எந்தச் சூழலிலும் நம்மை நம்பும் உறவு வாய்ப்பது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்! நம்பிக்கை என்பது திணிக்கப்படும் உணர்வல்ல! அது இயற்கையாக உருவாகும் அற்புதமான உணர்வு. அவ்வளவு எளிதில் அந்த உணர்வு யார்மீதும் வந்துவிடாது. சில நேரங்களில் அவ்வுணர்வை ஜெயிக்க நாம் போராட வேண்டியதிருக்கும். சில நேரங்களில் நமது செயல்பாடுகளை வைத்தே நம்மீது நம்பிக்கை பிறந்துவிடும். நம்பிக்கையைப் பெறுவது என்பது கிட்டத்தட்ட ஆழ்குழாய் கிணறு தோண்டுவது போல. நீர்வளம் கொண்ட இடத்தில் தோண்டினால் சிரமமில்லாமல் தண்ணீர் வருவது போல சிலருக்கு நமது செயல்பாடுகளின் மூலமாகவே எளிதில் நம்பிக்கை வந்துவிடும். கொஞ்சம் நீர்வளம் குறைவான பகுதியில் நீரோட்டத்தைத் தேடி சரியான ஆழத்திற்கு குழியைத் தோண்டி நீரை வெளியே கொண்டுவருவது போல பெரும் முயற்சியும் தேவைப்படும் சிலரின் நம்பிக்கையை ஜெயிப்பதற்கு.
– அன்பனின் சிந்தனை சிதறல்கள்
திருமண வரவேற்பு களேபரங்கள் அடங்கி மகனையும் மருமகளையும் நல்லூர் வீட்டுக்கு அழைத்து வந்து மருமகளை விளக்கேற்ற வைத்த பிற்பாடு மனோகரி செய்த முதல் காரியமே அவர்கள் இருவரையும் தனியே அழைத்துப் பேசியதுதான்.
பெரிதாக இரகசியமெல்லாம் இல்லை. அன்பரசன் திடுதிடுப்பென திருமண மண்டபத்திலிருந்து கிளம்பியதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டதால் உண்டான ஆதங்கத்தைக் கொட்ட அழைத்துச் சென்றார் அவர்.
அன்னை மீண்டும் ராஜாவுக்கு உதிரம் கொடுக்க தங்களை எல்லாம் மண்டபத்தில் பரிதவிக்கவிட்டு அவன் சென்றது தவறு என்றதும் அன்பரசன் பொறுமையிழந்தான்.
“அந்த நேரத்துல நான் வேற என்ன யோசிப்பேன்? எனக்குத் தெரிஞ்சு ஏபி நெகடிவ் குரூப் ஆளுங்க யாருமில்ல… இருந்தா நான் ஏன் கல்யாண மண்டபத்தை விட்டுப் போறேன், சொல்லுங்க… உங்க கிட்ட சொல்லியிருந்தா என்னை அனுப்பியிருப்பிங்களா? கல்யாண மாப்பிள்ளை ரத்தக்காயத்தை பாக்கக்கூடாது, ஹாஸ்பிட்டல் வாசலை மிதிச்சிட்டு வாழ்க்கைய ஆரம்பிக்குறது அபசகுனம்னு ஆளுக்கு ஒரு காரணத்தைச் சொல்லி என்னைப் போகவிடாம பண்ணிருப்பிங்க… அதனால தான் நான் யார் கிட்டவும் சொல்லாம போனேன்… ஏன்மா உங்க எல்லாருக்கும் என் மேல நம்பிக்கையே கிடையாதா?” என்றான் அவன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

மனோகரி கடுப்போடு அவனது புஜத்தில் அடிக்கவும் “அவுச்! என் பொண்டாட்டி முன்னாடி அடிச்சு மானத்தை வாங்காதிங்கம்மா” என்று முகம் சுருக்க ஆரபியோ பொங்கி வந்த சிரிப்பை அடக்க அரும்பாடு பட்டாள்.
மனோகரிக்கும் மருமகளின் சிரிப்பைப் பார்த்ததும் புன்னகை பூத்தது. அவளது கையைப் பற்றினார்.
“என் மருமகளா இருக்க போய் நீ செஞ்ச அவசர காரியத்தைக் கண்டுக்காம உனக்குக் கழுத்தை நீட்டுனா… அவ இடத்துல வேற ஒரு பொண்ணு இருந்திருந்தானா இன்னைக்குக் கல்யாணமே நடந்திருக்காது”
ஆரபி கண் சிமிட்டினாள் அன்பரசனை நோக்கி.
அவனோ “அதைதான் நானும் சொல்லுறேன்… ஆருக்கு என் மேல இருந்த நம்பிக்கை உங்க யாருக்குமே இல்ல… இன்னைக்கு நான் மண்டபத்துக்கு வராமலே போயிருந்தாலும் அவ என்னை நம்பிருப்பா… அப்பிடி தானே ஆரு?” என்று மனைவியைத் தன் கட்சிக்கு இழுக்கப் பார்க்க
“போதும்யா… நீ பேசியே ஆளுங்களைக் கரைச்சிடுவ… என் மருமகளும் உன் பேச்சுல ஏமாந்து போயிருப்பா போல… அவளுக்கு நான் எடுத்துச் சொல்லி புரியவச்சிடுவேன்” என்றார் மனோகரி.
பின்னர் ஆரபியிடம் “இங்க பாரும்மா, இவன் பேச்சுல கில்லாடி…. பேசியே எப்பேர்ப்பட்ட மனுசனையும் வளைச்சிடுவான்… பாத்து சுதாரிப்பா இருந்துக்க மருமகளே” என்று கேலியாகச் சொன்னார்.
ஆரபி மாமியார் சொன்னதற்கு தலையை ஆட்டிவைத்தாள்.
பின்னர் இருவரும் அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினார்கள்.
இரவின் தனிமையில் இருவரும் சந்தித்த போது ஆரபியிடம் மெய்யாகவே மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான் அன்பரசன்.
“உன் கிட்டவாச்சும் நான் சொல்லிட்டுப் போயிருக்கலாம்னு தோணுச்சு ஆரு… அவன் என்னோட குளோஸ் ஃப்ரெண்ட்… பாவம், இன்ஜினியரிங் முடிச்சு சரியான வேலையும் இல்ல… ஒருவித விரக்தியோடவே சுத்துவான்… ஊருக்கு வர்றப்பலாம் நானும் அவனைச் சென்னைல ஏதாச்சும் ஒரு கன்சர்ன்ல வேலைக்குச் சேர்த்து விடலாம்னு நினைப்பேன்… அவனுக்கு என்ன சோகமோ திருநெல்வேலிய விட்டு வரவேமாட்டேன் மச்சான்னு சொல்லுவான்… அவங்கப்பா சமீபத்துல இறந்துட்டார்… அவங்கம்மாவும் அவனும் இப்ப அவங்க சொந்தக்காரங்க தயவுல தென்காசில இருக்காங்க” என்றான் அவன்.
ஆரபி மேற்கொண்டு சொல்லப்போனவனைத் தடுத்தாள்.
“நீங்க என் கிட்ட ஒரு விசயத்தை மறைக்குறிங்கனா அதுக்குக் காரணம் இருக்கும்னு எனக்குத் தெரியும் அன்பு… ஒரு உயிரைக் காப்பாத்த ப்ளட் குடுக்கப் போனது தப்பில்ல”
“ஆனா அத்தைக்குக் குறிச்ச நேரத்துல கல்யாணம் நடக்கலனு வருத்தம் இருக்குது தானே?”
மகளுக்கு நல்ல நேரத்தில் திருமணம் நடக்கவில்லை என்று அன்றைய தினம் முழுவதும் முகச்சுணக்கத்தோடு நடமாடிய சுடர்விழியை மனதில் வைத்துப் பேசினான் அன்பரசன்.
ஆரபியிடமிருந்து அவனது கேள்விக்குப் பதில் வரவில்லை. நீண்டநெடும் பெருமூச்சு தான் வந்தது. தன் அன்னை சுணக்கத்தோடு நடமாடக் காரணம் அதுவல்ல, யாரும் தனது இரகசியத்தைச் சொல்லிவிடக்கூடாதென்ற பதற்றம் என அவனிடம் எப்படி உரைப்பாள்?
“எதுக்குடி இவ்ளோ பெரிய பெருமூச்சு?” அன்பரசன் வினவ பேச்சை மாற்ற எண்ணியவள் தன் கழுத்தில் அவன் கட்டிய தாலியை எடுத்துக் காட்டினாள்.
“இன்னைக்குக் காத்தால நீங்க இதை என் கழுத்துல கட்டுனிங்க… நமக்குக் கல்யாணம் ஆயாச்சு… நான் இப்ப மிசஸ் அன்பரசன்… இதுல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?”
தலை சரித்து அவள் வினவியபோது கூந்தலில் சூடியிருந்த மல்லிச்சரம் புரண்டு முன்னே துள்ளி குதிக்க அன்பரசனின் மனம் “ஒரு மல்லிப்பூவே மல்லிச்சரம் வச்சிருக்கே, அடடே ஆச்சரியக்குறி” என்றது அரைகுறை கவிஞனாக.
“ஹலோ” ஆரபியின் கைவளைகள் அவன் கண் முன்னே குலுங்க அன்பரசன் அந்தக் கரத்தோடு சேர்த்து அவளையும் இழுத்து தன் அணைப்புக்குள் வைத்துக்கொண்டான்.
“எல்லாம் ஞாபகம் இருக்கு பொண்டாட்டி… ஆனா நீ இப்பிடியே பேசிக்கிட்டிருந்தா உன்னைத் தவிர வேற எதுவும் எனக்கு ஞாபகம் இல்லாம போயிடும்” என்றான் கிசுகிசுப்பாக அவளது செவியில்.
வாய் பேசிக்கொண்டிருந்தபோதே விரல்கள் அவளது கன்னத்தின் வழுவழுப்பைச் சோதித்துவிட்டு நீயும் சோதித்துப் பாரென அவனது இதழ்களுக்கு அறைகூவல் விடுத்தன.
ஆரபிக்கு அவனது விரல்களின் மெல்லிய வருடலில் இதயத்துக்குள் கோடானகோடி மின்சிதறல்கள்!
அவனது அருகாமையின் அன்னியத்தன்மையை அவள் உணரவில்லை. சொல்லப்போனால் இன்னும் அவனுள் ஆழமாகப் புதைந்துபோகவே விரும்பினாள்.
ஆனால் பெண்களுக்கே உரித்தான நாணம் மனதில் நினைப்பதை வெளியே சொல்ல அனுமதிக்கவில்லை.
“ஆரு! எனக்குச் செமய்யா பசிக்குது” என்றவனின் முரட்டு இதழ்கள் ஆரபியின் கன்னங்களில் பயணித்துக்கொண்டிருக்க
“இப்ப தானே டின்னர் சாப்பிட்டிங்க?” என்று புரியாமல் விழித்தாள் ஆரபி.
அன்பரசன் அவளது நெற்றியில் முட்டியவன் “அது வெஜ் சாப்பாடு… நான் புதுமாப்பிள்ளைல்ல… எனக்கு நான்-வெஜ் மீல்ஸ் வேணும்… அதுவும் அன்லிமிட்டட் மீல்ஸ்” என்று சொன்னபடி அவளது அங்க லாவண்யங்களைப் பார்வையால் அளவிடவுமே கணவனின் நாட்டம் என்னவென்பதைக் கண்டுகொண்டாள் அவள்.
வெளிப்படையான பேச்சை விட இலைமறைகாயாக பேசும் பேச்சுக்கள் புதுமணத்தம்பதிகளிடம் இருப்பது இயல்பு தானே!
ஆரபி மௌனம் காக்கவும் அதைச் சம்மதமென எடுத்துக்கொண்டான் அன்பரசன்.
அவன் முன்னேறியதில் அவளது விழிகள் படபடக்க இதழ்கள் ஏதோ சொல்லவர அதைத் தன் ஆட்காட்டிவிரலால் தடுத்தவன்
“ப்ளீஸ்! சினிமா சீரியல்ல வர்ற மாதிரி முதல்ல நம்ம புரிஞ்சிக்கலாம், அப்புறம் லைஃபை ஆரம்பிக்கலாம்னு சொல்லி என் மனசை உடைச்சிடாத ஆரு” என்று சொல்ல நாணம் ஆட்கொண்டது ஆரபியை.
“நான் சொல்லவேல்லயே! எனக்கும் நான்-வெஜ் பிடிக்கும்ங்க” என்று அவள் சிணுங்கலாகக் கூறவும் அவளையும் அவளது நாணத்தையும் சேர்த்து ஆட்கொண்டான் அன்பரசன்.
இரு இதயங்கள் இளமையின் பூரிப்பில் ஒன்றோடொன்று இணைந்தன. அங்கே வளையோசையும், கொலுசின் சிணுங்கல்களும் ஸ்ருங்கார நாதமாக ஒலிக்க ஒரு கட்டத்தில் அவையும் வீண்பாரமென கழற்றி வீசப்பட்டதெல்லாம் சோகக்கதை.
சூறாவளி சுழன்று வரும்போது எதிர்படும் யாவற்றையும் தனக்குள் அடக்கிக்கொள்ளுமே, அது போல அன்பரசனின் தாபமும் ஆரபியைத் தனக்குள் சுருட்டி இழுத்துக்கொண்டது.
நாணமும் மயக்கமுமாக அவனில் ஐக்கியமானவள் வீசுதென்றலின் இதத்தோடு முடிவுக்கு வந்த கூடலில் கணவனின் மார்பில் தஞ்சமடைந்தாள்.
ஆரபியின் தாசனாக மாறிப்போயிருந்தவனோ இமைப்பொழுதும் உனை நீங்கமாட்டேன் என்று சங்கல்பம் செய்திருப்பான் போல. ஈருடல் ஓருயிராய் மாறி இனிய தாம்பத்தியத்தை ரசித்தவர்கள் உறங்கியும் போனார்கள்.
அன்றிலிருந்து ஆரபி – அன்பரசனின் இல்லறவாழ்வின் காலைப்பொழுதுகள் எல்லாம் சிணுங்கலும் விளையாட்டுமாய் ஆரம்பித்தன. மங்கும் மாலைப்பொழுதுகள் மயக்கத்தோடு இரவுக்குச் சிவப்பு கம்பளம் விரித்தன. இனிய இரவுகளில் மன்மதனின் மலர்க்கணைகளை ‘ஹோல்சேலுக்கு’ வாங்கியவர்களைப் போல திகட்ட திகட்ட காதல் பாடம் படித்தார்கள் இருவரும்
ஆரபிக்கு அன்பரசனின் குடும்பத்தினர் காட்டும் பரிவு அவளது அன்னையின் கண்டிப்பு கலந்த பரிவை மறக்கடித்தது எனலாம்.
மனோகரி நல்ல அன்னை மட்டுமல்ல, சினேகமாகப் பழகும் மாமியார் என்பதையும் நிரூபித்தார்.
சுடர்விழி எப்போதும் ‘சீரியசாக’ இருப்பார். ஒரு நகைச்சுவையை அவரிடம் சொல்லிச் சிரிக்கக் கூட அவ்வளவு தூரம் யோசிப்பாள் ஆரபி.
ஆனால் மனோகரியோ தொலைக்காட்சியில் பார்த்ததில் ஆரம்பித்து தினந்தோறும் வீட்டில் கணவரும், மகன்களும் அடிக்கும் கூத்துகள் வரை நகைச்சுவையோடு வர்ணித்து மருமகளைச் சிரிக்க வைக்கும் பெண்மணி.
“நீ மானிங் வேலைக்குப் போய் பழகுன பொண்ணு… உன்னால எப்பிடி வீட்டுவேலைய மட்டும் பாத்துக்கிட்டு இந்த நாலு சுவருக்குள்ள இருக்க முடியும் ஆரு? உனக்குப் போரடிக்குதுனா அரசு கிட்ட சொல்லி தென்காசி, ஆலங்குளத்துல ஏதாச்சும் வேலைக்கு ஏற்பாடு பண்ணட்டுமாம்மா?” என்று அவள் மனநிம்மதிக்காக யோசிக்கும் மாமனார் மார்த்தாண்டன்.
உடன்பிறந்த சகோதரன் போல வெள்ளந்தியாய் பேசும் அருண்! இவை எல்லாவற்றுக்கும் மேலாக திருமணவாழ்வின் ஒவ்வொரு நாளுள் அவளை மகாராணியாய் உணரவைக்கும் காதல் கணவன் அன்பரசன்!
இந்த அழகிய குடும்பத்தில் நானும் ஒருத்தி என்ற உரிமையுணர்வு ஆரபிக்குள் ஆழமாக உருவாகிவிட்டது. அன்பரசனது கனவான ‘மனோ ஃப்ரெஷ் ஜூஸ் பார் அண்ட் கபே’க்கான வரைவு திட்டங்களில் தனது யோசனையையும் கூறுவாள் அவள்.
“நீங்க என்ன தான் ஃப்ரெஷ் ஜூஸ்னு கூவி கூவி அழைச்சாலும் விளம்பரம் பண்ணுனாலும் முதல்ல மக்கள் அதைப் பெருசா கண்டுக்கமாட்டாங்க… சோ ஃபர்ஸ்ட் எல்லா ஜூஸ் பார் மாதிரி பாட்டில்ட் டிரிங்ஸ் சேல்ஸை ஆரம்பிங்க அன்பு… வர்றவங்களுக்கு காம்ப்ளிமெண்ட்ரி ட்ரிங்கா உங்களோட ஃப்ரெஷ் ஜூஸை குடுங்க… உங்க ஷாப்போட சுவர்ல ஒவ்வொரு பழத்தையும் ஃப்ரெஷ் ஜூஸ் எடுத்துக் குடிக்குறதோட நன்மை, நார்மலா ஜூஸ் தயாரிக்கிறவங்க செய்யுற ஜூசுக்கும் உங்க ஜூஸ் பார்ல கிடைக்குற ஜூசுக்கும் உள்ள வித்தியாசம் என்ன இதெல்லாம் ட்ரெண்டியான டைப்போக்ராபி லெட்டர்ஸ்ல கான்ட்ராக்ட் கலர் வர்ற மாதிரி எழுதி வைங்க… இதுல்லாம் யங்ஸ்டர்சை கவர்றதுக்கான ட்ரிக்ஸ்… இப்ப டைப்போகிராபி எழுத்தோட பெயிண்ட் பண்ணித் தரவும் ஆட்கள் இருக்காங்க… நான் உங்களுக்காக சிலரோட கான்டாக்ட் டீடெய்ல்ஸ் நெட்ல இருந்து எடுத்து வச்சிருக்கேன் பாருங்க”
ஆரபி சொல்வதை எல்லாம் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்வான் அன்பரசன். மனைவி என்பவள் மதியூக மந்திரி என்று பெரியவர்கள் ஒன்றும் நேரம் போகாமல் சொல்லிவைத்துவிட்டுப் போகவில்லையே!
கணவன் மனைவி உறவு வெறும் கட்டிலறை சுகத்திற்கும், பிள்ளைப்பெற்று வம்சத்தை விருத்தி செய்வதற்குமான ‘லைசென்ஸ்’ இல்லை. அது ஆத்மார்த்தமானது! கணவனும் மனைவியும் இணைந்து வாழும் தாம்பத்தியமும் படுக்கையறையோடு முடிவடைவதில்லை. ஒருவர் மற்றொருவரின் ஆசைகளை, கனவுகளைப் புரிந்துகொள்வது, மற்றவரின் சிரமத்தை அறிந்து உதவுவது, சுமைகளைப் பகிர்ந்துகொள்வதென அந்த இரு இதயங்களில் உருவாகும் அழகான நட்பும் கணவன் மனைவி உறவின் முக்கியமான பாகம்!
ஆரபியும் அன்பரசனும் அப்படி தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அன்பரசனின் கனவு ஜூஸ் பாருக்காக தன்னால் செய்ய முடிந்த உதவிகளைச் செய்தாள் ஆரபி.
மகள் எப்படி இருக்கிறாளென மனோகரியிடம் மொபைலில் விசாரிக்கும் சுடர்விழியிடம் ஆரபியும் அன்பரசனும் குடும்பம் நடத்தும் பாங்கை பூரிப்போடு அவர் விளக்கிவிட சுடர்விழியின் மனதை அழுத்திக்கொண்டிருந்த பெரும்பாரமொன்று அகன்றது.
மகள் புகுந்தவீட்டில் ஒரு அங்கமாக மாறிவிட்டாள்! மருமகனோடு அன்னியோன்யமாக வாழவும் ஆரம்பித்துவிட்டாள்! இனி அவள் வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் வராது என்ற நம்பிக்கையோடு நதியூரிலுள்ள அம்மனுக்கும், அதனருகே உள்ள ஆழியூரில் கோவில் கொண்டுள்ள ஈசனுக்கும் சிறப்பு பூஜைக்கான கட்டளைகளை மகிழ்ச்சியாய் செய்தார்கள் சுடர்விழியும் ஞானசேகரனும். அவர்களை இன்னும் பூரிப்பில் ஆழ்த்தும் விதமாக ஒரு காரியத்தைச் செய்தான் அன்பரசன்! அதில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனவர்கள் சுடர்விழி – ஞானசேகரன் மட்டுமில்லை! ஆரபியும்தான்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

