காலையில் கண் விழித்த அவந்திகாவிற்குத் தான் மெத்தையில் படுத்திருப்பது அப்போதுதான் நினைவிற்கு வந்தது. சுற்றி முற்றி ராகவ் இருந்ததற்கான தடயங்கள் ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்தவளுக்கு எதுவும் கிடைக்காது போகவே ‘அப்பாடா! இந்த மைதா மாவு நைட் இந்த ரூமுக்கு வரவே இல்ல போல. அப்போ எங்கதான் போயிருப்பான்? கண்டிப்பா இந்த வீட்டு மனுஷங்க கூட பேசிட்டிருக்க சான்ஸே இல்ல. கேட்டா ஸ்டேட்டஸ் கிளாஸ்னு எனக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிருவான்” என்று தனக்குத் தானே பேசியபடி சென்று குளித்துவிட்டுத் தன் பழைய ஆடைகளை அணிந்துகொண்டு கீழே வந்தாள்.
அங்கிருந்த தாதியின் மருமகளுக்கு அவந்திகா வணக்கம் சொல்லவும் அவர் அவந்திகாவைப் பார்த்துவிட்டு, “ஏன்மா பழைய டிரஸ்ஸ போட்டுருக்க?” என்று கேட்கவும் “நாங்க இன்னைக்கு சந்தன்பூர் திரும்பப் போயிடுவோம் மாஷா அதான் இதையே போட்டுருக்கேன்” என்று பதிலளித்தாள்.
அவளைக் கைப்பிடித்துத் தன் அறைக்கு அழைத்துச் சென்றவர் அழகான மஞ்சள் நிற லெஹங்காவை அவளுக்குக் காண்பித்து, “இது பிடிச்சிருக்கா?” என்று கேட்க அவந்திகாவின் முகமே அவளுடைய பதிலைப் பிரதிபலித்தது.
அதை அவளிடம் கொடுத்து “இது எங்களோட பரிசா நீ எடுத்துக்கோம்மா. எங்க வீட்டுப் பொண்ணுக்குக் கல்யாணத்துக்கு இன்னும் நாள் இருக்கு, வீட்டுக்கு வர்ற சுமங்கலிக்கு இதைக் கொடுக்கணும்கிறது எங்க வீட்டோட வழக்கம். நீ வேண்டானு சொல்லாம வாங்கிக்கணும்” என்று கொடுக்க அவந்திகா அதை வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.
பின் அறைக்குச் சென்று அதை அணிந்தவள் கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு, “நாட் பேட் அவந்திகா!! நீயும் அழகாத்தான் இருக்க, உம்மா” என்று அவளுக்கே பறக்கும் முத்தத்தைப் பரிசாக அளித்தவள் திடீரென்று ராகவின் நினைவு வரவும் கீழே சென்று ராகவ் எங்கே என்று வேலையாட்களிடம் விசாரித்தாள். அவர்கள் ராகவ் வெளியே கார் டயரைக் கழற்றிச் சரி செய்துகொண்டிருப்பதாகக் கூற அங்கு சென்று அவனை அழைக்கச் சென்றாள்.
அங்கு டயரை மாற்றிக் கொண்டிருந்த ராகவிடம் அருகிலிருந்த தாதியின் பேரன், “பாயிஷா! ஆப் கி பத்தினி ஆரஹி ஹூ (அண்ணா! உங்க மனைவி வர்றாங்க)” என்று சொல்லவும் திரும்பிய ராகவ் கண் இமைக்க மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மஞ்சள் வண்ணச் சோளியில் தன் கூந்தலை நீவியபடியே அந்தத் தோட்டத்தை வேடிக்கை பார்த்துகொண்டு வந்தவளின் அழகு அவனைச் சிலையாக்கியது என்னவோ சில நொடிகள்தான்!
தலையை உலுக்கியவன் மனதிற்குள் “பீ கேர்ஃபுல் ராகவ்., திஸ் கேர்ள் இஸ் ஹாண்ட்டிங் யூ. கான்சென்ட்ரேட் ஆன் யுவர் வொர்க்” என்று சொல்லிவிட்டு அவளைக் கவனியாதது போல வேலையைக் கவனித்தான்.
இது எதையும் அறியாமல் வேடிக்கை பார்த்தபடி அவன் அருகில் வந்த அவந்திகா இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமெனக் கேட்க வேலை கிட்டதட்ட முடிந்ததாகக் கூறிவிட்டுக் காரின் சக்கரத்தை வெற்றிகரமாக மாற்றிவிட்டான் ராகவ்.
இங்கு நடந்த அனைத்தையும் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துத் தள்ளினான் வீர். எடுத்த அனைத்தும் உடனடியாகச் சிராஜின் மொபைலுக்குச் சென்றது. அந்த வீடியோ போட்டோக்களைப் பார்த்த சிராஜ் அவனுக்கு வேண்டிய ஒருவனுக்குக் கால் செய்தான்.
“நைட் அனுப்புன போட்டோஸ் ஆல்ரெடி நியூஸ்ல வந்தாச்சு. இப்போ இதையும் டெலிகாஸ்ட் பண்ணு. இந்தப் போட்டோஸ் பாத்துட்டுத் டோட்டல் மீடியாவும் ராகவைக் கிழிச்சுத் தொங்க விடணும்” என்று சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.
பின்னர் கர்வத்துடன் “இதுக்கு அப்புறம் அந்த சுக்லா குரூப் டீல், நேனா சுக்லாவோட கல்யாணம் இது ரெண்டுமே நடக்காது. இதுக்குப் பேருதான் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா. இதுல இருந்து நீ ரெகவர் ஆகுறதுக்கு முன்னாடி இண்டஸ்ட்ரி என்னோட கன்ட்ரோலுக்கு வந்துடும் ராகவ்” என்று தன்னுடைய திட்டத்தைச் சொல்லிச் சிலாகித்துக்கொண்டான் சிராஜ் மெஹ்ரா.
ராகவ் குளித்து முடித்துவிட்டு வந்து வீட்டினர் அனைவருடனும் சேர்ந்து உணவு உண்பதைக் கண்ட அவந்திகா கண்டிப்பா “இன்னைக்குச் சூரியன் மேற்கேதான் உதிச்சிருக்கும்” என்று தனக்குத் தானே கூறிக்கொண்டாள். சாப்பிட்டு முடித்துவிட்டு இருவரும் வீட்டினரிடம் விடைபெறும் போது அந்தத் தாதி அவளுக்குத் தந்தத்தினாலான வளையல்களைப் பரிசாக அவள் கைகளில் போட்டுவிட அவள் மறுக்காமல் ஏற்றுக் கொண்டாள்.
இருவரும் விடைபெற்றுச் சந்தன்பூர் அருகில் வரும்போதுதான் அவந்திகாவிற்குப் போன் ஞாபகம் வந்தது. ஆனால் இருவருடைய போனும் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகியதால் அவள் காரிலேயே சார்ஜ் போட்டாள்.
வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தவளின் தலையெழுத்து இன்னும் சில மணி நேரங்களில் மாறப்போவதை அவளும் அறியவில்லை. அதற்குக் காரணமானவனும் அறியவில்லை என்பதே இங்கு வேடிக்கை…
அதே நேரம் சந்தன்பூர் அரண்மனை வாயிலில் பத்திரிகையாளர்கள் கூட்டம் முண்டியடித்துக்கொண்டிருந்தது.
அரண்மனை வாயிலில் நின்ற பத்திரிகை நிருபர்களைச் சமாளித்துவிட்டு உள்ளே வந்த தலைமைப் பணியாளர் மான்சிங் கல்யாணி தேவியிடம் ரொம்ப நேரம் இப்படிச் சமாளிக்க முடியாது என்று கூறிக்கொண்டிருக்க அங்கு ஹாலில் இருந்த பெரிய டிவியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியைச் சிலை போல் வெறித்துக்கொண்டிருந்தார் கௌசல்யா, அவந்திகாவின் சித்தி. அவர் பக்கத்திலேயே பிரதியுஷா அமர்ந்து அவரது கைகளை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டிருந்தாள்.
ரித்திமாவோ அவந்திகாவின் சித்தப்பா ரகுவரனுடன் இணைந்து அவந்திகாவின் போனுக்குக் கால் செய்துகொண்டிருந்தாள்.
டிவியில் போட்ட புகைப்படங்களே மாறி மாறி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கேட்க இயலாத மைதிலியும் கௌசல்யாவும் காதை மூடிக்கொண்டனர்.
அதன் சாராம்சம் இதுதான்.
“பிஸினஸ் வேர்ல்டின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் ராகவ் கபூர் இன்னும் சிறிது நாட்களில் சுக்லா குரூப்பின் வாரிசான நேனாவை மணக்க இருப்பதாகச் செய்திகள் பரவிய நிலையில் அவர் ஜெய்ப்பூரில் ஒரு இளம்பெண்ணுடன் விடுமுறையைக் கொண்டாடச் சென்றிருப்பதாக நம்பத்தகுந்த இடங்களிலிருந்து வந்த இந்தப் புகைப்படங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.
யார் இந்த இளம்பெண்? இவர் எந்தத் தொழிலதிபரின் வாரிசோ அல்லது மாடல் அழகியோ அல்லது சினிமா பிரபலமோ இல்லையென்பதும் தெரியவந்துள்ளது. எனவே ராகவ் கபூருக்கும் இந்தப் பெண்ணுக்கும் இடையே எந்த நீண்டகாலத் தொடர்பும் இல்லையென்பது உறுதியாகியுள்ள நிலையில் இது வெறும் ஒன் நைட் ஸ்டாண்டாக இருக்கலாம் என்று ராகவ் கபூரின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சுவாரசியமான தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்!!!”
எந்த நியூஸ் சேனல் எடுத்தாலும் இதே தகவலைத்தான் கூறினர். ஆனால் அவர்கள் அனைவரும் பொதுவாகக் கூறிய விஷயம் ராகவ் கபூரின் புதிய காதலி அல்லது தோழியாக அவந்திகா சித்தரிக்கப்பட்டதே!!!!
இது ஏதும் அறியாமல் ராகவும் அவந்திகாவும் சந்தன்பூர் அரண்மனை வாயிலில் காருடன் நுழையும்போதே அங்கு குழுமியிருந்த நிருபர்களைக் கண்ட ராகவ் காரைப் பார்க் செய்துவிட்டு அவந்திகாவிற்குக் கதவைத் திறந்துவிடவும் அவர்கள் அங்கேயே குழுமிவிட்டனர்.
அவந்திகாவிற்கு இந்த நிருபர் கூட்டம், கேமரா ஃப்ளாஷ் இது எல்லாமே புதிது. அவர்கள் கேட்ட கேள்வியில் அவள் இன்னும் அரண்டு போனாள் என்றே கூறலாம்.
“மேம்! உங்களை ராகவ் சாரோட நியூ கேர்ள் ஃப்ரெண்டுனு சொல்றாங்க? வெறும் ஃப்ரெண்ட்ஷிப் மட்டும்தானா?”
“நிறைய பேரு இந்த ரிலேஷன்ஷிப்ப ஒன் நைட் ஸ்டான்ட்னு பேசிக்கிறாங்க… இது அப்படிப்பட்டதானா?”
“ராகவ் சாரோட பிரேக் அப்க்குக் கூட நீங்கதான் காரணம்னு பேசிக்கிறாங்க? இது உண்மையா மேம்?”
பொறுக்க முடியாத அவந்திகா அங்கேயே காதுகளில் கைகளை வைத்து மறைத்துக்கொள்ள, பொறுமையை இழந்த ராகவ், “இனாஃப். உங்களோட எல்லாக் கேள்விக்கும் நான் வந்து பதில் சொல்லுறேன். இப்போ வழி விடுங்க” என்று சொல்லியபடியே அவந்திகாவின் தோளைப் பற்றி அணைத்தவாறு உள்ளே அழைத்துச் சென்றான்.
அவன் அறியவில்லை வெளியே இருப்பவர்களை வேண்டுமானால் அவனால் சமாளிக்க முடியும். ஆனால் உள்ளே இருப்பவர்கள் முன் தன் ராஜதந்திரம் சாமர்த்தியம் எல்லாம் தரைமட்டமாகப் போகிறதென்பதை…
இருவரும் அமைதியாக அரண்மனைக்குள் நுழைந்தனர். வாயிலில் வந்து நின்ற அவந்திகாவைப் பார்த்த கௌசல்யா அதிர்ந்தார். மஞ்சள் நிற லெஹங்காவில் கைகள் நிறைய திருமணமான ராஜஸ்தானி பெண்கள் அணியும் சிவப்பு வெள்ளை நிறத் தந்த வளையல்கள் அணிந்து நின்றவளைப் பார்த்து அவர் மட்டுமல்ல அந்த அரண்மனையில் தங்கியிருந்த பிரதியுஷா, திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர், அரண்மனைப் பணியாளர்கள் என்று அனைவருக்குமே இது மிகப்பெரிய அதிர்ச்சியாகவே இருக்க குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவிற்கு அங்கு நிசப்தம் நிலவ ராகவிற்கு வந்த போன் கால் அந்த அமைதியைக் கலைத்தது.
ராகவ் போனைப் பார்த்தவன் அழைத்தது அவன் அன்னை என்பதால் அழைப்பை ஏற்று, “ஹலோ மா! ஹவேலி மே… ஓகே. நோ மா! ஐ வில் கம் தேர்! மா மா ஆர் யூ தேர்?” என்று அவன் பேசிக்கொண்டிருக்கும்போது அவனது அன்னை ராதிகா அழைப்பைத் துண்டித்தார்.
போனைப் பாக்கெட்டில் போட்டவன் சுற்றி நின்றவர்களின் முகத்தைப் பார்த்தான். அதில் அவந்திகாவின் அருகில் நின்ற ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அவந்திகாவின் முகச்சாயலுடன் இருப்பதைக் கண்டதும் அவளின் அன்னையாக இருக்கக்கூடும் என்று ஊகித்துக்கொண்டான் ராகவ். அவரின் பரிதவிப்புடன் கூடிய முகம் ராகவின் குற்ற உணர்ச்சியை இன்னும் அதிகரித்தது. அவள் சொன்னபடி நேரத்துக்கு மலர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டுக் கிளம்பியிருந்தால் இந்த அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்திருக்காது என்பதை உணர்ந்தவன் இன்னும் காலம் கடக்கும் முன் தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற முடிவெடுக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டான்.
அனைவரின் முகத்தையும் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, “முதல்ல எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க. இந்தப் பிராப்ளம் என்னால வந்ததுதான். நான் இதை எப்படியாச்சும் சால்வ் பண்ணிடுவேன். சோ நீங்க யாரும் டென்ஷன் ஆகாம கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க ப்ளீஸ்!” என்று அவன் கூறிக்கொண்டிருக்கும்போது இடைமறித்தது கௌசல்யாவின் குரல்.
“எப்பிடி? எப்பிடி நீங்க இதைச் சால்வ் பண்ணுவீங்க? டிவிய பாருங்க! என் பொண்ணப் பத்தி என்னென்ன வார்த்தைலாம் பேசுறாங்கனு! என் பொண்ணு இதுவரைக்கும் இந்த மாதிரி எந்தப் பிரச்சனையிலயும் சிக்கினதில்ல. அவ உண்டு அவ வேலை உண்டுனு இருக்கிறவளுக்கு இந்தப் பேருலாம் தேவையா? இதலாம் கேக்கிறப்போ உயிரவிட்டுடலாமானு தோணுது!” என்று அழுகையினூடே கூறினார் அவர்.
ராகவால் அவரது கேள்வி எதற்கும் பதிலளிக்க முடியாத சூழ்நிலை. அவரோ “நாங்க உங்களை மாதிரி ஹைகிளாஸ் பீப்பிள் இல்லப்பா! என்ன நடந்தாலும் அலட்சியப்படுத்திட்டுப் போறதுக்கு. நாங்க மிடில்கிளாஸ். இந்த நியூஸைப் பாத்துட்டுச் சுத்தியிருக்கிறவங்க கேக்குற கேள்விக்குலாம் எங்களால பதில் சொல்லாம அலட்சியப்படுத்த முடியாது. இந்த ஒரு பிரச்சனை என் பொண்ணோட எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிடும் போல இருக்கே ரகு” என்று சொல்லி அவரது கணவரின் தோளில் சாய்ந்து விசும்பத் தொடங்கினார் அவர்.
ஆனால் அவந்திகா இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாளைக்கே இதைவிடப் பரபரப்பான இன்னொரு செய்தி வந்துவிட்டால் தங்களை அனைவரும் மறந்துவிடுவார்கள் என்பது அவளது கணிப்பு. ஆனால் அவளே டிவியில் ஒரு ரிப்போர்ட்டர் ஒன் நைட் ஸ்டாண்ட் என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் உபயோகிக்க அதைக் கேட்டு ஒரு நொடி கலங்கிவிட்டாள்.
அவளது கலங்கிய முகத்தைப் பார்த்த ராகவ் பொறுக்க முடியாமல், “டோண்ட் வொர்ரி ஆன்ட்டி! நான் இப்போவே அவங்க எல்லாரையும் கூப்பிட்டு ஒரு இண்டர்வியூ குடுக்கிறேன். அதுக்கு அப்புறமா அவங்க உண்மையா நடந்த விஷயங்களைப் புரிஞ்சுப்பாங்க” என்று கௌசல்யாவையும் மைதிலியையும் அமைதிப்படுத்த முயற்சிக்கப் பிரச்சனை கல்யாணி தேவி ரூபத்தில் வந்தது.
“இனிமே நீ என்ன சொன்னாலும் நீ பிரச்சனையத் திசை திருப்பப் பொய் சொல்லுறனுதான் அவங்க நினைப்பாங்க! இதால எந்தப் பிரயோஜனமும் இல்ல ராகவ்!” என்று அவர் கவலையுடன் அதே சமயம் நிதர்சனத்தை உரைத்தார்.
அவந்திகா இதற்கு மேல் அமைதி காக்க விரும்பாமல் “சித்தி, தாதி இங்க இருக்கிற எல்லாருக்கும் நான் சொல்லிக்க விரும்புற விஷயம் ஒன்னே ஒண்ணுதான்! நேத்து நாங்க ஒரு பிரச்சனைல மாட்டிகிட்டோம். அதுல இருந்து விடுபட்டு வர இவ்ளோ நேரம் ஆச்சு. இந்த முட்டாள்தனமான நியூஸைப் பாத்துட்டு நீங்க எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க? டோண்ட் ப்ளேம் ராகவ். நடந்த பிரச்சனைக்கு நான் மட்டும்தான் காரணம். நான் மட்டும் ஷார்ட்கட்ல போகச் சொல்லலனா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது! சோ நீங்க வொர்ரி பண்ணிக்காம அமைதியா இருங்க. ராகவ்தான் சொல்றாருல இண்டர்வியூ குடுத்து நெலமையப் புரிய வைக்குறேனு. சோ ப்ளீஸ் காம் டவுன்” என்று கூற அந்நிலையில் அவனை மட்டும் பொறுப்பாளி என்று கூறிக் தப்பிக்க நினைக்காத அவந்திகாவின் நேர்மை அவனுக்குப் பிடித்தது.
சொல்லப் போனால் நடந்ததில் அவன் பங்கு மிகவும் அதிகம். அவன் மட்டும் காலம் தாழ்த்தாமல் மலர்களைத் தேர்ந்தெடுத்திருந்தால் இது எதுவுமே நடந்திருக்காது என்பதை நினைத்து அவனால் வருத்தப்பட மட்டுமே முடிந்தது.
அந்நேரம் அங்கு வந்து சேர்ந்தார் ராகவின் அன்னை ராதிகா. இவ்வளவு நேரம் இருந்த தைரியம் அன்னையைக் கண்டதும் சிறிது தொய்வடைய அவரை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்தான் ராகவ்.
அவரோ நேரே ராகவிடம் சென்று “என்ன நடக்குது ராகவ்? தேவையே இல்லாம உன்னோட பிஸினஸ் போட்டியில அந்தப் பொண்ணு எதிர்காலமே போயிடும் போலயே! மத்த பொண்ணுங்ககூட உன்னைச் சேத்து வச்சு இந்த மாதிரி நியூஸ் வர்றப்போ எனக்கு இந்த மாதிரி தப்பா தோணல ராகவ். ஆனா அவந்திகா நம்ம வீட்டு மருமகளோட ஃப்ரெண்ட். அவளப் பாதிக்குற எந்த விஷயமும் உஷாவையும் பாதிக்கும். இதால நம்ம ரெண்டு குடும்ப நிம்மதிதான் போகும். எப்பிடி இந்தப் பிரச்சனையத் தீர்க்கப் போற?” என்று அவனைக் கேள்வியுடன் பார்த்தார்.
ராகவ் அவரைப் பார்த்தவன் “மா! நான் என்னைக்குமே என்னோட ரெஸ்பான்சிபிலிட்டியத் தட்டிக் கழிச்சது கெடையாது. பிலீவ் மீ மா! ஐ கேன் சால்வ் திஸ் பிராப்ளம்“ என்றான் நம்பிக்கையுடன்.
இதைக் கேட்ட அவந்திகாவிற்குத் தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது. எல்லாரும் ராகவையே குறைகூறுவதை அவளது நியாயம் கொண்ட உள்ளம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அனைவரும் ஒரு சின்னப் பிரச்சனையை ஊதிப் பெரிதுபடுத்துவதாக அவளுக்குத் தோன்றவே எதுவும் பேசாமல் அமைதி காத்தாள் அவள்.
அந்நேரம் ராகவிற்குச் சுக்லாவிடமிருந்து கால் வரவே அவன் “ஹலோ” என்றான்.
“ராகவ் வாட் ஹேப்பண்ட் மேன்? என்ன நடக்குது? நேஷனல் மீடியால இருந்து ரீஜினல் மீடியா வரைக்கும் உன்னோட போட்டோஸ்தான். ஐ டோண்ட் நோ வாட்ஸ் யுவர் ரிலேஷன்ஷிப் வித் திஸ் கேர்ள். பட் இந்த நியூஸ் உன்னோட வளர்ச்சியையும் நம்ம டீலையும் பாதிக்காமப் பாத்துக்கிறது உன் கைலதான் இருக்கு. இப்போ உன்னக் கடுமையா விமரிச்ச இந்த மீடியா பீப்பிள்ஸ் வாய் அடைச்சுப் போகுற அளவுக்கு ஏதாவது பண்ணு. அண்ட் ஒன் மோர் திங்., நானும் ஒரு பொண்ணுக்குத் தகப்பன். அதனால அந்தப் பொண்ணோட எதிர்காலத்தை மனசுல வச்சிட்டு ஆக்ஷன் எடு” என்று அறிவுரை செய்துவிட்டுப் போனை வைத்தார்.
ராகவ் அங்கு அனைவரையும் சமாதானப்படுத்தப் போராடிக்கொண்டிருந்த அவந்திகாவைப் பார்த்தவனின் காதுகளில் சுக்லா கூறிய “இப்போ உன்னக் கடுமையா விமரிச்ச இந்த மீடியா பீப்பிள்ஸ் வாய் அடைச்சுப் போகுற அளவுக்கு ஏதாவது பண்ணு. அண்ட் ஒன் மோர் திங்., அந்தப் பொண்ணோட எதிர்காலத்தை மனசுல வச்சிட்டு ஆக்ஷன் எடு” என்ற வார்த்தையே ஒலிக்க அவன் என்ன செய்ய வேண்டுமென்று அவனுக்கு அப்போது புரிந்தது.
நேரே நடந்து அவந்திகாவை நோக்கிச் சென்றவன் அவள் கையைப் பிடிக்கவும் அவள் அவனைக் கேள்வியுடன் பார்க்க “இன்னைக்கு நடந்த எல்லா விஷயத்துக்கும் நான்தான் பொறுப்பாளி அவந்திகா” என்று சொல்லி அவளைக் கூரிய விழிகளால் பார்த்தான்.
அவன் என்னதான் செய்யப் போகிறான் என்று அனைவரும் காத்திருக்க அவனோ “எல்லாரும் பேலஸ்குள்ள இருக்கிற துர்கா மந்திர்க்கு வாங்க” என்று சொல்லிவிட்டு அவளை இழுத்துச் சென்றான்.
அங்கே சென்றவன் புலியின் மீது அமர்ந்து சாந்தமுகத்துடன் காட்சியளித்த துர்கா தேவியைக் கைகூப்பி வணங்கினான். மனதில் “துர்கா மா! நான் வேணும்னு இந்தப் பொண்ணோட வாழ்க்கைல வெளையாடல! ஆனா இன்னைக்கு அவளுக்கு வந்த இந்தப் பிரச்சனைக்கு நான்தான் காரணம். அதுக்குப் பரிகாரமா நானே அவளை மேரேஜ் பண்ணிக்கிறேன். இது சரியா தப்பானு தெரியல. ஆனா உங்க ஆசீர்வாதம் கெடச்சா நாங்க நல்லா இருப்போம்னு தோணுது. எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று மனதார வேண்டிக்கொண்டான்.
பின்னர் அவரின் கழுத்தில் இருந்த கருகமணி மாலையைத் தன் கையால் எடுக்கவும் அனைவரும் ‘இவனுக்கு என்னாச்சு’ என்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
கருகமணியை எடுத்துச் சென்று அவனையே கேள்வியாய்ப் பார்த்துக்கொண்டிருந்த அவந்திகாவின் கழுத்தில் கட்டியவன் துர்காதேவியின் காலடியிலிருந்த குங்குமத்தை எடுத்து அவளது நெற்றி வகிட்டில் சூட எல்லாம் கண் இமைப்பதற்குள் நடந்து முடிந்தது.
அவந்திகாவிற்கு அதிர்ச்சியில் என்ன செய்வது என்றே மறந்துபோகப் பொம்மை போல் நின்றவளின் தோளில் கை போட்டு அணைத்தவன், “இங்க இருக்கிற எல்லாரும் இப்போ ரிலாக்ஸ் ஆகுங்க. அந்த ரிப்போர்ட்டர்ஸ் பிரச்சனைய நான் முடிச்சு வைக்கிறேன். அண்ட் அவந்திகாவோட ஃப்யூச்சர் பத்தி இனிமே யாரும் கவலைப்படத் தேவையில்ல. ஷீ இஸ் மை வைஃப் நவ். ஐ டோண்ட் அலோ எனிபடி டு டீமீன் மை வைஃப்” என்று கூறியபடியே அவளை வெளியே நின்றுகொண்டிருந்த நிருபர் கூட்டத்தின் முன் அழைத்துச் சென்றான்.
அவர்கள் இருவரும் சேர்ந்து வருவதைக் கண்டதும் கூட்டத்தில் சலசலப்பு எழ அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை ராகவ். அவனைப் பொறுத்தவரைக்கும் இந்தப் பிரச்சனைக்கு அவன் கொடுக்கப்போகும் பேட்டியானது ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கவேண்டும், அவ்வளவுதான்!
அவர்களைக் கூரிய விழியால் அளவிட்டவன் பின் கம்பீரமான குரலில், “இங்க நாங்க கார்ல இறங்குனப்போ சில பேர் ஏதோ கேள்வி கேட்டீங்கதானே? இப்போ கேளுங்க” என்று சொல்லிவிட்டு அவர்களை அதே கூர்மையுடன் பார்த்தான்.
அவனது குரலில் தயங்கியவாறு அவர்கள் நிற்கவும் “ஓகே நானே கேள்விய வரிசையா சொல்லிட்டு அதுக்குப் பதிலையும் சொல்றேன். ஒரு வரி விடாம நோட் பண்ணிக்குங்க” என்று கட்டளையிட்டவன் “கொஸ்டீன் நம்பர் ஒன்., இதோ இங்க நிக்கிறாங்களே அவங்க என்னோட கேர்ள் ஃப்ரெண்டா? அண்ட் மை ஆன்சர் இஸ் ‘யெஸ்’., ” என்று சொல்லவும் கூட்டத்தில் சலசலப்பு.
“கொஸ்டீன் நம்பர் டூ. இவங்ககூட இருந்த ரிலேஷன்ஷிப் ஒன் நைட் ஸ்டான்டா? நோ டெஃபனிட்லி நோ. என் வாழ்க்கையோட ஒவ்வொரு இரவையும் இவங்ககூடதான் நான் ஸ்பெண்ட் பண்ண விரும்புறேன்” என்று அவந்திகாவைப் பார்த்துக்கொண்டே தீர்க்கமான குரலில் கூற நிருபர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“கொஸ்டீன் நம்பர் த்ரீ. என்னோட பிரிவியஸ் பிரேக் அப்க்கு இவங்கதான் காரணமா? நோ. அதுக்கு அந்த கடவுள்தான் காரணம். பிகாஸ் எங்க அம்மா சொல்லுவாங்க இந்த உலகத்துல அற்புதமான விஷயங்கள் நடக்கணும்னா கண்டிப்பா அதுக்கு முன்னாடிக் கடவுள் மனுஷங்களுக்குக் கொஞ்சம் கஷ்டத்தக் குடுப்பாருனு. சோ கடவுள் எனக்கு பிரேக் அப்கிற ஒரு சின்ன கஷ்டத்தக் குடுத்து அவந்திகாங்கிற ஒரு பெரிய கிஃப்ட எனக்குக் குடுத்திருக்கார்னு வேணா வச்சிக்கலாம்” என்று அவன் கூறும்போது அங்கு நின்று கேட்டுக்கொண்டிருந்த உஷாவும் ரித்திமாவும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டனர். பின்னர் தாதியுடன் கலந்து பேசிவிட்டு வீட்டிற்குள் சென்று மறைந்தனர்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த நிருபர் கூட்டத்திலிருந்து ஒருவர் “சார் அப்போ இவங்க யாருதான் உங்களுக்கு?” என்று கேள்வியை எழுப்பினார்.
அவரைக் கூர்மையாகப் பார்த்த ராகவ், “இந்த மாதிரி காஸ்ட்யூம் போட்டுகிட்டு கழுத்துல மங்கல்சூத்ரா, கைல இந்தக் கல்யாணமான லேடீஸ் போடுற இந்த வளையல், அப்புறமா நெத்தில இந்தக் குங்குமம் இதுல்லாம் வச்சிட்டு ஒரு பொண்ணு ஒரு பையனோட கையைப் பிடிச்சு நின்னா அந்தப் பொண்ணுக்கும் பையனுக்கும் எந்த ரிலேஷன்ஷிப் இருக்குமோ அதேதான் எங்களுக்கு இடையிலயும் இருக்கு” என்று சொல்லிவிட்டு அவந்திகாவின் முகத்தைப் பார்த்தவன் அதில் எந்த உணர்ச்சியும் இல்லாததைக் கண்டு ஒரு கூரிய பார்வையை அவளை நோக்கிச் செலுத்தியபடியே “ஷீ இஸ் மை வைஃப்., ஷீ இஸ் அவந்திகா ராகவ் கபூர்” என்று சொல்லவும் அங்கு நின்றிருந்த அனைவரும் அதிர்ந்தனர்.
“அது எப்பிடி சார் திடீர்னு உங்க வைஃப்னு சொன்னா இதுலாம் நம்புற மாதிரியா இருக்கு?” என்று கேலியாகக் கேட்கவும் அவரைக் கூர்மையாகப் பார்த்த ராகவ், “இங்க இருக்கிறவங்க நம்பணும்னு என்னால பொய்லாம் சொல்ல முடியாது. அண்ட் இந்த விஷயம் தெரியாம நீங்க எல்லாரும் நெறையா பேசிட்டீங்க. பட் திஸ் மஸ்ட் பீ லாஸ்ட். இனிமே யாரும் என்னையோ என்னோட மனைவியைப் பத்தியோ எங்க பெர்சனல் லைஃப் பத்தியோ தேவையில்லாம ஆதாரம் இல்லாம விமர்சனம் பண்ணா அதுக்கு நான் லீகலா ஆக்ஷன் எடுப்பேன்” என்று கடினமான குரலில் அவன் கூறவும் கௌசல்யாவுக்கு இனி யாரும் தன் மகளை மோசமாகப் பேச முடியாது என்ற நிம்மதி மனதில் பரவியது.
“ஓகே! தேங்க்யூ ஜெண்டில்மென்! உங்க எல்லாக் கேள்விக்கும் பதில் கெடச்சிருக்கும்னு நம்புறேன். எல்லாரும் இப்போ கெளம்பலாம்” என்று அவன் சொல்லவும் தங்களுக்குச் செய்தி கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் அனைவரும் கலைந்தனர்.
அவர்கள் சென்றதும்தான் அந்த அரண்மனையில் அனைவருக்கும் மூச்சே வந்தது. அதுவுமின்றி திடீரென்று நடந்த திருமணம் என்றாலும் மற்ற சடங்குகளைச் சரியாகச் செய்ய வேண்டுமென்று கல்யாணிதேவி கட்டளையிட விறுவிறுவென்று கிரகப்ரவேசத்திற்கான ஏற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு முக்கியமான சதி பதி இருவரும் அதை உணராமல் தோட்டத்தில் ஒருவருக்கொருவர் முதுகு காட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். ராகவிற்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. இனி அவந்திகாவைப் பற்றி யாரும் அவதூறு பேச முடியாது என்பதால் கௌசல்யா தன் பெண்ணைப் பற்றி இனிக் கவலை கொள்ள மாட்டார் என்ற நினைவில் இருந்தான் அவன்.
ஆனால் நடந்த இந்தத் திருமணத்துக்காக அவந்திகாவைச் சமாளிக்க அவன் இதற்கு மேல் வாழ்க்கை முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பது அவனுக்கு அப்போது புரியவில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


