நண்பர்கள் அருவியில் குளித்துக் கொண்டிருக்க, அங்கே கிடந்த பெரிய பாறையில் அமர்ந்து கேமராவால் அருவி நீர் காலுக்கு அடியில் சலசலவென ஓடுவதைப் படம் பிடித்துக்கொண்டிருந்தான் ஆதித்யன்.
அவனிடமிருந்து சில அடிகள் இடைவெளி விட்டு அமர்ந்திருந்த நந்தினி கால்களை நீரில் அடித்து விளையாடிக்கொண்டிருந்தாள்.
மெல்லிய சங்கிலி போல காலைக் கவ்வியிருந்த கொலுசு, சிவந்த பாதங்களை இன்னும் சிவப்பாக்கிக் காட்டிய மருதாணி என ஒன்றை கூட விடாமல் ஒருவன் வீடியோவாக எடுத்துக்கொண்டிருப்பதை அறியாமல் சிறு குழந்தை போன்ற மனநிலையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.
“எப்ப சென்னைக்குக் கிளம்புற?”
“செங்கல்பட்டு”
“ப்ச்! எங்களுக்கு எல்லாமே சென்னை தான்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சிரிப்பு வந்துவிட்டது அவளுக்கு.
“சரி! எதுக்காகக் கேக்குறிங்க? மறுபடி ஏஸ்திட்டிக் வீடியோ ஷூட் எதுவும் பண்ணனுமா?”
“சேச்சே! அதெல்லாம் இல்ல. நீ பேமெண்ட் வாங்க தயங்குற. ஃப்ரீயா வேலை வாங்க எனக்குப் பிடிக்காது. சோ இனிமே உன்னை வச்சு வீடியோ ஷூட் பண்ணுற ஐடியா இல்ல. பட் அங்க வந்தா மீட் பண்ணிக்கலாமேனு கேட்டேன்”
“நீங்க எதுக்கு என்னை மீட் பண்ணனும்?”
நிச்சலனமான விழிகளுடன் தலை சரித்து அவள் கேட்ட விதத்தில் வாயடைத்துப் போனவன் பின்னர் எங்கோ பார்த்தபடி “ம்ம்ம்ம்ம்ம்” என்று ராகம் பாடிவிட்டு “ஏன்னா நாம ஃப்ரெண்ட்ஸ்” என்றான்.
“நாம ஃப்ரெண்ட்ஸ் இல்லனு நீங்க தானே கொஞ்சநேரத்துக்கு முன்னாடி சொன்னிங்க”
“குட் மெமரி பவர்”
“இது எனக்கானப் பதில் இல்லையே”
“ஓப்பனா சொல்லட்டுமா? நீ என்னை ஏ.கேனு கூப்பிடுறது எனக்கு அன்கம்ஃபர்டபிளா இருந்துச்சு. இவ ஏன் என்னை ஆதினு கூப்பிடக்கூடாதுனு மனசுல ஒரு கேள்வி. அதனால ஃப்ரெண்ட் இல்லனு சொன்னேன். வேற ஒன்னுமில்ல”
“நம்பிட்டேன்” என்ற நந்தினி பின்னர் முகம் மலரச் சிரித்தாள்.
எதற்கு இந்தச் சிரிப்பு எனப் புரியாமல் ஆதித்யன் விழித்தான்.
“நேத்து இந்நேரத்துக்கு என் மனசு அவ்ளோ ரணமா இருந்துச்சு. இப்ப சிரிச்சுப் பேசிட்டிருக்கேன். வாழ்க்கை எவ்ளோ வினோதமானதுல்ல?”
“ஷப்பா! தத்துவம் பேசி க்ரிஞ்ச் பண்ணாத நந்தினி”
“நல்லா இருக்கு”
திடுமென அவள் இப்படி சொல்லவும் “என்ன?” என்று கேட்டான் அவன்.
“உங்களோட கம்பீரமானக் குரல்ல என் பெயரைக் கேக்குறப்ப நல்லா இருக்கு” என்றாள்.
“மறுபடியும் அண்டார்டிகாவைத் தூக்கித் தலையில வைக்குறாளே”
ஆதித்யன் நகைச்சுவையாகக் கலாய்க்க அன்றைய நாள் மிக அற்புதமாகவே கழிந்தது அனைவருக்கும்.
“நாளைக்கு ஒரு கல்யாணவீடு இருக்கு. அம்மா போகணும்னு சொல்லிட்டிருந்தாங்க”
“நாளைக்கா? எங்க?”
நண்பர்கள் ஒரே குரலில் கேட்கவும் “திருநெல்வேலில” என்றாள் நந்தினி.
“மாப்பிள்ளை பேர் என்ன?” எனப் பவித்ரா கேட்டாள்.
“அருண். ஏன் கேக்குற?”
“ஹேய்! இன்ஃப்ளூயன்சரா இருக்கானே, அவனா?” என்று அவள் அதிசயிக்க
“ஆமா! எனக்குத் தூரத்து உறவுல சித்தி மகன். சித்தியும் சித்தப்பாவும் நேருல வந்து பத்திரிக்கை வச்சிருக்காங்க. போகாம இருக்க முடியாது” என்றாள் நந்தினி.
“வாவ்! நாளைக்கு நாங்களும் அந்தக் கல்யாணத்துக்குப் போகுறோம். அந்த அருண் எங்களோட கிளையண்ட்”
தருண் சொன்னதும் கண்களை மலர்த்தியவள் “ஓ.கே. அப்ப கல்யாணத்துல பாக்கலாம்.” என்றாள் புன்னகையோடு.
சொன்னது போல மறுநாள் திருநெல்வேலியில் திருமண மண்டபத்தில் ரோஜாவண்ண மென்பட்டில் அளவான அணிகலன்கள், மணக்கும் மல்லிகைச்சரத்துடன் கூடிய பின்னல் அலங்காரத்தில் அவளைப் பார்த்ததும் ஆதித்யனின் விழிகள் வேறெதையும் நோக்கவில்லை.
“தல”
தருணும் மகேஷும் அவனது தாடையைப் பற்றி இழுத்து மணமக்களின் பக்கம் திருப்ப வேண்டியதாயிற்று.
நந்தினியுடன் மணமேடையில் நின்று கொண்டிருந்த பவித்ராவோ தலையிலடித்துக்கொண்டாள்.
மாங்கல்ய தாரணம் முடிந்து அடுத்தடுத்தச் சம்பிரதாயங்கள் நடந்தேறுகையில் நந்தினி ஆதித்யனைத் தேடி வந்தாள்.
அவனும் அவளிடம் பேசும் தருணத்திற்காகத்தான் காத்திருந்தான் எனலாம்.
ஆனால் பாதிவழியில் அவளிடம் பேச்சு கொடுத்தார்கள் சிலர். அவர்களிடம் பேச பேச நந்தினியின் முகம் மாறுவதையும், அவளது கண்கள் கலங்கி நாசி விடைத்து அழுகைக்கான அறிகுறி அவளது முகத்தில் தெரிவதையும் கவனித்தவன் “ஹே கய்ஸ்! அங்க என்னனு போய் பாத்துட்டு வர்றேன்” என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு அவளை நோக்கி விரைந்தான்.
ஆதித்யன் வருவதைப் பார்த்ததும் கண்ணிமைகளைக் கொட்டிக் கண்ணீரை மறைக்க முயன்று அதில் தோற்றுவிட, கண்ணீர்த்துளியானது முத்து போல உருண்டோடியது நந்தினியின் கன்னத்தில்.
“பாவம்! இந்தப் பொண்ணை இப்பிடி தவிக்க வச்சிட்டானே. காசு பணம் இல்லாதப்ப, வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்பி வச்சவளை மறந்துட்டு பணக்காரிய கட்டிக்கிட்டானே.”
மூக்கால் முகாரி பாடிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. அவரைச் சுற்றியிருந்த பெண்கள் கூட்டம் அதற்கு ‘ஆமாம் சாமி’ போட அவர்களிடையே வதைபட்டவள் என்னவோ நந்தினியே!
அவள் குமரனை மறக்கவேண்டும். அவனுடனானக் காதலை மறக்கவேண்டும். கேவலம் பணத்துக்காக அந்தக் காதலைத் தூக்கியெறிந்த குமரனின் துரோகத்தை மறக்கவேண்டும். இரண்டு நாட்கள் அதற்கான சூழல் இயற்கையாகவே அமைந்து அவளது இரணம் ஆறிவந்த நிலையில் ‘ஆறுதல் சொல்கிறேன்’ என்ற பெயரில் அதைக் குத்திக் கிழித்து உதிரம் வழியச் செய்துகொண்டிருந்தார்கள் அந்தப் பெண்கள்.
இத்தனைக்கும் காதோரம் நரைத்த மூத்தப்பெண்மணிகள் தான். ஆனால் வயதுக்கும் முதிர்ச்சிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ன?
ஆதித்யன் அதிகம் யோசிக்காமல் நந்தினியின் கன்னத்தில் உருண்டோடிய கண்ணீர்த்துளியைத் தனது கைக்குட்டையில் ஒற்றியெடுத்தான்.
இக்காட்சியை அந்தப் பெண்கள் குழு வாயைப் பிளந்துகொண்டு வேடிக்கை பார்க்கையில் சுவாதீனமாக அவளது கையைப் பற்றி தனது கைக்குள் அடக்கிக்கொண்டான்.
“நீ அழுத மாதிரி தெரிஞ்சுது. அதனால வந்தேன்”
ஆதித்யனின் சிம்மக்குரலை இறுகிப்போன தொனியில் கேட்க வேண்டுமென்றால் அதற்கு தனி தைரியம் வேண்டும். அது அந்தப் பெண்டிர் குழாமுக்கு இல்லை.
“எல்லாத்துக்கும் அந்தக் குமரன் பய தான் காரணம் தம்பி”
அவர்களில் ஒருவர் சொல்ல ஆதித்யன் தாடை இறுகப் புன்னகைத்தான்.
“அவன் ஒருவகையில நந்தினிய நோகடிச்சிட்டுப் போயிட்டான். இங்க சிலர் ஆறுதல் சொல்லுறதா நினைச்சு இவளை நோகடிக்குறாங்க. இவளை மாதிரி அற்புதமானப் பொண்ணோட காதலுக்குத் தகுதியில்லாம போயிட்டியேனு அவனுக்குத் தான் ஆறுதல் சொல்லணும். நந்தினிய பாத்துக்க நாங்க இருக்குறோம்”
“ஐயோ தம்பி, அப்பிடி இல்ல. வயசுப்பொண்ணுக்குத் தைரியம் சொல்லுவோமேனு..” என்று இழுத்தார் அந்தப் பெண்மணி.
உண்மையில் அங்கிருந்த யாருக்கும் அத்தகைய நோக்கம் இருப்பதாகத் தோன்றவில்லை ஆதித்யனுக்கு.
“ஆறுதல் தேறுதல் எல்லாம் வேஸ்ட் ஆன்ட்டி. இவளுக்குப் பொருத்தமான வரன் இருந்துச்சுனா சொல்லுங்க. கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.”
“எங்க வீட்டுப் பசங்களுக்குக் கல்யாணம் ஆகி பேரன் பேத்தி எடுத்துட்டோம்பா. நல்ல வரன் வந்தா கட்டாயம் ராணி கிட்ட சொல்லுறேன். இப்பிடி ஒரு தங்கத்தை யாரு வேண்டாம்னு சொல்லுவாங்க?”
அசடு வழிந்தபடியே அந்தப் பெண்மணி சொல்லவும் நந்தினியின் இதழில் சிரிப்பு மலர்ந்தது.
ஆதித்யன் தனது கண்ணீரைத் துடைத்தது, உரிமைப்பட்டவன் போல தனது கரத்தைப் பொத்திப் பாதுகாத்தபடி நிற்பது எல்லாம் சற்று முன்னர் ஆறுதல் என்ற பெயரில் நடந்த துக்கத்தை ஆற்றுவது போன்ற மாயை அவளுக்கு.
அந்தப் பெண்கள் அசட்டுச்சிரிப்போடு நகர ஆதித்யன் அவளது கரத்தை விடுவித்தான்.
நந்தினியின் மூக்கு சிவந்திருந்தது. அதை நிமிண்டியவன் “என்ன மாதிரி பொண்ணு நீ? ரொம்ப சீக்கிரமா ஏன் உடையுற?” என்று வினவினான்.
“தெரியலையே ஆதி”
அப்பாவியாய் அவள் சொன்ன விதம் அவனது மனதை உருக்கியது.
“காதல் சில நேரத்துல காயப்படுத்தும். அந்தக் காயத்துக்கு மருந்தும் காதல்தான்.”
மென்மையாகச் சொன்னான் அவன்.
“காதல்ல பி.ஹெச்.டி பண்ணிருக்கிங்க போல?”
“இந்தக் கிண்டலுக்குக் குறைச்சல் இல்ல. இனிமே இப்பிடி அழாத நந்தினி. உன்னோட ஒரு சொட்டுக் கண்ணீருக்கு அவன் ஈடாவானா?”
கண்ணால் பார்த்திடாத குமரன்மீது அத்துணை கோபம் வந்தது ஆதித்யனுக்கு.
“நீங்க இப்பிடி பேசுறப்ப நான் ஸ்ட்ராங்கா ஃபீல் பண்ணுறேன். ஆனா யாராவது குமரனோட பேரைச் சொல்லிட்டாங்கனா நொறுங்கிப் போயிடுறேன் ஆதி”
“அதுக்காக உன் கூடவே நான் இருக்க முடியாதுல்ல?”
ஓரக்கண்ணால் அவளது அழகிய வதனத்தை இரசித்தபடி சொன்னவனின் குரலில் இருந்த விசமத்தை நந்தினியால் புரிந்துகொள்ள முடியவில்லை.
‘இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லேன்’ அவன் மானசீகமாகக் கேட்டான் அவளிடம்.
அதை அவனது கண்கள் பிரதிபலித்ததோ என்னவோ, நந்தினியின் விழிகளில் தடுமாற்றம்!
“நீ ரொம்ப அழகு. நல்லவேளையில இருக்குற. உன்னால உண்மையா நேசிக்க முடியுது. இப்பிடி ஒருத்தி வாழ்க்கைத்துணையா வரமாட்டாளானு அவன் அவன் தவம் கிடக்குறான். நீ அந்த லூசரை நினைச்சு உடையுறதும், சோகமா இருக்குறதுமா சுத்துற”
“அப்பிடி யாரு தவம் கிடக்குறாங்க?” விளையாட்டு போல வினவினாள் அவள்.
“வேற யாரு? நான் தான்”
ஆதித்யனின் பதிலில் திகைத்துப்போய் நின்றாள் நந்தினி.
“எ.. என்ன சொல்றிங்க ஆதி?”
“உஃப்” உதடு குவித்து இரு கரங்களையும் இணைத்து பின்னந்தலையோடு சேர்த்து நெட்டி முறித்தான்.
“எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு நந்தினி. ஏன் எதுக்குனு காரணம் கேக்காத. இந்த ஜிமிக்கி ஆட கோவிலுக்குள்ள நடந்து போனியே! அப்ப என் இதயத்துல ஒரு ஸ்பார்க் வந்துச்சு. சத்தியமா உன் மேல எனக்கு வந்த இரக்கத்தால இப்பிடி பேசல. லட்டு எங்க இருந்தாலும் எறும்பு அதைத் தேடிப் போகுமே, அதை மாதிரி நீ எங்க இருந்தாலும் என் கண்ணு உன்னைத் தேடி வந்துடுது. இந்த உணர்வுக்கு என்ன பெயர்னு எனக்குத் தெரியல. ஒருவேளை நான் உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டேனோ?”
அவளிடமே ஐயம் கேட்டான்.
‘ஙே’ என்று விழித்தாள் நந்தினி.
‘என்ன இவன் காபி குடிப்பது போல காதலிக்க ஆரம்பித்துவிட்டேனா என்று சுலபமாகக் கேட்டுவிட்டான்?’
தலையை உ.லுக்கிக்கொண்டவள் “இல்ல” என்றாள் தெளிவானக் குரலில்.
‘சொத்’தென்று போனது ஆதித்யனுக்கு.
“மூனு நாளா நீங்க என்னைத் தொடர்ந்து பாக்குறிங்கல்ல, அதனால இன்ஃபாசுவேசன் வந்துடுச்சு. இது காதலா இருக்குறதுக்கானச் சாத்தியக்கூறு ரொம்ப கம்மி”
“எப்பிடி உன்னால இவ்ளோ உறுதியா சொல்ல முடியுது?”
“ஏன்னா நான் ஒருத்தனை எட்டு வருசமா காதலிச்சவ. காதல் சட்டுனு வந்துடாது. அது படிப்படியா டெவலப் ஆகுற உணர்வு. உங்களுக்கு வந்திருக்குறது இன்ஃபாக்சுவேசன். இங்க இருந்து சென்னைக்குப் போனதும் நீங்க என்னை மறந்துடுவிங்க. வேற யாரோ ஒரு பொண்ணு மேல உங்களுக்கு இன்ஃபாக்சுவேசன் வரலாம். அட்ராக்சன் வரலாம். அது காதலா கூட டெவலப் ஆகலாம். ஆனா எடுத்ததும் காதல்னு சொல்லுறதுலாம் ரொம்ப ஓவர்”
தன்னைச் சமாளித்துக்கொண்டு சொல்லி முடித்தாள் அவள்.
ஆதித்யன் புருவங்களைச் சுழித்தான்.
பின்னர் எதையோ யோசித்துவிட்டு “சப்போஸ் சென்னைக்குப் போயும் உன்னை நான் ஞாபகம் வச்சிருந்தா? அப்ப என்னோட ஃபீலிங்ஸ் காதல் தானே?” என்று தீவிரக்குரலில் கேட்க
“முதல்ல நீங்க ஞாபகம் வைங்க சார். அப்புறம் அந்த ஃபீலிங்சுக்குப் பெயர் வைக்கலாம்” தலையாட்டியபடியே புன்சிரிப்புடன் பதிலளித்தாள் நந்தினி.
“நான் உன்னை மறப்பேன்னு தோணல. மறக்கக்கூடிய முகமா இது?”
அவளது வதனத்தைக் காட்டி அவன் கேட்ட விதத்தில் அகமும் முகமும் சேர்ந்தே மலர்ந்தது நந்தினிக்கு.
பெண்கள் பாராட்டுகளை இரசிப்பார்கள் என்ற உளவியலை அறிந்து பேசுகிறான் என ஒதுக்கிவிட நினைத்தாலும் அவளை மீறி ஆதித்யனின் பேச்சை இரசித்தாள் அவள். இந்த உணர்வுக்கு என்ன பெயர் என்று அவள் தன்னைத் தானே கேட்க மறந்துபோனாள் அத்தருணத்தில்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


