தஞ்சாவூரிலிருந்துத் திரும்பிய பிறகு மேனகாவும் அஸ்வினும் மனதளவில் மிகவும் நெருங்கிவிட்டனர். ஸ்ராவணி தன்னுடைய பெற்றோரும், அண்ணனும் இந்தியா திரும்பிய பின் மேனகாவுக்கும் அஸ்வினுக்கும் இடையே உள்ள காதலையும் அவர்களிடம் தெரிவித்து விடவேண்டும் என்ற முடிவில் இருந்தாள். அதே நேரம் சுபத்ரா பார்த்திபனைச் சென்றுச் சந்தித்து வந்தார். அவரிடம் அஸ்வின் மேனகாவை விரும்பும் விஷயத்தைச் சொல்லவும் பார்த்திபன் “அப்போ சம்பந்தி வீட்டுக்காரங்க வந்ததும் ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னாவே வச்சுக்கலாம் சுபிம்மா. நமக்கும் வேலை மிச்சம்” என்றுச் சொல்லிவிட சுபத்ரா […]
Share your Reaction