அகம் 28.1

“முதல் தடவையா தொழில்ல வர்ற அழுத்தங்களோட பாரத்தைத் தாங்க முடியாம அந்த மனுசன் தவிக்குறதை நான் என் கண்ணால பாத்தேன். ஏதோ ஒரு விதத்துல அவர் இந்தப் பாரத்தை என் கிட்ட பகிர்ந்துக்கோங்கனு சொன்னாலும் கேக்கமாட்டார். எனக்கு ப்ரஷர் ஏறிடுமாம். இங்க சாம்ராஜ்ஜியம் ஒன்னும் சரிஞ்சிடலையே. அப்பிடியே சரிஞ்சாலும்தான் என்ன? இவரால அதை மறுபடி கட்ட முடியாதா என்ன? கொந்தளிக்குற மனசை அமைதியாக்குற சின்ன பொறுப்பைக் கூட எனக்கு இந்த மனுசன் குடுக்குறதில்ல. எனக்கு ரொம்ப வருத்தம்பா” […]

 

Share your Reaction

Loading spinner

அலை 16

கட்டுப்பாடின்றி கரைபுரண்டோடும் என் பிரியத்திற்குரிய நதியவளே உனை கரையிட்டுத் தடுக்க விரும்பாது என் அகண்டக் கரங்களை விரித்து உனை ஆவலுடன் அணைக்கக் காத்திருக்கும் உன் அன்பு சாகரன் நான்!   எல்க் மலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில்… குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கிணங்க, எல்க் மலை எனும் குன்றில் குறிஞ்சிக்கடவுளான முருகனின் நாற்பது அடி சிலையுடன் பச்சைப்பசேல் என்ற ரம்மியமான சூழலில் அமைந்திருந்தது அத்திருத்தலம். எல்க் எனும் மான் இனங்கள் மூலம் இம்மலைக்கு இப்பெயர் வந்தது […]

 

Share your Reaction

Loading spinner

அலை 15

செவ்விதழ் சிறைக்குள் முத்துப்பற்கள் அரணாய் காக்க அடைபட்டுக் கிடக்கும் உன் ஒற்றைப்புன்னகையைக் காணத் தவிக்கும் என் விழிகளின் இறைஞ்சல்  உன் செவிகளைத் தீண்டாதோ என் அழகியே! சங்கவியும் யாழினியும் யுவஸ்ரீயின் திருமண ஏற்பாட்டின் மலர் அலங்கார பொறுப்பை ஏற்றதிலிருந்து, அடிக்கடி அவர்கள் அது தொடர்பாகத் திருமணம் நடக்கவிருக்கும் ஸ்ரீவத்சனின் பங்களாவுக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. அதனால் பொக்கே ஷாப்பின் பொறுப்பை ஸ்ரீரஞ்சனியும் மதுரவாணியுமே பார்த்துக் கொண்டனர். இடையிடையே ஸ்ரீரஞ்சனியின் தாயார் மகள்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்துக் கொள்வார். […]

 

Share your Reaction

Loading spinner

அலை 13

கனிவு சொட்டும் விழிகள் கனலாய் மாறி எரிய நாணத்தில் சிவக்கும் வதனம் சினத்தில் செந்நிறம் கொள்ள தேன்மதுரச் சொற்கள் சிந்தும் நாவு தேளின் கொடுக்காய் கொட்ட தீப்பிழம்பாய் குமுறும் என்னவளே! உன் கோபம் தீர்க்கும் வழியறியா உன்னவன் நான்! மதுரவாணி செவி மடலைத் தேய்த்துவிட்டுக் கொண்டாள். ஆரத்யாவின் அழுகை மனிதச்செவியால் உணரக்கூடிய டெசிபிலையும் தாண்டி ஒலிக்க, அவளுக்கு வந்த கோபத்தில் மூன்றாவது கண்ணைத் திறந்து சுற்றியிருந்தவர்களை எரிக்காத குறை தான்! ஆரத்யாவின் அழுகையைப் பார்த்த சாய்சரணும் தானும் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 12

இரும்பாய் இறுகியவன் உன்னால் மெழுகாய் உருகுகிறேன்! சுவாசிக்கும் காற்றில் தினசரி உன் வாசம் தேடுகிறேன்! கவனமாய் இருப்பவன் இடறி உன் கன்னக்குழியில் வீழ்கிறேன்! மதுசூதனனுடன் வீட்டுக்குள் நுழைந்த மதுரவாணியைச் சங்கவி திட்டித் தீர்க்க ஆரம்பித்தாள். யாழினி அவனை வரவேற்று அமர வைக்க, மதுசூதனன் திட்டு வாங்கும் மதுரவாணியை நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். “மழைல நனைஞ்சா ஒத்துக்காதுனு தெரிஞ்சும் இப்பிடி தொப்பலா நனைஞ்சுருக்கியேடி,” என்று அவளைத் திட்டிக் கொண்டே டவலால் அவளது கூந்தலைத் துவட்ட ஆரம்பித்தாள் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 11

கடற்கரை மணலில் எழுதிய பெயர்களாய் அலை வந்ததும் அழியக் கூடியவை அல்ல கல்வெட்டில் பதிக்கப்பட்ட எழுத்துகளாய் காலம் கடந்தும் நிற்கும் உன் நினைவுகள்  நதியூர்… ரத்தினவேல் பாண்டியனின் வீட்டில் எப்போதும் போல அவரது ஏவலாட்களின் அரவம் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டின் இளவரசி காணாமல் போய் வெகுநாட்களாகி விட்டது. இன்னும் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க இயலாது அவர்கள் திரும்பி வரும்போதெல்லாம் அழகம்மையின் ஏச்சுப்பேச்சையும் வாங்கிக் கட்டிக் கொண்டனர். சரவணனும் கார்த்திக்கேயனும் அவ்வப்போது அழகம்மைக்குப் பதிலடி கொடுத்தாலும், தன் பேத்தி […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 27

“வார்த்தைகள் குடுக்காத சிலிர்ப்பையும் இதத்தையும் அவளோட கைவிரல் உரசுன அந்த ஒரு நொடி குடுக்குது எனக்கு. எங்களுக்குள்ள மௌனச்சுவர் எழுறப்ப எல்லாம் இந்தச் சின்ன கெஸ்டர் தான் அதைச் சில்லு சில்லா உடைக்கும். ஒரு யுகப்பெருங்கோபத்தைத் தணிக்குறதுக்கு இந்தச் சின்ன தீண்டல் போதுமானது. இமயமலை அளவுக்கு இருக்குற ஈகோவ கூட நொறுக்கித் தள்ளிடும் அந்த ஸ்பரிசம்” –பவிதரன் மேரு பில்டர்ஸ் அலுவலகத்தில் தனது அலுவலக அறையில் பதற்றமாய் ஜூம் மூலம் வீடியோ அழைப்பில் தனது நண்பன் சாஜனுடன் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 7

மனம் எனும் வெள்ளைக் காகிதத்தில் அழியா மையால் எழுதப்பட்ட எழுத்துகளாய் உன் நினைவுகள்.. அழிக்க முற்பட்டுத் தோற்றுப் போகிறேன் நான்!   திருநெல்வேலி… ரேவதி தனக்கும் மகனுக்குமாய் இரவுக்குத் தோசை வார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தவர், அதற்குக் கொத்தமல்லி சட்னி அரைத்துத் தாளித்துக் கொண்டிருந்த நேரம் ஸ்ரீதரின் ஜீப் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. பின்னர் ஜீப்பின் கதவைத் திறந்து மூடும் சத்தமும், அதைத் தொடர்ந்து ஷூ அணிந்த கால்களின் சத்தமும் கேட்க, சமையலறையிலிருந்து வெளியே வந்தவர் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 25.2

“என்ன விசயம்?” ஈஸ்வரி வினவவும் தனது அடுத்த திட்டம் பற்றி அவளிடம் விவரித்தான் ஆர்வமாய். உம் கூட கொட்டாமல் அதைக் கேட்டு முடித்தவள் “இதெல்லாம் எதுக்கு என் கிட்ட சொல்லுறிங்க? எனக்கும் உங்க வேலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? நான் தான் சொன்னேனே, இனி எந்த விதத்துலயும் நான் உங்களுக்குத் துணையா நிக்கமாட்டேன்னு. மறந்து போச்சா?” என்று கேட்டு அவனைத் திகைக்க வைத்தாள். பவிதரனின் முகத்தில் கலக்கம். “உன் கிட்ட சொல்லாம வேற யாரு கிட்ட சொல்லுறதுடி?” […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 25.1

“உளி தன்னை அடிக்கடி அடிக்குறதால பாறைக்கு அது மேல செம கோவமாம். கோவம் ஒரு பக்கம் இருந்தாலும் உளி தன்னைச் சிலையா செதுக்குறதுக்கு வடிவம் குடுக்க இசையுமாம் அந்தப் பாறை. அதே மாதிரிதான் உனக்குத் துணையா நிக்கப் போறதில்லனு சொல்லிக்கிட்டே என்னோட புதுத் தொழிலுக்குச் சின்ன சின்ன உதவிய செஞ்சிட்டிருக்கா ஈஸ்வரி. அவளோட கோவத்துக்கும், அவ செயலுக்கும் சம்பந்தமேயில்ல. உதடு தான் கடுகடுனு வார்த்தைய விடுதே தவிர மனசு முழுக்க பாசம் நிறைஞ்சிருக்கு என் சண்டைக்காரிக்கு” –பவிதரன் […]

 

Share your Reaction

Loading spinner