பீச் ஹவுஸின் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு ஸ்ராவணியின் கையைக் கோர்த்தபடி ரிசார்ட்டினுள் நுழைந்தான் அபிமன்யூ. நேரே மொட்டைமாடிக்கு அவளை அழைத்துச் செல்ல ஸ்ராவணியும் யோசனையுடன் அவனைத் தொடர்ந்தாள். மொட்டைமாடியை மிதித்ததும் அங்கு மின்னிய விளக்குகளின் ஒளியில் அந்த இடமே தேவலோகம் போல ஜொலிக்க அவனது கரத்தைப் பற்றியபடி நடந்தவள் அங்கே டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்த கேக்கைக் கண்டதும் “எனக்கு கேக் வெட்டவே பிடிக்காது தெரியுமா?” என்று முகம் சுருக்கிக் கூறினாள். அபிமன்யூ “பிளீஸ் வனி! எனக்காக கட் […]
Share your Reaction