உனைக் கண்டதும் துள்ளும் மனந்தனை கரையிட்டு மறைத்தவளால் மலரும் வதனத்தைத் திரையிட்டு மறைக்க இயலவில்லை என் மாயவனே! மதுரவாணி அன்றைக்குச் சீக்கிரமே விழித்துவிட்டாள். இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கியவள், அதிகாலையிலேயே விழித்து வீட்டின் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள். பெரிதாக ஒரு வேலையும் இல்லையென்றாலும், குழந்தைகளுக்குத் தனியாக, பெரியவர்களுக்குத் தனியாக எனச் சமைப்பதே ஒரு பெரும் வேலைதானே! அதைச் செய்துவிட்டு நிமிர்ந்தவளிடம், சுவர்கடிகாரம் நேரம் காலை ஆறு மணி என அறிவித்தது. இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லை. எனவே காபியோ, […]
Share your Reaction

