ் என்னோட ஹோல் லைஃபயும் டோட்டலா மாத்திடுச்சு. என்னால அந்த சேஞ்சஸ் எதையும் ஏத்துக்க முடியல” என்றாள் அவள் வேதனையான குரலில்.
ராகவால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் இப்போது அவர்கள் செல்லாவிட்டால் வீட்டினர் தேவையில்லாமல் வருந்துவர் என்பதற்காகவே அவனும் புறப்படத் தயாரானான்.
பொறுமையாக “நானும் இப்போ இதே மைண்ட்செட்லதான் இருக்கேன். பட் நான் உன் அளவுக்குச் சீன் கிரியேட் பண்ணவோ, ஓவர் ரியாக்ட் பண்ணவோ இல்ல. முடிஞ்ச விஷயத்தை யோசிச்சு ஒரு யூஸும் இல்லங்கிறப்போ எதுக்காக நான் என்னைக் கஷ்டப்படுத்திக்கணும்?” என்று நிலமையை விளக்கினான் அவன்.
“நான் சீன் கிரியேட் பண்றேனா? எனக்கு ஏதாவது பிடிக்கலனா நான் அதப் பத்தி யோசிக்க மாட்டேன். எனக்குப் பிடிக்காத மனுஷங்களைப் பாக்கக் கூட நான் விரும்புனதில்ல. அப்பிடி இருந்த நான் இன்னைக்கு இந்த ஸ்டுப்பிட் மேரேஜ் டிராமாவால எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காத ஒருத்தனக் காலைல இருந்து நைட் வரைக்கும் பாத்துட்டு அவன்கூட ஒரே ரூம்ம ஷேர் பண்றது எனக்கு மூச்சு முட்டுற மாதிரி இருக்கு ராகவ்” என்று அவள் கூற ராகவுக்கு ஏனோ கஷ்டமாக இருந்தது.
அதைக் காட்டாத கடினமான குரலில் “உனக்கு எப்பிடி என்னைப் பிடிக்காதோ அதே மாதிரி எனக்கும் உன்னச் சுத்தமா பிடிக்காது அவந்திகா. பட் அதுக்காக 24 ஹவர்ஸும் மொறச்சுகிட்டே இருக்க வேண்டிய அவசியம் இல்ல. பிகாஸ் நான் அப்பிடி பிஹேவ் பண்ணா என்னோட ஃபேமிலி அதால கஷ்டப்படுவாங்க” என்று கூற அவந்திகா அதைக் கேட்டு ஒரு முடிவுக்கு வந்தாள்.
“ஓகே! நீ அப்பிடி இருக்கலாம். பட் என்னால முடியாது. லெட்ஸ் அப்ளை ஃபார் டிவோர்ஸ்.,” என்று தீர்மானமான குரலில் உறுதியாகக் கூறினாள்.
டிவோர்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டதும் ராகவுக்குக் கண் மண் தெரியாமல் கோபம் வந்தது. அதை அடக்கிக்கொண்டு அவந்திகாவை நேராகப் பார்த்து “இந்த நிமிஷத்தில இருந்து உன் இஷ்டத்துக்கு நீ கத்து. சண்டை போடு, இல்லனா எப்போவும் போல வினோதமா ஏதாச்சும் பண்ணு. பட் ஐயாம் வார்னிங் யூ அவந்திகா, இதுக்கு அப்புறம் நீ எப்போவும் டிவோர்ஸ்ங்கிற வார்த்தைய யூஸ் பண்ணவே கூடாது. அப்பிடி ஏதாச்சும் எண்ணம் உன் மனசுல இருந்தா அதை இந்த நிமிஷத்தோட மறந்துடணும்” என்று சொல்லிவிட்டு உடையை மாற்றச் சென்றுவிட்டான்.
அவன் கூறியதைக் கேட்டுத் தொப்பென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவள் தலையில் கைவைத்துக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தாள்.
ராகவ் உடையை மாற்றிவிட்டுத் தனக்கான லக்கேஜை எடுத்தவன் அவந்திகா இன்னும் தயாராகாமல் இருப்பதைப் பார்த்து அவள் அருகில் வந்தான்.
அவனைப் பார்த்தவள் “நீ ஏன் இப்பிடி இருக்க ராகவ்? பிடிக்காதவங்க ஒன்னா இருந்து எதைச் சாதிக்கப் போறோம்?” என்று கசப்பான குரலில் கேட்டாள்.
“ஐ டோண்ட் நோ., பட் எனக்குக் கைல கெடச்சதப் பிடிக்காததா இருந்தாலும் தூக்கி எறியுற பழக்கம் கெடையாது, அண்ட் அத யாருக்கும் விட்டுக் குடுக்கிற பழக்கமும் கெடையாது. உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். லெட்ஸ் கோ” என்று அவள் கையைப் பிடிக்க “நான் இன்னும் டிரஸ் பேக் பண்ணல” என்று அவன் கையை விலக்கினாள் அவந்திகா.
அவள் வார்ட்ரோபிற்குச் சென்றவன் கையில் கிடைத்தவற்றை அள்ளி ஒரு சூட்கேஸில் திணித்துவிட்டு “த்ரீ டேஸ்கு இது போதும்” என்று சொல்ல அவனைத் தடுக்க முடியாமல் தடுமாறினாள் அவந்திகா.
“என்னோட டிரஸ்ஸை சேஞ்ச்…” என்று சொல்லவும் அவள் உதட்டில் கை வைத்து “மூச்! இனிமே நீ ஒரு வார்த்தை கூடப் பேசக்கூடாது. இந்த டிரஸ்லயே நீ கொஞ்சம் அழகாத்தான் இருக்க. சோ நோ ப்ராப்ளம். லெட்ஸ் கோ” என்று சொல்லிவிட்டு அவள் கையைப் பிடித்து ஹாலுக்குக் கூட்டி வந்தான்.
பணியாளை அழைத்து அவர்களின் உடைமைகளைக் காரில் வைக்கச் சொல்லிவிட்டு வீட்டுப் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினான்.
சிலை போல் நின்றுகொண்டிருந்த அவந்திகாவின் கையைப் பற்றியவன் அவளைக் காரில் அமரவைத்துக் கதவை அறைந்து சாத்தினான். உள்ளே வந்து சீட்பெல்ட்டைப் போட்டுக் காரை ஸ்டார்ட் செய்தான்.
ஏதும் பேசாமல் அமைதியாக வந்தவனைப் பார்த்த அவந்திகாவுக்குத் தான் கொஞ்சம் அதிகம் பேசிவிட்டோமோ என்று முதல்முறையாகத் தோன்றியது.
நடந்து முடிந்த விஷயங்கள் எப்படித் தனக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக இருக்கிறதோ அதே போலத்தானே ராகவிற்கும் இருக்கும் என்று அப்போதுதான் அவளின் புத்தியில் உறைத்தது.
ராகவ் கூறியது போல அவன் தன்னைப் போல் நடந்துகொண்டிருந்தால் இந்நேரம் தன் சித்தியின் முகத்தில் இருக்கும் நிம்மதி எப்போவோ பறிபோயிருக்கும் என்று புரிந்துகொண்டாள்.
இதற்கு மேல் அவனிடம் சாரி கேட்காமலிருப்பது தவறு என்று தோன்றவும் மெதுவாகத் திரும்பிக் காரை ஓட்டிக்கொண்டிருந்தவனைப் பார்த்தாள்.
“ராகவ்” என்று அழைக்கவும் காரை ஓட்டிக்கொண்டே “என்ன?” என்று அவள் புறம் திரும்பாமல் கேட்டான் ராகவ்.
சாரி கேட்க வந்தவள் அவனது உணர்ச்சியற்ற முகத்தைப் பார்த்துவிட்டு “இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?” என்று கேட்க “15 மினிட்ஸ்” என்று சொல்லிவிட்டுச் சாலையில் கவனம் செலுத்தினான்.
அதற்கு மேல் அவனிடம் பேசி அவன் கவனத்தைத் திருப்ப அவளும் முயற்சிக்கவில்லை.
ரிசார்ட்டை அடைந்தவர்கள் லக்கேஜை அங்கிருந்த பணியாளர் அவர்கள் அறையில் எடுத்து வைக்கவும் அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றனர். அவர் வெளியே சென்றதும் கதவைத் தாழிட்டுவிட்டுத் தங்கள் அறைக்கு வந்தனர்.
இருபுறம் பெரிய கண்ணாடிக் கதவுகளுடன் இருந்தது அந்தப் பெரிய அறை. ஒரு புறக் கண்ணாடி வழியே கடற்கரையைப் பார்க்க முடிந்தது. மற்றொரு புறம் வழியாகத் தோட்டம் தெரிந்தது. இரவு நேரமானதால் தோட்டம் இருளாக இருக்கக் குழல் விளக்குகள் ஒளியை அங்குக் கசிய வைத்தன.
கடலையே பார்த்துக்கொண்டிருந்த அவந்திகாவின் அருகில் நின்ற ராகவ் “ஏதோ சொல்லணும்னு ரொம்ப நேரமா ட்ரை பண்ணியே. அதை இப்போ சொல்லு” என்று ஒரு சிறிய டீபாயை இழுத்துப் போட்டு உட்கார்ந்துவிட்டு அவளையே கூரிய விழிகளால் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதில் தடுமாறிய அவந்திகாவுக்குப் பேச்சு வர மறுத்தது. ராகவோ ‘நீ சொல்லாமல் நான் செல்லமாட்டேன்’ என்பது போல் கையைக் கட்டி அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவந்திகா எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று தவித்துப் போனாள்.
முயற்சித்துவரைவழைத்த குரலில் “சாரி ராகவ்” என்று மெதுவாகக் கூற ராகவ் திகைத்தான். ஆனால் அவனுக்கு நன்றாகத் தெரியும். அவந்திகா எப்போதும் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கத் தவறியதில்லையென்று. அவளின் நேர்மை அவளை அவ்வாறு இருக்க விடாது என்று அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை.
இருந்தாலும் இன்று மாலையிலிருந்து தன்னை அவள் மிகவும் படுத்திவிட்டதால் கொஞ்சம் சீண்டிப் பார்த்தால் என்ன என்று தோன்றத் தன் காதில் கை வைத்து “வாட்? நீ ஏதாச்சும் சொன்னியா என்ன? என் காதுல விழல” என்று சிரிப்பை அடக்கிவிட்டுச் சீரியஸான குரலில் கேட்டான்.
அவந்திகாவோ தான் மெதுவாகச் சொன்னதால் அவனுக்குக் கேட்கவில்லை போலும் என்று எண்ணிச் சத்தமாக “சாரி ராகவ்” என்று சொல்ல அவன் மறுபடியும் காதில் கை வைத்து “எனக்குக் கேக்கலையே” என்று சொல்ல அவந்திகாவுக்கு அவன் வேண்டுமென்று இவ்வாறு செய்வது புரிந்தது.
இருந்தாலும் தனக்கு இது தேவைதான் என்று நொந்துகொண்டவள் “ஐயாம் சாரி ராகவ். கோவத்துல நான் நெறைய பேசிட்டேன்., நான் என்ன பண்றது? எனக்குத் திடீர்னு இப்பிடிலாம் நடந்ததும் நான் கொழம்பிட்டேன். இனிமே நான் இப்பிடி உன்கூட சண்டை போட மாட்டேன்” என்று நிஜமாகவே வருத்தம் நிறைந்த குரலில் கூறினாள்.
அதைக் கேட்ட ராகவிற்குக் கொஞ்சம் மனதுக்கு இதமாக இருந்தது. இருந்தாலும் விடாது “நோ நோ! நீ சண்டை போடுமா! உனக்கு இல்லாத ரைட்ஸா? இந்த உலகத்துல என்கூட சண்டை போடுறதுக்கான ஃபுல் ரைட்ஸும் உனக்கு மட்டும்தானே இருக்கு” என்று ஒருமாதிரியான குரலில் கூற அவந்திகாவுக்கு அவன் தன்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தோன்றியது.
பின் எழுந்து அவள் அருகில் வந்தவன் அவள் கண்களைப் பார்த்து “பட் டிவோர்ஸ் பத்தி மட்டும் இனிமே பேசமாட்டேனு நான் நம்புறேன்” என்று சொல்லவும் அவந்திகா சரியென்று தலையசைத்தாள்.
“ஓகே! இப்போ எனக்குத் தூக்கம் வருது! குட் நைட்” என்று சொல்லிப் படுக்கையில் விழுந்தவன் எழுந்து உட்கார்ந்து “ப்ளீஸ் இன்னைக்கும் அந்தப் பில்லோ பிரிட்ஜ் மாதிரி ஏதும் யோசிக்காம ஒழுங்கா வந்து தூங்கு” என்று சொல்லவும் அதற்கும் சரியென்று தலையசைத்தாள்.
ரெஃப்ரெஷ் ஆகி உடையை மாற்றிவிட்டுத் தூங்க வந்தவள் ராகவ் உறங்கிவிட்டானா என்று பார்த்துவிட்டு இருவருக்கும் குறுக்கே தலையணையை வைக்கத் தொடங்க கண் விழித்த ராகவ் அவள் கையைப் பிடித்தான்.
தூங்கிக் கொண்டிருந்தவன் திடீரென்று கையைப் பிடித்ததால் அலறிய அவந்திகா எதிரே அமர்ந்திருந்த ராகவைப் பார்த்ததும் என்ன செய்யவென்று தெரியாமல் விழித்தாள்.
“வாட் இஸ் திஸ் ஜான்சி ராணி? சினிமா சீரியல்ஸ் பாத்து ரொம்பக் கெட்டுப் போயிருக்க நீ! நான்தான் சொன்னேன் தானே! மறுபடியும் இந்த ஃபெயிலியர் ஆன ப்ளானை எதுக்குக் கன்ட்டினியூ பண்ண ட்ரை பண்ணுற” என்று கிண்டலாகக் கேட்டான்.
அவள் அமைதியைத் தொடரவும் “உன்ன டிவோர்ஸ் பத்தி மட்டும்தான் பேசாதனு சொன்னேன். நீ இப்பிடித் திடீர்னு சைலண்டா இருக்கிறது பாக்க நல்லா இல்ல. கம் ஆன். நார்மல் ஆகு” என்று அவளை முன்போல் சகஜமாகப் பேச வைக்க முயன்றான்.
அவளோ “நோ ராகவ்! நான் இனிமே உன்கிட்ட கத்தவே மாட்டேன்” என்று பிடிவாதமாக இருக்கவும் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.
“ஹே பார்பி டால்” என்று அழைக்கவும் அவந்திகாவுக்கு அவன் அந்தப் பெயரைக் கூறிய நிகழ்வு கண் முன் வந்தது.
“இங்க பாரு ராகவ்! என்ன அப்பிடிச் சொல்லாத” என்று விரலை நீட்டவும் அவள் விரலைப் பிடித்தவன் “அதே மாதிரி நீயும் இனிமே இப்பிடி விரலை நீட்டி என் முன்னாடி பேசாத” என்று சொல்லியபடி அவளின் விரலைப் பிடித்தான்.
“ஏய்! வலிக்குது மேன்! என் கையை விடு” என்று சொல்ல அவன் முடியாது என்று தலையை இடவலமாக அசைக்கவும் அவந்திகா பொறுமை இழந்தவளாக “ஏய்! மைதா மாவு! மரியாதையா கையை விடு” என்று சொல்லவும் அவள் பழைய அவந்திகாவாக மாறிவிட்டாள் என்பதைப் புரிந்துகொண்டான் ராகவ்.
அவள் விரலை விடுவித்தவன் அவளைப் பார்த்துச் சிரித்தபடியே படுத்துக்கொண்டான். அவந்திகாவும் விரலைத் தடவியபடியே லைட்டை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள்.
படுத்தவுடன் இருவரும் உறங்கிவிட்டனர்….
மறுநாள் காலை…
முகத்தில் மஞ்சள் நிற வெயிலின் இதமான சூடு பட்டதும் மெதுவாகக் கண்களைத் திறந்தாள் அவந்திகா. தன் இடையின் மீது எதுவோ கனமாக இருப்பது போல் உணர்ந்தவள் எழும்ப முயற்சிக்க அவளால் முடியவில்லை.
ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்திருந்தவள் நேராகத் திரும்பிப் படுக்கத் தன்னைக் கட்டிக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த ராகவின் முகத்தோடு மோதிக்கொண்டாள். ஐயோ அவன் முழிச்சுக்குவானே என்று கண்களை மூடியவள் அவன் விழிக்கவில்லை என்பதை அறிந்து மெதுவாக எழும்ப முயற்சித்தாள்.
அவனது கையை எடுக்காமல் அவளால் எழும்ப இயலாது. அதை எடுத்தால் அவனது உறக்கம் கலைந்துவிடும். என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே மீண்டும் படுத்துக்கொண்டவள் தனக்கு மிக அருகில் இருந்த அவனது முகத்தைப் பார்த்தாள்.
உறக்கத்தால் கலைந்து நெற்றியில் புரண்ட முடியை ஒதுக்கிவிட்டவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். நீண்ட கூர்மையான நாசி, அழுத்தமான உதடுகள், அதற்குக் கீழே குழி விழும் தாடை என்று பார்த்து முடித்தவள் மனதிற்குள் “நாட் பேட் மைதா மாவு மாதிரி இருந்தாலும் ஏதோ கொஞ்சம் ஹாண்ட்சம்மாதான் இருக்கான். ஆனா தூங்குறப்போ கூட முகத்துல ஒரு அலட்சியம் தெரியுது பாரு. ஓவர் ஆட்டிட்டியூட்” என்று திட்டிக்கொண்டே பாராட்டி முடித்தாள்.
திடீரென்று “ரொம்ப கண்ணு வைக்காத பார்பி டால்.,” என்ற மெல்லிய குரல் கேட்கவும் திடுக்கிட்டு அவன் புறம் திரும்பியவள் ராகவ் விழித்து அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்து பதறிக்கொண்டு எழ முயற்சிக்க அவன் அவளின் இடையில் கை வைத்துத் தன்புறம் திருப்பி அவளை எழும்ப விடவில்லை.
“வாட் ஆர் யூ டூயிங் ராகவ்?” என்று கேட்டுக்கொண்டே அவன் கையை விலக்க முயற்சித்தாள்.
அவனின் கை இன்னும் இறுக்கமாகவே “ராகவ் நான் எழுந்திருக்கணும்” என்று மெதுவாகக் கூறினாள்.
“முடிஞ்சா எழுந்து போ பாப்போம்.,” என்றான் கிண்டலாக.
“என்னால எழுந்திரிக்க முடியாதுனு தெரிஞ்சே இப்பிடிச் செக் வைக்கிறியா நீ? கொஞ்சம் கையை எடுத்தா நானே எழுந்துப்பேன்” என்றாள் அவள்.
“இவ்ளோ நேரம் நீ என்னச் சைட் அடிச்சியே! நான் ஏதாச்சும் சொன்னேனா? இப்போ என்னோட டர்ன். கம் ஆன். என்னைச் சைட் அடிக்க விடு ஜான்சி ராணி”
“என்னது? சைட் அடிக்க விடணுமா? உனக்குப் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு., சீரியசா பேசு ராகவ்”
“நான் சீரியசாதான் உன்னைச் சைட் அடிச்சிட்டிருக்கேன் பார்பி டால்”
“ஐயோ! பெருமாளே! இந்தப் பார்பி டால்ங்க்ற வார்த்தையக் கேட்டா அப்பிடியே பத்திகிட்டு வருது” என்று தமிழில் பேச ஆரம்பித்தாள்.
ராகவுக்கோ அவள் பேசிய எதுவுமே புரியாததால் அவளின் முகபாவங்களை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தான், இல்லை ரசித்துக்கொண்டிருந்தான்.
“லுக்! நீ சொல்லுறது எனக்குப் புரியல அவந்திகா” என்று அவன் சொல்ல
அவந்திகாவின் மனசாட்சி “தமிழ் தெரியாதவன கட்டிகிட்டா நீ ஒவ்வொரு விஷயத்தையும் இப்பிடித்தான் டிரான்ஸ்லேட் பண்ணிட்டே இருக்கணும். ஒன்னு நீ இவன் முன்னாடி தமிழ்ல பேசாத, இல்லைனா இவனுக்குத் தமிழைக் கத்துக் குடு” என்று அவளுக்கு அறிவுரை கூறியது. அவள் “எனக்குத் தெரியும், நீ போ’ என்று அதை அடக்கினாள்.
“கோவம் அதிகமாச்சுனா நான் தமிழ்ல பேச ஆரம்பிச்சிடுவேன்” என்று அவள் கூற இதற்கு முன்னும் அவள் இதே போல் கூறிய நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தான் ராகவ்.
அதைத் தொடர்ந்து அந்த மழை நேர இரவும், அந்தக் குடும்பத்தினரின் பரிவும் நினைவுக்கு வந்தது. அது மட்டுமா? மறுநாள் காலையில் அவந்திகா மஞ்சள் நிற லெஹங்கா அணிந்து கூந்தலை நீவியது முதற்கொண்டு நினைவில் வர ராகவ் வாய்விட்டு “வாட் எ லவ்லி சீன்” என்று சொல்லிவிட்டான்.
அவன் எதைச் சொல்கிறான் என்று புரியாத அவந்திகா “எது லவ்லி?” என்று கேட்க அவனுக்கு அப்போதுதான் வாய்விட்டுத் தான் சொன்னது உரைத்தது.
“நீதான் ஜான்சி ராணி” என்று சொல்லி அவளின் மூக்கைச் செல்லமாகத் தட்டிவிட்டு எழுந்தவன் அவளை எப்படியோ சமாளித்த திருப்தியில் ஃப்ரெஷ் ஆகச் சென்றான்.
எழுந்து அமர்ந்த அவந்திகாவோ அவன் கை பட்ட இடம் குறுகுறுக்கத் தோளைக் குலுக்கிவிட்டு எழுந்தாள்.
வெளியே தோட்டத்திற்கு வந்தவள் அங்கே ஒரு ஓரமாக இருந்த பைப்பில் முகம் கழுவிவிட்டுத் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள்.
இரவில் வெளிச்சம் இல்லாததால் அவளால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. இப்போது காலை நேர இளஞ்சூரிய ஒளி விழுந்து அந்தத் தோட்டத்தை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது.
காலார நடந்தவள் திடீரென்று ராகவின் கோபமான குரலைக் கேட்டு வேகமாக உள்ளே சென்றாள்.
அங்கே அவன் புதிதாக வந்த செஃபிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் வேதாளம் முருங்கைமரம் ஏறிடுச்சு என்று எண்ணியபடியே அவர்கள் அருகில் சென்றாள்.
“வாட் இஸ் திஸ் மேன்?” என்று ராகவ் தன் கையிலிருந்த ஒரு ஃபைலைக் காண்பித்துக் கேட்கவும் அவர் குனிந்துகொள்ள அவந்திகா அதைப் பார்த்தபோது அதில் காபி சிந்திய தடம் தெரியவே அவருக்காகப் பரிதாபப்பட்டாள்.
“டு யூ நோ த வேல்யூ ஆஃப் திஸ் ஃபைல்? இத பிரிப்பேர் பண்ண எத்தனை மணிநேரம் வொர்க் பண்ணனும்னு தெரியுமா? டாமிட்.,” என்று ஆழ்ந்த சத்தம் எழுப்பாத குரலில் கேட்கவும் அவர் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.
“சாரி சார்.., கை தவறி காபி கொட்டிடுச்சு” என்று அவர் சொல்லவும் ராகவ் கொதிநிலைக்குப் போனான்.
“கை தவறிடுச்சா? எவ்ளோ சாதாரணமா சொல்ற இல்ல? வேர் இஸ் யுவர் ஃபாதர்? உன்னை இங்க அனுப்பிட்டு அவர் என்ன பண்ணுறாரு? சின்னப் பையனெலாம் குக்கா போட்டா இப்பிடித்தான். கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லாம என்ன காரியம் பண்ணி வச்சிருக்க? யூ நோ ஒன் திங், யுவர் ஃபாதர் இஸ் ரியலி க்ரேட்., அவரோட வொர்க் டெடிகேஷன்ல ஒன் பர்சண்ட் கூட உனக்கு இல்ல. இதுல கேட்டரிங்க்ல கோல்ட் மெடலிஸ்ட் வேற” என்று அவன் சொல்லிக்கொண்டே போக அவந்திகாவுக்கு அதற்கு மேல் அமைதி காக்க முடியவில்லை.
“இங்க பாருங்க ராகவ்., இதோட ஸாஃப்ட் காப்பி உங்ககிட்ட இருந்தா நீங்க அகெய்ன் ஒரு பிரிண்ட் எடுத்துக்கலாமே! அதுக்குப் போய் ஏன் இவரத் தேவையில்லாமத் திட்டனும்?” என்று அமைதியாகக் கேட்டாள்.
“பிரிண்ட் எடுத்துக்கலாம். பட் இதுல சைன் பண்ண வேண்டிய ஆதரைஸ்ட் சிக்னேட்டரிஸ் யாரும் இப்போ இந்தியால இல்ல. நான் வேணா அவங்களுக்குக் கால் பண்ணி என்னோட குக் அக்ரிமெண்ட்ல காபி கொட்டிட்டாரு.. நீங்க இந்தியா வந்து அகெய்ன் சைன் பண்ண முடியுமானு கேக்கவா?” என்று கடுப்புடன் அவளை நோக்கிக் கேட்டான்.
அவந்திகா அந்தச் செஃபைப் பார்த்து “அண்ணா! நீங்க போய் வேலையப் பாருங்க” என்று அவரை அனுப்பிவிட்டுப் பொறுமையாக ராகவைப் பார்த்தாள்.
“நீ இதுல தலையிடாத அவந்திகா! இது உனக்குப் புரியாது., நான் அவன் பண்ண தப்புக்குத்தான் அவனைத் திட்டுனேன். சோ ப்ளீஸ் எனக்கு லெக்சர் குடுக்க ட்ரை பண்ணாத. அதைக் கேக்குற மூட் எனக்கு இப்போ இல்ல” என்றான் அவன் கடினமான குரலில்.
“இஸிட்? ஹீ மே பி யுவர் சர்வெண்ட்! பட் இந்த மாதிரி அவர்கிட்ட பிஹேவ் பண்ணுற ரைட்ஸ் உனக்கு இல்ல ராகவ். அவங்க உங்க சர்வெண்ட்தான்! அடிமை இல்ல. கை தவறி காபி கொட்டுனதுக்கு இவ்ளோ சீன் கிரியேட் பண்ண வேண்டிய அவசியம் இல்ல” என்று அவந்திகா அவருக்காகப் பரிந்து பேசினாள் மீண்டும்.
“வாட்? நான் சீன் கிரியேட் பண்றேனா? இது எவ்ளோ இம்பார்டெண்ட் டாக்குமெண்ட் தெரியுமா? உன்கிட்ட நான் எதுக்கு இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன்? இதுல சைன் பண்ண வேண்டியவங்க இனிமே ஏ.ஜி.எம் அட்டெண்ட் பண்ணத்தான் இந்தியா வருவாங்க. திஸ் இஸ் எ பிக் மிஸ்டேக்” என்று சொல்லிவிட்டுக் கையிலிருக்கும் ஃபைலைத் தொப்பென்று மேஜையில் போட்டான் அவன்.
“திருத்த முடியாத தவறுனு ஒன்னு இந்த உலகத்திலேயே இல்ல ராகவ்., இதுக்கு ஏதாச்சும் சொல்யூஷன் இல்லாமயா போயிடும்?”
“அப்பிடியா? அப்போ நீயே ஒரு சொல்யூஷன் சொல்லு. பேசாம நின்னா என்ன அர்த்தம்? அட்வைஸ் பண்றது ஈஸி. கேக்குறவங்களுக்குத்தான் அதோட கஷ்டம் தெரியும்” என்று விவரித்துவிட்டு அதே கோபத்துடன் சோஃபாவில் உட்கார்ந்து தலையில் கைவைத்துக் கொண்டான்.
அவனைப் பொறுமையாகப் பார்த்தவாறே “டாக்குமெண்ட்ட அவங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணி அவங்க டிஜிட்டல் சிக்னேஷர் வச்சு உனக்கு அனுப்பச் சொல்லு. எப்பிடியும் இன்னும் ஒன் மன்த்ல ஏ.ஜி.எம் நடக்கும்தானே. அப்போ அவங்க இந்தியா வந்ததும் ஹார்ட் காப்பில சைன் வாங்கிக்க வேண்டியதுதானே!” என்று அவந்திகா சொன்னதும் நிமிர்ந்தவன் முகத்தில் ஆச்சரியம்.
தான் ஏன் இதை யோசிக்கவில்லையென்று நினைத்தவன் அவந்திகாவை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு “நாட் பேட் ஜான்சி ராணி! உனக்கும் சில டீடெய்ல்ஸ் தெரிஞ்சுருக்கு! எனி வே தேங்க்ஸ் ஃபார் திஸ் சொல்யூஷன்!” என்று புன்னகையுடன் கூறினான்.
அவந்திகா அவன் சிரிக்க ஆரம்பித்ததும் சுதாரித்துக்கொண்டு தோட்டத்தைப் பார்த்தபடியே “இட்ஸ் ஓகே., யூ ஆர் வெல்கம்” என்று அவனது நன்றியை ஏற்றுக்கொண்டாள்.
திரும்பி நின்றவள் மனதிற்குள் “இவன் சிரிக்க ஆரம்பிச்சாலே எனக்கு எல்லாமே ஏன் மறந்து போயிடுது? பெருமாளே இதுக்கு ஒரு சொல்யூஷன் சொல்லுங்க ப்ளீஸ்” என்று எண்ணும்போதே அவள் முன் வந்து நின்றவன் அவளையே குறுகுறுவென்று பார்த்தான்.
“இப்போ எதுக்கு மேன் இப்பிடிப் பாக்குற?”
“உனக்கு வாய் மட்டும்தான் ஜாஸ்தினு நெனச்சேன்.. மூளையும் நல்லாவே வேலை செய்யுது. முக்கியமா எமர்ஜென்சி டைம்ல ரொம்ப நல்லா வேலை செய்யுது” என்றான் ராகவ்.
“தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட்ஸ்! அண்ட் ப்ளீஸ் இனிமே சர்வெண்ட்ஸ்கிட்ட இப்பிடி பிஹேவ் பண்ணாத. ஐ மீன் அவங்க சாரி சொன்னதுக்கு அப்புறமும் அவங்களை எதுக்காகத் திட்டனும்? அவங்களுக்கும் செல்ஃப் ரெஸ்பெக்ட் ஹர்ட் ஆகும்தானே” என்று கண்ணை விரித்து அவனை ஆழ்ந்து பார்க்க ராகவ் தன் சிகையைக் கோதிக்கொண்டான்.
“என்ன கண்ணுடா! இப்பிடிப் பாத்தே என்னை ஏதோ பண்ணுறா இந்தப் பொண்ணு!” என்று மனதினுள் கூறிக்கொண்டவன் அவளிடம் “ஓகே! இனிமே நான் இப்பிடி அவங்ககிட்ட பிஹேவ் பண்ணவேமாட்டேன். இப்போ ஹாப்பியா?” என்று சொல்ல அவந்திகா கன்னம் குழியச் சிரித்தபடியே தலையாட்டினாள்.
இருவரும் பேசிக்கொண்டே தோட்டத்திற்குச் செல்ல அவர்களின் வாழ்வில் அழகான அத்தியாயம் அன்றுதான் ஆரம்பித்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


