“முதல்ல கிடைக்கிற எல்லா அனுபவங்களுமே நம்மளோட இயல்பை மாத்திடும்… முதல் காதல், முதல் தோல்வி இது எல்லாம் அந்த கேட்டகிரி தான்… இதை அனுபவிக்கிறப்ப நம்ம இயல்பை தாண்டி உணர்ச்சிவசப்படுவோம்… சந்தோசமோ துக்கமோ பாசமோ வெறுப்போ எதை காட்டுனாலும் எக்ஸ்ட்ரீம் லெவல்ல தான் காட்டுவோம்… இந்த மாதிரி சிச்சுவேசன்ல எப்பிடி நடந்துக்கணும்ங்கிறது தெரியாததால உண்டாகுற தடுமாற்றம் நம்மளை இப்பிடி பிஹேவ் பண்ண வச்சிடும்… கொஞ்சம் கொஞ்சமா சூழ்நிலை புரிய ஆரம்பிக்கிறப்ப நம்ம மெச்சூரா பிஹேவ் பண்ண ஆரம்பிப்போம்… பட் அதுக்குள்ள நம்மளை பத்தி பாசிட்டிவ் ஆர் நெகட்டிவ் இம்பாக்ட் ஒன்னு மத்தவங்க மத்தியில உருவாகிடும்… அந்த இம்பாக்டை அவ்ளோ சுலபத்துல மாத்த முடியாதுங்கிறது தான் வருத்தமான விசயம்”
-கிரிஷ்
நித்திலாவைச் சந்தித்த பிறகு கிருஷ்ணராஜசாகர் ராந்த்வாவின் சரும பாதுகாப்பு பொருட்களில் கலக்கப்படும் வேதிப்பொருட்களின் விகிதாச்சாரம் குறித்து மறுபரிசீலனை செய்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கினான்.
சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் துறை வல்லுனர்களின் ஆலோசனைக்குப் பிறகு அந்த விகிதாச்சாரங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
கூடவே கொள்கலன்களின் வடிவமைப்பு குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து விவரம் கேட்டான். விவரம் கேட்டான் என்பதை விட அவர்களைக் காய்ச்சி எடுத்தான் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
“பி.ஜி கூட முடிக்காத பொண்ணு எர்கனாமிக்ஸ் பத்தி எனக்குப் பாடம் எடுக்குறா… அந்த லெவல்ல தான் நம்ம கண்டெய்னர்சோட டிசைன் இருக்கு… இந்த மாதிரி சறுக்கல் எல்லா இடத்துலயும் நடக்குறது தான்… எவ்ளோ சீக்கிரம் இதுல சேஞ்சஸ் கொண்டு வரமுடியுமோ அவ்ளோ சீக்கிரம் கொண்டு வாங்க”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவர்களோடு சேர்ந்து மார்க்கெட்டிங் துறைக்கும் நல்ல டோஸ் கிடைத்தது.
நித்திலாவைப் போன்ற அதிமேதாவித்தனம் கொண்ட ஒருத்தியிடம் ஏன் டிஜிட்டல் மார்க்கெட்டிங்குக்காக தொடர்பு கொண்டீர்கள் என அவன் கடிந்துரைத்தான். அதிகாரிகள் தலை குனியவும் அவனது கடுப்பு இன்னுமே அதிகரித்தது.
“இந்த குவாட்டரோட ப்ராஃபிட்ல உண்டான சரிவுக்கு நீங்க தான் பொறுப்பு… இனிமே ராந்த்வாவோட எந்த ப்ராடக்டுக்கை டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்யவும் அந்தப் பொண்ணை அப்ரோச் பண்ண வேண்டாம்… பை த வே, அவ இனிமே சொந்த விருப்பத்துல கூட ராந்த்வா ப்ராடக்டை ரிவியூ பண்ணக்கூடாது… அதுக்கு என்ன செய்யணுமோ செய்யுங்க… ராந்த்வாவோட விண்டர் லாஞ்ச் எல்லாம் வித்து தீர்க்கணும்… அவளோட ரிவியூவை மத்தவங்க மறக்கணும்… இல்லனா ஐ வில் ஃபயர் ஆல் ஆப் யூ”
இப்படி கட்டளை கிடைத்த பிறகு மார்க்கெட்டிங் துறையைச் சேர்ந்தவர்கள் சும்மா இருப்பார்களா?
தங்களிடமுள்ள மற்ற இன்ஃப்ளூயன்சர்களை வைத்து நித்திலாவின் யூடியூப் சேனலைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்ப என்னென்ன செய்யவேண்டுமே அனைத்தையும் செய்தார்கள்.
அவளைத் தவிர அனைவரும் ராந்த்வாவின் விண்டர் லாஞ்ச் சரும பாதுகாப்பு தயாரிப்புகளை ஆஹா ஓஹோ என்று புகழ ஆரம்பிக்க நித்திலா கொடுத்த நியாயமான ரிவியூவின் தீவிரம் நீர்த்துப்போனது.
போதாக்குறைக்கு கிட்டத்தட்ட எண்பதாயிரம் ஃபாலோயர்களைக் கொண்ட நித்திலாவின் இண்ஸ்டாக்ராம் கணக்கு தவறான செய்தியைப் பரப்பியதாக ரிப்போர்ட் செய்யப்பட்டு முற்றிலுமாக ப்ளாக் ஆனது.
அனைத்தும் ராந்த்வாவின் கைவசம் இருந்த சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் அவர்களின் ஃபாலோயர்களின் கைவண்ணம் தான்.
ஒரு வளர்ந்து வரும் சரும பாதுகாப்பு பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குறைகளை வெளிப்படையாகச் சொன்னதன் விளைவு நித்திலாவின் யூடியூப் வீடியோக்களின் கமெண்ட் செக்சன்களிலும் எதிரொலித்தது. அவள் கேன்சர் சர்வைவர் என்ற முகமூடியை அணிந்து சர்ச்சைக்காக பிரபல ப்ராண்டுகளை குறை சொல்வதாக ‘பெய்ட் பாட்கள் (paid bots)’ வன்மத்தைக் கக்கத் துவங்கின.
(இந்தச் சம்பவம் நிஜமாவே நடந்தது மக்களே… நான் ரெகுலரா ஃபாலோ பண்ணுற ரெண்டு ப்யூட்டி வ்ளாகர்ஸ் ஒரு ஃபேமஸ் ஸ்கின் கேர் ப்ராண்டோட குறைகளைச் சொன்னதுக்காக நிறைய இன்ஃப்ளூயன்சர்ஸ் கம்பெனி கிட்ட பணம் வாங்கிட்டு அவங்க மேல வன்மத்தைக் கக்குனாங்க… அதுல ஃபேமஸான யூடியூபர்சும் அடக்கம்… அந்த ரெண்டு பொண்ணுங்கள்ல ஒருத்தர் எம்.பி.பி.எஸ் ஃபைனல் இயர் படிச்சிட்டிருந்தாங்க, அவங்க கேன்சர் சர்வைவர் ப்ளஸ் அவங்களுக்கு லெக் லெங்த் டிஸ்க்ரிபன்சி குறைபாடு உண்டு, நித்திலா கேரக்டர் அங்க இருந்து இன்ஸ்பயர் ஆனது தான்… இன்னொருத்தவங்க ஃபேஷன் டிசைனிங் ஸ்டூடண்ட்… ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஏத்த ப்ராடக்டை கரெக்டா சஜஸ்ட் பண்ணுவாங்க… இப்பவும் அவங்க சேனல்ஸ் இருக்கு… பட் இண்ஸ்டா அக்கவுண்டை ரிப்போர்ட் பண்ணி தூக்குனாங்க… இந்த ப்ராப்ளத்துக்கு அப்புறம் அவங்களுக்கு ஃபாலோயர்ஸ் அதிகமானாங்க… பட் அந்த குறிப்பிட்ட கம்பெனி ப்ராடக்டை இனிமே ரிவியூ பண்ணமாட்டோம்னு ரெண்டு பேருமே சொல்லிட்டாங்க… அதை பேஸ் பண்ணி தான் இந்தக் கதைய ஆரம்பிச்சேன்)
இதில் நித்திலா மனவுளைச்சலுக்கு ஆளானது என்னவோ உண்மை. அவள் ஆசையாக ஆரம்பித்த இன்ஸ்டாக்ராம் கணக்கு மூடுவிழா கண்டபோது கிருஷ்ணராஜசாகர் மீது சொல்லவொண்ணா வெறுப்பு வந்ததுவிட்டது.
அவன் மீதிருக்கும் வெறுப்பை ஸ்ரீநயனியிடம் அவள் காட்டியதில்லை. வகுப்பில் அவளைச் சந்திக்க நேர்ந்த போதும் இன்முகத்தோடு பேசுவாள்.
ஸ்ரீநயனியோடு நித்திலாவைக் காணும் போதெல்லாம் நிஹாரிகாவின் வயிறு கபகபவென எரியும். அவளது குடும்பம் எவ்வளவு செல்வாக்கு படைத்தவர்கள் என்பதை கூகுள் உபயத்தால் அறிந்துகொண்ட பிற்பாடு அன்னையிடம் புலம்பித் தீர்த்தாள்.
“நித்திலா கொழுத்த பணக்காரிய ஃப்ரெண்டா பிடிச்சிட்டாம்மா… அன்னைக்கு அவளோட அண்ணனை மீட் பண்ண போயிருக்கா… அவ மனசுல ஏதோ திட்டம் வச்சிருக்கா”
“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவ வானம் ஏறி வைகுண்டம் போகப்போறாளாக்கும்? விடு நிஹி… நீயும் அந்தப் பொண்ணு கிட்ட பேசி ஃப்ரெண்ட் ஆகு”
“க்கும்! அந்த நயனிக்கு நாகப்பாம்புனு பேர் வச்சிருக்கலாம்… என்னைக் கண்டாலே அவளுக்கு ஆகாது… பாம்பு மாதிரி கொத்தாத குறையா குதறிடுவா… ஒரு தடவை நித்திலாவ நானும் என் ஃப்ரெண்ட்சும் காலேஜ் லைப்ரரில வச்சு கிண்டல் பண்ணுனதை எங்க ஹெச்.ஓ.டி வரைக்கும் கொண்டு போய் பனிஷ்மெண்ட் வாங்கி குடுத்தா… அவ என் ஃப்ரெண்ட்ஷிப்பை ஏத்துப்பாளாக்கும்? நடக்குறதை பேசும்மா”
அன்னையும் மகளும் பொருமித் தீர்த்ததை இன்னும் அதிகரிக்கும் பொருட்டு ஒரு சம்பவம் நடந்தேறியது. ஸ்ரீநயனி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென நித்திலாவுக்கு அழைப்பு விடுக்க வீட்டுக்கே வந்துவிட்டாள்.
ஜனார்தனனிடம் இன்முகமாகப் பேசி அவரது சம்மதத்தையும் வாங்கிவிட்டாள்.
ஆனால் நித்திலா தான் கொஞ்சம் தயங்கினாள். ஸ்ரீநயனி ஏன் என விசாரித்த போது கிருஷ்ணராஜசாகரைச் சந்தித்த பிற்பாடு நடந்த அனைத்தையும் மறைக்காமல் அவளிடம் கூறிவிட்டாள்.
“இவ்ளோ நடந்திருக்கு… ஏன் என் கிட்ட சொல்லல சிஸ்?”
“உன் அண்ணாவ பத்தி உன் கிட்டவே எப்பிடி சொல்லமுடியும் நயனி?”
“இதுல என்ன இருக்கு? தப்பு பண்ணுனது என்னோட அண்ணா தானே? நீங்க என் பர்த்டே பார்ட்டிக்கு வருவிங்கல்ல, அப்ப நேருக்கு நேர் நம்ம அவர் கிட்ட கேப்போம்… என்ன சொல்லுறிங்க?”
“அது நல்லா இருக்காது நயனி… பர்த்டே மூட் ஸ்பாயில் ஆகிடும்”
“சோ வாட்? உங்க இன்ஸ்டா அக்கவுண்ட் ப்ளாக் ஆனப்பவே நீங்க என் கிட்ட சொல்லிருக்கணும் சிஸ்”
ஆதங்கமாக உரைத்தவள் தனது பிறந்தநாளுக்கு அவள் வந்தே தீரவேண்டுமென அன்புக்கட்டளை விதிக்க நித்திலாவும் சாகர் நிவாசுக்கு வர சம்மதித்தாள்.
இவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டுக்கொண்டிருந்த நிஹாரிகாவும் ஜனார்தனனிடம் ஸ்ரீநயனியின் வீட்டுக்குச் செல்லட்டுமா என அனுமதி கேட்டாள்.
“நித்தி தனியா போக அன்கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணுவாப்பா… நான் அவ கூட போனா ஷீ வில் பி ஹேப்பி”
நித்திலாவிடம் ஜனார்தனன் கேட்டபோது அவளுமே நிஹாரிகா வருவதற்கு சம்மதித்துவிட அவளுக்குக் கொண்டாட்டமாகிவிட்டது.
பணக்கார வீடுகளை அவள் சினிமாக்களில் மட்டும் தான் பார்த்திருக்கிறாள். ஆடம்பரத்தில் நாட்டமுள்ளவளுக்குச் சாகர் நிவாசைக் காண எழுந்த ஆசை பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அங்கேயே வாழ்வதற்கான வெறியாக மாறிவிடுமென அவளுக்கே தெரியாது.
இரு பெண்களும் ஸ்ரீநயனியின் பிறந்தநாளன்று மாலை சாகர் நிவாசுக்குச் சென்றபோது நித்திலாவை மகிழ்ச்சியோடு வரவேற்ற ஸ்ரீநயனி நிஹாரிகாவைக் கண்டதும் முகம் சுளித்தாள்.
அதை கண்டுகொண்ட நித்திலா “எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல நயனி… அதான் நிஹி எனக்குத் துணையா வந்திருக்கா” என்றாள்.
ஸ்ரீநயனியும் அதற்கு மேல் வாதிடாமல் இருவரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.
வீட்டின் பிரம்மாண்டம் கலாரசிகையான நித்திலாவையும், ஆடம்பரப்பிரியையான நிஹாரிகாவையும் ரசிக்க வைத்தது. மெய்மறக்க செய்தது.
ஸ்ரீநயனி நித்திலாவை தனது பெற்றோரிடம் அறிமுகப்படுத்தினாள். அங்கே சிரஞ்சீவியும் இருந்தார். ஆனந்த்சாகரின் காதில் நித்திலா யாரென இரகசியமாகப் போட்டுக்கொடுத்தார் அந்த மனிதர்.
நர்மதாவிடம் பேசிக்கொண்டிருந்த நித்திலாவை ஆராய்ச்சிப்பார்வை பார்த்தவர் மேற்கொண்டு எதையும் கூறும் முன்னர் கிருஷ்ணராஜசாகர் சந்தீப்புடன் வந்து சேர்ந்தான்.
வந்தவனின் பார்வை வளையத்துக்குள் நித்திலா விழவும் அவனது கண்களில் சுவாரசியம் குடிகொண்டது.
அவளுக்கு நடந்த அனைத்தையும் அவன் அறிவான். அதன் பின்னரும் ஸ்ரீநயனிடம் நட்பு பாராட்டுகிறாள் என்றால் இவள் வித்தியாசமானவள் தான் என எண்ணிக்கொண்டான்.
அதே நேரம் கிருஷ்ணராஜசாகரோடு நின்று கொண்டிருந்த சந்தீப்பை நிஹாரிகாவின் கண்கள் ஆவலோடு நோக்கின.
சந்தீப் பார்வைக்கு அழகன் என்பதை சொல்லியா தெரியவேண்டும். அவளது கண்கள் அவனை விட்டு விலக மறுத்து அவன் மீது படிந்துவிட்டன.
எப்படியாவது அவனது கவனத்தைக் கவரவேண்டுமென யோசிக்க ஆரம்பித்தபடியே சந்தீப்பின் நடவடிக்கைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள் நிஹாரிகா.
ஸ்ரீநயனி தமையனை அழைத்து நித்திலாவின் முன்னிலையிலேயே நடந்த அனைத்துக்கும் அவன் காரணமா என கேட்டுவிட்டாள்.
“பெர்ஷ்னலையும் பிசினஸையும் குழப்பிக்கக்கூடாது நயனி… என் பிசினசுக்கு எது சரியோ அதை நான் பண்ணுனேன்”
தான் செய்ததை ஒப்புக்கொண்டான் அவன். அதற்கு மன்னிப்பு கேட்கவேண்டுமென அவனுக்குத் தோன்றவில்லை.
என்ன மனிதன் இவன் என நித்திலா கடுப்புறும்போதே ஸ்ரீநயனி கிருஷ்ணராஜசாகரை அவளிடம் மன்னிப்பு கேட்கும்படி பணித்தாள்.
அவனோ நக்கல் சிரிப்போடு “உன் அண்ணா இது வரைக்கும் யார் கிட்டவும் தலை குனிஞ்சதில்ல… இனியும் அப்பிடிதான்” என்று சொல்லிவிட்டு இறுமாப்போடு அந்த இடத்தை விட்டுச் சென்றான்.
இந்த திமிருக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை! நித்திலா ஸ்ரீநயனியிடம் வேறு பேச்சை ஆரம்பித்தாள்.
இக்காட்சிகளுக்கு அடுத்து பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியான தருணங்கள் ஆரம்பித்தன. ஸ்ரீநயனி கேக் வெட்டி அதை பெற்றோருக்கும் தமையன்களுக்கும் ஊட்டிவிட்டாள். அடுத்து அவள் நித்திலாவிடம் வரவும் அனைவரின் பார்வையும் அவளையே குறுகுறுவென நோக்க நித்திலா சங்கடப்பட்டாள்.
“ஏன் நயனி இதெல்லாம்?” என்றவளின் வாயில் கேக்கை வைத்தாள் ஸ்ரீநயனி.
“எனக்குச் சிஸ்டர் கிடையாது… உங்களை நான் என்னோட சிஸ்டரா தான் பாக்குறேன்” என்று அவள் சொன்னபோது நித்திலாவின் கண்களில் கண்ணீர் நிரம்பிவிட்டது.
நிஹாரிகா எப்போதுமே நித்திலாவை சகோதரியாக எண்ணியதில்லை. அவளும் அவளது அன்னையும் தன்னை மனுசியாகவே மதித்ததில்லையே, பின் எங்கிருந்து சகோதரி உறவு வரும்?
ஸ்ரீநயனியின் வார்த்தைகள் அவளை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டன.
அவள் கண் கலங்கும் போதே ராகுல் வந்து சேர்ந்தான்.
“ஹேப்பி பர்த்டே லிட்டில் பிரின்சஸ்” என்று வாழ்த்தியபடி ஸ்ரீநயனியின் கைகளில் பரிசைத் திணித்தவன் அவளருகே நின்று கொண்டிருந்த நித்திலாவைக் கண்டதும் திகைத்துப் போய் கிருஷ்ணராஜசாகரைப் பார்த்தான்.
அவனது விழிகள் நித்திலா மீதிருக்கவும் எதுவோ சரியில்லை என்பது புரிபடவும் நண்பனைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.
“என்னடா நடக்குது இங்க? அந்தப் பொண்ணைத் தானே கொஞ்சநாளா கரிச்சுக் கொட்டுன? இப்ப என்ன சாரோட பார்வை அந்தப் பக்கம் போகுது?”
“ஷீ லுக்ஸ் ப்ரிட்டி… அவளைப் பாக்காம இருக்குறது என் கண்ணுக்கு நான் செய்யுற அநியாயம் ராகுல்”
“இந்த ஒரு விசயத்துல நியாயவானா இருக்கணும்னு முடிவு பண்ணிட்ட?”
“அப்பிடியும் வச்சுக்கலாம்”
இரு நண்பர்களின் உரையாடல் நடந்து கொண்டிருந்த போதே சைந்தவி அங்கே வந்து சேர்ந்தாள்.
அவளைக் கண்டதும் ராகுலில் முகத்தில் பளீர் பிரகாசம்.
“வந்ததும் ஃப்ரெண்ட் கூட ப்ரொமான்ஸ் பண்ண தெரிஞ்சவனுக்கு கேர்ள் ஃப்ரெண்ட் மட்டும் மறந்து போயிடும்”
குறை சொன்ன சைந்தவியோடு ராகுலை அனுப்பி வைத்தான் கிருஷ்ணராஜசாகர்.
அவன் நமட்டுச்சிரிப்போடு நிற்கையிலேயே நாசியில் மரமல்லியின் நறுமணம் புகுந்து புத்துணர்ச்சியை அவனுக்குள் பரப்பியது.
கிருஷ்ணராஜசாகரின் பார்வை குளத்தில் படிந்தது. விளக்குகளின் வெளிச்சத்தைப் பிரதிபலித்த குளத்தில் அலைகள் விரிந்து அடங்கின.
“இல்ல சார்… நான் எப்பவுமே ப்ராடக்ட்ல இருக்குற ப்ளஸ் அன்ட் மைனசை ஓப்பனா சொல்லிடுவேன்… இதுக்குச் சம்மதம்னா மட்டும் நீங்க பி.ஆர் பார்சல் அனுப்புங்க”
கறார் குரலில் பேசியபடி அங்கே வந்து சேர்ந்தாள் நித்திலா. அவளது குரலில் கவனம் கலைந்த கிருஷ்ணராஜசாகர் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டவாறு நின்றான்.
நித்திலா அவனைப் பார்த்துவிட்டாள். ஆனால் பெரிதாகக் கருதாமல் தனது பேச்சைத் தொடர்ந்தாள்.
“இப்ப நீங்க சரினு சொல்லுவிங்க… அப்புறம் உங்க கம்பெனி மேனேஜ்மெண்ட்ல பிரச்சனைனு என் கிட்ட பிரச்சனை பண்ணுவிங்க… என்னால அந்த மாதிரி ப்ராப்ளம்ல சிக்கி என் டைமை வேஸ்ட் பண்ணிக்க முடியாது சார்… நான் சொல்லுற டேர்ம்ஸ் அன்ட் கண்டிசன்ஸ்கு சம்மதம்னு மெய்ல் அனுப்புங்க… அப்புறமா பி.ஆர் பத்தி பேசலாம்”
என்னவோ இவள் இல்லாவிட்டால் இன்ஃப்ளூயன்சரே இல்லை எனும் அளவுக்குச் சீன் போடுகிறாளே! கிருஷ்ணராஜசாகரின் கண்கள் இடுங்கின.
நித்திலா பேசி முடித்துவிட்டு கிளம்ப எத்தனித்த போது “இப்பலாம் ரொம்ப கேர்ஃபுல்லா இருக்க போல” என கிண்டலாக வினவினான் அவன்.
நித்திலா எரிச்சலுற்றபடி திரும்பினாள்.
“கேர்ஃபுல்லா இருந்து தானே ஆகணும்… இல்லனா சிலர் அவங்களோட செல்வாக்கைப் பயன்படுத்தி என் பேரை ரிப்பேர் ஆக்குறாங்களே”
கடுப்போடு அவள் பேசவும் கிருஷ்ணராஜசாகர் வெற்றிப்புன்னகை பூத்தான்.
“புரிஞ்சா சரி”
“உங்களுக்கும் நான் சொன்ன எல்லாம் மண்டைல ஏறிடுச்சு போல… ரீசண்ட் ப்ராடக்ட் டிசைன்ஸ் எல்லாமே நல்லா இருக்கு… நான் சொன்னதை இம்ப்ளிமெண்ட் பண்ணிக்கிட்டே எனக்குக் குழியும் வெட்டிருக்கிங்க… யூ ஆர் கன்னிங்”
“இல்லனா பிசினஸ் பண்ண முடியாதே?”
அவன் தோள்களைக் குலுக்கிய விதத்தில் நித்திலாவின் எரிச்சல் அதிகரித்தது.
இவனிடம் பேசினால் மனநிம்மதி கெட்டுப்போகுமென அந்த இடத்தை விட்டு போக எத்தனித்த போது காற்று சற்று பலமாக வீச ஆரம்பிக்க மரமல்லி மலர்கள் உதிர்ந்தன.
திடீரென மலர்கள் உதிரவும் திகைத்தவள் மரமல்லியின் நறுமணம் கம்மென பரவவும் எரிச்சல் அடங்கி புன்னகைத்தாள்.
உதிர்ந்த மலர்களில் சில அவளது ஸ்ட்ரெய்டன் செய்யப்பட்ட கூந்தலில் ஆங்காங்கே சிக்கிக்கொண்டன.
நித்திலா கூந்தலைச் சிலுப்பி அவற்றை நீக்கினாள்.
அப்போது தான் கிருஷ்ணராஜசாகரின் தோள் பட்டையில் ஊர்ந்து கொண்டிருந்த சிலந்தியைக் கவனித்தாள்.
“உங்க ஷோல்டர்ல சிலந்தி பூச்சி இருக்கு”
தனது தோளில் தொட்டுக் காட்டினாள் அவள்.
கிருஷ்ணராஜசாகர் வேகமாக அவனது தோளை உலுக்கினான். ஆனால் பூச்சி விழுவேனா என அடம்பிடித்தது.
அவனுக்கோ அதை கைவிரலால் தொட்டு தூக்கி வீச அருவருப்பு. அதை அவனது முகமே பிரதிபலித்தது.
நித்திலா எதையும் யோசிக்காமல் அதை தனது விரலால் சுண்டிவிட்டவள் அவ்வளவு தான் என்பது போல கண்களை விரிக்க கிருஷ்ணராஜசாகர் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
அவன் நன்றி சொல்வான் என எதிர்பார்த்த நித்திலாவுக்கு எதுவுமே நடக்காதது போல அவன் நின்ற விதம் எரிச்சல் மூட்டியது. அப்போது மன்னிப்பு கேட்கவில்லை. இப்போதே நன்றி கூறவில்லை. என்ன மனிதன் இவன்? கேட்டால் யார் முன்னேயும் தலை குனிய மாட்டேன் என வசனம் பேசுவான்.
சட்டென பார்வையைக் கீழே பதித்தவள் தான் தூக்கி வீசிய சிலந்தியை மீண்டும் அவன் மீது வீசிவிடுவோமா என தேடினாள்.
“என்ன தேடுற?”
“உங்க மேல இருந்த பூச்சிய தேடுறேன்”
“எதுக்கு?”
மீண்டும் அருவருப்பு அவன் முகத்தில்.
“மரியாதைக்குக் கூட தேங்க்ஸ் சொல்லாத உங்களை கடிக்க வச்சு ஸ்பைடர் மேன் ஆக்குறதுக்கு தான்”
“டிஸ்கஸ்டிங்”
கர்வத்தின் மொத்தவுருவாக இருக்கும் இவனைத் தலைகுனிய வைத்தால் என்ன?
சடுதியில் தோன்றிய விபரீத எண்ணத்தோடு நித்திலா அவன் அருகில் நெருங்கவும் என்ன என்பது போல புருவம் உயர்த்தினான்.
“உங்க தலையில இன்னொரு சிலந்தி பூச்சி இருக்கு”
இரகசியம் பேசுவது போல கூறினாள் அவள்.
அவன் சிலையாய் சமையவும் “கொஞ்சம் குனிஞ்சிங்கனா தட்டி விடுவேன்” என்றாள் அமர்த்தலாக.
கிருஷ்ணராஜசாகர் வெறுமென தலையை மட்டும் குனிந்தான்.
“உங்க உயரத்துக்கு நீங்க தரையில உக்காந்தா கூட எனக்கு உங்க தலை எட்டாது சார்… வெறுமெனே குனிஞ்சா எப்பிடி எட்டும்?”
அவள் குறை சொல்லவும் குளத்தின் சிமெண்ட் கரையில் அமர்ந்து நித்திலாவின் முன்னே தலை குனிந்தான் கிருஷ்ணராஜசாகர். எங்கே பூச்சி தலையிலிருந்து முகத்தில் ஊர்ந்துவிடுமோ என்ற அருவருப்பு.
நித்திலா பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

இவர் பெரிய வணங்காமுடி என மனதுக்குள் நக்கலாகச் சொல்லிக்கொண்டவள் அப்படியே விட மனமின்றி அவனைச் சீண்ட எண்ணினாள்.
குனிந்திருந்த தலை மீது ஆசிர்வதிப்பது போல கை வைத்தாள்.
“தென்னை மரத்துக்கும் பனைமரத்துக்கும் போட்டியா ஆறடிக்கு வளந்து நின்னா மட்டும் பத்தாது… அடுத்தவங்களுக்கு மரியாதை குடுக்க கத்துக்கணும்… மனுசங்க எல்லாருக்கும் இருக்க வேண்டிய பேசிக் மேனர்ஸை இனியாச்சும் வளத்துக்கணும்… பூச்சிய கண்டதும் வர்ற பணிவுல பாதி பணிவாச்சும் மனுசங்க கிட்ட பேசுறப்பவும் வரணும்… புரிஞ்சுதா?”
கிருஷ்ணராஜசாகர் திகைப்போடு நிமிரவும் “ஆயுஷ்மான் பவ” என சிரிப்பை அடக்கிக்கொண்டு வாழ்த்தியவள் அங்கிருந்து ஓடிவிட்டாள்.
கிருஷ்ணராஜசாகர் தன்னை கேலி செய்துவிட்டு ஓடியவளை என்ன செய்வதென புரியாமல் வாயடைத்து நின்றான்.
இக்காட்சியை ஒரு ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த நிஹாரிகாவோ பொறாமையில் வெந்து போனாள்.
எதற்கும் லாயக்கற்றவளின் முன்னே சாகர் நிவாசின் வாரிசு தலை குனிகிறான். அவளும் அவனிடம் விளையாடிவிட்டு ஓடுகிறாள். இத்தனை நெருக்கமா அவர்களுக்குள்? எப்போதுமே நித்திலாவை அற்பமாக எண்ணும் அவளது புத்திக்கு அங்கே நடந்தது காதலர்களின் விளையாட்டாகத் தோன்றிவிட்டது. சற்று முன்னர் சந்தீப்பைக் கண்டதும் மனம் நெகிழ்ந்ததை மறந்து நித்திலாவின் மீது வன்மம் தோன்ற நின்றாள் நிஹாரிகா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

