அகம் 17

“காதல்ங்கிறது, எந்தப் போலித்தனமுமில்லாம, என் பலவீனம் பைத்தியக்காரத்தனம் எல்லாத்தையும் அவகிட்ட கொட்டித் தீர்த்தாலும் அவ என்னை விட்டுப் போகமாட்டானு மனசுல அழுத்தமா பதியுதே அந்த நம்பிக்கைதான்! நான் ஆம்பளைங்கிற ஈகோவைத் தூக்கிப் போட்டுட்டு ஒரு மனுசனா என்னால அவகிட்ட என் கண்ணீர், என்னோட சோகத்தைக் கொட்ட முடியுது. ஆக்சுவலி இந்தக் காதல் எனக்கு ஒரு வரம்னு நினைக்குறேன்” -பவிதரன் “ஏன் இப்பிடி ஒரு காரியத்தைப் பண்ணுனிங்கப்பா? அவன் நம்ம குடும்பத்துக்கு அரணா நின்னவன். அவனைப் போய் வீட்டை […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 16

“சாதகமான சூழல்ல எல்லாம் நல்லவிதமா நடக்குறப்ப ஒருத்தருக்குத் துணையா இருக்குறதைவிட, அவங்க சங்கடத்துல இருக்குறப்ப துணையா நிக்குறதுதான் முக்கியம். அதை எத்தனை பேர் செய்ய முன்வருவாங்க? ஆதாயமில்லாம பழகுறவங்க இப்ப குறைவு. பழக்கத்துக்கு மட்டுமில்ல, காதலுக்கும் நட்புக்கும் இது பொருந்தும்.” -ஈஸ்வரி பவிதரன் காரை விரட்டிய வேகத்தில் கொஞ்சம் பயந்துதான் போய் அமர்ந்திருந்தாள் ஈஸ்வரி. வீட்டுக்குள் நடந்த எதுவும் அவளுக்குத் தெரியாது. ஆனால் இப்போது அவன் இருக்கும் மனநிலையை மட்டும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. இதுபோல அவனது […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 15.2

மாணிக்கவேலு, நிலவழகி, சகுந்தலா எனப் பெரியவர்கள் ஆடிப்போக மதுமதியோ தனது கணவனைத் தமையன் அடித்துவிட்டானே என்று தீப்பிழம்பாய் வெடித்தாள். “இன்னொரு வார்த்தை ஈஸ்வரிய பத்தி தப்பா பேசுன, பேசுறதுக்கு நாக்கு இருக்காது உனக்கு.” இந்த எச்சரிக்கை தர்ஷனுக்கும் மட்டுமானது இல்லை என்று தோன்றும்விதமாய் பவிதரனின் கோபச்சிவப்பு பூசிய விழிகள் அவனது குடும்பத்தினர் அனைவரையும் அக்னியாய்ச் சுட்டெரித்தது. மதுமதி வேகமாய் வந்து தனது கணவனை விலக்கி நிறுத்தினாள் தமையனிடமிருந்து. “நீ எப்பவுமே மாறமாட்டல்ல? அடுத்தவங்களுக்கு ஏந்தி பேசி வீட்டாளுங்களை […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 15.1

“ஆணுக்கு நடக்குற உணர்வுச் சுரண்டலை பத்தி யாருமே பேசி நான் கேட்டது இல்ல. அவன் படிக்குறதுல ஆரம்பிச்சு சம்பாதிக்கிற வரைக்கும் எதுவுமே அவனுக்காக இல்ல. குடும்பத்துக்கு ஒரு பிரச்சனைனா நேரங்காலம் தெரியாம ஓடணும். அவங்களுக்கு அரணா நிக்கணும். வருங்காலத்துக்கான நம்பிக்கை அவங்களுக்கு வரணும்ங்கிறதுக்காகத் தன்னோட சின்னச் சின்ன கனவுகளைத் தனக்குள்ள புதைச்சுக்கிட்டு சந்தோசமா இருக்குற மாதிரி நடிக்கணும். சுருக்கமாச் சொல்லணும்னா கூட்டுக் குடும்பங்கள்ல ஒரு ஆண்ங்கிறவன் தேவைப்படும்போது கடவுளா தெரிவான். அவனை வச்சு காரியம் எல்லாம் முடிஞ்சாச்சுன்னா […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 14

“உங்க கிட்ட அதிகமா பணம் புழங்குதுனா உங்க மூளைல Empathyஐ உணர வைக்குற பகுதியோட வேலை குறையும்னு ஆய்வுகள் சொல்லுது. அதனால தான் பணம் படைச்சவங்க பொருளாதாரத்துல தங்களை விட கீழ்நிலைல இருக்குறவங்களை மோசமா நடத்துறப்ப அவங்களுக்குக் குற்றவுணர்ச்சியே வர்றதில்ல போல” –ஈஸ்வரி நிலவழகி காலையிலேயே பரபரப்பாக இருந்தார். ஏன் என்று புரியாமல் மதுமதி குழப்பத்தோடு அவரைக் கவனித்துக்கொண்டிருந்தாள். வெள்ளித் தாம்பளத்தில் பழங்கள், வெற்றிலை பாக்கு, பூ கூடவே ஏதோ நகைப்பெட்டி எல்லாம் எடுத்து வைத்திருந்தார். “என்ன […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 13

“கௌரவமும் பணமும் பிரதானம்னு நினைக்குற குடும்பங்கள்ல உண்மையான நேசமும் மனநிறைவான வாழ்க்கையும் என்னைக்குமே சாத்தியமில்ல. வாழ்க்கைய நல்ல மாதிரி கொண்டு போறதுக்குப் பணம் வேணும். சமுதாயத்துல தலை நிமிர்ந்து வாழ கௌரவம் வேணும். ஆனா அந்த பணமும் கௌரவமும் ஒருவிதமான வெறியா மாறி ஆட்டிப் படைக்குறப்ப அங்க நிம்மதியான வாழ்க்கை கேள்விக்குறியாகுது” –பவிதரன் வீடு திரும்பிய பவிதரனுக்குக் கோபமும் ஆற்றாமையும் இன்னும் அடங்கவில்லை. பெற்ற தந்தையில் ஆரம்பித்து உடன்பிறந்த தங்கை வரை அவனை வெவ்வேறு காரணங்களுக்காகத் தூற்றி […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 12

“ரொம்ப பிடிச்ச ஒருத்தரை விட்டு விலகி நிக்குறது கஷ்டமான விசயம். அதைச் செய்ய மனவுறுதி தேவை. எல்லா உறவுலயும் தனிப்பட்ட மனுசங்களோட உணர்வுகள் மட்டும் அந்த உறவோட எதிர்காலத்தைத் தீர்மானிக்கும், கணவன் மனைவி உறவைத் தவிர. ஏன்னா நம்ம சமுதாயம் இதை குடும்பம் சார்ந்த உறவா கட்டமைச்சு வச்சிருக்கு. ஒரு குடும்பத்தோட உணர்வுகள் மொத்தமும் இந்த உறவோட பிணைக்கப்பட்டிருக்கு. இதுல நாம எடுக்குற முடிவுகளை நாம மட்டுமே தீர்மானிக்க முடியாது.                -ஈஸ்வரி மதுமதி – […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 11

“இப்ப எல்லாம் நான் கடிகாரம் ஓடுறதைக் கவனிக்குறதே இல்ல. அன்பான உலகத்துல நேரக்கணக்குக்கு அவசியமில்லனு நினைக்குறேன். சிலரோட செலவளிக்குற நேரம் நம்ம வாழ்க்கைய அழகாக்குதுனா அங்க கடிகாரத்துக்கு ஓய்வு குடுக்குறது நல்லதுதானே?”      -பவிதரன் அர்ச்சகர் தாலியை எடுத்துக் கொடுக்க அட்சதை மழையில் நனைந்தபடி அதை மதுமதியின் கழுத்தில் கட்டினான் தர்ஷன். இருவரது மனமும் அம்மனிடம் வேண்டிக்கொண்டது என்னவோ ஒரே ஒரு விசயத்தைத்தான். “இந்த வாழ்க்கை எங்களுக்கு எந்தச் சோதனையையும் குடுத்துடாம காப்பாத்துங்க. நாங்க இனியாச்சும் இயல்பான […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 10

“அதிகாரத்தால ஒருத்தரை எரிக்க முடியும். ஆனா அன்பால மட்டும்தான் அவங்களை உருக வைக்க முடியும். அன்பால உண்டாகுற ஆதிக்கம் கூட அழகு. அதே நேரம் அதிகாரத்தால வளைக்க நினைக்குற ஆதிக்கம் ரொம்ப ஆபத்தானது. அந்த ஆதிக்கத்தை ஏத்துக்குறப்ப கிடைக்கிற அமைதியை விட நிமிர்ந்து நின்னு போராடுறப்ப கிடைக்குற பதற்றமும், கோவமும் ரொம்ப அற்புதமா இருக்கும் தெரியுமா?”       -ஈஸ்வரி “பொண்ணா மலர்? இன்னைக்கு வெள்ளிக்கிழமை. மகாலெட்சுமியே ஆதிராவுக்கு மகளா பிறந்திருக்கா” மொபைலில் மலர்விழியோடு பேசிக்கொண்டிருந்த அன்னையைப் பார்த்தபடியே […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 9

“அவ என்னைத் தள்ளி நிறுத்துறதா நினைக்குறா. ஆனா அவளால என்னை அலட்சியப்படுத்த முடியல. என்னைப் பத்தி ரொம்ப அதிகமா யோசிக்குறா. அந்த யோசனை தான் அவளோட சண்டைக்காரி இயல்பை மீறி அவளைத் தடுமாற வைக்குது. ஒருத்தர் நம்மளைத் தவிர்க்க நினைக்குறது கூட பேரன்போட அடையாளமா தெரியும்னு இன்னைக்குத்தான் நான் புரிஞ்சிக்கிட்டேன். என் மேல அவளுக்கு இருக்குற ஃபீலிங்சைக் கையாளத் தெரியாம       அவ என்னைத் தள்ளி நிறுத்துறா. எத்தனை நாள் இந்தப்  போராட்டம்னு பாக்கலாம்”      -பவிதரன் […]

 

Share your Reaction

Loading spinner