கலவரமாய் எனை நோக்கும் உன் விழிகள் காதலாய் எனை ஈர்க்கும் நன்னாளுக்காய் காத்திருக்கிறேன் என் கண்மணியே! மதுரவாணி குழப்பமும் கோபமுமாய்த் திகைத்தவள் மதுசூதனனை உறுத்து விழிக்க, அவனோ சிறுகுழந்தை தன்னிடம் கொடுக்கப்பட்ட பொம்மையைக் காணும் ஆவலுடன் அவளை நோக்கிக் கொண்டிருந்தான். அவனது பார்வையை விலக்கியவள், “நீ வரச் சொன்னது உன்னோட அப்கம்மிங் மேரேஜ் ஆஃபர் பத்திப் பேசத்தானே! நம்ம பேச ஆரம்பிப்போமா?” என்று வருவித்துக் கொண்ட இயல்பான குரலில் கேட்டவளை நமட்டுச்சிரிப்போடு எதிர்கொண்டவன், “யெஸ்! அஃப்கோர்ஸ்… பேசலாமே,” […]
Share your Reaction

