மறுநாள் அலுவலகத்தில் கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்து கழுத்தையும் கைகளையும் அப்படியும் இப்படியுமாகத் திருப்பிக்கொண்டிருந்த அவந்திகாவை வித்தியாசமாகப் பார்த்தாள் ரித்திமா.
நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்த உஷாவிடம் சென்று “இந்த ஹனிபிக்கு என்னாச்சு? ஏன் கழுத்தைத் திருப்பிக்கிட்டே தடவுறா. எனி பிராப்ளம்?” என்று கேட்க உஷா அப்போதுதான் அதைக் கவனித்தாள்.
இருவரும் சென்று விசாரிக்க அவந்திகா அழாத குறையாக ராகவைத் திட்ட ஆரம்பித்தாள்.
“எல்லாத்துக்கும் அந்த மைதாமாவுதாண்டி காரணம். என்னோட லைஃப்ல நான் 6 மணிக்கு முன்னாடி எழுந்திருச்சதா சரித்திரமே இல்ல. ஆனா அவன் டெய்லி 4 ஓ க்ளாக் வொர்க் அவுட் பண்ணனும்னு சொல்லி என்னை எழுப்பி விட்டு ஜிம்முக்கு இழுத்துட்டுப் போயிடுறான்”
“நீ தூங்குற மாதிரி நடிச்சிற வேண்டியதுதானே” என்று கூறிய ரித்திமாவைப் பரிதாபமாகப் பார்த்தாள் அவந்திகா.
“அப்பிடிப் பண்ணா மூஞ்சில தண்ணிய ஊத்தி எழுப்புறான். அங்க இருக்கிற எக்யூப்மென்ட்ஸ்லாம் பாத்தாலே எனக்கு மரணபீதிதாண்டி வருது. எல்லாமே ஹெவி வெயிட் தெரியுமா? கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம ஒரு பச்சப்புள்ளைய டெய்லி அத லிஃப்ட் பண்ணு, இதுல ஓடு, அதுல ஓடுனு டார்ச்சர் பண்றான்டி” என்று சொல்ல உச்சுக் கொட்டினர் உஷாவும் ரித்திமாவும்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“எனக்கு ஷோல்டர்லாம் ஒரே பெயினா இருக்கு” என்று சிணுங்கியவளுக்குப் பெயின் ரிலீஃப் ஜெல்லைத் தடவிய உஷா “நீ இதுக்கு ராகவ்கிட்டதான் பேசணும். ஆமா ஏன் திடீர்னு உனக்கு வொர்க் அவுட் பண்ணச் சொல்லிக் குடுக்குறதுல ராகவ்கு இப்பிடி ஒரு ஆர்வம்?” என்று கேள்வி கேட்க அவந்திகா அதற்கு உஷாவை முறைத்தாள்.
“இதுக்குல்லாம் நீதாண்டி காரணம்”
“வாட்? நான் என்னடி பண்ணேன்?” என்று பதிலுக்குக் கேட்டாள் உஷா.
“என்ன பண்ணுனியா? அந்த மைதாமாவுக்கு நான் வச்ச நிக்நேமை ஏன்டி சொன்ன? நீ சொன்ன நேரத்துல அவன் என்ன கோவத்துல இருந்தானோ என்னைப் போட்டு டார்ச்சர் பண்ணுறான்”
அவள் கூறவும் ரித்திமா கிளுக்கிச் சிரிக்க அவந்திகாவின் பார்வை அவளைச் சுட்டது.
“சிரி டியர்! நல்லாச் சிரி. உனக்கும் ஒரு நாள் கல்யாணம் ஆகும். அப்போ தெரியும்” என்று அவளை முறைத்தவண்ணம் கூறினாள்.
பின்னர் “அதைக் கூட விடுங்க! தப்பித் தவறி ஏதாச்சும் தமிழ்ல சொல்லிட்டாப் போதும்! உடனே அதை டிரான்ஸ்லேட் பண்ணுனு வேற சொல்லுறான்… அவனுக்குப் பயந்து இப்போலாம் நான் தமிழ் சாங்க்ஸ் கேக்கிறதக் கூட விட்டுட்டேன்” என்று சோகமாகச் சொல்லி முடித்தாள்.
“நான் தெரியாமத்தான் கேக்கிறேன், ராகவ் கேட்டா கண்டிப்பா நீ சொல்லியே ஆகணும்னு ஏதாச்சும் கட்டாயமா என்ன? முடியாதுனு சொல்ல வேண்டியதுதானே?” என்ற ரித்திமாவைச் சலிப்புடன் பார்த்தாள்.
“இதெல்லாம் நான் ட்ரை பண்ணிப் பாக்காமவா இருந்திருப்பேன் ரித்தி. எல்லாம் சொல்லிப் பாத்தாச்சு. அவன் இருக்கான் பாரு சரியான பிடிவாதக்காரன். அதுவுமில்லாம அவன் ஒரு சிரிப்புச் சிரிப்பான் பாரு. இந்த உலகமே மறந்துடும் எனக்கு. அந்த ஹிப்னடைஸ் பண்ணுற சிரிப்பப் பாத்தா நான் ஃப்ளாட் ஆயிடுறேன்” என்று சொல்லிக் கன்னத்தில் கை வைத்துக்கொண்டாள்.
உஷா ரித்திமாவுக்குக் கண் காட்டிவிட்டு “ஹனிபி! ரொம்ப யோசிக்காத! இன்னைக்கு வொர்க் அவுட் வேண்டானு ராகவ்கிட்டயே டேரக்டா பேசிடு. பிராப்ளம் சால்வ்ட்” என்று அவளின் தோளை அணைத்துக் கூறினாள்.
அவளுக்குத் தலையாட்டியபடியே “அந்த மைதாமாவு நான் சொன்னத ஃபர்ஸ்ட் காது குடுத்துக் கேக்கணுமே” என்று மனதிற்குள் அவனைத் திட்டிக்கொண்டாள்.
பின்னர் தலையை உலுக்கிவிட்டு “சரி சரி! தேவையில்லாத டாபிக் பேசுனது போதும்… வேலையப் பாப்போம்” என்று சொல்லிவிட்டுக் கம்ப்யூட்டரை நோக்க ஆரம்பித்தாள்.
ஆனால் மாலை வீடு திரும்பியவள் கண்டிப்பாக அவனிடம் பேசி இந்த வொர்க் அவுட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டாள்.
இரவு தோட்டத்தில் அமர்ந்திருந்த அவந்திகா “மைதாமாவு இப்போ வொர்க் எல்லாம் முடிச்சிருப்பான்னு நெனைக்கிறேன். கால் பண்ணுவோம்” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டு போனை எடுத்து அவனை அழைத்தாள்.
“ஹலோ ராகவ்”
“என்ன ஜான்சி ராணி? ஒரே வீட்ல இருந்துட்டு கால் பண்ணிப் பேசுற மொத ஆள் நீதான்”
“ஓகே! என்னை அப்புறமாக் கிண்டல் பண்ணிக்கோ. உன்னோட வொர்க் முடிஞ்சு நீ ஃப்ரீயா இருந்தாக் கொஞ்சம் கார்டன் பக்கம் வா. நான் உன்கிட்ட பேசணும்” என்று சொல்லிப் போனை வைக்க ராகவ் “இப்போ என்ன பிராப்ளத்தைக் கொண்டு வரப் போறாளோ” என்று எண்ணிக்கொண்டு கார்டனை நோக்கிச் சென்றான்.
அங்கிருந்த சேரில் அமர்ந்து போனை நோண்டிக்கொண்டிருந்தவள் அவனைப் பார்த்ததும் “வாவ்! சொன்னதும் வந்துட்ட. வெட்டியா இருந்துட்டு வொர்க் இருக்குனு சீன் போட வேண்டியது” என்று கலாய்த்தாள்.
அவளை அப்படியே விட்டால் அவனது பெயர் ராகவ் இல்லையே! அவளைப் பார்த்துச் சிரித்தவன் “யெஸ். அதுமட்டுமில்லாம எனக்கே தெரியும், என்னைப் பாக்காம உன்னால ரொம்ப நேரம் இருக்க முடியாதுனு. அதான் உடனே வந்துட்டேன்” என்று பதிலடி கொடுத்தான்.
“இது உனக்குத் தேவையா?” என்று கலாய்த்த மனசாட்சியை “எனக்குத் தெரியும் நீ மூடு” என்று திட்டியவள் “ஓகே! நான் சொன்னதுக்கும் நீ சொன்னதுக்கும் சரியாப் போச்சு.. இப்போ பேசுவோமா” என்று கேட்க ராகவ் அமர்ந்தான்.
அவனிடமிருந்து நகர்ந்து உட்காரச் சென்றவளைப் புருவம் உயர்த்தி அவன் பார்த்த பார்வையில் மறுபடியும் அங்கேயே அமர்ந்தாள்.
பின்னர் “ராகவ்! இனிமே என்னால டெய்லி மார்னிங் வொர்க் அவுட் பண்ணமுடியாது” என்று சொல்ல ராகவோ அதைப் பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதை அவனது பார்வையே அவளுக்குத் தெரிவித்தது.
“எனக்குக் கை கால்லாம் வலிக்குதுடா” என்று முகத்தைச் சுருக்கிச் சொல்லவும் அவன் சரியென்று தலையசைத்தான்.
பின்னர் “ஓகே! அப்போ டாட் கூடச் சேந்து யோகா பண்ணு” என்று சொல்லிவிட்டுக் கையைத் தலைக்குப் பின்னே வைத்துக்கொண்டு சாய்ந்து அமர்ந்தவனைப் பார்த்துக் கொலைவெறியானாள் அவந்திகா.
ஆனால் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் “ப்ளீஸ் ராகவ்! எனக்கு யோகாவும் வேண்டாம்! நான் நல்லாதானே இருக்கேன், ப்ளீஸ்” என்று குழந்தை போல் அடம்பிடித்தவளைப் பார்க்க மனதிற்கே இதமாக இருந்தது ராகவிற்கு.
“சரி… அப்போ என்கிட்ட சாரி கேளு” என்று சொல்லவும் அவன்புறமாகத் திரும்பி உட்கார்ந்தாள் அவந்திகா.
“எதுக்கு சாரி கேக்கணும்?” என்று அப்பாவி முகத்துடன் கேட்க ராகவ் அவளது கன்னங்களைக் கைகளால் தாங்கிக்கொண்டு “அச்சோ! குழந்தைக்கு எதுவுமே தெரியாது போல” என்று கொஞ்சினான்.
பின்னர் “எதுக்குச் சாரினா கேக்கிற ஜான்சி ராணி?” என்று சொல்லிக் கன்னத்தை விட்டவன் “தேவையில்லாம எனக்கு நிக் நேம் வச்சதுக்குத்தான்” என்று அவளை முறைத்தான்.
அவளோ மனதிற்குள் “ஏன்டா ஒரு நிக்நேம் வச்சதுக்காகவா இந்த இம்சை பண்ணுன நீ? இன் ஃபேக்ட் அது ரொம்பப் பொருத்தமாதான் இருந்துச்சு” என்று மனதிற்குள்ளே பேசிக்கொண்டாள்.
பின்னர் முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு “சாரி ராகவ்” என்று கூறியவளைப் பார்த்தவனைக் கொஞ்சம் சீண்டிப் பார்த்தால் என்னவென்று தோன்ற அவள்புறமாகத் திரும்பி அமர்ந்தான்.
“இப்பிடி சாரி சொன்னா என்ன அர்த்தம்? உன் குரல்ல உண்மையான வருத்தமே இல்லயே”
“ஐயோ நெஜமாவே நான் மனசாரச் சொல்லுறேன் மேன்” என்று சொன்னாலும் விட மனமில்லை அவனுக்கு.
“ஓகே! அப்போ நான் சொல்லுறத அப்பிடியே சொல்லி மன்னிப்புக் கேக்கணும்” என்று சொல்லவும் சரியென்று வேகமாகத் தலையாட்டினாள் அவந்திகா.
“ராகவ் மேரி பதி பரமேஸ்வர் ஐயாம் ரியலி சாரி ஃபார் காலிங் யூ பை அ நிக்நேம்” என்று சொல்லிவிட்டு “இதை அப்பிடியே மனசாரச் சொல்லு பாப்போம்” என்றதும் அவந்திகா கடுப்பாகிவிட்டாள்.
“ஹலோ எக்ஸ்கியூஸ்மீ! து மேரா பதி ஹூ! பரமேஸ்வர் நஹி” என்று ஆவேசமாக மறுக்கவும் ராகவ் “இஸிட்!! அப்போ டுமாரோ மார்னிங் என்கூட ஜிம்முக்கு வர ரெடியாகிக்கோ ஜான்சி ராணி” என்று செக் வைக்கவும் என்ன செய்யவென்று தெரியாமல் விழித்தாள்.
பின்னர் தயக்கத்துடன் மெதுவாக “ராகவ்! மேரி பதி பரமேஸ்வர்! ஐயாம் ரியலி சாரி ஃபார் காலிங் யூ பை அ நிக்நேம்… ஐ வோண்ட் ரிபீட் இட் அகெய்ன்” என்று சொல்லி முடிக்க ராகவ் அவளைக் கேலியாகப் பார்த்துக்கொண்டே “ஓகே நானும் உன்னை மன்னிச்சிட்டேன் மை டியர் வைஃப்” என்று சொல்லிக் கண் சிமிட்டிவிட்டு உள்ளே சென்றான்.
செல்லும் முன் “வொர்க் அவுட், யோகால இருந்து மட்டும்தான் நீ ஃப்ரீ ஆகிருக்க. பட் டிரான்ஸ்லேஷன் பனிஷ்மெண்ட்டை எந்தக் காரணத்துக்காகவும் நான் நிறுத்த மாட்டேன் ஜான்சி ராணி” என்று சொல்லிவிட்டு ரிலாக்ஸாகச் செல்லவும் அவந்திகாவுக்கு ஐயோவென்று இருந்தது.
அவன் சென்றதும் “பெருமாளே! இவனுக்குக் கொஞ்சம் நல்ல புத்தியக் குடுக்க மாட்டியா?” என்று சொன்னவள் பதற்றத்தோடு திரும்பி அவன் சென்றுவிட்டானா என்று பார்த்தாள்..(இல்லைனா இதையும் டிரான்ஸ்லேட் பண்ணச் சொல்லுவானே… அதுக்குத்தான்)
மறுநாள் ராகவ் எதிர்பார்த்திருந்த அந்த நாள் வந்துவிட்டது…..
விஹான் டெலிகாம் பிரைவெட் லிமிடெட்டின் ஆனுவல் ஜெனரல் மீட்டிங் ஆரம்பித்தது. வழக்கமாகக் கம்பெனியின் நிதிநிலை, கணக்கு வழக்குகள் பற்றி விவாதித்த பிறகுதான் மேனேஜிங் டைரக்டர் பதவி விலகுவதற்கான தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதன்படி ராகவ் கபூர் இனி விஹான் டெலிகாமின் டைரக்டர் மட்டும்தான் என்று வழிமொழியப்பட்டது.
அதன்பின் மேனேஜிங் டைரக்டராகக் கிஷோர் கபூரை ராகவ் வழிமொழியப் பெரும்பான்மை பங்குதாரர்கள் அதை ஏற்றுக்கொண்டனர்.
அதன்படி கிஷோர் விஹான் டெலிகாமின் எம்.டியாகப் பதவியேற்றான்.
ஏ.ஜி.எம் முடிந்தபிறகுதான் வீணாவுக்கு நிம்மதியாக இருந்தது. தன் கணவர் மறைந்த பிறகு என்னதான் கணவனின் சகோதரர்கள் கிஷோரைத் தங்களின் மகன்களைப் போலப் பார்த்துக் கொண்டாலும் அவருக்கு அதில் என்றுமே அதிருப்திதான்.
ஆனால் இன்று ராகவ் சந்தோஷமாகக் கிஷோரின் பெயரைக் கூறியபோது முதல் முறையாகத் தன் மீதே கோபப்பட்டார் வீணா. ஒரு சின்னப் பையனுக்கு இருக்கும் பெருந்தன்மை தன்னிடம் இல்லையே என்று வருந்தியவர் அதற்குப் பின் ராகவிடம் சிரித்த முகமாகவே இருந்தார்.
ஆனால் கிஷோர், பிந்து, நேஹா மட்டும் அவரை எப்போதும் போல நம்பவில்லை. ஷேர்ஸ் கை மாறியதால் வந்த பாசம் என்று நேஹா குத்திக் காட்டப் பிரியா அவளைக் கண்டித்தார். வீணாவுக்கு மகள் கூறியதை நினைத்துச் சிறிது வருத்தம் இருந்தாலும் தன்னுடைய பிள்ளைகள் தன்னைப் போல் பணத்தைப் பிரதானமாகக் கருதாதது குறித்து அவர் சந்தோஷமே பட்டார்.
இவ்வாறு எல்லாமே நன்றாக நடந்துகொண்டிருக்க ராகவ் விஹான் அட்வர்டைசிங்கில் தன்னுடைய ஆபிஸை மாற்றினான். காரில் சென்று இறங்கியதும் நீண்ட நாள் கழித்து அப்போதுதான் அங்கே செல்வதால் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டவன் அந்த மூன்று மாடி கட்டிடத்தைப் பார்த்து ஒரு முத்தத்தைப் பரிசாக அளித்துவிட்டு உள்ளே நுழைந்தான்.
வரும்போதே அனைத்து ஊழியர்களின் வாழ்த்துகளையும் புன்னகை தவழ்ந்த முகத்துடன் ஏற்றுக் கொண்டவன் மீட்டிங் ஹாலுக்கு அனைவரையும் வரச் சொல்லிவிட்டு அவனும் சென்றான்.
சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தனர் உஷா, ரித்திமா மற்றும் அவந்திகா. வந்தவர்கள் அவர்களுக்கான இருக்கையில் அமர ராகவ் இன்னும் கதவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“இவன் யாருக்குடி வெயிட் பண்றான்?” என்று ரித்திமாவின் காதைக் கடித்தாள் அவந்திகா.
“ஜி.எம் வர்றதுக்காக”
“ஓ! பரவால்லயே! ஜி.எம்க்குல்லாம் மரியாதை குடுக்குறானே! கொஞ்சம் நல்ல பையன்தான் போல” என்ற அவந்திகாவை முறைத்தாள் உஷா.
இனிமே அவள் சத்தம் போடுவாளா என்ன?
கதவு திறந்ததும் வந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் ராகவ் உற்சாகத்துடன் சென்று “ஹலோ லேரன்” என்று கைகுலுக்கியவனை அவள் அணைத்ததும் அவந்திகாவுக்கு உள்ளே கொதிக்க ஆரம்பித்தது.
“ஹவ் ஆர் யூ ராகவ்? நீ ஒரேயடியா எங்களை மறந்துட்டல்ல” என்று அவள் பேசவும் “கொஞ்சம் பிஸி” என்று சொல்லிக்கொண்டே அவளுடன் நடந்து வந்தான்.
அந்தப் பெண் வந்ததும் ஊழியர்கள் அனைவருமே அவளை லேரன் என்றே அழைக்க இது கார்ப்பரேட் கல்ச்சர் என்று மனதில் குறித்துக்கொண்டாள் அவந்திகா.
பின்னர் ராகவ் இவர்கள் மூவரிடமும் “மீட் மிஸ். லாரா சர்மா, அவர் ஜெனரல் மேனேஜர் அண்ட் மை க்ளோஸ் ஃப்ரெண்ட்” என்று அறிமுகப்படுத்தி வைத்தான்.
அவந்திகா உஷாவின் காதில் “ஏன்டி லாராங்கிற நேமே சூப்பரா இருக்கு… அதை ஏன் இவங்க இப்பிடிக் கொலை பண்ணி வச்சிருக்காங்க?” என்று கேட்க உஷா “அடியே! வேலைய மட்டும் பாருடி!” என்று சொல்ல அவந்திகா அமைதியானாள்.
மற்ற இருவரும் சாதாரணமாக இருக்க அவந்திகா மட்டும் உம்மென்று இருந்ததைப் பார்த்தவன் “இவளுக்கு என்னாச்சு” என்று யோசித்தவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வருணும் வந்துவிட மீட்டிங்கை ஆரம்பித்தான்.
விஹான் டெலிகாம் கான்ட்ராக்ட் பற்றி விளக்கியவன் நியூ லான்ச் பற்றிய விவரத்தைக் கூறி அந்த ஈவன்ட்டை நடத்த இருக்கும் மூவரையும் அறிமுகப்படுத்தினான்.
அவந்திகா எழுந்தவள் அனைவரையும் பார்த்து “ஹலோ எவ்ரிஒன்! ஐயாம் அவந்திகா ரவி” என்று சொல்லிவிட்டுப் பேச ஆரம்பிக்க வருண் திரும்பி ராகவைப் பார்த்தான்.
“எனக்கு இதுலாம் பழகிப் போயிடுச்சு பய்யா” என்று கேலியாகக் கூறினான் ராகவ்.
“ஆக்சுவலி எனக்குச் சர்வீஸ் டிப்பார்ட்மென்ட் ஸ்டாஃப்ஸோட ஹெல்ப் எனக்குக் கெடச்சா நான் கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவேன்” என்று முடிக்கவும் அனைவரும் மகிழ்ச்சியுடன் தலையாட்டினர்.
அடுத்து எழுந்த ரித்திமா தன்னுடைய டிசைன்ஸைக் காட்டி அவர்களுடைய ஒப்புதலைப் பெற்றுவிட்டு அமர்ந்தாள்.
மூன்றாவதாக எழுந்த உஷா “குட் மார்னிங் எவ்ரிபடி! ஐயாம் பிரதியுஷா சிங்” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள ராகவ் வருணைப் பார்த்து “உங்களுக்குமா?” என்று சிரிக்க வருணும் சிரித்தே சமாளித்தான்.
மீட்டிங் முடியும் வரை அவந்திகா ராகவைக் கண்டுகொள்ளவே இல்லை. அதற்குப் பின்னும் அவன் பேச வரும்போது அவனைத் தவிர்த்துவிட்டு வருணிடம் பேசியவள் அவனிடம் பேசி முடிந்ததும் லேரனின் பின் சென்றாள். அவளிடம் சர்வீஸ் டிப்பார்ட்மென்ட் ஸ்டாஃப்ஸிடம் பேச விரும்புவதாகக் கூறிச் சென்றுவிட்டாள்.
அவளின் பாராமுகம் அவனை ஏதோ செய்ய வேறு வேலையில் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. சிகையைக் கோதிக்கொண்டவன் “திஸ் கேர்ள் இஸ் ட்ரைவிங் மீ க்ரேஸி” என்று சொல்லித் தலையை உலுக்கிக்கொண்டான்…
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


