காலை எழுந்த ராதிகா புது மருமகளை வீட்டிற்கு வரவேற்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்க வீடே பரபரப்பாக இருந்தது.
நேரம் கழித்து எழுந்த ராகவுக்கோ அம்மாவின் முகத்தில் விழிக்க யோசனையாக இருந்தது.
“இது எல்லாத்துக்கும் அந்த ஜான்சி ராணிதான் காரணம். அவ மட்டும் இன்னைக்கு வரட்டும்” என்று மனதிற்குள்ளேயே கறுவிக்கொண்டான்.
இவ்வாறு நேரம் சென்றுகொண்டேயிருக்க உஷாவும் வருணும் உஷாவின் பிறந்த வீட்டிலிருந்து அங்கே வந்துவிட்டார்கள். அவர்களுடன் உஷாவின் குடும்பத்தினரும், அவந்திகாவின் குடும்பத்தினரும் வர ராகவ் இவர்களைச் சமாளிக்கும் வழி அறியாமல் விழித்தான்.
வருணிடமும் உஷாவிடமும் சென்று வழக்கம் போலப் பேசினான். கௌசல்யாவிடமும் ரகுவரனிடமும் விமானப்பயணம் சுகமா என்று ஒரு நல்ல மருமகனாக விசாரித்தான்.
கிஷோரும் அமரும் அவந்திகா பற்றிக் கேட்டதற்கு ஏதேதோ சொல்லிச் சமாளித்தான். ஆனால் ரித்திமாவுக்கு அவந்திகாவை ஏன் இவ்வளவு நேரம் காணவில்லை என்ற சந்தேகம் வர நேராக ராகவிடம் சென்று கேட்டே விட்டாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ரித்தி அவ ரிசப்ஷன் வேலையா உங்க ஆபிஸ்லதான் நேத்து நைட் ஸ்டே பண்ணுனா. சோ அவ அத முடிச்சிட்டுதான் வருவானு நெனைக்கிறேன்” என்று சொல்லவும் ரித்திமா அதற்குச் சமாதானம் ஆகவே இல்லை. ராகவ் எதையோ மறைக்கிறான் என்று யோசித்துக்கொண்டே “அதுக்கான பாதி ஒர்க் ஆல்ரெடி நானே கம்ப்ளீட் பண்ணிட்டேன். இப்போ அவ என்ன பண்ணப் போறா?” என்று கேட்க ராகவ் அவளைச் சமாளிக்கத் தன் தாயிடம் கூறிய பொய்யை அவளிடமும் கூறினான்.
“ஆக்சுவலி என்னோட சர்க்கிள் ஃப்ரெண்ட்ஸும் வர்றதால அவ கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து ஏற்பாடு எல்லாமே பண்ணிட்டு இருக்கா” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வாசலில் நிழலாட அங்கே திரும்பியவன் கையில் சூட்கேசுடன் நின்ற அவந்திகாவைக் கண்டவன் அவனை அறியாமல் புன்னகைத்தவாறே எழுந்தான்.
எழுந்தவன் வேகமாக ஓடிச் சென்று அவளை அணைக்கவும் அவந்திகா பல்லைக் கடித்துக்கொண்டே “ஹலோ ஹவ் டேர் யூ டு ஹக் மீ?” என்று கோபத்துடன் உரைக்க அணைப்பை விடாமல் அவளின் காதில் “லிசன். இங்க எல்லார்கிட்டயும் நீ ரிசப்ஷன் ஒர்க்காக ஆபிஸ்ல தங்கிட்டனு சொல்லிருக்கேன். அத அப்பிடியே மேனேஜ் பண்ணு. சொதப்பி வச்சிடாத” என்று எச்சரித்துவிட்டு அவளை விடுவித்தான்.
அவனிடம் சரியென்று தலையாட்டிய அவந்திகா குடும்பத்தாரிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கிவிட்டு உஷா வருணிடம் கொஞ்சம் அரட்டை அடித்துவிட்டு, ரித்திமாவிடம் ரிசப்ஷன் ப்ளானை விவரித்து முடித்தாள்.
பின்னர் சோஃபாவில் அமர்ந்தவளின் அருகில் ராகவ் வந்து அமரவும் அவள் தள்ளிச் சென்றாள். அவன் மீண்டும் அருகில் வரத் தள்ளிச் செல்ல முயன்றவளின் கையைப் பிடித்துத் தடுத்தவன் அவளின் காதில் “இன்னொரு தடவை இதே மாதிரி நீ அப்நார்மலா பிஹேவ் பண்ணா அப்புறம் என்னோட மடியிலதான் உக்கார வேண்டியதா இருக்கும்” என்று சொல்ல அவந்திகா அவனை முறைத்தாள்.
“நான் அப்நார்மலா பிஹேவ் பண்றேனா? நீதான் என்கிட்ட வந்து உக்காந்த மேன்” என்று கடுகடுத்தாள் அவள்.
“உலகத்துல புருஷன் பக்கத்துல உக்காந்ததுக்குத் தள்ளிப் போன பொண்டாட்டி நீயாதான் இருப்ப., எப்பிடி பிஹேவ் பண்ணனும்னு உஷா பாபியப் பாத்துக் கத்துக்கோ” என்று ராகவ் அங்கே வெட்கத்துடன் அமர்ந்திருக்கும் உஷாவைச் சுட்டிக்காட்ட அவளோ “ஏய்! அவங்களும் நம்மளும் ஒண்ணா? அவங்க லவ் மேரேஜ். ரொம்ப கனவுகளோட லைஃப ஸ்டார்ட் பண்ணிருக்காங்க. அதே மாதிரிலாம் என்னால பிஹேவ் பண்ண முடியாது” என்று முகத்தைச் சுருக்கிக்கொண்டே கூறினாள்.
அதில் எரிச்சலானவன் “எதுக்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்காத ஓகே! காட்! ஐ காண்ட் மேனேஜ் திஸ் ட்ரபிள்” என்று அவன் மேலே பார்த்துச் சொல்ல அவந்திகா “நீ என்னைப் பாத்து ட்ரபிள்னு சொல்லுவியா?” என்று பதிலுக்குச் சண்டை போட இப்படியே இருவரும் விவாதிப்பதைப் பார்த்த குடும்பத்தாருக்கு அவர்களின் சண்டை புரியவில்லை. இருவரும் ஏதோ சீரியஸாகப் பேசிக்கொண்டிருப்பதாகவே நினைத்தனர்.
ராகவ் தான் குடும்பத்தாரிடம் அவள் சென்றதற்கான உண்மைக் காரணத்தைச் சொல்லவில்லை என்று சொன்னதும்தான் அவந்திகாவிற்கு நிம்மதியானது. தன் சித்தியைச் சமாளிக்கும் வேலை மிச்சம் என்று எண்ணிக்கொண்டாள்.
ரித்திமா அவந்திகாவிடமும் ராகவிடமும் ரிசப்ஷனுக்கு அணியப் போகிற ஆடைகளைப் பற்றிக் கேட்க அவந்திகா “கம் ஆன் ரித்தி! அத நியூலி மேரிட் லவ் பேர்ட்ஸ்கிட்ட கேளுடி.. நம்ம எல்லாரும் ஆடியன்ஸ்தான்” என்று சாதாரணமாகக் கூறினாள்.
ரித்திமா திகைத்தவளாய் “வாட்? உனக்கும் இப்போதான் கல்யாணம் நடந்துருக்கு. அண்ட் இந்த ரிசப்ஷன் உங்களுக்கும் சேத்துதான் நடக்கப் போகுது” அவளைப் பார்த்துக் கூற அவந்திகா ஒரு பொய்ச்சிரிப்பை உதிர்த்தவளாய் “அப்பிடினு யாரு சொன்னாங்க?” என்று கேட்டாள்.
“ராகவ்தான்” என்று ரித்திமா சொல்லவும் அவந்திகா ராகவை முறைத்தாள்.
அவன் குனிந்து அவள் காதினுள் “நான்தான் அப்பிடிச் சொன்னேன் ஜான்சி ராணி. எனக்கு அவளைச் சமாளிக்க வேற வழி தெரியல” என்றான்.
“அஹான்., எனக்கு இந்த ரிசப்ஷன் வேண்டாம்” என்று அவந்திகா அவனிடம் பிடிவாதமாகக் கூற அவன் சிரித்துக்கொண்டே “நோ ப்ராப்ளம். அப்போ நான் கௌசிமாகிட்ட போய் நீ பெங்களூரு வந்ததுக்கான ரீசனைச் சொல்லுவேன்” என்று கூலாகக் கூறினான்.
“உன்னை” என்று சொல்லிவிட்டு அவன் கழுத்தை நெறிப்பது போலத் தன் கைகளைக் கொண்டு சென்றவள் ரித்திமா தங்களைக் கவனித்துக்கொண்டிருப்பதை உணர்ந்து அப்படியே தன் கைகளால் அவன் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சுவது போல வைத்து “வாவ்! ராகவ் சொன்னா எல்லாமே கரெக்டாதான் இருக்கும்” என்று சொல்லவே ராகவால் சிரிப்பை அடக்க இயலவில்லை.
மெதுவாக அவளிடம் “நாட் பேட் மிஸஸ் கபூர். எனக்கு அப்பிடிலாம் பிஹேவ் பண்ண வராது, இப்பிடிலாம் பிஹேவ் பண்ண வராதுனு சொல்லிட்டே இவ்ளோ கியூட்டா நடந்துக்கிற நீ” என்று சொல்லிவிட்டுத் தன் கன்னத்தைப் பிடித்துக்கொண்டிருந்த அவள் கைகளைத் தன் கண்ணால் காட்டினான்.
அவந்திகா உடனே பதறிப்போய்த் தன் கைகளை எடுத்துக்கொண்டு ரித்திமாவைப் பார்த்துச் சிரித்துச் சமாளித்தாள். ராகவிற்கு அவளின் அந்தச் சிரிப்பைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை.
சில உறவுகள் டாம் அண்ட் ஜெர்ரி போல., ஒன்றாக இருக்கும்போது நிறைய சண்டைகள் விவாதங்களுடன் தொடரும்., ஆனால் இதில் பெரிய ஜோக் என்னவென்றால் அவர்களால் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்கவும் முடியாது. அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள அவர்கள் முயற்சிப்பதும் இல்லை.
அன்றே ரித்திமா ரிசப்ஷனுக்கு ராகவ் அவந்திகாவுக்கு உடையைத் தேர்வு செய்யக் கிஷோருடன் சென்றுவிட்டாள். உஷா வருணுடன் சென்றுவிடவே தனியாக இருந்த அவந்திகா அந்த வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள்.
அமர் அவளுக்கு ஒவ்வொரு இடமாகக் காட்டினான். அந்த வீடு ஐந்து தளங்களுடன் பெரிய தோட்டம் அகன்ற கார் பார்க்கிங் மற்றும் ஒரு பெரிய நீச்சல் குளத்துடன் இருந்தது. அடித்தளத்தில் சமையலறை, பூஜையறையுடன் பெரிய ஹால் இருந்தது. வீட்டின் பெரியவர்களின் அறையும் கீழ் தளத்திலேயே இருந்தது.
முதல் தளம் முழுவதும் வருணுடையது. இரண்டாவது தளத்தில் ராகவின் அறை இருந்தது. மூன்றாவது தளம் அமர் மற்றும் கிஷோருடையது. நான்காவது தளம் விருந்தினர்களுக்கானது. அங்கே லைப்ரரியும் இருந்தது. ஐந்தாவது தளத்தில் உடற்பயிற்சிகூடம் இருந்தது. கிரவுண்ட் ஃப்ளோர்லிருந்து செல்ல லிஃப்டும் இருந்தது.
பணியாட்களுக்குத் தனியாகக் குவாட்டர்ஸ் கொடுக்கப்பட்டதால் அவர்கள் வேலை முடிந்ததும் அங்கே சென்றுவிடுவர். இதைச் சுற்றிப் பார்த்த அவந்திகா ஒரு ஊரே இந்த வீட்ல இருக்கலாம் என்று மனதினுள் சொல்லிக்கொண்டாள்.
எல்லாத் தளத்தையும் பார்த்துவிட்டு மீண்டும் ஹாலுக்கே வந்து சேர்ந்தனர் அவந்திகாவும், அமரும்.
அங்கே உட்கார்ந்திருந்த ராகவ் அவந்திகாவைக் கண்டதும் எழுந்தான். அமரிடம் ஏதோ பிசினஸ் டீல் பற்றி விளக்கியவன் அவனை அனுப்பிவிட்டு அவந்திகாவை நோக்கி வந்தான். அவளிடம் வந்து “லெட்ஸ் கோ” என்று சொல்ல அவந்திகா புரியாமல் “எங்க?” என்று கேட்டாள்.
“நம்ம ரூம்குதான்” என்றான் ராகவ் சாதாரணமாக.
“வாட்? நம்ம ரூமா? ஏன் எனக்கு இங்க தனி ரூம் கெடையாதா?” என்று அவள் அமர்த்தலாகக் கேட்கத் தன் ஆட்காட்டி விரலால் நெற்றியைக் கீறியவன் “ம்ம்.. தனி ரூம்தானே! குடுத்துட்டாப் போச்சு! நீ என்ன பண்ற கௌசிமா அந்த ஹால்லதான் இருக்காங்க. அவங்களையும் கூட்டிட்டு வா! நான் உன்னோட தனி ரூம்ம அவங்களுக்கும் காட்டுனா பெட்டரா இருக்கும். ஏன்னா உன்னப் பாக்க வர்றப்போ யூஸ்ஃபுல்லா இருக்கும்ல” என்று கேலி செய்வது போல் கூறினான்.
சித்தி பெயரைக் கேட்டதும் அவந்திகா “என்ன ராகவ் இது? சும்மா ஒரு பேச்சுக்கு நான் தனி ரூம் கேட்டேன். இதுக்குப் போய் ஏன் சித்தியைக் கூப்பிடணும்? நாம நம்ம ரூம்கு போவோமா?” என்று கேட்டுவிட்டு நல்லபிள்ளையாக முன்னே நடந்தாள்.
ராகவ் சிரித்துக்கொண்டே அவளைத் தொடர்ந்தான். அவனது அறையை ஏற்கெனவே வெளியே இருந்து அமர் காண்பித்ததால் அதன் முன் சென்று நின்றாள் அவந்திகா. அவளைத் தொடர்ந்து வந்த ராகவ் உள்ளே செல்லவும் அவந்திகா தயக்கத்துடன் வெளியே நின்றாள்.
திரும்பிப் பார்த்தவன் அவள் வாசலிலேயே நிற்கவும் “மேடம் நான் வேணும்னா உங்களைத் தூக்கிட்டுப் போகவா?” என்று அருகில் வரப் பதறி விலகிய அவந்திகா “நோ நோ! நானே வர்றேன். நீ போ” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
உள்ளே சென்றதும் ஒரு நீண்ட வராண்டாவும் அதைத் தொடர்ந்து டிவியுடன் ஒரு ஹாலும் வந்தது. அதற்கடுத்த ஹால் ராகவின் அலுவலக வேலைகளுக்கானது. அதைத் தாண்டிச் சென்றதும் படுக்கையறை.
“இந்த ரூம்ல எங்க மொத்த வீட்டையும் அடச்சிடலாம் போல” என்று அவந்திகா தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.
அங்கே இருந்த வார்ட்ரோபைக் காண்பித்து “அதுல உன்னோட திங்க்ஸ வச்சிக்கோ. தென் ரெஃப்ரெஷ் ஆகணும்னா இந்த ரூம், அப்புறம் போர் அடிச்சுதுனா அந்த ஹால்ல டிவி இருக்கு., வேற ஏதாச்சும் கேக்கணுமா?” என்று அவளைப் பார்க்க அவளின் பார்வை பெட்டைத் தொட்டு விலகியது.
“நான் தூங்குறதுக்குப் பெட் எங்க இருக்கு?” என்று கேட்டதும் ராகவிற்குத் தலையில் அடித்துக்கொள்ளலாம் போல் இருந்தது. சிரிப்புடன் “கௌசிமா” என்று அவன் ஆரம்பித்தான்.
இடையில் புகுந்த அவந்திகா “இன்னொரு பெட் எங்கனு நான் கேக்கலானு நெனச்சேன். பட் உடனே நீ சித்தி பேர சொல்லுவ. எதுக்கு வம்பு? இந்தப் பெட் கூட ஓகேதான். அப்போ நீ எங்க தூங்குவ? உனக்காகத்தான் நான் யோசிச்சேன் தெரியுமா?” என்று அவசரமாகக் கூறவும் ராகவ் சத்தமாகச் சிரித்தான்.
சிரித்து முடித்தவன் “யூ நோ வாட்! எனக்கு வரப்போற வைஃப் இப்பிடிதான் இருக்கணும்னு நான் சில டேர்ம்ஸ் வச்சிருந்தேன். பட் நீ அவுட் ஆஃப் சிலபஸ்” என்று சொல்லவும் அவள் அவனைப் புரியாமல் பார்த்தாள்.
“ஓகே! உடனே கண்ண விரிச்சுப் பாக்காத! அந்தப் பெட் நம்ம ரெண்டு பேருக்கும் சொந்தம். வேற ஒரு பெட் இங்க என்னைக்கும் வராது” என்று சொல்லவும் அவந்திகா உடனே “எனக்கு யார்கூடவும் பெட் ஷேர் பண்ணிப் பழக்கம் இல்ல” என்று முகத்தைச் சுருக்கிக் கூறினாள்.
அவளது பதிலில் எரிச்சலாகி “நான் மட்டும் என்ன டெய்லி ஒரு பொண்ணு கூட என் பெட்ட ஷேர் பண்ணிப் பழகிருக்கேனா?” என்று ராகவ் கேட்கவும் அவந்திகா “இவன்கிட்ட போய் நீ சொன்னல்ல உனக்குத் தேவைதான்” என்று மனதிற்குள் தன்னையே கடிந்துகொண்டாள்.
“ஓகே! எனக்கு எல்லா டவுட்ஸும் கிளியர் ஆயிடுச்சு ராகவ். நீ வேற எதுவும் சொல்ல வேண்டாம்” என்று சொல்லிவிட்டு வார்ட்ரோபில் தன் உடைகளை அடுக்க ஆரம்பித்தாள்.
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கீழே சென்றவன் அங்கிருந்த அவனது தாதியிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான். அதற்கும் அவந்திகா ரெஃப்ரெஷ் செய்துவிட்டு மேலே டிவியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
உஷா அவளைத் தேடி வரவும் இருவரும் கதை பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் ரித்திமா கிஷோருடன் ராகவுக்கும், அவந்திகாவுக்கும் ரிசப்ஷன் உடைகளை எடுத்து வர அவந்திகா அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அங்கு வந்த ராகவுக்கும் அதில் எந்தக் குறையும் இல்லாததால் அதையே உறுதி செய்தனர்.
ஏற்பாடுகள் எல்லாம் திருப்தியாக இருக்க அவந்திகா கொஞ்சம் ஆசுவாசமானாள். பெண்கள் அனைவரும் கீழே அரட்டையடித்துக்கொண்டு சாப்பிட ஆரம்பிக்க ராகவ் உணவை மேலே எடுத்து வரச் சொல்லிவிட்டு அலுவலக வேலையை முடித்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தான்.
ஒரு வழியாகத் திருமணத்தால் இடையில் விடுபட்ட வேலைகளையும் செய்து முடித்தவன் வழக்கம் போலக் குளிக்கச் சென்றான்.
கீழே கிஷோர் ரித்திமாவைக் கலாய்க்க உஷாவும் அவந்திகாவும் அதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டிருந்தனர். பிந்து மட்டும் ரித்திமாவுக்குச் சப்போர்ட் செய்து தன்னுடைய அண்ணனைக் காலை வாரிவிட்டாள். சுமித்ராவுக்கும் ராதிகாவுக்கும் வீடே நிறைந்திருப்பது போலத் தோன்றியது.
அங்கே வந்த நேஹா உஷாவையும் அவந்திகாவையும் உறங்கச் செல்லுமாறு கூறினாள். நீண்டநேரம் விழித்திருந்தால் நாளை ரிசப்ஷனில் முகம் களைப்பாகத் தெரியும் என்பதால் அவர்களும் எல்லாருக்கும் குட் நைட் சொல்லிவிட்டுத் தங்கள் அறைக்குச் சென்றனர்.
உஷாவுக்கு குட் நைட் சொல்லிவிட்டுத் தன் அறைக்கு வந்த அவந்திகா உடையை மாற்றிவிட்டுத் தூங்கச் செல்லும்போது குளித்துவிட்டு வந்தான் ராகவ்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிய அவந்திகா அவன் வெறும் டவலுடன் நிற்பதைக் கண்டு முகம் சிவந்தாள். டக்கென்று மறுபுறம் திரும்பியவள் “ஹலோ ஆள் மட்டும் பனைமரத்துக்குப் பாதி வளந்தா பத்தாது. அறிவும் வளரணும்” என்று பல்லைக் கடித்தபடி கூற ராகவ் சாதாரணமாக “என்னோட அறிவுக்கு என்ன கொறச்சல் ஜான்சி ராணி?” என்று கேட்டபடியே உடையை மாற்ற ஆரம்பித்தான்.
“இந்த ரூம் எனக்கும்தான சொந்தம்., நான் இருக்கிற இந்த ரூம்ல யாரும் இப்பிடி அரைகுறையா டிரஸ் போட்டுட்டு வரக் கூடாது” என்றாள் அவந்திகா தீர்மானமாக.
அவனோ அலட்சியமாக “இஸிட்? ஐ வில் ட்ரை” என்றபடிக் கண்ணாடியைப் பார்த்து அவனது தலைமுடியைச் சரி செய்துகொண்டிருந்தான்.
அவனது பதிலில் கடுப்பான அவந்திகா “நீ கண்டிப்பா இத ஃபாலோ பண்ணியே ஆகணும்” என்று அவனை முறைத்தவாறே சொல்ல “அப்பிடிலாம் உன் இஷ்டத்துக்கு நீ ரூல்ஸ் போட முடியாது. போட்டாலும் நான் அத ஃபாலோ பண்ண மாட்டேன்” என்றான் அவன் அமர்த்தலாக.
அவந்திகா அதிர்ந்தவாறே “வாட்? சப்போஸ் நான் இதே மாதிரி பண்ணா உனக்கு எப்பிடி இருக்கும்? இரிட்டேட் ஆகாது? அதே மாதிரிதான் எனக்கும்” என்றாள் சமாதானக்குரலில்.
“நீ இப்பிடி வந்தா நான் ஏன் இரிட்டேட் ஆகப்போறேன்? அது உன்னோட இஷ்டம்., இன் ஃபாக்ட் அது என்னோட குட் லக் பேபி” என்று கிண்டலாகக் கூறிக்கொண்டுக் கண்ணைச் சிமிட்டியபடி அவள் முன்னே வந்து நிற்கவும் அவந்திகாவிற்கு “இவனுக்குக் கூச்சநாச்சமே கெடையாது., அவன்கிட்ட போய் நீ இப்பிடிப் பேசுவியா” என்று நூறாவது முறையாகத் தோன்றியது.
கை எடுத்துக் கும்பிட்டவள் “ஐயா சாமி! இனிமே உன்கிட்ட இதப் பத்தி நான் பேசவே மாட்டேன்., எனக்குத் தூக்கம் வருது” என்று சொல்லிவிட்டுப் பெட்டில் அமர்ந்து அதன் குறுக்கே வரிசையாகத் தலையணைகளை அடுக்க ராகவுக்கோ “அடுத்து இதுக்கு வேற நீ ஆர்கியூ பண்ணனும் போல ராகவ்” என்று மனசாட்சி அவனைக் கலாய்த்தது.
நேரே அவள் முன் சென்றவன் “லிசன் வாட் இஸ் திஸ்? இப்போ எதுக்கு இந்தப் பில்லோ பிரிட்ஜ்?” என்று கேட்க அவந்திகா அடுக்கி முடித்துவிட்டு அவனைப் பார்த்தாள்.
“இது என்னோட சைட். அண்ட் அது உன்னோட சைட். இந்தப் பார்டர நானும் தாண்டமாட்டேன். நீயும் தாண்டக்கூடாது” என்று சொல்லிவிட்டுப் போர்வையைப் போர்த்தி முகத்தை மூடிக்கொண்டாள்.
“ஹலோ! தூக்கத்துல என் கை கால்லாம் என்னோட பேச்சைக் கேக்காதுமா! இந்தப் பிரிட்ஜ் விடியுறதுக்கு முன்னாடியே இடிஞ்சு போயிடும்” என்றான் ராகவ் கேலியாக.
அவளோ “அதப் பத்தி எனக்குக் கவலை இல்ல. இப்போ இதத் தாண்டி நீ வரக்கூடாது. அவ்ளோதான்” என்று தீர்மானமாகக் கூறிவிட்டுத் தூங்கத் தொடங்கினாள்.
அவளது பதிலைக் கேட்டு முகத்தை மூடிப் படுத்திருக்கும் அவந்திகாவை முறைத்தவனின் பார்வையிலிருந்த கனலில் அந்த அறை எரிந்து போகாமல் இருந்தது ஆச்சரியமே!
முறைத்துக்கொண்டே அவளின் மறுபுறம் சென்று படுத்தவன் சிறிது நேரத்தில் உறங்கியும் போனான். அவந்திகாவுக்கும் படுத்தது உடன் தூக்கம் வரவே அன்று இரவு வினோதமாகக் கடந்தது..
மறுநாள் அதிகாலை…..
காலை 4 மணிக்குப் போனில் அலாரம் அடிக்க விழித்தான் ராகவ். தன் மீது ஏதோ பஞ்சுபொதி கிடப்பது போலத் தோன்றவும் என்னவென்று பார்த்தவனின் மார்பில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் அவந்திகா..
எவ்வித செயற்கைப் பூச்சுமின்றி குழந்தை முகத்துடன் உறங்கியவளை ரசித்தவன் அவள் முகத்தின் மீது விழுந்த முடிக்கற்றையைத் தூக்கம் கலையாமல் ஒதுக்கிவிட்டான்.
இவளா தன்னை இவ்வளவு தொந்தரவு செய்வது என்று ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தவன் திடீரென்று தன் போனை எடுத்துத் தங்கள் இருவரையும் செல்ஃபி எடுத்துக்கொண்டான்.
மனதினுள் “ஜான்சி ராணி நேத்து நைட் என்ன பேச்சுப் பேசுன? இந்தப் பிரிட்ஜ் தாண்டி நான் வரக்கூடாதா? நீ மட்டும் எந்திரி. இந்தப் போட்டோ பாத்துட்டு உன் முகம் போற போக்கைப் பாத்தாதான் இன்னைக்கு நாள் எனக்கு ஹாப்பியா இருக்கும்” என்று மனதினுள் சொல்லிக்கொண்டான்.
அவள் திரும்பிப் படுக்கவும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தவாறே உடற்பயிற்சி செய்யச் சென்றுவிட்டான்..
இது எதுவும் தெரியாமல் அவந்திகா அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். இனி ஒவ்வொரு நாளும் இவ்வாறுதான் விடியப் போகிறது என்பதை அறியாமல் அவள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்..
நேரம் சென்றது….
காலை இளவெயில் முகத்தில் பட்டுத் தூக்கம் கலைந்த அவந்திகா சோம்பல் முறித்தபோது அறைக்குள் வந்த ராகவ் டவலால் வியர்வையைத் துடைத்தபடி அவந்திகாவைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.
அவன் தன் முகத்தைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டு குழப்பமடைந்த அவந்திகா ஓடிச் சென்று அங்கிருந்த டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் முகத்தில் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டவள் ஒன்றும் வித்தியாசமாக இல்லாததால் நிம்மதியாகத் திரும்ப அங்கே சிரித்துக்கொண்டிருந்த ராகவ் கண்ணில் பட்டான்.
அவன் எதிரில் சென்று நின்றவள் “இப்போ எதுக்குப் பல்லப் பல்லக் காட்டுற?” என்று கடுப்புடன் கேட்க ராகவ் தன்னுடைய போனை எடுத்து “கொஞ்சம் இங்க வா” என்று சொல்ல அவந்திகா வர முடியாது என்று தலையை ஆட்டி மறுத்தாள்.
ராகவ் தன் போனிலிருந்த போட்டோவைக் காட்ட “இது எதுவோ ஒரு போட்டோ., சோ வாட்? இதுக்குத்தான் நீ 32 பல்லையும் காட்டினியா?” என்று குளியலறைக்குள் செல்ல முயல “அதுக்குத்தான் இங்க வானு சொன்னேன்.,” என்று அவன் கூறவும் அவனருகில் சென்று அப்படி அந்தப் போனில் என்னதான் இருக்கிறது என்று பார்த்தவள் திகைப்பில் வாயைத் திறந்தாள்.
அவளின் அந்தத் திகைத்த தோற்றத்தைப் பார்த்துக் குஷியான ராகவ் தன் கையை அவள் நாடியில் வைத்து வாயை மூடினான்.
“என்ன? வாயடைச்சுப் போய்ட்டியா? என்னா பில்ட் அப். இந்தப் பார்டர நானும் கிராஸ் பண்ண மாட்டேன். நீயும் பண்ணக் கூடாது” என்று அவளை மாதிரியே படுக்கையில் உட்கார்ந்து சொல்லிக் காண்பித்தவன் அவள் கண்ணை விரித்துப் பார்க்கவும் அவளின் திகைத்த தோற்றத்தில் படுக்கையில் புரண்டு புரண்டு சிரிக்க ஆரம்பித்தான்.
அவந்திகாவின் மனசாட்சியோ “அவன் சும்மாவே உன்னைக் கார்னர் பண்ணுவான்., அவ்ளோ பில்லோ இருக்குறப்போ போயும் போயும் அவன் மேலயா படுத்துத் தூங்குவ?” என்று அவளைக் கழுவி ஊற்றியது.
பின்னர் அதுவே “சரி அவந்திகா., இவனை இப்பிடியே விட்டா உன் அருமை பெருமைக்கு ஆபத்து வந்துடும். எதாச்சும் செஞ்சு அவன ஆஃப் பண்ணு” என்று அவளுக்கு அறிவுறுத்தியது.
தன்னை இயல்பாக்கிக்கொண்டவள் “ஓகே! தூங்கறப்போ கை கால்லாம் என் கன்ட்ரோல்லயா வச்சிக்க முடியும்? ஏதோ தெரியாம லைட்டா என் தலை உன் மேல பட்டுடுச்சு. அதுக்கு சாரி. சோ ப்ளீஸ் இதுக்கு மேல சிரிச்சு என்னைப் பயமுறுத்தாத” என்று சமாளித்து வைத்தாள் அவந்திகா.
“ஓ! இதே வார்த்தைய நான் சொன்னதுக்கு நேத்து நைட் நீ என்னென்ன டயலாக்லாம் பேசுன? உன்னோட பில்லோ பிரிட்ஜ் ஐடியா ஒரு வேஸ்டான ஐடியானு ஒத்துக்கோ ஜான்சி ராணி” என்றான் பதிலுக்கு.
“ஓகே! இனிமே இந்த மாதிரி பில்லோஸ அடுக்கி உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்று அவள் அமைதியாகக் கூறவும் ராகவுக்கு அவளைச் சீண்டிப் பார்க்கும் ஆசை எழுந்தது.
போனைப் பார்த்தபடியே “வாவ்! சும்மா சொல்லக்கூடாது! இந்தப் பிக் செமல்ல! இத அப்பிடியே பய்யாகிட்டவும் பாபிகிட்டவும் காமிச்சா என்ன?” என்று அவன் கேலியாகச் சொல்ல அவனது செய்கையில் அதிர்ந்தவள் “வாட்? இந்தப் போட்டோவப் போய் வருண்கிட்ட காமிக்கப் போறியா? உனக்குலாம் எவன் பிசினஸ் மேன் ஆஃப் த இயர் அவார்ட் குடுத்தது? கொஞ்சம் கூடக் கூச்சநாச்சமே கெடையாது” என்று பல்லைக் கடித்தாள்.
“அத வச்சு என்ன பண்றது பேபி? சரி இந்தப் போட்டோவ வருணுக்குக் காமிச்சிட்டு வர்றேன்” என்று அவன் கிளம்பவும் அவனைப் போக விடாமல் வழிமறித்தவள் அவன் கையிலிருந்த மொபைலைப் பிடுங்க முயற்சிக்க ராகவ் அதை இன்னொரு கைக்கு மாற்றினான்.
அவந்திகாவால் அதைப் பிடுங்க முடியவில்லை. அவன் உயரமாகத் தூக்கிக் காட்டவும் துள்ளிக் குதித்து அதைப் பிடுங்க முயற்சித்தவள் கால் தவறி ராகவ் மேல் விழ அவளுடன் சேர்ந்து ராகவ் மெத்தையில் விழுந்தான்.
ஒரு கரம் அவளது இடையை வளைத்திருக்க மற்றொரு கரம் போனை இறுக்கமாகப் பிடித்திருக்க அவனது கண்களோ அவந்திகாவின் முகத்தில் தோன்றும் பாவனைகளையே படம்பிடித்துக் கொண்டிருந்தது.
அவள் தொடர்ந்து முயற்சித்ததில் அவனது மொபைலைக் கைப்பற்றிவிட்டாள். ஆனால் பாஸ்வேர்ட் தெரியாமல் முழித்தவளைப் பார்த்துச் சிரித்தவன் அவள் அசந்த நேரம் அதை அவள் கையிலிருந்து பிடுங்கினான்.
அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டே “இத நான் யார்கிட்டயும் காமிக்கப் போறதில்ல. பிலீவ் மீ மை டியர் வைஃப்” என்று சொல்லி அவள் கன்னத்தை நிமிண்டிவிட்டுச் செல்ல அவனது தொடுகையில் சிலையானாள் அவந்திகா.
அடுத்த கணமே சுய உணர்வு பெற்றவள் பாத்ரூமுக்குள் செல்லும் முன் வேகமாக உள்ளே புகுந்த ராகவ் அவளைக் கேலியாகப் பார்த்துக்கொண்டே கதவைச் சாத்தவும் ஆத்திரமடைந்த அவந்திகா “ஏய் ராகவ்! மைதா மாவு! ஒழுங்கா வெளியே வா! இல்லனா இந்த டோரை ஒடச்சிடுவேன்” என்று கத்தினாள்.
“முடிஞ்சா ஒடச்சுக்கோ. நோ அப்ஜெக்ஷன்” என்றான் அவன் கேலியாக.
“எனக்கு டைம் ஆகுது ராகவ். சீக்கிரம் வா” என்று அவந்திகா கெஞ்ச “லிசன் நான் குளிக்கிறப்போ யாராச்சும் டிஸ்டர்ப் பண்ணா எனக்குப் பிடிக்காது. கத்துறத நிறுத்திட்டு அமைதியா கொஞ்ச நேரம் உக்காரு போ” என்று அலட்சியம் செய்துவிட்டுக் குளிக்கத் தொடங்கினான் அவன்.
அவளோ “முடியாது” என்று பிடிவாதமாகக் கூற அவனும் சளைக்காமல் “அப்போ கத்தி கத்தி உன்னோட எனர்ஜிய வேஸ்ட் பண்ணிக்கோ” என்றான்.
அவன் சொன்னபடியே கத்தி கத்தி சக்தி எல்லாம் வடியப் படுக்கையில் தொப்பென்று அமர்ந்தவள் தன்னுடைய போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் “ஹப்பாடா! ஒரு வழியா வந்திட்டியா? நான் போறேன்பா” என்று சொல்லிக்கொண்டு எழுந்தவள் ராகவ் இடுப்பில் டவலுடன் தலையைத் துவட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு “நான் நேத்து நைட் தானடா சொன்னேன் இப்பிடி அரைகுறையா டிரஸ் போட்டுட்டு என் முன்னாடி வராதனு” என்று சொல்லி அவனை முறைக்கவும் கண்ணாடியில் அவளைப் பார்த்துச் சிரித்தான் ராகவ்.
“நீ சொன்னது எதுவுமே நான் கேக்கப் போறதில்ல” என்று அவன் சொல்லவும் “எப்பிடியோ போ” என்று சொல்லிவிட்டுக் குளியலறைக்குள் நுழைந்தாள் அவந்திகா.
அரைமணி நேரம் பொறுமையாகக் குளித்து முடித்துவிட்டு வந்தவள் ராகவ் என்ற ஒருவன் அங்கே இருப்பதையே மறந்தவளாக டவலுடன் வெளியே வந்தாள்.
சோஃபாவில் உட்கார்ந்து ஃபைலைப் புரட்டிக்கொண்டிருந்தவன் அவள் நின்ற கோலத்தைக் கண்டு முதலில் அதிர்ந்தான். பின்னர் அவளைச் சீண்டுவதற்காக “ஓ மை காட்! பார்பி டால் எப்போ என்னோட ரூமுக்கு வந்துச்சு?” என்று சத்தமாகக் கேட்டபோதுதான் அவன் அறையில் இருப்பதே அவளுக்கு நினைவுக்கு வந்தது.
கண்ணில் குறும்பு மின்ன நின்றவனைப் பார்த்துவிட்டு மெத்தையிலிருந்த போர்வையால் தன்னை மறைத்தவள் “வெளியே போ ராகவ்., வெளியே போ” என்று காதை மூடிக்கொண்டு கத்த அவனோ அதிர்ச்சியில் அசையாமல் சிலை போல் நின்றுகொண்டிருந்தான்.
நிதானமாக “ரூம்ம விட்டுலாம் போக முடியாது. ஒரு பையன் இருக்கிற ரூம்ல நீங்க மட்டும் இப்பிடி அரைகுறையா வரலாமா மேடம்” என்று சொல்லிவிட்டுச் சோஃபாவில் சாய்ந்துகொண்டான்.
“நான் நீ இருக்கிறத மறந்துட்டேன்” என்று அவள் அமைதியான குரலில் கூறவும் எழுந்து அவள் அருகில் வந்தவன் “நீ ஒன்னும் உலக மகா தப்பு பண்ணல. மனுஷங்க எல்லாருக்கும் இது இயல்புதான். இத்தனை வருஷம் இந்த ரூம்ல நான் தனியாதான் இருந்தேன். திடீர்னு நீயும் இதுக்குள்ள வரவும் நான் அதை மறந்துடுறேன்.” என்று தன் நிலையை விளக்க அதில் நியாயம் இருந்ததால் அவந்திகா விவாதிக்காமல் அவன் கூறியதற்குத் தலையை மட்டும் ஆட்டினாள்.
அவளைப் பார்த்துப் புன்னகைத்தவாறே படுக்கையறையை விட்டு வெளியேறியவன் உடனே எட்டிப் பார்த்து “ஜான்சி ராணி உன்னோட நிக் நேமை நான் சேஞ்ச் பண்ணலாம்னு இருக்கேன்” என்றதும் அவந்திகா இவன் ஏதோ நான் டென்ஷனாகுற மாதிரி சொல்லப் போறான் என்று மனதினுள் சொல்லிக்கொண்டாள்.
“பார்பி டால்., இந்தக் காஸ்ட்யூம் பார்பி டாலுக்கு அப்புறம் உனக்குத்தான் நல்லா இருக்கு” என்று சொல்லவும் அவள் கடுப்பில் ஏதோ சொல்ல வருவதற்குள் அந்த அறையைத் தாண்டிச் சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் அவனைத் திட்டிக்கொண்டே உடை மாற்றிய அவந்திகா எல்லாவற்றையும் ஒழுங்காக வைத்துவிட்டுக் கீழே இறங்கி வந்தாள். அங்கே ராகவ் தன் போனை காண்பித்துச் சுமித்ராவிடம் ஏதோ சொல்ல அவர் விழுந்து விழுந்து சிரித்தார்.
வேகமாக வந்தவள் அவன் கையிலிருந்த போனைப் பிடுங்கினாள். சுமித்ரா அவளை யோசனையுடன் பார்க்க அவள் ராகவிடம் “நான் உன்கிட்ட சொன்னதை மறந்திட்டியா? யார்கிட்டயும் காட்டக் கூடாதுனு சொன்னேனா இல்லையா?” என்று கோபத்துடன் கேட்டாள்.
சுமித்ராவுக்கு அவள் கூறிய விதத்தில் சிரிப்பு வரவே அவரைப் பார்த்து “தாதி! இப்போ எதுக்குச் சிரிக்கிறீங்க?” என்று முகத்தைச் சுருக்கிக் கேட்டாள்.
“உன்னைப் பாத்தாலே சிரிப்புதான் வருது சின்ன மருமகளே!” என்று அவர் சிரிப்பை அடக்கிக்கொண்டு பேசவும் அவந்திகா திரும்பி ராகவை முறைத்தாள்.
இடுப்பில் கை வைத்தபடி “இதுக்குலாம் யார் காரணம் தெரியுமா?” என்று அவள் கடுப்பாகக் கேட்க அவன் சாவகாசமாக “யாரு?” என்று கேட்டபடி சோஃபாவில் இன்னும் வசதியாகச் சாய்ந்துகொண்டான்.
அவனது தோரணையைக் கண்டுகடுகடுத்த அவந்திகா “நீதான் டா! யார்கிட்டயும் காமிக்கவே மாட்டேனு டயலாக் பேசிட்டு இங்க வந்து என்னை வச்சி காமெடி பண்றியா?” என்று பொரிய “லிசன் அவந்திகா. நான் ஒன்னுமே..” என்று அவன் விளக்குவதற்குள் “நீ எதுவும் பேச வேண்டாம்” என்று இடைமறித்து அவனைப் பேசவிடாமல் தடுத்தாள்.
நேரே திரும்பிச் சுமித்ராவைப் பார்த்தவள் “தாதி! தூங்கிறப்போ கை கால் தெரியாம மேல படத்தானே செய்யும்! என்னோட தலை அவன் மேல பட்டுடுச்சு. இது ஒரு விஷயம்னு அதைப் போட்டோ எடுத்து உங்ககிட்ட காமிச்சு என்னை இரிட்டேட் பண்றான். நீங்களும் அதைப் பாத்துச் சிரிச்சிட்டு இருக்கீங்க” என்று கூற அவர் அவளை ஏற இறங்கப் பார்த்தார்.
“உனக்கு உடம்பு எதும் சரியில்லையா?” என்ற சுமித்ராவைக் குழப்பமாய்ப் பார்த்தாள் அவந்திகா.
“நான் நல்லாதான் இருக்கேன்., ஏன் கேக்குறீங்க?”
“பின்ன என்ன? அவன் என்கிட்ட ஏதோ காமெடியக் காமிச்சுச் சிரிச்சான். நீ என்னடானா சம்மந்தமே இல்லாம அவன் மேல கம்ப்ளைண்ட் பண்ணுற! என்னாச்சுடா?” என்று அவள் கழுத்தில் நெற்றியில் கை வைத்துப் பார்த்தார்.
“அப்போ நானாதான் ஒளறிட்டேனா?” என்று மனதிலேயே சொல்லிக்கொண்டவள் அவரைப் பார்த்துச் சிரித்துவிட்டு “நானும் ப்ராங்க் பண்ணுனேன் தாதி! பாத்தீங்களா, நீங்க கூட எனக்கு ஏதோ ஆயிடுச்சோனு பதறிட்டீங்க!” என்று சொல்லிச் சமாளித்தாள்.
ராகவ் இதைக் கேட்டதும் விழுந்து விழுந்து சிரிக்க, அவள் மனதினுள்ளே அவனைத் திட்டித் தீர்த்தாள்.
பின் தனியே தோட்டத்தைப் பார்த்துக் கிடக்கும் சோஃபாவில் வந்து அமர்ந்தவள் “பெருமாளே! ஒரு நாள்., ஒரே ஒரு நாள் என்னால இவனைச் சமாளிக்க முடியல! பின்ன எப்பிடி டிவோர்ஸ் வாங்குற வரைக்கும் இங்க இருக்கப் போறேனோ?” என்று வாய்விட்டுப் புலம்பினாள்.
“தனியா என்ன பேசிப் புலம்பிட்டு இருக்க? யாரு டிவோர்ஸ் பண்ணப் போறாங்க?” என்று கௌசல்யாவின் குரல் கேட்டதும் அவந்திகாவுக்குச் சப்தநாடியும் அடங்கிவிட்டது. இவங்க எப்போ வந்தாங்க என்று யோசித்தபடியே அவரைப் பார்த்தவள் “டிவோர்ஸா? நான் எப்போ டிவோர்ஸ்னு சொன்னேன் சித்தி?” என்று சமாளிக்க முயன்றாள்.
“இல்லையே! நான் வர்றப்போ நீ தனியா பேசிட்டிருந்ததை நான் கேட்டேனே” என்று சொல்ல அவந்திகா “அத விடுங்க சித்தி! நேத்து நைட் பாட்டிகிட்ட பேசுனீங்கதானே! அஜ்ஜு எப்பிடி இருக்கான்?” என்று கேட்டுப் பேச்சை மாற்றினாள்.
அதன்பின் அவர்கள் குடும்ப விவகாரங்களைப் பேச ஆரம்பிக்கக் கௌசல்யா அவந்திகா பேசிய விஷயங்களை மறந்தே போனார்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


