அத்தியாயம் 22

மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கு மரபியல் மற்றும் சூழல் காரணங்களும் ஒருவிதத்தில் பொறுப்பாகும். ஆனால் இவை நேரடி காரணிகள் அல்ல. அதாவது சிலவிதமான நரம்பியல் கட்டமைப்புகளை கொண்ட மூளை வடிவமைப்பு மனப்பிறழ்வுக்குறைபாட்டை ஒரு மனிதனுக்குள் உண்டாக்கும். மனித மூளையில் தற்காப்பு மற்றும் பயத்தை உணர்வதற்காக இருக்கும் பகுதி ‘அமிக்டலா’. இதுவே ஒரு சூழலில் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதற்கான கட்டளைகளைப் பிறப்பிக்கும் பகுதியாகும். சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அமிக்டலா பகுதி மற்ற குழந்தைகளின் அமிக்டலாவை விட கொஞ்சம் மாறுபட்ட அமைப்போடு காணப்படும். […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 21

சைக்கோபதி எனும் மனப்பிறழ்வுக்குறைபாடு மரபுரீதியான காரணிகளால் ஏற்படுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சைக்கோபதி ஜீன் என்று தனிப்பட்ட வகையில் எந்த மரபணுவும் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படுவதில்லை. ஆனால் குடும்ப உறவுகளில் மரபுரீதியான மனப்பிறழ்வுக்குறைபாடு வருவது உண்டு என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பெற்றோருக்கு மனப்பிறழ்வுக்குறைபாடு இல்லையென்ற சூழலில் முந்தைய தலைமுறையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைகளுக்குச் சைக்கோபதி வருவதற்கான மரபணுக்கூறுகள் அவர்களுக்குள் இருக்கும். ஒரே ஒரு மரபணுவால் மட்டுமே இது சாத்தியமில்லை. நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இம்மாதிரியான மரபணுக்கூறுகள் கூட்டாக […]

 

Share your Reaction

Loading spinner