ஹோட்டல் மெரிடியன் மாலை நேர விளக்கொளியில் மின்னிக் கொண்டிருந்தது. அதன் ஒரு பக்கத்திலுள்ள ரெஸ்ட்ராண்டில் அவர்களுக்கென்று முன்பதிவு செய்யப்பட்டிருந்த இடத்தில் யாருடைய தொந்தரவுமின்றி தனிந்திருந்தனர் அவந்திகாவும் அவளது தோழிகளான ரித்திமாவும், பிரதியுஷாவும்.
அவர்களுக்கு எதிர்ப்புற இருக்கையில் எதையோ பறிகொடுத்தாற் போன்ற முகபாவனையுடன் வருண் அமர்ந்திருக்க, வழக்கமான அலட்சியமானத் தோரணையுடன் ராகவ் அவனுக்கு அடுத்து அமர்ந்திருந்தான். அவனது முகத்தில் கொட்டிக் கிடந்தது நூறு சதவீத எரிச்சல் மட்டுமே. அதற்கு சூத்திரதாரியான பிரதியுஷா தான் கேட்ட கேள்விக்கு இன்னும் அவனிடமிருந்து பதில் வரவில்லையே என்று கேட்டுவிட்டு கையைக் கட்டிக்கொண்டபடி அவர்கள் நால்வரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற ரீதியில் அமர்ந்திருந்தனர் கிஷோரும் அமரும்.
பிரதியுஷா பெருமூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவள் “மிஸ்டர் ராகவ் கபூர்! இன்னும் என்னோட கேள்வி எதுக்குமே நீங்க ஆன்சர் பண்ணலை… அந்தக் காட்டுக்குள்ள நீங்க அவந்திகாவைப் பார்த்த வரைக்கும் ஓகே! ஆனா நீங்க கிட்னாப்பரைப் பார்த்திருக்கிங்க, சோ போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்தா நீங்க சாட்சி சொல்ல வருவிங்களானு கேட்டேன்… இன்னும் பதில் வரலையே” என்று புருவம் உயர்த்திக் கேட்க
ராகவ் தொண்டையைச் செருமிக் கொண்டவன் “எனக்கு அந்த மாதிரி யூஸ்லெஸ்ஸா செலவளிக்கிறதுக்கு நேரம் இல்லை மிஸ் பிரதியுஷா சிங்.. உங்க ஃப்ரெண்ட் இப்போ உங்க கண்ணு முன்னாடி பத்திரமா இருக்கா… அதை நினைச்சுச் சந்தோசப்படுங்க… தேவை இல்லாம பேசி எங்க டைமை வேஸ்ட் பண்ணாதிங்க.. பிகாஸ் எங்களோட பிஸி ஷெட்யூல்ல இப்பிடி வெட்டியா கழிக்கிறதுக்கு நேரம் இல்லை” என்றான் கடுகடுத்தக் குரலில் மறைக்கப்பட்ட உஷ்ணத்துடன்.
சும்மாவே அவனுக்கு பிரதியுஷா என்றால் வேப்பங்காயாகக் கசக்கும். இதில் தன்னை அவள் கேள்வி வேறு கேட்கவே இந்த ஏமாற்றுக்காரிக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்ற ரீதியில் அவனது பதில்கள் அமைந்தது. அவனது பதில் பிரதியுஷாவுக்கும் எரிச்சலைத் தான் கொடுத்தது. அடக்கப்பட்டக் கோபத்துடன் வருணை முறைத்தவள்
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“உன்னோட பிரதர் கிட்ட இருந்து இந்த மாதிரி பதில் தான் கிடைக்கும்னு எனக்குத் தெரியும் வருண்.. உன்னை மாதிரியே சுயநலம், தன்னைத் தவிர வேற யாரைப் பத்தியும் யோசிக்காத தன்மை… நாலு பேரும் ஒரே அச்சுல வார்த்த மாதிரி தான் இருக்கிங்க” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.
இதையெல்லாம் கவனித்த அவந்திகா இவர்களின் சிறுபிள்ளைத்தனமான வாக்குவாதம் சண்டையாக மாறுவதற்கு முன்னர் இருவரையும் அமைதிப்படுத்த எண்ணி ராகவின் முகத்தைப் பார்க்க அங்கே ‘நீ என்ன சொன்னாலும் நான் கேட்கப் போவதில்லை’ என்று எழுதி ஒட்டியிருக்க அவள் பிரதியுஷாவை அமைதிப்படுத்தத் தொடங்கினாள்.
“உஷா நடந்து முடிஞ்சதைப் பேசி என்ன ஆகப்போகுதுடி? இதைப் பத்தி பேசுறதை விட்டுட்டு நடக்கப் போறதை யோசிப்போம்”
“அப்போ உன்னைக் கிட்னாப் பண்ணுனவனை அப்பிடியே விட்டுடலாமா ஹனிபி? ஆர் யூ கிரெஸி? இன்னைக்குக் கிட்னாப் பண்ணுனவன் நாளைக்கு எந்த எக்ஸ்ட்ரீமுக்கு வேணும்னாலும் போவான்” என்று பொங்கிய பிரதியுஷாவின் பார்வை சந்தேகத்துடன் ராகவைத் தான் சுற்றியது. ஏனெனில் அவந்திகாவின் நிச்சயதார்த்தத்தின் போது தான் கீழே சென்ற பிறகு தான் அவள் காணாமல் போயிருந்தாள்.
அப்போது தன்னைக் கீழே யாரோ அழைப்பதாகச் சொல்லித் தன் கவனத்தைத் திசை திருப்பிவிட்டவனின் முகம் ராகவுடன் ஒத்துப் போனதே அதற்கு காரணம். வெறும் பிரெஞ்சுத் தாடியும் சோடாபுட்டிக் கண்ணாடியும் அணிந்திருந்தால் இவன் தசாவதாரம் கமலஹாசன் போல வேறு ஒரு கதாபாத்திரமாக மாறிவிடுவானோ என்று ஏளனத்துடன் எண்ணியவள் உண்மையை அவந்திகா வாயிலிருந்தே பிடுங்க எண்ணினாள்.
“ஹனிபி நீ கௌசிக்கா கிட்ட பொய் சொன்ன மாதிரி என் கிட்டவும் பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே… எனக்கு நல்லா தெரியும் வருண் தான் உன்னைக் கிட்னாப் பண்ணுனான்னு” என்று சொல்லி அங்கிருந்தவர்களை அதிர வைத்தாள்.
.அவள் எதிர்பார்த்தது போலவே அவந்திகா படபடவென்று பொறியத் தொடங்கினாள்.
“உஷா! தேவையில்லாம வருணை ஏன் இழுக்கிற? ஹீ இஸ் இன்னசண்ட்”
“இஸிண்ட்? நீ இப்போவும் பொய் தான் சொல்லுற ஹனிபி”
“இல்லை உஷா! வருண் என்னைக் கிட்னாப் பண்ணலை… நான் கண் முழிச்சதும் அந்த வீட்டுல யாருமே இல்லை”
“வீடா? உன்னைக் கிட்னாப் பண்ணுனவங்க காட்டுக்குள்ள கூட்டிட்டுப் போனதும் இவங்க நாலு பேரும் உன்னைக் காப்பாத்துனாங்கனு தானே நீ சொன்னே… இப்போ ஏதோ வீடுனு சொல்லுற… பொய் மேல பொய்யா சொல்லாதே ஹனிபி… எனக்குத் தெரியும் இந்த வருண் தான் உன்னைக் கிட்னாப் பண்ணிருக்கான்.. இப்போவே நான் போலீஸ்ல இவன் மேல கம்ப்ளைண்ட் குடுக்கப் போறேன்” என்று அங்கிருந்து எழுந்து நகரப் போனவளை அவந்திகா பதறிப் போய்த் தடுக்க எழுந்தாள்.
“ஷட் அப் உஷா! என்னைக் கிட்னாப் பண்ணுனது வருண் இல்லை… ராகவ்” என்று அவசரத்தில் வார்த்தையை விட அடுத்த நொடி பிரதியுஷாவின் கை அவள் கன்னத்தில் இறங்கியது பலமாக.
இதைக் கண்டு அனைவரும் கலங்கிப் போக அவந்திகாவைப் பிரதியுஷா அறைந்ததில் என்னவென்று தெரியாத சினம் அவனது மனதில் மூள “இனாஃப்… பைத்தியமா பிடிச்சிருக்கு உங்களுக்கு? இப்பிடி ரூடா நடந்துக்கிறிங்க?” என்று வெளிப்படையானக் கோபத்துடன் ராகவ் கேட்க
பிரதியுஷா “யூ ஷட் அப்… ஹனிபி என்னோட ஃப்ரெண்ட்… இதுவரைக்கும் அவ எங்க கிட்ட எதையுமே மறைச்சதில்லை.. இந்த ட்வென்ட்டி ஒன் டேய்ஸ் எங்களோட ஃபேமிலி மொத்தமும் நரகம்னா எப்பிடி இருக்குங்கிறதை உயிரோட இருக்கிறப்போவே அனுபவிச்சிட்டோம்… இவ எங்கே போனா? என்ன ஆனா? உயிரோட இருக்காளா இல்லையானு யோசிச்சு யோசிச்சு நாங்கலாம் பாதி உயிரா ஆகிட்டோம்…
ஆனா அவளைக் கிட்னாப் பண்ணுன உன்னை மாதிரி ஒருத்தனுக்காக அவ எங்க எல்லார் கிட்டவும் பொய் சொல்லிருக்கா… இவ்ளோ சீப்பா என் ஃப்ரெண்டை கிட்னாப் பண்ணுன நீ எங்களுக்கு இடையில வராதே… உன்னை யார் இப்பிடி செய்யச் சொல்லித் தூண்டிருப்பானு எனக்கு நல்லாவே தெரியும்” என்றவளின் பார்வை வருணை வெறித்தது.
வருணிடம் நெருங்கியவள் “உன்னை நான் ரொம்ப நம்புனேன் வருண்… ஆனா நீ இவ்ளோ சீப்பா பிஹேவ் பண்ணுவேனு நான் யோசிச்சுக் கூடப் பார்க்கலை… உன் தம்பி பண்ணி வச்ச கேடுகெட்ட காரியத்தால அவ நிச்சயதார்த்தம் நின்னு போச்சு… அவளுக்கு இதைப் பத்தி அக்கறை இல்லாம இருக்கலாம்.. ஏன்னா அந்த இன்ஸிடெண்ட் நடந்தப்போ அவ அங்கே இல்லை…
அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கௌசிக்காவை என்னெல்லாம் சொல்லி மோசமா பேசுனாங்க தெரியுமா? அந்தம்மா கௌசிக்கா கூட பேங்க்ல ஒர்க் பண்ணுறாங்க… அந்த சரவுண்டிங்லயும் கௌசிக்காவைப் பத்தியும் அவந்திகாவைப் பத்தியும் மோசமா சொல்லி வச்சிருக்காங்க… ஒரு பொண்ணோட கல்யாணமோ நிச்சயமோ நின்னு போறது ஒன்னும் அவ்ளோ ஈஸியான விசயம் இல்லை… இதுல்லாம் உனக்குப் புரியாது வருண்.. உனக்கு உன்னோட பிடிவாதம் தான் முக்கியம், அப்போவும் சரி இப்போவும் சரி” என்று சொல்லிவிட்டு அவந்திகாவின் கையைப் பற்றிக் கொண்டு நகர
வருண் “ரதி ஒரு நிமிசம் நில்லு” என்று சொல்லவும் கோபத்துடன் திரும்பி வந்தவள்
“என்னை ரதினு சொல்லாதே வருண்… இன்னையோட எல்லாமே முடிஞ்சு போச்சு… இனி என் வாழ்க்கையில வருண்னு ஒருத்தனுக்கு எந்த இடமும் கிடையாது” என்று உறுதியானக்குரலில் சொல்லிவிட்டு அவந்திகாவுடன் நகர, ரித்திமா வருணை வருத்தம் நிறைந்த விழிகளால் ஏறிட்டுவிட்டு அவர்களைப் பின்தொடர்ந்தாள்.
பிரதியுஷா அங்கிருந்து நகர்ந்ததும் வருண் தொப்பென்று இருக்கையில் அமரவும் அவனது மூன்று சகோதரர்களும் இதற்கு தாங்கள் தானே காரணம் என்று குற்றவுணர்ச்சியில் தவிக்கத் தொடங்கினர்.
ராகவ் கிட்டத்தட்ட அதே மனநிலையில் தான் வீட்டுக்குச் சென்ற பின்னரும் உலாவினான். வருண் வெளிப்பார்வைக்குத் தான் சரியாகிவிட்டதாகக் காண்பித்துக் கொண்டாலும் அவன் உள்ளுக்குள் கலங்கிப் போய்விட்டான். இதை உணர்ந்த ராகவ் பிரதியுஷாவின் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான். அதே நேரம் அவள் இல்லாத வாழ்க்கையை வருணால் நினைத்துக் கூடப்பார்க்க முடியாது என்று அறிந்து கொண்டவனுக்குக் காதல் என்ற வார்த்தையே வெறுத்துப் போய்விட்டது.
எப்படி இருந்த என் சகோதரன் ஒரு பெண்ணின் மீது கொண்ட காதலால் இன்று பைத்தியக்காரனாகி விட்டானே என்று எண்ணிக் கடுகடுத்தவன் மனதில் பிரதியுஷாவைக் கட்டுப்படுத்தும் சாவியாகத் தெரிந்தவள் அவந்திகா மட்டுமே.
அதே நேரம் அவந்திகாவின் நிச்சயம் நின்று போனதற்கு தான் மட்டுமே முழுக்காரணம் என்ற நினைவும் எழுந்தது. இப்போது அவனுக்கு இருக்கும் பிரச்சனைகள் இரண்டு மட்டும் தான்.
பிரதியுஷாவின் பிடிவாதத்தை உடைத்து அவளை எப்படியாவது வருணுடன் சேர்த்து வைப்பது, மற்றொன்று அவந்திகாவின் நின்று போன நிச்சயத்தால் பிரதியுஷா சொல்வது போல அவளுக்கும் அவள் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட அவப்பெயரைச் சரி செய்வது.
வருணின் பிரச்சனையை அவன் ஒரு சகோதரனாக அணுக முடிவெடுத்தான். ஆனால் அவந்திகாவின் விஷயத்தை ஒரு பிஸினஸ்மேனாகவே எதிர்கொள்ள விரும்பினான். அவளுக்கு உதவி செய்தால் பதிலுக்குத் தனக்கு என்ன கிடைக்கும் என்று யோசித்தவனுக்கு அவந்திகா இல்லாத நாட்களில் நாங்கள் வாழும் போதே நரகத்தை உணர்ந்தோம் என்ற பிரதியுஷாவின் முகம் மனக்கண்ணில் தோன்ற மடமடவென்று அவன் மூளை அடுத்து என்னவென்று திட்டம் தீட்ட ஆரம்பித்தது.
எவ்வளவு சீக்கிரம் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறோமோ அவ்வளவு சீக்கிரத்தில் வருணும் சரியாகிவிடுவான் என்று கணக்கிட்டவன் நாளையிலிருந்தே அதைச் செயல்படுத்த எண்ணியவனாய் படுக்கையில் விழுந்து கண்ணை மூடி நித்திரையில் ஆழ முயன்றான்.
****************
அவந்திகா வீட்டுக்கு வந்து ஒரு வாரம் கழிந்துவிட்டது. கௌசல்யாவும் ரகுவரனும் அவளது நிச்சயம் நின்று போனதன் விளைவை அன்றாட வாழ்க்கையில் தாங்கள் எதிர்கொண்ட மனிதர்கள் வாயிலாக அடிக்கடி சந்தினர் எனலாம்.
“உங்க பொண்ணோட நிச்சயம் நின்னு போச்சாமே” என்ற பரிதாபத்துடன் தொடங்கும் உரையாடல்
“இதுக்குத் தான் பொண்ணுங்களுக்கு ஓவரா சுதந்திரம் குடுக்கக் கூடாதுனு சொல்லுறது… அவ நேரம் காலம் தெரியாம அந்த ஈவெண்ட், இந்த மேரேஜ் கான்ட்ராக்ட்னு சுத்துறப்போவே நீங்க கன்ட்ரோல் பண்ணிருக்கணும்.. பொண்ணுங்க சேர்ந்து ஒரு கன்சர்னை நடத்துறதுலாம் சரிப்படுமா?” என்ற ஏளனம் விரவிய அறிவுரையில் தான் முடியும்.
இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முன்பு போல கௌசல்யா வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வங்கி விட்டால் வீடு என்றே இருக்கப் பழகிக் கொண்டார். ரகுவரனும் இம்மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் “என் பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியும்” என்ற ஒற்றைவார்த்தையில் அனைவரையும் சமாளித்துவிடுவார்.
ரகுவரனும் கௌசல்யாவும் தான் இதை நினைத்து வருந்தினரே தவிர அவந்திகா, அம்புஜா மற்றும் அர்ஜூன் மூவரும் வழக்கம் போல அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
அவ்வாறிருக்க ஒரு ஞாயிறன்று குடும்பமாக அமர்ந்து அனைவரும் காபி அருந்தி கொண்டிருக்கையில் கௌசல்யா மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.
“ரகு! உங்களுக்கு என்னோட ஃப்ரெண்ட் சுஜாதா தெரியுமா? அவங்க அக்கா கூட இப்போ யூ.எஸ்ல செட்டில் ஆகிட்டாங்கனு சொல்லியிருக்கேனே”
“ம்ம்… அவங்களுக்கு என்ன?”
“அவங்களுக்கு ஒன்னும் இல்லை… அவங்க பையனுக்கு இப்போ தான் பொண்ணு பார்த்திட்டிருக்காங்களாம்.. சுஜி என் கிட்ட அவந்திகாவோட ஜாதகத்தைக் கேட்டா… வாட்சப்ல அனுப்பியிருந்தேன்… அந்தப் பையனுக்கும் அவந்திகாவுக்கும் பொருத்தம் நல்லா இருக்காம் ரகு.. இன்னும் ஒரு மாசத்துல அவன் இந்தியாவுக்கு வர்றானாம்… அப்பிடியே கல்யாணத்தைப் பேசி முடிச்சிடலாமானு கேட்டா… நீங்க என்ன சொல்லுறிங்க?”
“இதைப் பத்தி இனிமே அவந்திகா தான் முடிவு பண்ணனும்… நான் சொல்லுறதுக்கு எதுவும் இல்லை கௌசி”
“அவ சின்னப்பொண்ணுங்க… அவளுக்கு இதெல்லாம் புரிஞ்சிக்கிற அளவுக்குப் பக்குவம் வரலை”
இந்த வார்த்தையைக் கௌசல்யா உச்சரிக்கவும் ரகுவரனின் பார்வை அவந்திகாவை “கேட்டியா மகளே?” என்று கேட்டுவிட்டுத் திரும்ப, அவந்திகா இம்முறையாவது தான் சுதாரித்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் உள்ளுக்குள் எழவே முதல் முறையாகக் கல்யாணவிஷயத்தில் கௌசல்யாவுக்கு மாற்றுக்கருத்து தெரிவிக்க ஆரம்பித்தாள் அவள்.
“சித்தி நான் இனிமே அரேஞ்ச்ட் மேரேஜ் பண்ணிக்கிற ஐடியால இல்லை” என்று நிதானமாகச் சொன்னவளை ஆச்சரியத்துடன் நோக்கினர் அவளது குடும்பத்தினர்.
கௌசல்யா திகைத்துப் போனவராய் “அரேஞ்ச் மேரேஜ் வேண்டாம்னா என்ன அர்த்தம் அவந்திகா? யாரையாவது விரும்புறியா?” என்று வினவ
“இது வரைக்கும் யாரையும் லவ் பண்ணலை சித்தி… இனிமே தான் ஆளைத் தேடணும்” என்று அவள் சொன்ன விதத்தில் ரகுவரனுக்குச் சிரிப்பு வர அவந்திகா அவருக்கு ஹைஃபை கொடுத்தவள் தானும் சேர்ந்து புன்னகைத்துக் கௌசல்யாவின் இரத்த அழுத்தத்தை உயர்த்திக் கொண்டிருந்தாள்.
சித்தியின் கண்ணில் கனலைக் கண்டவள் “கூல் சித்தி… சீக்கிரமே உங்க மருமகனோட வருவேன்.. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று அவரது காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு கௌசல்யா கடுப்புடன் ஏதோ சொல்ல வருவதற்குள் தனது அறைக்குள் ஓடி மறைந்தாள்.
கௌசல்யாவுக்கு இத்தனை நாட்கள் நன்றாக இருந்த பெண்ணுக்கு எங்கே இருந்து இப்படி ஒரு எண்ணம் என்று புரியாது விழிக்க, தனது அறைக்குள் சென்று விட்ட அவந்திகாவோ தோழியரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“இப்போதைக்கு எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லை உஷா… ஆனா சித்தியைச் சமாளிக்கணுமே! அதான் இப்பிடி ஒரு காரணத்தைச் சொல்லி அவங்களை ஆப் பண்ணுனேன்… இனிமே கொஞ்சநாளுக்கு கல்யாணப்பேச்சு வராது… ஜாலி” என்று சொல்லிக் குதூகலித்தாள் அவள்.
ஆனால் அவளது இந்தக் குதூகலத்துக்கும் தனிமை வாழ்வுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒருவன் திட்டம் தீட்டிவிட்டான் என்பதை அவள் அறியும் நேரம் அவன் அவள் குடும்பத்துக்கு நெருங்கியவனாகிவிடுவான் என்பதை முன்கூட்டியே அறியும் அறிவு அவந்திகாவுக்கு இல்லையே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


