“நான் எப்போவுமே அவளை லவ் பண்ணதே இல்ல” என்ற ராகவின் வார்த்தை அவந்திகாவுக்கு ஒரு இனிய அதிர்ச்சியைக் கொடுக்க அந்தக் கணத்தில் இந்த உலகிலேயே மகிழ்ச்சியான ஜீவனாகத் தன்னை உணர்ந்தாள் அவள்.
அதே சந்தோஷத்துடன் ராகவைப் பார்த்தவள் தன் மனதில் மீதமிருக்கும் கேள்விகளுக்கும் விடை தெரிந்து கொள்ள அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
“அப்போ அன்னைக்கு ரிப்போர்ட்டர்ஸ் உன்னோட பிரேக் அப் பத்திக் கேட்டதுக்கு நீ குடுத்த பதில், அதுமட்டுமில்லாம வீட்லயும் எல்லாரும் அவளை உன்னோட எக்ஸ்னுதானே சொல்லிட்டு இருந்தாங்க?”
“லெட் மீ எக்ஸ்ப்ளெய்ன் எவ்ரிதிங்” என்று சொல்லிவிட்டுப் பெருமூச்சு விட்டவன் அவளுக்கு எல்லாவற்றையும் விளக்க ஆரம்பித்தான்.
“ரிப்போர்ட்டர்ஸ் பொறுத்தவரைக்கும் என்னோட கேர்ள் ஃப்ரெண்ட் வருஷத்துக்கு ஒருத்தர் மாறிட்டே இருப்பாங்க. அவங்க ஃபர்ஸ்ட் என்னோட கேர்ள் ஃப்ரெண்டுனு சொன்னது வேற யாரும் இல்ல, நம்ம லேரன். அப்போ எங்க ஏஜ் ஜஸ்ட் 18. வீ போத் வேர் டூயிங் அவர் ஸ்டடீஸ் இன் லண்டன். அந்த டைம்ல ஓரியன்டேஷன் புரோகிராம்ல நான் அவ கூட டான்ஸ் பண்ணத வச்சு அவதான் என்னோட கேர்ள் ஃப்ரெண்டுனு நியூஸ் வந்துச்சு. அதைப் பாத்துட்டு எங்க ரெண்டு பேருக்கும் சிரிப்புதான் வந்துச்சு. ஷீ இஸ் மை சைல்ட்ஹுட் ஃப்ரெண்ட், அவளைப் போய்க் கேர்ள் ஃப்ரெண்டுனு சொன்னா வேற எப்பிடி ரியாக்ட் பண்ண முடியும்?” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான்.
அவளோ கன்னத்தில் கை வைத்து ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இப்பிடி வருஷத்துக்கு ஒரு பொண்ணை என்னோட கேர்ள் ஃப்ரெண்டுனு டிக்லேர் பண்ணி நியூஸ் வர ஆரம்பிச்சதும் என் ஃபேமிலிக்கே அது பழகிப் போச்சு! தென் நான் இந்தியா வந்ததும் விஹான் டெலிகாம என்னோட மேனேஜ்மென்ட்கு கீழ கொண்டு வந்து வொர்க் பண்ண ஆரம்பிச்சதுல எனக்கு வேற எது மேலயும் பெருசா இன்ட்ரெஸ்ட் வரல. அந்த டைம்லதான் வீணா சாச்சி ரிலேட்டிவா எனக்குத் தியா அறிமுகமானா.
அஸ் யூஸ்வல் அவளையும் என்னையும் லிங்க் பண்ணி நியூஸ் வர ஆரம்பிச்சுது. பட் அவ எங்க ஃபேமிலிக்கு குளோஸ்ங்கிறதால வீணா சாச்சி இதால ரொம்பவே வருத்தப்பட்டாங்க. அப்புறம் தாதி எனக்கும் தியாக்கும் மேரேஜ் பண்ணி வைக்கிறதாச் சொன்னதும்தான் சமாதானம் ஆனாங்க.”
“மேரேஜா?” என்று அதிர்ந்தாள் அவந்திகா.
ராகவ் சாதாரணமாக “யா! எனக்கும் நோ சொல்லுறதுக்குப் பெருசா எந்த ரீசனும் இல்ல. சோ ஐ செட் யெஸ். பட் தியாவோட எக்ஸ்பெக்டேஷனுக்கு என்னால இருக்க முடியல. அவளைப் பொறுத்தவரைக்கும் அவ ஹப்பி அவ பின்னாடியே 24 ஹவர்ஸும் சுத்திகிட்டே அவளைப் பேம்பர் பண்ணிட்டே இருக்கணும். என்னால அப்பிடிலாம் இருக்க முடியாதுனு தெரிஞ்சதும் அவளே பிரேக் அப் பண்ணிட்டு லண்டன் போயிட்டா. வீணா சாச்சியும் அவகூடவே போயிட்டாங்க. பட் எனக்குக் கால் பண்ணி அவளும் அவங்க அப்பாவும்தான் நியூஸ் ஸ்ப்ரெட் ஆகக் காரணம்னு சொல்லிட்டாங்க. எனக்கு அப்போதான் விஹான்ல ஒரு இம்பார்ட்டென்ட் டீல் வரவும் நானும் அதை ஒரு விஷயமாவே யோசிக்கல” என்று சொல்லி முடித்தான்.
“அப்போ நீ அன்னைக்கு என்கிட்ட ஒரு லவ் ஸ்டோரி சொன்னியே அது?” என்று முறைத்தபடியே கேட்டாள் அவந்திகா.
“அது என்னோட சின்ன இமேஜினேஷன். ஐ ஹோப் யூ என்ஜாய்ட் தட் ஸ்டோரி” என்று சொல்லி ராகவ் கண்ணைச் சிமிட்டவும் அவந்திகா அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
“ஏன்டா என்னைப் பாத்தா உனக்கு எப்பிடித் தெரியுது? நான் கடுப்பாவேனு தெரிஞ்சும் இப்பிடி ஒரு கதையை என்கிட்ட சொல்லுவியா நீனு?” என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“பிகாஸ் கோவத்தோட உன்னைப் பாக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஜான்சி ராணி. இந்த முட்டைக் கண்ணை உருட்டி முகம் ரெட்டிஷா ஆகி நீ பாக்குறப்போ அதுதான் ஹெவன்லி ஃபீலிங். அது செம என்டர்டெயின்மென்ட்” என்று அவன் கண்ணை மூடிச் சிலாகிக்க அவன் தோளில் பலமாக அடித்தாள் அவந்திகா.
அவன் தடவிவிட்டுக்கொண்டே “கம் ஆன் ஜான்சி ராணி! பாக்கத்தான் நீ குட்டிப் பொண்ணு மாதிரி இருக்க.. பட் உன்னோட அடி ஒவ்வொண்ணும் இடி மாதிரி இருக்கு” என்று சொல்லியவனை முறைத்தாள்.
“என் அடி இடி மாதிரி இருந்தாலும் நோ யூஸ். நீதான் பாறை மாதிரி இருக்கியேடா. உன்னை அடிச்சா என் கைதான் வலிக்குது” என்று பதிலடி கொடுத்தாள்.
“அச்சோ! எங்க கையக் குடு” என்று அவளின் கையைத் தன் கைக்குள் கொண்டுவந்தவன் குனிந்து அதில் முத்தமிட அவந்திகா விருட்டென்று கையை உருவிக்கொண்டாள்.
“எனக்கு கை வலிக்கவே இல்ல மிஸ்டர் ராகவ்” என்றுகையைக் கட்டிக்கொள்ளவும் சிரித்தவன் “கையைக் கட்டிக்கிட்டா எனக்கு கிஸ் பண்ண வேற ப்ளேஸா இல்ல?” என்று அவள் முகத்தை நெருங்கவும் அவன் தாடையைப் பற்றி அவன் முகத்தைத் தள்ளிவிட்டாள் அவந்திகா.
“இடம் பொருள் ஏவல் இது எதுவுமே உனக்குத் தெரியாதா? இப்பிடித்தான் மொட்டை மாடில கிஸ் பண்ண வருவியா நீ? இது ஒன்னும் லண்டன் இல்ல” என்று சொல்லி அலட்சியமாக உதட்டைச் சுழித்தாள்.
“என்னோட வைஃப நான் கிஸ் பண்ண எதுக்குப் ப்ளேஸ் டைம்லாம் பாக்கனும் டியர்?”
“அஹான்! நீ சொன்னியே ஒரு கேவலமான லவ் ஸ்டோரி அதுக்கு உன்னை மன்னிச்சதே பெரிய விஷயம். இதுக்கு மேல உனக்கு கிஸ் கேக்குதா? இந்த ஜென்மத்துக்கும் உனக்குக் கெடையாது” என்று சொல்லிவிட்டுக் கீழே இறங்கிச் சென்றாள்.
அவள் பின்னேயே “வாட்? நான்தான் உன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேனே! இன்னுமா உனக்குக் கோவம் போகல” என்று புலம்பியபடி சென்றான் ராகவ்.
இருவரும் கீழே சென்றதும் ஜொலிக்கும் நிலவைப் பார்த்துக் கண் சிமிட்டிய நட்சத்திரங்களுடன் அன்றைய இரவு ரம்மியமாக நகர்ந்தது.
மறுநாள் காலையில் அஜ்ஜூவைப் பள்ளிக்குத் தயார் செய்துகொண்டிருந்தான் ராகவ். அன்று அஜ்ஜூவின் பள்ளியில் மாறுவேடப் போட்டி. அதற்கான உடைகளை அவனுக்கு அணிவித்துக்கொண்டிருந்தான் ராகவ். அவன் அருகில் முறைப்புடன் நின்றுகொண்டிருந்தாள் அவந்திகா.
“இங்க பாரு அஜ்ஜு! அடம் பிடிக்காம ஸ்கூலுக்குக் கெளம்பணும். அவன் பேச்செல்லாம் கேட்டா நீ உருப்படாமத்தான் போவ” என்று ராகவை முறைத்தபடியே கூற அவன் அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் அஜ்ஜுவை மாறுவேடப் போட்டிக்குத் தயார்படுத்திக் கொண்டிருந்தான்.
“அந்து! இந்தக் கெட்அப்ல நான் போனா ஸ்கூல்ல எல்லாரும் என்னையேதான் பாப்பாங்க. இல்ல ஜீஜூ!” என்று ஆர்வத்துடன் ராகவைப் பார்க்க அவனும் அதை ஆமோதித்தான்.
“ஜீஜூவுக்கும் உனக்கும் கொஞ்சம் கூட அறிவு கெடையாது. எப்பிடியோ போங்க. பட் நான் ஸ்கூலுக்கு வர மாட்டேன். இல்ல உனக்கு கெட்அப்பே இல்லனா இப்பிடி ஆதிவாசி வேஷத்தை என் லட்டுகுட்டிக்குப் போட்டு விடுவ?” என்று அவள் கடுப்புடன் கேட்கவும் ராகவ் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.
“ஓகே சாம்! ஷல் வீ கோ?” என்று சொல்லி அவனைத் தூக்கிக்கொண்டவன் அவந்திகாவை நோக்கி ஒரு கேலிப் பார்வையை வீசிவிட்டுச் சென்றான்.
அவர்கள் இருவருக்கும் டாட்டா காண்பித்து உள்ளே வந்த அம்புவிடம் “ஏன் அம்பு, நீயே சொல்லு ஃபேன்சி டிரஸ் காம்படீசனுக்கு வேற கெட்அப் இல்லனா இந்த ட்ரைபல் கெட்அப் போட்டுருக்கான் இந்த லட்டு குட்டி?” என்று கேட்க அவரோ “அதுக்கு என்ன நல்லாதான இருக்கு” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
“உனக்கு எல்லாம் நல்லாதான் இருக்கும், என் லட்டு குட்டிக்கு இன்னைக்கு ப்ரைஸ் கெடைக்கணும்னு நான் வேண்டுனது எனக்குத்தான தெரியும்” என்று மதியம் வரை வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவந்திகா.
கார் சத்தம் கேட்டதும் ஓடிச் சென்று பார்த்தவள் இருவரும் கையில் ஒரு மினி கோப்பையுடன் வரவும் சந்தோஷத்தில் அம்புவை அழைத்தாள்.
“அம்பு! அஜ்ஜுக்கு ப்ரைஸ் கெடச்சிருச்சு!” என்று கத்திக்கொண்டே அவனை ஓடி வந்து அணைத்துத் தூக்கிக்கொண்டவள் உள்ளே சென்றாள்.
அவன் நடந்ததைக் கதை போல் விளக்க ராகவ் ‘இப்போ என்ன சொல்லுற’ என்று புருவத்தை உயர்த்திக் கேட்க அவனை அலட்சியம் செய்துவிட்டு அஜ்ஜு கூறிய கதையைக் கேட்டுக்கொண்டே அவனுக்குச் சாதம் ஊட்டினாள்.
சாப்பிட்டதும் அவன் அம்புவுடன் சென்றுவிட ராகவ் அவந்திகாவிடம் “அப்புறம் ஜான்சி ராணி என்னாலதான் இன்னைக்கு அஜ்ஜுக்கு ப்ரைஸ் கெடச்சிருக்கு, எனக்கு எதும் கெடையாதா?” என்று கேட்க அவள் புரியாமல் பார்த்தாள்.
“உனக்கு என்ன வேணும்? அவன் காம்படீசன் போய்ப் பார்ட்டிசிபேட் பண்ணி வின் பண்ணிருக்கான். சார் என்ன பண்ணுனீங்க?”
“அவனை ரெடி பண்ணதே நான்தாங்கிறத மறந்துட்டுப் பேசாத ஜான்சி ராணி”
“சரிடா! இப்போ அதுக்கு என்ன பண்ணலாங்கிற?”
ஒன்றும் சொல்லாமல் அவள் அருகில் அமர்ந்தவன் “ஒரு குட்டி கிஸ், இனாஃப்” என்று விரலால் அளந்து காண்பிக்கவும் அவந்திகா தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.
“அதுலாம் குடுக்க முடியாது, நீ எடத்தக் காலி பண்ணு”
“நீ குடுக்கலனா என்ன?” என்று பேசிக்கொண்டிருந்தவளின் கன்னத்தைப் பிடித்து அழுத்தமாக இதழைப் பதித்தவன் அவளின் கண்கள் விரிந்த காட்சியை மனதாரப் பார்த்துவிட்டு அவளின் கன்னத்தை விடுவித்தான்.
அவந்திகா நடந்ததை உணர்ந்தவள் கண்ணை விரித்து அவனைப் பார்க்க “என்ன ஜான்சி ராணி இன்னொரு கன்னத்துலயும் குடுக்கணுமா?” என்று அவன் அருகில் வர அவனைத் தள்ளிவிட்டு எழுந்தாள்.
“கொன்னுருவேன் உன்னை” என்று மிரட்டிவிட்டு அஜ்ஜுவிடம் சென்றாள்.
“அதத்தானே டெய்லியும் பண்ணிட்டு இருக்க” என்று மனதில் எண்ணியவன் அவனுக்குக் கால் வரவும் அதைப் பேசிவிட்டு உடனே அவந்திகாவிடம் விஷயத்தைக் கூறினான்.
அவனுக்குப் பெங்களூரில் முக்கிய வேலை வந்திருப்பதால் கிளம்ப வேண்டும் என்று சொல்ல அவளும் அரைமனதுடன் பெட்டியை அடுக்கத் தொடங்கினாள்.
கிளம்பும் முன் அம்புவிடம் “அஜ்ஜுவை பாத்துக்கோ அம்பு. அவனுக்கு டெர்ம் எக்ஸாம் முடிஞ்சதும் ரெண்டு பேரும் பெங்களூர் வரணும்” என்று சொல்லிவிட்டு விடை பெற்றாள். ராகவ் அஜ்ஜுவிடம் “குட் பாயா இருக்கணும் சாம்!” என்று சொல்லி அம்புவிடமும் விடை பெற்றான்.
கார் கிளம்பவும் அவர்களுக்கு டாட்டா சொல்லிவிட்டு அஜ்ஜுவும் அம்புவும் வீட்டினுள் சென்றனர்.
பெங்களூரு நெருங்க நெருங்க அவந்திகாவுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. வரும்போது கோபத்துடன் சொல்லிவிட்டு வந்த வார்த்தைகள் அவளைக் கூறு போட அவள் முகம் கலவர வண்ணம் பூசிக்கொண்டது.
“ராகவ்! எனக்கு வீட்டை நெனச்சா ரொம்பப் பயமாயிருக்கே” என்று சொன்னவளை ஆச்சரியமாகப் பார்த்தான் ராகவ்.
“ஜான்சி ராணிக்கே பயமா? கம் ஆன்! நான் உன்கூடதானே இருக்கேன்… அவங்க யாருக்கும் உன் மேல கோவம் இல்ல. அவங்க கோவம் எல்லாம் தியா மேலதான். அவளும் இப்போ வீட்ல இல்ல. சோ நீ எதையும் நெனச்சு வீணா டென்ஷனாகாத”
வீடு வந்ததும் காரைப் பார்க் செய்தவன் அவளைப் பார்க்க அவள் தயக்கத்துடன் கையைப் பிசைந்தபடி நிற்கவும் அவனே அவளது கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
வீட்டினுள் நுழைந்த அவந்திகா அங்கே இருந்தவர்களைப் பார்த்ததும் வாசலிலேயே நின்றுவிட்டாள்.
தாதி “ராகவ்! இந்த வீட்லதான் யாருக்கும் கல்யாணம் இல்லயே! இப்போ எதுக்கு இவளைக் கூட்டிட்டு வந்திருக்க?” என்று கேட்கவும் அவந்திகாவுக்குத் தான் வீட்டை விட்டுக் கிளம்பும் முன் கூறிய வார்த்தைகள் மனதில் வரிசைகட்டியது.
அய்யோ சித்தி! என்று மனதில் சொல்லிக்கொண்டவள் கௌசல்யாவைப் பார்க்க அவரோ அவளைக் கண்டுகொள்ளக் கூட இல்லை.
ஏதோ அவள் செய்த புண்ணியம் பிரியாவும் ராதிகாவும் அவளுடன் இன்முகமாக நடந்துகொண்டனர். அவர்கள் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவள் வருணும் உஷாவும் வருவதைக் கண்டதும் எழுந்தாள்.
உஷாவின் அருகில் சென்று அவளை அணைக்கவும் அவளை விலக்கி நிறுத்திய உஷா யாரும் எதிர்பார்க்காத விதமாக அவள் கன்னத்தில் பளாரென்று அறைய அனைவருக்கும் நடந்ததை நம்ப முடியவில்லை.
அவள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் உஷா “உன் மனசுல என்ன நெனச்சிட்டிருக்க? கோவம் வந்துச்சுனா கண்ணு மண்ணே தெரியாது உனக்கு! அன்னைக்கு நைட் ஃபுல்லா நீ எங்க போனன்னு தெரியாம நாங்கல்லாம் எவ்ளோ துடிச்சுப் போய்ட்டோம் தெரியுமா? நீ போன மறுநாள் காலைல இருந்து கௌசிக்கா சாப்டவே இல்ல. ராகவ் சென்னை போய்ச் சேந்து போன் பண்ணதுக்கு அப்புறம்தான் அவங்க சாப்பாட்டுல கைய வச்சாங்க. கொஞ்சம் எங்களைப் பத்தியும் யோசி ஹனிபி” என்று அவளும் கோவமாகப் பேச ஆரம்பித்துக் கண்கலங்க ஆரம்பித்தாள்.
“சாரி உஷா! நான் சித்தி வீட்டுக்குப் போனா அவங்க திருப்பி இங்கயே வரச் சொல்லிடுவாங்கண்ணு சென்னை போய்ட்டேன். ஐயாம் ரியலி சாரிடி” என்று மறுபடியும் அவளைக் கட்டிக்கொள்ள உஷா கண்களைத் துடைத்தபடியே அவளை அணைத்துக்கொண்டாள்.
எல்லாரையும் சமாதானம் செய்வதற்குள் அவந்திகாவுக்கு நாக்கு உலர்ந்துவிட்டது. ‘இனிமே நீ சண்டை போட்டுட்டு வீட்டை விட்டுப் போவ’ என்று அவளது மனசாட்சி அவளைக் கேலி செய்தது.
கௌசல்யா ராகவிடம் வந்தவர் “ராகவ்! அவளால உங்களுக்கு ரொம்பச் சிரமம் இல்ல, சாரி பா” என்று சொல்ல அவனோ “கௌசிம்மா! ஷி இஸ் மை வைஃப், அவளுக்குச் சில விஷயங்களைப் புரிய வைக்க வேண்டிய கடமை எனக்கும் இருக்கு. அதைச் சரியான நேரத்துல செய்யாததாலதான் இவ்ளோ பிரச்சனையும். இனிமே எந்தப் பிரச்சனையும் வராது. நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க” என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்தினான்.
மொத்தத்தில் அன்று குடும்பம் முழுவதும் குழப்பம் பிரச்சனை எல்லாம் அகன்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
அவந்திகா எப்படியோ அனைவரையும் சமாதானப்படுத்திவிட்டாள். அன்று இரவு உணவுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்புவதற்காகவும் ரகுவரனும் கௌசல்யாவும் கிளம்பினர்.
கிளம்பும் முன் கௌசல்யா அவந்திகாவிடம் “நான் ஒன்னும் என்னோட பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறதுக்காக உன்னை இங்க கல்யாணம் பண்ணிக் குடுக்கல. எப்போவுமே உன்னோட எதிர்காலத்தை மனசுல வச்சு நான் எடுத்திருக்க முடிவு என்னைக்குமே தப்பாகல. ராகவ் ரொம்ப நல்ல பையன். இதுவரைக்கும் எனக்குக் குடுத்த எந்தப் பிராமிஸையும் நிறைவேத்தாம இருந்ததில்ல. நீ உன்னோட கோவத்தால என்னைக்கும் ராகவை இழந்துடாத” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


