தோட்டத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த ராகவைப் பார்த்தபடியே நின்றிருந்தவள் அவன் கல்யாணி தேவியை நோக்கி வந்து ஆசீர்வாதம் வாங்கவும் ‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல’ என்று மனதில் நினைத்தவள் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் உள்ளே சென்றாள்.
அவளுக்காகக் காத்திருந்த மைதிலியிடம் கோவிலில் நடந்த விஷயங்களைக் கூற மைதிலி, “அந்த போலேநாத் மனசுல என்ன நெனைக்குறாருனு யாருக்கும் தெரியாது. நல்லதே நடக்கும்” என்று அவளைப் பார்த்துச் சொல்லிவிட்டு அவருடன் பூஜையறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அவள் கையில் பண்டிதர் கொடுத்திருந்த மாலையைச் சூட்டினார். கைகூப்பி வணங்கிவிட்டு வெளியே வந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தவர்கள் தோட்டத்திலிருந்து வந்த கல்யாணிதேவியின் குரலில் விரைந்து தோட்டத்திற்கு வந்தனர்.
அங்கே கல்யாணிதேவியின் அருகில் உட்கார்ந்திருந்த ராகவையும் கிஷோரையும் பார்க்காத மாதிரி நின்றவள் கல்யாணிதேவியைப் பார்த்தவள், “தாதி என்ன விஷயம்?” என்று கேட்கவும் ரித்திமா, “அவந்திகா! வருண் வீட்டுல இருந்து நமக்கு ஹெல்ப் பண்ணுறதுக்கு இவங்க ரெண்டு பேரையும் அனுப்பிருக்காங்க” என்று கூறவும் அவந்திகாவின் பார்வை ராகவை அளவிட்டது.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவன், “ஹெல்ப் பண்ண மட்டுமில்ல. ஆக்சுவலி மேரேஜுக்கான பிரிப்ரேஷன் எல்லாமே எந்த லெவல்ல இருக்குனு பாக்கவும் தான்” என்று கூறிவிட்டு அவந்திகாவைப் பார்த்தவன், “மிஸ். அவந்திகா! சங்கீத்கு என்ன தீம் யோசிச்சு வச்சிருக்கீங்க?” என்று அவளுடன் பேச ஆரம்பிக்க அவர்களைத் தொந்தரவு செய்யாமல் ரித்திமா கிஷோருடன் சேர்ந்து மற்ற ஏற்பாடுகளை அவனுக்கு விளக்க ஆரம்பித்தாள்.
உஷா, பாட்டி அம்மாவுடன் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“என்ன ஃப்ளவர்ஸ் பேக்கிரவுண்ட் பிளான் பண்ணிருக்கீங்க?” என்று அவன் கேட்கவும் வந்ததிலிருந்து அவன் மாறி மாறிக் கேள்வி கேட்டதில் எரிச்சலானவள் அதை மறைக்க விரும்பாத குரலில், “பேபி பிங்க் டுலிப் ஃப்ளவர்தான்” என்று கூற அவளை எரிச்சலாக்கியதில் அவனுக்குச் சற்று ஆனந்தமே.
அவளைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே, “அது ரொம்ப போரிங். நீங்க என்ன பண்ணுறீங்க அத அப்பிடியே பிங்க் வித் ஒயிட் காம்பினேஷனா சேஞ்ச் பண்ணிடுங்க” என்று சாதாரணமாகக் கூறவும் அவந்திகா கடுப்பானாள்.
“லிஸன் மிஸ்டர்! உங்க இஷ்டத்துக்குத் திடீர்னு சேஞ்ச் பண்ண முடியாது. நாளைக்குச் சங்கீத் வச்சிட்டு இன்னைக்கு வந்து ஃப்ளவர் அரேஞ்ச்மெண்ட் சேஞ்ச் பண்ணச் சொன்னா எப்பிடி? நீங்க சொன்ன காம்பினேஷன் ஃப்ளவர்ஸ் ஆர்டர் பண்ணனும்னா நான் ஜெய்ப்பூர் போகணும்” என்று அவள் கூற அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவன், “குட், அப்போ ஜெய்ப்பூர் போறதுக்கு ரெடியாகு ஜான்சி ராணி” என்று கேலிப்புன்னகையுடன் வீட்டிற்குள் சென்றவனைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தவள் அவனைத் தொடர்ந்து சென்றாள்.
மனதிற்குள்ளேயே “அன்னைக்கு நான் பேசுனத மனசுல வச்சிட்டுதான் இந்த மைதா மாவு இப்பிடிலாம் நடந்துக்கிறான்” என்று சொல்லிக் கொண்டவளின் மனதில் ஒரு ஐடியா உதித்தது.
நேரே கல்யாணி தேவியிடம் சென்றவள் அதைப் புன்னகையுடன் விவரிக்க அவரும் சம்மதித்தார். அவந்திகாவுடன் நேரே ராகவ் இருக்கும் இடத்துக்கு வந்தார் அவர்.
ராகவைப் பார்த்து, “நீ சொன்ன விஷயங்களை எல்லாம் அவந்திகா சொன்னா கண்ணா. நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து போய் வேண்டியத வாங்கிட்டு வந்திடுங்க” என்று சொல்லவும் அவன் என்ன நடக்கிறது என்று புரியாமல் அவந்திகாவைப் பார்க்க அவள் சாதாரணமாக “நீங்கதானே சொன்னீங்க ராகவ்! ஃப்ளவர்ஸ் உங்களுக்குத் தெரிஞ்ச இடத்துல வாங்குனா பெட்டரா இருக்கணும்னு. அதான் தாதிகிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு வந்தேன்“ என்றாள்.
சவால் விடும் முக பாவனையுடன் அவளைப் பார்த்துக்கொண்டு மனதிற்குள் “எல்லாம் உன்னோட பிளானா? ஓகே எதுக்குடா இவனக் கூட்டிட்டு வந்தோம்னு நீ வருத்தப்படுவ டார்லிங்” என்று எண்ணியபடி அவளை நோக்கி ஒரு கேலிப் புன்னகையை வீசியவன், “ஓகே தாதி! ஐயாம் ரெடி டு கோ” என்று கூறிவிட்டு அவளைப் பார்த்தான்.
அவளும் சரியென்று தலையசைத்தவள் அவனுடன் சென்று காரில் அமர்ந்து கொண்டாள். கார் புறப்படும் வரை பேசாதவன் அவள் புறம் திரும்பி, “சீட் பெல்ட் போடு.” என்று கட்டளையிட அவள் விவாதம் செய்யாமல் அவன் கூறியதைச் செய்தாள்.
அதே நேரம் மெஹ்ரா குரூப் ஆஃப் கம்பெனிஸின் தலைமை அலுவலகத்தில் அதன் சேர்மனான சிராஜ் மெஹ்ரா மிகவும் கோபமாக அந்த அறையில் சுற்றிக்கொண்டிருந்தான். அவன் உதவியாளன் விவேக் அவன் கோபத்தைப் போக்கும் வழியறியாது திகைத்து நின்றுகொண்டிருந்தான்.
“எப்பிடி? எப்பிடி விவேக்? சுக்லா குரூப் டீல் எப்பிடி அந்த ராகவ் கைக்குப் போச்சு?”
“சார் ராகவைப் பர்சனலா சுக்லா சார்க்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சுனு பேசிக்கிறாங்க. அதுமட்டுமில்லாம அவரோட டாட்டர் நேனாவ ராகவ்கு மேரேஜ் பண்ணி வைக்குற ஐடியால இருக்காருனு நம்ம ஸ்பை சொன்னான்”
“வாட்? நேனாவுக்கும் ராகவ்கும் மேரேஜ் மட்டும் நடந்தா அது பிஸினஸ் வேர்ல்ட்டோட பெரிய மெர்ஜரா இருக்கும். அப்புறம் யாராலயும் அவன கண்ட்ரோல் பண்ண முடியாது” என்று அதிர்ந்தான் அவன்.
“சார் ராகவ் சார் இப்போ ஜெய்ப்பூர்ல இருக்கிறதா நம்ம ஸ்பை சொன்னான். அவர் அங்க அவரோட கஸின் மேரேஜுக்குப் போயிருக்கிறதா சொல்லுறான் சார்.”
“இப்போ அவன் எங்க இருக்கானு அந்த ஸ்பைகிட்ட கேளு விவேக். எக்காரணத்தைக் கொண்டும் நேனா ராகவ் மேரேஜ் நடக்கக் கூடாது” என்று அவன் கட்டளையிடவும் விவேக் அந்த ஸ்பையைத் தொடர்பு கொண்டான்.
ராகவும், அவந்திகாவும் சென்ற காரைத் தொடர்ந்து சென்ற அவன் விவேக்கின் காலைப் பார்த்தவன் ப்ளூடூத்தில் பேச ஆரம்பித்தான்.
“சொல்லுங்க விவேக் சார்”
“வீர் இப்போ எங்க இருக்க நீ?”
“சார் ராகவ் ஒரு பொண்ணு கூட ஜெய்ப்பூர் ரோட்ல போய்ட்டிருக்கார். நான் அவர பைக்ல ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்”
அவன் கூறிய தகவலில் ராகவும் ஒரு பெண்ணும் செல்வதாகக் கேட்டதும் சிராஜின் மனதில் ஒரு திட்டம் உதித்தது. அவர்களைத் தொடர்ந்து செல்லுமாறு வீருக்குக் கட்டளையிட்டவன் அடுத்துச் செய்ய வேண்டிய வேலையில் இறங்கினான்.
சிராஜும் ராகவும் பிஸினஸ் ரைவல்ஸ் என்பது அவர்கள் வட்டாரத்தில் நன்கு தெரிந்த விஷயம். ஆனால் சுக்லா குரூப்பின் இந்த டீல் இருவருக்கும் மிகவும் முக்கியமானது. அதை அடைய சிராஜ் எவ்வளவோ முயற்சி செய்தும் ராகவ் அதைக் கைப்பற்றியது அவனது நெஞ்சில் தீயை மூட்டியது.
அவனது நடவடிக்கைகளைக் கவனிக்க ஒரு ஆளை நியமித்து அவனது ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க ஆரம்பித்தான். இப்போது அவனுடைய திட்டம் எப்பாடுப்பட்டேனும் நேனா ராகவ் திருமணத்தை நிறுத்துவதும், சிவ்ராஜ் சுக்லாவின் மனதில் ராகவை மோசமானவனாகச் சித்தரிப்பதுமே. அதற்கான வேலைகளில் அவன் இறங்கிவிட்டான். அவனது திட்டத்தை மட்டும் முன்கூட்டியே அறிந்திருந்தால் ராகவ் பின்னாட்களில் எழப்போகும் எவ்வளவோ பிரச்சனைகளைத் தடுத்திருப்பான். என்ன செய்வது? விதி அவனது தலையெழுத்தில் அவந்திகாவின் பெயரை எழுதியதை மாற்றி அமைக்கும் சக்தி அவனுக்கு இல்லை போலும்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


