காரிலிருந்து இறங்கியவள் அவனுடன் பேச வேண்டும் என்று சொல்லி அவனையும் அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றாள். அவளுக்கு முன்னரே வந்திருந்த ரித்திமா அவனைப் பார்த்ததும் ஒன்றும் சொல்லாமல் அவனுக்கு ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுவிட்டு வேறு அறைக்குச் சென்றுவிட்டாள்.
அவந்திகா கிஷோரை அமரச் சொன்னவள் “என்னாச்சு கிஷோர்? எதுக்கு நீ எப்போ பாத்தாலும் வீணாம்மாகிட்ட கத்திக்கிட்டே இருக்க? ஷீ இஸ் யுவர் மாம். இந்த உலகத்துல எல்லாருக்கும் அம்மாகூட இருக்கிற பாக்கியம் கெடைக்காது கிஷோர். உனக்கு அது கெடச்சிருக்கப்போ நீ ஏன் அத நாசம் பண்ணிக்கிற?” என்று அமைதியாகக் கேட்டாள்.
“பாபி! என்னைப் பொறுத்தவரைக்கும் ராதிம்மாவும் பிரியாமாவும் என்னோட அம்மாவா நான் நெனைக்கிறேன். நீங்க சொல்லுறவங்க என்னைப் பெத்ததோட சரி” என்று ஆரம்பித்தவன் அனைத்தையும் அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்.
வீணாவும் நிரஞ்சன் கபூரும் (வருண், ராகவின் சித்தப்பா) காதலித்து மணந்துகொண்டவர்கள். வீணா மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் திருமணமான புதிதில் கணவன் வீட்டின் செல்வச் செழிப்பைக் கண்டவருக்கு மெல்ல மெல்ல அதை அனுபவிப்பதில் வந்த நாட்டம் கணவனையோ குழந்தைகளையோ கவனிப்பதில் சுத்தமாக இல்லை.
ஆனாலும் நிரஞ்சன் இது அனைத்தையும் தன்னுடைய காதலுக்காகக் கண்டுகொள்ளாமலே இருந்துவிட்டார். ஆனால் அவரின் பிள்ளைகளோ தாயின் போக்கை அறிந்தவர்கள் அவரிடமிருந்து மெதுவாக விலகி அந்தத் தாயன்பை ராதிகாவிடமும் பிரியாவிடமும் தேடிக்கொண்டனர்.
நிரஞ்சன் இருக்கும்வரைதான் அவ்வாறு என்றால் அவரின் மறைவுக்குப் பின் வீணாவின் நிலை இன்னும் மோசமானது. காதல் கணவரின் மறைவை அவரால் தாங்கிக்கொள்ள முடியாமல் அதிலிருந்து மனதைத் திசைதிருப்புவதற்காகவே வெளிநாடுகளிலேயே முக்கால்வாசி நேரத்தைச் செலவழித்தார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதில் அவர் மறந்த விஷயம் இதுதான். தன் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிட்டிருந்தால் கணவரின் இறப்பு ஒரு வருத்தமாகத் தோன்றி அவரைக் கரைக்காமல் அவர்களின் இனிமையான தருணங்களின் நியாபகார்த்தமாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு மாறாக அவர் வேறு வழிகளில் அதை மறக்க முயற்சித்துத் தானே தன்னுடைய பிள்ளைகளின் வாழ்விலிருந்து தன்னை விலக்கிக்கொண்டார்.
கிஷோர் கூறியதை அடுத்த அறையிலிருந்து ரித்திமாவும் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள்.
அவந்திகா அவனுடைய முகத்தைப் பார்த்தவள் அதில் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்த தெளிவு தெரியவே அவனுக்குத் தண்ணீரைக் கொடுத்தாள்.
“தண்ணியக் குடி! ரொம்பப் பேசிட்டல்ல” என்று சொல்லி அவன் கையில் டம்ளரைத் திணித்தாள்.
“நீ சொன்னதுல்லாம் ஓகே! பட் இப்போ அவங்களுக்கு வயசாயிடுச்சு. இனிமேதான் உன்னோட அன்பை அவங்க இன்னும் அதிகமா எதிர்ப்பார்ப்பாங்க. நீ அப்பிடியே அன்பைப் பொழியணும்னு நான் சொல்ல மாட்டேன். பட் இந்த ஹார்ஷான வேர்ட்ஸ் வேண்டாமே” என்று சொல்ல அவனும் அதை ஒத்துக்கொண்டான்.
அங்கிருந்து செல்லும்போது அவன் ஒரு தெளிவுடன் சென்றான்.
ரித்திமாவுக்கு “இவனும் பாவம்தான்” என்று மனதில் ஒரு ஓரத்தில் தோணவும் அதை ஒதுக்கிவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.
ஆனால் அவந்திகா சிறிது நேரத்திலேயே தலைவலியால் வீடு திரும்பினாள்.
“சே! இந்தத் தலைவலியால இன்னைக்கு என்னோட வொர்க் ஃபுல்லா ஜாம் ஆயிடுச்சு” என்று புலம்பியபடியே வீட்டுக்குள் வந்த அவந்திகா வீணாவின் பெரிய குரலில் வாசலிலேயே நின்றுவிட்டாள்.
“லிசன் ராகவ்! என்னால அவன் சொல்லுற அந்த மிடில் கிளாஸ் பொண்ணை மருமகளா ஏத்துக்கவே முடியாது! இந்த விஷயத்துல நீயாச்சும் என்னைப் புரிஞ்சுப்பனு நெனச்சேன். பட் நீயும் இவங்க எல்லார்கூடவும் சேந்து நான்தான் தப்புங்கிற மாதிரி பேசுறது எனக்கு ஷாக்கா இருக்கு”
“இதுல ஷாக் ஆகிறதுக்கு என்ன இருக்கு சாச்சி? அவன் அந்தப் பொண்ணை லவ் பண்ணுறான்னா அது அவனோட இஷ்டம். ஹீ இஸ் நாட் அ கிட். அவனுக்கு யாரு லைஃப் பார்ட்னரா வந்தா நல்லா இருக்கும்னு அவனை விடவா நமக்குத் தெரிஞ்சிடப் போகுது?” என்ற ராகவின் குரலும் அவளது காதில் ஒலிக்க அவள் அங்கே நின்று முழு விவாதத்தையும் கேட்க முடிவு செய்தாள்.
“எனக்குப் புரிஞ்சு போச்சு. இது நீயா பேசல. உன்னோட மிடில் கிளாஸ் பொண்டாட்டியோட எண்ணங்கள்தான் உன்னோட வாய் வழியா வார்த்தையா வருது! நீ வேற வழியில்லாம அந்த மாதிரி ஒருத்தியக் கல்யாணம் பண்ணிகிட்டா என் பையனும் அப்பிடி ஒருத்தியக் கட்டிகிட்டு வாழ்க்கை முழுக்க இந்த இடியட்டிக் தாட்ஸோட வாழனுமா? இந்த வீட்டுக்கு அந்த மாதிரி ஒருத்தி போதும்”
“என்னோட வைஃப்கிட்ட நீங்க என்ன குறையைக் கண்டுபிடிச்சீங்க சாச்சி? கொஞ்சம் அதிகமாப் பேசுவா, பட் அவ என்னைக்கும் பொய்யாப் பேசி நடிச்சது கெடையாது. நீங்க கூட்டிட்டு வந்தீங்களே ஒருத்தி அவ என்ன பண்ணுனான்னு இந்த முழுக் குடும்பத்துக்கும் தெரியும். அவளையும் என்னையும் சேத்து ஒரு நியூஸ் வந்ததுக்கு அவ எவ்ளோ பெரிய கலவரம் பண்ணுனா? அவளும் அவளோட அப்பாவும் சேந்து இல்லாத ஒரு விஷயத்தை எப்பிடி இருக்கிற மாதிரி டிராமா பண்ணுனாங்கன்னும் எல்லாருக்கும் தெரியும்.
அவந்திகாவப் பத்தி அப்பிடி நியூஸ் வந்ததுக்கு எல்லாருமே டென்ஷன் ஆனாங்க. பட் அவ அன்னைக்குக் கூட எனக்குச் சப்போர்ட் பண்ணித்தான் பேசுனா. ஷீ இஸ் சோ ஹானஸ்ட். நான் அந்த ஹானஸ்டிக்காகத்தான் அவளைக் கல்யாணம் பண்ணிகிட்டேனே தவிர வெறும் ரெஸ்பான்சிபிலிட்டினு நெனச்சிருந்தா நான் அதை எப்போவும் போலப் பணம் குடுத்துச் சரிகட்டி முடிச்சிருப்பேன்.
சோ இனிமே மறந்து கூட என் வைஃப மிடில் கிளாஸ் அது இதுனு பேசிடாதீங்க! அண்ட் ஒன் மோர் திங் கிஷோர் லவ் பண்ணுற பொண்ணு நீங்க சொல்லுற பொண்ணை விட ஸ்டேட்டஸ்ல கிளாஸ்ல கம்மியா இருக்கலாம். பட் அவ இந்த வயசுலயே தன்னோட சொந்த உழைப்புல வாழுறா. அத நெனச்சு நீங்க சந்தோஷப்படணும்! இனியாச்சும் கிளாஸ் அப்பிடி இப்பிடினு பேசி டைம் வேஸ்ட் பண்ணாம மிஸ்டர் வர்மாகிட்ட பேசுன அலையன்ஸ கேன்சல் பண்ணப் பாருங்க” என்று சொல்லிவிட்டு தாதியைப் பார்க்க அவரும் அவன் சொன்னதுதான் சரியென்பது போல வீணாவுக்கு அறிவுரை கூறித் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
அவன் மேலே அவனது அறைக்குச் செல்ல அவந்திகாவும் சிறிது நேரம் ராதிகாவிடம் பேசிவிட்டு அவர்களின் அறைக்கே சென்றாள்.
மேலே செல்லும்போது ராகவுடைய வார்த்தைகளை மனதில் அசை போட்டபடியே சென்றாள். அவளால் ராகவின் காதலைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் அவளுக்கு ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. அவன் கடமைக்காகத் தன்னை மணந்துகொண்டானோ என்ற கேள்வி அவளைத் திருமணமான நாள் முதலே பாடாய்படுத்தி வந்தது அவள் மட்டுமே அறிந்த ஒன்று!!
ஆனால் இன்று ராகவ் அவளது நேர்மைக்காக அவளை மணந்தேன் என்று சொல்லவும் தன்னிடம் ஏதோ ஒன்று பிடித்துத்தான் அவன் தன்னை வாழ்க்கைத் துணையாக ஏற்றிருக்கிறான் என்ற செய்தியே அவள் மனதில் இளஞ்சாரல் வீச வைத்தது.
“ஷீ இஸ் சோ ஹானஸ்ட். நான் அந்த ஹானஸ்டிக்காகத்தான் அவளைக் கல்யாணம் பண்ணிகிட்டேன்” என்ற அவனின் குரல் காதில் கீதமாக ஒலிக்கப் புன்னகையுடன் உள்ளே சென்றாள்.
அங்கே அலுவலக அறையில் அமர்ந்திருந்தவனைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே அவள் கடந்து செல்ல ராகவுக்கு “இவளுக்கு என்னாச்சு” என்று மனதில் தோணாமல் இல்லை.
உள்ளே சென்றவள் டிரஸ்ஸிங் டேபிள் முன் அமர்ந்து அங்கே நாற்காலியில் உட்கார்ந்து ஃபைலைப் புரட்டிக்கொண்டிருந்தவனைத்தான் பார்த்தாள்.
முதல்முறையாக அவனின் கம்பீரமான தோற்றத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டே “நீ இவ்ளோ ஹாண்ட்சம்மாப் பொறந்திருக்க வேண்டாம்டா! அதான் எங்க போனாலும் எல்லாரோட பார்வையும் என் மார்ஷ்மெல்லோ மேலயே விழுது” என்று சொல்லித் திருப்திபட்டுக்கொள்ள அவளது மனசாட்சியோ “என்னது உன்னோட மார்ஷ்மெல்லோவா? இது எப்போ?” என்று கேட்க “ஜஸ்ட் நவ் பேபி” என்று அதற்குப் பதிலளித்துக்கொண்டே அவனைப் பார்த்தவள் திடீரென்று அவன் பார்த்ததும் சட்டென்று அவனைக் கவனிக்காததைப் போலக் காதிலிருந்து கம்மலைக் கழற்றிக் கொண்டிருந்தாள்.
அவனோ இருக்கையிலிருந்து எழுந்தவன் அவளது டிரஸ்ஸிங் டேபிள் அருகே அருகில் ஒரு மோடாவை இழுத்துப்போட்டு அமர்ந்தவன் “ஜான்சி ராணி! ரொம்ப நேரமா இதக் கழட்ட ட்ரை பண்ற மாதிரி தெரியுது? விடு நான் ஹெல்ப் பண்றேன்” என்று சொல்லி அதைக் கழற்றி அவளது கையில் கொடுத்தான்.
“இதுக்கா உனக்கு இவ்ளோ நேரம்?” என்று கண்ணாடியில் தெரிந்த அவளின் பிம்பத்தைப் பார்த்தவாறு கேட்டான்.
“ம்ஹூம்! இவ்ளோ நேரம் நான் உன்னைத்தான் பாத்துட்டு இருந்தேன்” என்று வாய்விட்டு உளறினாள் அவந்திகா.
“என்னை எதுக்குப் பாத்துட்டு இருந்த?” என்று அவன் குறும்புடன் கேட்க அவளோ மெதுவாக அவனது பிம்பத்தைப் பார்த்தே பதிலளித்தாள்.
“சும்மா! என் புருஷனை நான் பாக்குறேன்! இதுல உனக்கு என்ன பிரச்சனை?”
அவளின் பின் நின்று அவளை அணைத்துக்கொண்டவன் “வேற என்னல்லாம் பண்ணுனீங்க ஜான்சி ராணி?” என்று தன் தாடையை அவள் தலையில் அழுத்தியவாறு கேட்டான்.
“நான் உனக்கு நியூ நிக் நேம் ரெடி பண்ணிருக்கேன்” என்று அவள் கண்களில் ஒளியுடன் கூறினாள்.
“இப்போ என்ன நிக் நேம்?”
“மார்ஷ்மெல்லோ… நல்லா இருக்கா?”
“இந்த நேம் வச்சதுக்கு எதாச்சும் காரணம் சொல்லுவியே நீ”
“கண்டிப்பா! பிகாஸ் நீயும் அதுவும் சேம் கலர்”
“அவ்ளோதானா ரீசன்?”
“அதோட நீயும் மார்ஷ்மெல்லோ மாதிரி சோ ஸ்வீட்” என்று நிமிர்ந்து பார்த்து அவனது தாடையைப் பிடித்துக் கொஞ்சினாள் அவள்.
உடனே அவளை அணைப்பிலிருந்து விடுவித்தவன் அவளது நெற்றி கழுத்தில் கை வைத்துப் பார்க்க அவந்திகா “நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று கூறி அவனைப் பார்த்தாள்.
“நீ வழக்கமா இப்பிடில்லாம் பேச மாட்டியே” என்று குறுகுறுவென்று பார்க்க அவளோ தலையிலடித்துக்கொண்டாள்.
“இந்த உலகத்துல அவன் அவன் என் பொண்டாட்டி என்கிட்ட பாசமாப் பேச மாட்டாளானு தவம் கெடக்கிறான். நீ இவ்ளோ பாசமாப் பேசுறேன், என்னையவே டவுட்டா பாக்குற?”
“அப்பிடி இல்ல. நம்ம திருமண வாழ்க்கை வரலாறுல நீ ஃபர்ஸ்ட் டைமா இப்பிடிப் பேசுறியா அதான் கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆயிட்டேன்”
“சரி நீ கன்ஃபியூஸ் ஆக வேண்டாம். நான் இனிமே இப்பிடி நடந்துக்க மாட்டேன்” என்று அவள் விலகிச் செல்ல அவனோ வேகமாக அவளை இழுத்தவன் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான்.
பின்னர் “அவந்திகா! மேரா ஜானு! நீ எப்பிடி பிஹேவ் பண்ணாலும் எனக்குப் பிடிக்கும்” என்று அவளது கன்னத்தில் முத்தமிட அவளுக்கு இனி அவனிடம் எந்தத் தயக்கமும் இருக்கப் போவதில்லை என்பதை அவளது கண்ணிலேயே அறிந்துகொண்டான் அவளின் கணவன்!
மெல்லத் தலையுயர்த்தி அவனைப் பார்த்தவள் “எல்லாம் ஓகே! இந்த ஜானுனா என்ன?” என்று கேட்க அவனோ “டார்லிங்” என்று சொல்லிவிட்டு “ரொம்பக் கேள்வி கேக்குற நீ” என்று செல்லமாகச் சலித்தபடி அவளின் மூக்குடன் தன் மூக்கை உரசியவனைப் பார்த்துக் கன்னம் குழியச் சிரித்தாள் அவந்திகா!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


