தேர்தலுக்கான பரபரப்பு அபிமன்யூவுக்கு இருந்ததோ இல்லையோ அவனது தந்தை தன்னுடைய மகனின் வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்திருந்தார். அவரது கோரிக்கையை கட்சித்தலைமையிடம் ஏற்கெனவே வைத்திருந்தவர் உட்கட்சி கோஷ்டி சண்டைகளையும் சமாளித்தவராய் மகனுக்காக வெற்றிப்பாதையை போட்டுவிட்டு அதில் அவன் நடைபோடப் போகும் நாளை எதிர்நோக்கியிருந்தார். அந்நிலையில் தான் அபிமன்யூ அவருடன் கட்சி அலுவலகத்துக்கு சென்றவன் அவன் காதில் விழுந்த தகவல் ஒன்றைக் கேட்டு அமைதியற்று திரிந்தான். அந்த கட்சியில் அவனது தந்தைக்குச் சமமான செல்வாக்கு படைத்தவர் கல்வித்துறை அமைச்சரான […]
Share your Reaction