இரும்பாய் இறுகியவன் உன்னால் மெழுகாய் உருகுகிறேன்! சுவாசிக்கும் காற்றில் தினசரி உன் வாசம் தேடுகிறேன்! கவனமாய் இருப்பவன் இடறி உன் கன்னக்குழியில் வீழ்கிறேன்! மதுசூதனனுடன் வீட்டுக்குள் நுழைந்த மதுரவாணியைச் சங்கவி திட்டித் தீர்க்க ஆரம்பித்தாள். யாழினி அவனை வரவேற்று அமர வைக்க, மதுசூதனன் திட்டு வாங்கும் மதுரவாணியை நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். “மழைல நனைஞ்சா ஒத்துக்காதுனு தெரிஞ்சும் இப்பிடி தொப்பலா நனைஞ்சுருக்கியேடி,” என்று அவளைத் திட்டிக் கொண்டே டவலால் அவளது கூந்தலைத் துவட்ட ஆரம்பித்தாள் […]
Share your Reaction

