அத்தியாயம் 27

சமுதாயத்தில் ஒதுக்கப்படுவது, தனக்கென யாருமில்லாத தனிமையோடு உணர்வுரீதியான வேதனையும் சேர்ந்து ஒரு சைக்கோபாத்தை குற்றங்களைச் செய்யத் தூண்டுகின்றன. இந்த உலகமே அவர்களுக்கு எதிராக இருப்பதாக நம்புகிறார்கள் அவர்கள். கூடவே தங்களின் வினோத ஆசைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் தங்களுக்கு இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள். சைக்கோபாத் சீரியல் கொலைகாரர்களான ஜெஃப்ரி டாமர் மற்றும் டெனிஸ் நில்சன் கூற்றுப்படி அவர்களைப் போன்ற சைக்கோபாத் கொலைகாரர்கள் அடிக்கடி உலகத்துடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொள்வதாகவும் அதன் மூலம் அவர்களின் சைக்கோபாத் குணம் இன்னும் தூண்டப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள். … Continue reading “அத்தியாயம் 27”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 26

சைக்கோபாத்கள் அதிகபட்ச வெளிப்புறத் தூண்டுதலால் முட்டாள்தனமான சாகச மனநிலையில் இருப்பார்கள். காரணம் அவர்களின் இயல்புக்கு மீறிய எதிர்பார்ப்புகள் மற்றும் பிறருடன் நடக்கும் மோதல்கள். இந்த முட்டாள்தனமான சாகச மனநிலையைக் கட்டுப்படுத்த முடியாத தங்களது இயலாமையை எண்ணி அவர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் தங்களது இயல்பிலிருந்து மாற விரும்பினாலும், பயமுணராத்தன்மை, அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளும் திறன் இல்லாமை, எதிர்மறை மனநிலை, விரக்தி, மனச்சோர்வு இதெல்லாம் அவர்களை மாறவிடுவதில்லை. -From ‘The hidden suffering of the psychopath’ article of … Continue reading “அத்தியாயம் 26”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 25

சைக்கோபாத்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அதில் குழப்பமான குடும்ப வாழ்க்கை, பெற்றோர்களின் வழிகாட்டுதல் போதுமான அளவில் இல்லாமை, போதைக்கு ஆளான பெற்றோரின் கொடுமை மற்றும் சமூக விரோதப்போக்கு, மோசமான உறவுகள், விவாகரத்து, வளர்ச்சிக்குப் பாதகமான சூழல் போன்றவை கட்டாயம் இடம்பெறும். இத்தகைய நபர்கள் தங்களது மனரீதியான குறைபாட்டால் தங்களை ஒரு சிறைக்கைதியைப் போல உணரலாம். அதனால் தங்களையும் சாதாரணமாக வாழும் மற்ற நபர்களையும் அவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு. அவர்களுக்கு இருக்கும் எவையெல்லாம் தனக்கு மறுக்கப்படுகிறது என்பதை … Continue reading “அத்தியாயம் 25”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 24

சைக்கோபாத்கள் பலவிதமான காரணங்களால் உணர்வுரீதியான வேதனைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கும் தன்னை அன்பு செலுத்தவும் அக்கறை காட்டவும் நபர்கள் வேண்டுமென்ற ஆழமான ஆசை இருக்கும். அந்த ஆசை நிறைவேறாமல் போவதே அவர்களின் மனப்பிறழ்வுக்குறைபாடு தீவிரமாகக் காரணமாக அமைகிறது. எது எப்படியோ, இம்மாதிரியான கொடுமையான மனப்பாங்கு கொண்ட சைக்கோபாத்களுடன் சுமூகமான உறவைப் பேணுவது யாருக்கும் கடினமே. இத்தகைய சைக்கோபாத்கள் அவ்வபோது தங்களது குணங்களால் மற்றவர்கள், குறிப்பாக நேசிப்பவர்கள் காயமடைவதைப் பற்றி யோசித்து வருத்தத்துக்கு ஆளாவார்கள். பெரும்பாலான சைக்கோபாத்களின் வாழ்க்கையில் நிலையான … Continue reading “அத்தியாயம் 24”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 23

மனப்பிறழ்வுக்குறைபாடு அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு குறைபாடு ஆகும். ஆனால் இக்குறைபாட்டைக் கண்டறிய மருத்துவ சோதனைகளான இரத்தச் சோதனை, மூளை ஸ்கேன், மரபியல் பரிசோதனை போன்று எந்தச் சோதனையும் கிடையாது. அவர்களை சில குணாதிசயங்களை வைத்து கண்டுகொள்ளலாம். பெரும்பாலும் அவர்கள் புத்திக்கூர்மை மிக்கவர்களாகவும், அதீத கவர்ச்சி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் தங்களது அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தவறுவார்கள். யாரிடமும் அன்பு பாராட்டத் தெரியாமல் அடுத்தவர்களை தங்களது பேச்சு சாதுரியத்தால் ஏமாற்றும் குணம் கொண்டவர்கள். சுயக்கட்டுப்பாடு இல்லாமல் விளைவுகளைப் பற்றிய … Continue reading “அத்தியாயம் 23”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 22

மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கு மரபியல் மற்றும் சூழல் காரணங்களும் ஒருவிதத்தில் பொறுப்பாகும். ஆனால் இவை நேரடி காரணிகள் அல்ல. அதாவது சிலவிதமான நரம்பியல் கட்டமைப்புகளை கொண்ட மூளை வடிவமைப்பு மனப்பிறழ்வுக்குறைபாட்டை ஒரு மனிதனுக்குள் உண்டாக்கும். மனித மூளையில் தற்காப்பு மற்றும் பயத்தை உணர்வதற்காக இருக்கும் பகுதி ‘அமிக்டலா’. இதுவே ஒரு சூழலில் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதற்கான கட்டளைகளைப் பிறப்பிக்கும் பகுதியாகும். சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அமிக்டலா பகுதி மற்ற குழந்தைகளின் அமிக்டலாவை விட கொஞ்சம் மாறுபட்ட அமைப்போடு காணப்படும். … Continue reading “அத்தியாயம் 22”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 21

சைக்கோபதி எனும் மனப்பிறழ்வுக்குறைபாடு மரபுரீதியான காரணிகளால் ஏற்படுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சைக்கோபதி ஜீன் என்று தனிப்பட்ட வகையில் எந்த மரபணுவும் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படுவதில்லை. ஆனால் குடும்ப உறவுகளில் மரபுரீதியான மனப்பிறழ்வுக்குறைபாடு வருவது உண்டு என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பெற்றோருக்கு மனப்பிறழ்வுக்குறைபாடு இல்லையென்ற சூழலில் முந்தைய தலைமுறையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைகளுக்குச் சைக்கோபதி வருவதற்கான மரபணுக்கூறுகள் அவர்களுக்குள் இருக்கும். ஒரே ஒரு மரபணுவால் மட்டுமே இது சாத்தியமில்லை. நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இம்மாதிரியான மரபணுக்கூறுகள் கூட்டாக … Continue reading “அத்தியாயம் 21”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 20

மனப்பிறழ்வுக்குறைபாட்டைக் குணப்படுத்த முடியாது என்பது ஒரு கட்டுக்கதை. மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சை அவர்களின் குடும்பங்களிலிருந்தே ஆரம்பிக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் அனுசரணையும் அன்பும் அவர்களைப் பண்படுத்தும். மருத்துவ சிகிச்சையானது மெதுவாகவே முன்னேற்றத்தை உண்டாக்கும். மற்ற ஆளுமை குறைபாடுகளைப் போலவே மனப்பிறழ்வுக்குறைபாட்டைக் குணப்படுத்துவதும் சவால் நிறைந்த காரியமே. ஏனெனில் அந்தக் குறைபாட்டின் தீவிரம், அதற்கான காரணங்கள், குறைபாட்டுக்கான பயனுள்ள சிகிச்சை முறைகள் பற்றி இதுவரை போதுமான ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப்படாததால் சிகிச்சைக்கான வழிமுறைகளும் போதுமானதாக இல்லை. -From psychopathy.org … Continue reading “அத்தியாயம் 20”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 19

மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக விரோத நடத்தை மற்றும் ஆக்ரோசத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. இருப்பினும், மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் உடல்ரீதியான வன்முறையில் ஈடுபடுபவர்களாக மாறுவதில்லை. அதே போல உடல்ரீதியான வன்முறையில் ஈடுபடுவோர் அனைவருக்கும் மனப்பிறழ்வுக்குறைபாடு இருப்பதுமில்லை. மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சவால்கள் இருக்கும். சில நேரங்களில் மனப்பிறழ்வுக்குறைபாடு வன்முறையாக வெளிப்படுவதில்லை. திருடுதல், ஏமாற்றுதல் போன்ற சமூக விரோத செயல்களாகவும் மனப்பிறழ்வுக்குறைபாடு வெளிப்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவை எல்லாம் வயது மற்று பாலினத்தைப் பொறுத்து மாறுபடுகின்றனவாம். … Continue reading “அத்தியாயம் 19”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 18

கலாச்சார இனக்குழு வேறுபாடின்றி எல்லா இடங்களிலும் மனப்பிறழ்வுக்குறைபாடு கொண்டோர் வாழ்கின்றனர். தோராயமாக 1 சதவிகித ஆண்களும், 0.3 முதல் 0.7 சதவிகித பெண்களும் இக்குறைபாட்டால் பாதிக்கப்படலாமென ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. ஹேரின் செக்லிஸ்டின் படி மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அனைவரும் சைக்கோபாத்கள் அல்ல. சிலருக்கு வெறும் அறிகுறிகள் மட்டும் இருக்கலாம். மனப்பிறழ்வுக்குறைபாட்டோடு தொடர்புடைய ஆரம்பகால அறிகுறியான ‘அமைதியான, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத குணாதிசயத்தைக் குழந்தை பருவத்தில் ஒருவர் கொண்டிருக்கலாம். அதற்காக அவர் வளர்ந்ததும் சைக்கோபாத் ஆகிவிடுவார் என்று அர்த்தமில்லை. அப்படி … Continue reading “அத்தியாயம் 18”

 

Share your Reaction

Loading spinner