ராகவ் சில நிமிடங்கள் கையைக் கட்டிக்கொண்டு பொறுமையுடன் வேடிக்கை பார்த்தவன் இனியும் காத்திருக்க விருப்பமின்றி அவந்திகாவின் அருகே சென்று நாற்காலியில் அமர்ந்திருந்தவளைக் கையில் அள்ளிக்கொள்ள அவந்திகா இதைச் சற்றும் எதிர்பாராதவள் “என்னடா பண்ணுற நீ? லீவ் மீ… ஐ செட் லீவ் மீ இடியட்” என்று அவனது பிடியிலிருந்து திமிறி விலக இருந்தவளை அவன் விட்டால் தானே!
“ஒழுங்கா நான் சொன்னப்பவே கிளம்பியிருக்கலாம்.. என் கிட்ட வீணா சண்டை போட்டு உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணி, டூ ஹன்ட்ரெட் கேஜி இருக்கிற உன்னைத் தூக்க வைச்சு… ப்ச்! ஏன் ஜான்சி ராணி நீ இப்பிடி அடம்பிடிக்கிற?” என்று குழந்தைக்கு அறிவுறுத்துவது போல பேச
“சரி சரி! நான் வர்றேன்! மரியாதையா என்னைக் கீழே இறக்கிவிடு” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் அவந்திகா.
தன்னிடம் எந்த ஆண்மகனையும் இதுவரை நெருங்க விடாதவளுக்கு திடீரென்று அவன் தூக்கியதில் அதிர்ச்சி மட்டுமே. சில அடிகள் இடைவெளியில் இது வரை பார்த்திருந்த அவனது முகம் இவ்வளவு பக்கத்தில் மூச்சுக்காற்று மோதும் தொலைவிலிருக்கவே அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.
தவிப்பும் கோபமுமாய் அவனை முறைத்தவளைக் கண்ட ராகவ் “இறக்கி விடுறேன்.. நோ பிராப்ளம்.. பட் நீ என் கூட வருவியா மாட்டியா?” என்று கேட்க அவந்திகா வருவதாக ஒத்துக்கொண்ட பின்னரே அவளை இறக்கிவிட்டான்.
அவனை முறைத்தவாறே நின்றிருந்தவள் மொபைலை எடுத்துக் கொண்டு அலுவலக அறையைப் பூட்டிவிட்டு அவனுடன் சேர்ந்து வெளியேறினாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
காரில் அவனுடன் ஏறும்போது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவளுக்கு கபூர் பேலஸில் காலடி எடுத்துவைத்ததும் அவளுக்குள் சொல்லவொண்ணா பரபரப்பு ஏற்பட்டது என்னவோ உண்மை. அவள் கண் முன்னே நின்ற அந்த வெள்ளை நிற மாளிகையினுள் ராகவுடன் சேர்ந்து நுழையும் போதே உள்ளே அவர்களின் வீட்டில் செய்திருந்த அலங்காரத்தைப் பார்வையிட்டபடியே அவனுடன் சேர்ந்து நடந்தாள்.
கௌசல்யா, மைதிலி, வாசந்தி மூவரும் ராகவ் குடும்பத்தின் பெண்களுடன் பேசிக்கொண்டிருக்க ரகுவரனும் மற்றவர்களும் ராகவின் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தனர்.
சுமித்ரா பேரனுடன் ஏதோ கையைக் காலைக் கட்டி அழைத்து வந்தது போன்ற முகபாவத்துடன் நடந்து வந்த அவந்திகாவைக் கண்டதும் வழக்கம் போல அடிக்கண்ணால் அவளைப் பார்த்தவர் ராகவிடம் “ஃபங்சன் ஆரம்பிக்க இன்னும் கொஞ்சநேரம் தான் இருக்கு… இவ இப்பிடியே தான் இருப்பாளா?” என்று அவந்திகாவைச் சுட்டிக்காட்ட அதைக் கவனித்த கௌசல்யா மகளிடம் விறுவிறுவென்று வந்தவர்
“இந்த டிரஸ்ஸோடவா வருவ?” என்று கடிந்து கொள்ள
“சித்தி இவன் என்னை அவசரமா கூட்டிட்டு வந்துட்டான்” என்று ராகவைக் குற்றம் சாட்டினாள் அவந்திகா.
கௌசல்யா அவளை முறைத்தபடி ஏதோ சொல்லவர ராகவ் நேஹாவையும் பிந்துவையும் அழைத்தவன் “போய் அவளுக்கு டிரஸ் சேன்ஜ் பண்ண ஹெல்ப் பண்ணுங்க” என்று சொல்லவே
இருவரும் “நாட் பேட் பய்யா! அதுக்குள்ள வருங்கால மனைவி மேலே இவ்ளோ அக்கறையா? வீ ஆர் இம்ப்ரெஸ்ட்” என்று கேலி செய்தபடி அவந்திகாவிடம் வந்தவர்கள் அவளைக் கையோடு அழைத்துச் சென்றனர்.
அவளது கண்கள் ரித்திமாவையும் பிரதியுஷாவையும் தேட, அதற்குள் இரு சகோதரிகளும் அவளை தங்களுடன் கடத்திச் சென்றனர். அவந்திகா அவர்களுடன் சென்றவள் அவளிடம் கொடுக்கப்பட்ட லெஹங்காவைக் கண்டதும் முகம் சுளித்தாள்.
“இதையா நான் இப்போ வியர் பண்ணிக்கனும்? சாரி! எனக்கு முன்ன பின்ன லெஹங்கா போட்டு பழக்கமில்லை கேர்ள்ஸ்” என்று சொல்லிவிட
“பட் பாபி இப்போ நீங்க இதைத் தான் போட்டுக்கணும்” என்ற நேஹாவின் பேச்சை அவள் கேட்பதாக இல்லை.
“இதோட வெயிட் ஒரு செவன்ட்டி கேஜி இருக்குமா? அப்புறம் இந்த ஜுவெல்ஸ் ஒரு தேர்ட்டி கேஜி இருக்குமா? ஆனா நான் வெறும் ஃபாட்டி ஃபைவ் கேஜி தான்.. என்னால எப்பிடி இதோட வெயிட்டைத் தாங்கிக்க முடியும்?” என்று பிடிவாதமாக மறுத்தவளுக்கு இப்போதும் தன்னை ஏன் இதையெல்லாம் அணியச் சொல்கிறார்கள் என்பது விளங்கவில்லை.
அதைப் பற்றி நேகா, பிந்துவிடம் கேட்டதற்கு அவர்கள் இன்றைக்கு வருணுக்கும் பிரதியுஷாவுக்கும் நிச்சயதார்த்தம் என்று சொல்லவும் அவந்திகாவுக்கு முகம் மாறிவிட்டது. இது வரை பிரதியுஷாவோ ரித்திமாவோ அவளிடம் இந்த விஷயத்தைப் பற்றி மூச்சு கூடவிடவில்லையே என்ற ஆதங்கம் அவளுக்கு.
அவளுக்கு மட்டும் என்ன தோழியின் நிச்சயத்தில் கலந்துகொள்ளக்கூடாதென்ற வேண்டுதலா என்ன? அவளுடைய முக்கியப் பிரச்சனையே ராகவோ அவனது குடும்பத்தினரோ இருந்தால் அவளால் இயல்பாக அவர்களுடன் பழக இயலவில்லை என்பது தான். அதனால் தான் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பைத் தவிர்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் இவ்வளவு பெரிய விஷயத்தைத் தன்னிடம் அனைவரும் மறைத்துவிட்டார்கள் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதே நேரம் அவந்திகா சென்று அரைமணிநேரம் தாண்டிவிடவே ராதிகா மகனிடம் வந்து “நேரமாகுது ராகவ்… அவந்திகாவும் வந்துட்டா ஃபங்சனை ஸ்டார்ட் பண்ணிடலாம்… வருணும் ரதியும் ரெடியாயிட்டாங்கடா” என்று கூறவே ராகவ் தான் சென்று அவளை அழைத்துவருவதாகச் சொல்லிவிட்டு நேஹாவின் அறைக்குச் சென்றான்.
அங்கே சென்றவன் இன்னும் அவள் தயாராகாமல் அடம்பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு எரிச்சலுற்றான். அவளைச் சமாளிக்க இயலாமல் தவித்த இளைய சகோதரிகளைக் ஹாலுக்குச் செல்ல சொன்னவன் அவந்திகாவிடம்
“உனக்கு என்ன தான் பிரச்சனை? இப்போ நீ இந்த டிரஸ்ஸை சேன்ஜ் பண்ணப் போறியா இல்லையா?” என்று கேட்டுவிட்டு நிற்க
“போட முடியாது.. எனக்கு இது பிடிக்கலை… அண்ட் ஒன் மோர் திங் எனக்கு உன்னோட வீட்டுக்கு வரவோ இந்த ஃபங்சன்ல கலந்துக்கவோ இஷ்டமில்லை” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டு அங்கே கிடந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
“அடம்பிடிக்காதே ஜான்சிராணி! இப்போ நீ டிரஸ் சேன்ஜ் பண்ணலைனா அப்புறம் இதே டிரஸ்ஸோட உன்னைக் கீழே கூட்டிட்டுப் போகவேண்டியிருக்கும்” என்றவன் அவள் அருகில் வரவும் அவளுக்கு நெஞ்சம் படபடக்க ஆரம்பித்தது.
அவளருகே குனிந்தவன் “சின்ன கரெக்சன்! கூட்டிட்டுப் போக மாட்டேன்… தூக்கிட்டுப் போவேன்” என்று சொல்லி புருவத்தை உயர்த்தவே அவந்திகா அவனைத் தன்னிடமிருந்து விலக்கி வைக்க முயல அவன் அசைந்தால் தானே!
“தள்ளிப் போ ராகவ்!”
“அப்போ டிரஸ் சேன்ஜ் பண்ணிக்கோ”
“நீ இங்கேயே இருந்தா நான் எப்பிடிடா சேன்ஜ் பண்ணுவேன்?” என்று சொல்லி முடிப்பதற்குள் அவளது முகம் சிவந்து குரலும் கிணற்றுக்குள் சென்றது போலத் தணிந்து விட்டது.
ராகவ் அவளே சம்மதித்துவிட்டதால் அவளை விட்டு விலகியவன் “இன்னும் பத்து நிமிசம் தான்… நீ ரூமை விட்டு வெளியே வரணும்… இல்லைனா நான் சொன்னபடி தூக்கிட்டுப் போயிடுவேன்” என்று சொல்லி மணிக்கட்டைத் தட்டிக் காட்டிவிட்டு வெளியேறினான்.
அவந்திகா அவன் சென்றதையே பார்த்துக் கொண்டிருந்தவள் வேகமாக எழுந்து உடை மாற்றத் துவங்கினாள். அவள் நினைத்தது போல உடை ஒன்றும் அவ்வளவு கனமாக இல்லை. அணிகலன்களையும் மொத்தமாக அள்ளிப் போட்டுக் கொள்ளாமல் எளிமையாக அணிந்து கொண்டவள் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்ததும் இவ்வளவு நேரம் இருந்த எரிச்சல் மட்டுப்பட்டது அவளுக்கு.
அதே நேரம் தன்னிடம் இந்த விஷயத்தை ஏன் மறைத்தார்கள் என்று ரித்திமாவையும் பிரதியுஷாவையும் கேட்டால் தான் அவள் மனம் நிம்மதியுறும் என்ற எண்ணத்துடன் ஹாலுக்குச் சென்றாள்.
உடைமாற்றிவிட்டு ஹாலுக்கு அவள் வரவும் நான்கு குடும்பத்தினர் மட்டுமே இருக்கும் அந்த நிச்சயதார்த்த நிகழ்வு ஆரம்பித்துவிட்டது. இதோ பிரதியுஷாவும் வருணும் வந்துவிட ரித்திமா அவந்திகாவுடன் வந்து நின்று கொண்டாள்.
“ஹனிபி! இந்த நீ அழகா இருக்க”
“ஆக்சுவலா நான் பிறவியிலயே அழகிடி”
“அடியே போதும் போதும்! இன்னைக்கு உஷாவோட என்கேஜ்மெண்ட்… இன்னைக்காச்சும் உண்மையைப் பேசு”
“அப்போ நான் அழகா இல்லைனு சொல்லுறியா ரித்தி?”
“சே சே! நீ இன்னைக்கு அழகா இருக்க, ஆனா நிப்பான் பெயிண்டின் உபயத்தால்” என்று ரித்திமா களுக்கென்று நகைக்க அவளை ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அங்கே போன் பேசியபடி உலாவிய ராகவைக் கண்டதும் அவன் பேசிய பேச்சு நினைவுக்கு வரவும் முகம் சிவந்து போனாள்.
அதே நேரம் நிச்சயதார்த்த விஷயம் நினைவுக்கு வரவும் “ஏன்டி இன்னைக்கு என்கேஜ்மெண்ட்னு எனக்குச் சொல்லலை? நான் உங்க எல்லாருக்கும் யாரோவா போயிட்டேன்ல” என்று சொல்லிவிட்டவளைப் பதறிப்போய் பார்த்தாள் ரித்திமா.
“ஹனிபி! அப்பிடி இல்லடி! உஷாவும் கௌசிக்காவும் உன்னை வீணா டென்சன் ஆக்க வேண்டானு சொல்லிட்டாங்க”
“அஹான்! உஷாவுக்கும் வருணுக்கும் என்கேஜ்மெண்ட்னா நான் ஏன்டி டென்சன் ஆகப் போறேன்? எல்லாருக்கும் என்னைப் பார்த்தா எப்பிடி தெரியுது?” என்று கடிந்து கொண்டிருந்தவளின் எதிரே சற்று தொலைவில் வந்து நின்ற ராகவைக் கண்டதும் எங்கிருந்தோ அசவுகரியம் வந்து அவள் முகத்தில் ஒட்டிக் கொண்டது.
தன் கவனத்தை ராகவிடமிருந்து பிரித்து பிரதியுஷா வருணிடம் திருப்பினாள். ஒருவருக்காகவே மற்றொருவர் பிறந்தது போல விழிகளால் காதல் மொழி பேசிக்கொண்டிருந்த இருவரையும் பார்த்து நெட்டி முறித்து திருஷ்டி கழித்தவள் ரித்திமாவிடம்
“செம கபிள்ஸ்டி! லவ் ஜெயிச்சுடுனா அந்தச் சந்தோசமே முகத்துக்கு அழகைக் குடுக்குதுல்ல… ஹூம்! எங்கே இருக்கானோ எனக்காகப் பிறந்தவன்?” என்று இவ்வளவு நேரம் இருந்த முன்கோபம் மறைய மலர்ந்த முகத்துடன் கூறினாள்.
ரித்திமாவுக்கு எப்படியோ அவளது கோபம் தொடங்குவதற்குள் முடிந்த திருப்தி. அதன் பின்னர் அனைவரின் கவனமும் அங்கே நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்வுக்குத் திரும்பியது.
அவர்கள் முறையிலான சம்பிரதாயங்கள் முடிந்து குடும்பத்தவர்கள் முன்னிலையில் பிரதியுஷாவும் வருணும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். நிச்சயம் முடிந்தது என்று அவந்திகா பிரதியுஷாவை நோக்கிச் செல்லும் போதே சுமித்ராவின் “அடுத்து ராகவோட நிச்சயதார்த்தத்தை ஆரம்பிப்போம்” என்ற வார்த்தையில் அதிர்ந்தவள் சிலையாய்ச் சமைய ராகவ் புன்னகையோடு வந்தவன் சம்பிரதாயங்களைச் செய்ய ஆரம்பித்தான்.
அவந்திகா அதிர்ந்து நோக்கும் போதே கௌசல்யா வருங்கால மருமகனைப் பார்த்தவர் அவனது பார்வையில் இருந்த ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்ற செய்தியில் நிம்மதியுற்று இருக்கையில் அவந்திகாவின் முகம் போன போக்கைக் கண்டு மீண்டும் கைகளைப் பிசையத் தொடங்கினார்.
அடுத்து மோதிரம் மாற்ற இருவரையும் அழைக்கவும் அவந்திகாவுக்குத் திக்கென்றது.
நகராமல் சிலையாய் நின்றவளை ராகவ் கரம்பற்றி அழைத்துச் சென்றான். பிந்துவும் நேகாவும் மோதிரத்தைக் கொடுக்க அதை அவந்திகாவின் விரல்களில் போட்டான் இல்லையில்லை திணித்தான்.
அவந்திகாவுக்கு அவனது தொடுகையில் உணர்வு வந்து அவள் சுதாரிப்பதற்குள் ராகவ் மோதிரத்தை மாட்டியிருந்தான். பிந்து இன்னொரு மோதிரத்தை அவந்திகாவிடம் நீட்டியவள் “போட்டு விடுங்க பாபி” என்று புன்னகைமுகமாய் சொல்ல அவந்திகாவின் பார்வை தங்களைக் கண்ணாறக் கண்டுகொண்டிருக்கும் இரு குடும்பத்தினரின் முகத்தை நோக்கினாள்.
அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவன் “இப்போ நீ என்ன யோசிக்கிறேனு புரியுது அவந்திகா.. பட் இது யோசிக்கிறதுக்கான நேரமில்லை… ரிங்கைப் போட்டுவிடு” என்று சொல்ல அவள் மீண்டும் இரு குடும்பத்தினரையும் பார்த்துவிட்டு மௌனமாக அவனது விரலில் மோதிரத்தைப் போட்டுவிடவே அனைவரின் முகமும் கவலை நீங்கி சந்தோசத்தில் ஜொலிக்க ஆரம்பித்தது.
ராகவ் மோதிரத்தைப் பார்த்தபடியே “வீ ஆர் அஃபிஷியலி என்கேஜ்ட் நவ்” என்றான் குறுஞ்சிரிப்புடன். அவந்திகா விழி விரித்துப் பார்த்தவள் இதற்காகத் தான் அனைவரும் இந்த நிச்சயதார்த்தம் பற்றிய நிகழ்வைத் தன்னிடமிருந்து மறைத்தார்கள் போல என்று புரிந்தது.
இப்போது கோபப்படுவதா இல்லை பல்லைக் கடித்துக்கொண்டு நிற்பதா என்று புரியாமல் நின்றவளை ஒவ்வொருவராக வந்து வாழ்த்திவிட்டுச் சென்றனர். நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்ட அவ்விழாவில் பிரதியுஷாவையும் வருணையும் வாழ்த்திவிட்டு அவந்திகா ராகவிடம் வந்தாள் ஒரு பெண்.
ராகவ் அவளைக் கண்டுகொள்ளாமல் நிற்கவே அவளது கவனம் அவந்திகாவின் புறம் திரும்பியது.
புன்னகையுடன் “கங்கிராஜுலேசன்” என்று சொன்னவள் வலுக்கட்டாயமாக அவந்திகாவின் கையைப் பற்றிக் குலுக்கினாள்.
அவந்திகா புரியாமல் விழிக்கவும் “இந்த ரெண்டு கைக்கும் சின்ன டிஃபரன்ஸ் தான்… என் கையில ரிங் இல்லை… உன் கையில அது இருக்கு.. இதால எதுவும் மாறப் போறதில்லை.. அப்பிடி தானே ராகவ்” என்று புன்னகை புரிந்தபடி ராகவை நோக்க அவனோ “இன்னொரு வித்தியாசம் இருக்கு… வீ ஆர் லவ்விங் ஈச் அதர் வெரி மச்… பட் அந்த லவ்வை வேற யார்கிட்டவும் நான் ஃபீல் பண்ணலையே தியா” என்று அழுத்தமாக உரைக்க அவந்திகா இருவரையும் வேடிக்கை பார்த்தபடி நின்றாள். அவளுக்கு இன்றைய நிகழ்வுகளோ இந்தப் பெண்ணோ எதுவுமே மனதில் நிற்கவில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


