வெளியே வேடிக்கை பார்த்தபடியே வந்து கொண்டிருந்த அவந்திகா ராகவைக் கவனிக்கத் தவறவில்லை. காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் மூலமாக யாருடனோ பேசிக்கொண்டு வந்தவனின் உரையாடல் பெரும்பாலும் பஞ்சாபியிலேயே இருந்ததால் அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் அவனின் பேச்சில் அவ்வப்போது வந்து சென்ற வருண் பய்யா, பாபிஜி முதலிய வார்த்தைகளை வைத்து அவன் திருமணம் சம்பந்தமாக பேசிக்கொண்டு வருகிறான் என்பதைப் புரிந்துகொண்டாள்.
திடீரென்று அவள் புறம் திரும்பியவன் இன்னும் எவ்வளவு தூரம்? என்று சைகையில் கேட்க அவள் அரை கிலோ மீட்டர் என்று சைகையிலேயே பதில் சொன்னாள்.
அரை மணிநேரப் பயணத்திற்குப் பிறகு கார் ‘கோவிந்த் ஃப்ளவர் டீலர்ஸ்” என்ற கண்ணாடிக் கதவிட்ட கட்டிடத்தின் எதிரில் நின்றது. காரிலிருந்து இறங்கிய அவந்திகா கார் கதவின் கண்ணாடியைத் தட்டவும் அதைக் கீழே இறக்கியவாறு என்ன என்று கேட்ட ராகவிடம் அவள் ஏதோ கூறுவதைத் தூரத்திலிருந்து அவர்களைக் கண்காணித்துக்கொண்டிருந்த வீர் பார்த்துவிட்டான். உடனே தகவலை விவேக்கிற்கு அனுப்ப அவனோ அவர்களை விடாது கண்காணிக்குமாறும் முடிந்தால் அவர்கள் சேர்ந்து இருக்கும் போது புகைப்படம் எடுக்குமாறும் கட்டளையிட்டான்.
காரிலிருந்து இறங்கிய ராகவ் அவந்திகாவிடம், “லிஸன் ஜான்சி ராணி! எனக்குப் பெர்ஃபெக்ஷன் ரொம்ப முக்கியம். எவ்வளவு டைம் ஆனாலும் சரி! நான் சொன்ன டைப் ஃப்ளவர் வாங்காம நம்ம ஜெய்ப்பூரைத் தாண்டப் போறது இல்ல! மைண்ட் இட்!” என்று சொல்லவும் அவந்திகாவிற்கு அவனது எவ்வளவு நேரமானாலும் என்ற வார்த்தையில் காதில் புகை வந்தது.
சிறிது நேரத்திற்கு முன்னர்தான் அவளுடைய சித்தி கௌசல்யா போனில் அழைத்து இன்று தானும் அவளின் சித்தப்பா ரகுவரனும் சந்தன்பூருக்கு வருவதாகக் கூறினார். இப்போது இவனுடன் இங்கு வந்த விவரம் மட்டும் தெரிந்தால் அவரைச் சமாளிக்க அவளுக்கு இரண்டு ஆள் பலம் வேண்டும். முடிந்தளவு சீக்கிரமாகக் கிளம்ப வேண்டும் என்று அவசரப்படுபவளிடம் போய் எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை என்று கூறினால் அவள் வேறு எப்படிப் பார்ப்பாள்?
“நான் ஆல்ரெடி இந்த வேர்ஹவுஸ் ஓனர் கிட்ட பேசிட்டேன். நீங்க சொன்ன வெரைட்டி இருக்குனு அவர் எனக்குப் பிக்சர் கூட அனுப்பிருக்காரு. சோ டோண்ட் வொர்ரி” என்று சொல்லிக்கொண்டே சாலையைக் கடக்க முற்படுகையில் தூரத்தில் வந்த லாரியைக் கவனிக்கவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவளை இடிப்பது போல வந்த அந்த லாரியைக் கண்ட ராகவ், “ஏய்!” என்ற சத்தத்துடன் ஓடிச் சென்று அவளது இடையில் கை வைத்துத் தூக்கி சாலையோரத்திற்குக் கொண்டு வந்தான். லாரி வேகமாக வந்ததைக் கண்டு அவந்திகா கண்ணை மூடிக்கொண்டவள் அடுத்த நொடி ராகவின் அணைப்பில் இருந்தாள்.

ஆனால் அவந்திகாவிற்கு இதெல்லாம் புரியச் சிறிது நேரம் பிடித்தது. ராகவின் “ஆர் யூ ஓகே?” வில் நிகழ்காலத்திற்கு வந்தவள் அவன் மார்பில் இவ்வளவு நேரம் பயத்தில் புதைந்திருந்ததையும் அவனின் கரங்கள் தன்னுடைய இடையைச் சுற்றி வளைத்து இருப்பதையும் கவனித்தாள்.
இதே காட்சியைத் தூரத்திலிருந்து பார்த்த வீர் அவர்களின் நெருக்கத்தைத் தன்னுடைய வேலைக்குப் பயன்படுத்திக் கொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதியவன் அந்த வாய்ப்பை விடாமல் அவர்களைப் படம் பிடித்தான். கையோடு அந்தப் படத்தை விவேக்கிற்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியவன் இன்னும் அவர்களைப் பின்தொடர்வதை நிறுத்தாமல் மறைந்திருந்து அவர்களைக் கவனித்தான்.
இது ஏதும் அறியாத அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க போன் ரிங்டோன் சத்தம் கேட்டதும் ராகவ் அவள் இடையிலிருந்த கையை எடுத்துவிட்டு எதிர்ப்புறமாகத் திரும்பிப் பின்னந்தலையைத் தடவித் தன்னைச் சமாளித்துக்கொண்டான். மனதிற்குள்ளேயே “என்ன கண்ணுடா! ஜான்சி ராணிக்கு நாக்கு மட்டும் இல்ல கண்ணும் ரொம்ப ஷார்ப்” என்று சொல்லிக்கொண்டான்.
அவந்திகாவும் அவசர அவசரமாகக் காலை அட்டெண்ட் செய்து, “ஹலோ, தாதி….. நஹி வோ…. ஜி தாதி” என்று பேசி முடித்துவிட்டு ராகவைப் பார்த்து, “தாதி பேசுனாங்க. சங்கீத் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வச்சுக்கலாம்னு வருண் அம்மா கிட்ட ஒரு பண்டிதர் டேட் ஃபிக்ஸ் பண்ணிக் குடுத்துட்டாராம். சோ நீங்க பொறுமையா ஃப்ளவர்ஸ் செலக்ட் பண்ணலாம்னு சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு கவனமாகச் சாலையைக் கடக்கச் சென்றாள்.
“ஹே! வெயிட்” என்றபடி அவள் அருகில் வந்தவன் அவள் கையைப் பிடித்தபடி சாலையைக் கடந்தான்.
“நமஸ்கார் பாய்ஷா!” என்றபடி உள்ளே சென்றவள் தரவாரியாகப் பதப்படுத்தப்பட்டிருந்த மலர்களைப் பார்வையிட்டபடியே அவன் சொன்ன மலர்களைத் தேர்வு செய்யுமாறு ராகவிற்குக் கண் காட்ட அவனும் ஒவ்வொரு முறையும் ஏதாவது குறை சொல்லி மலர்களைக் கழித்துக்கொண்டே வந்தான்.
அவள் எரிச்சலை வெளிப்படையாக முகத்தில் காட்ட ராகவோ மனதில் “கோவம் வருதா ஜான்சிராணி? இதெல்லாம் நீ என்னைக் கூட்டிட்டு வர்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். சோ சேட்! இப்போ இரிட்டேட் ஆகி என்ன பண்ணுறது?” என்று சொல்லிக்கொண்டான் கேலியாக.
அவள் ஒவ்வொரு மலர் வகையாகக் கைகாட்ட அவனும் சளைக்காமல் அதை வேண்டாமென்று ஒதுக்கிக்கொண்டே வந்தான். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அவந்திகா, “ஃப்ளவர்ஸ் அப்புறமா செலக்ட் பண்ணலாம். இப்போ என்னோட பையனுக்கு என்ன நேம் வைக்கலாம்னு கொஞ்சம் சொல்லுங்க” என்று கேட்கவும் ராகவ் இவளுக்கு என்ன பைத்தியமா என்று மனதில் நினைத்தபடிக் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்.
“எனக்குப் பைத்தியம் ஒன்னும் பிடிக்கல மிஸ்டர் ராகவ். நீங்க செலக்ட் பண்ணி முடிக்கிறதுக்குள்ள உஷா மேரேஜூம் முடிஞ்சு எனக்கும் மேரேஜ் ஆகி ஒரு பையனே பொறந்துடுவான் போல” என்று பல்லைக் கடித்தபடியே கூற அவளது பதிலைக் கேட்டவன் அடக்க முடியாமல் அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டான்.
அதில் இன்னும் கடுப்பானவள், “ஓகே ஓகே! இது ஒண்ணும் அவ்வளவு பெரிய காமெடி இல்ல… ஸ்டாப் இட் மேன்” என்று சீறவும் ராகவிற்கு இன்னும் சிரிப்பு அதிகமாகவே அவளால் மெய்யாகவே அவனைச் சமாளிக்க முடியவில்லை.
சத்தமாகத் தமிழில், “பெருமாளே! என்னைப் பாத்தா உங்களுக்குப் பாவமா இல்லயா? இந்த மைதா மாவு ஃப்ளவர்ஸ் செலக்ட் பண்ணாம என்ன இரிட்டேட் பண்ணிட்டே இருக்கான். இன்னும் கொஞ்ச நேரத்துல சித்தி சித்தப்பா வேற வந்துடுவாங்க. நான் மட்டும் அந்த டைம்ல அங்க இல்லனா சித்தி என்ன பிரியாணி பண்ணிடுவாங்க.. ப்ளீஸ் இவனக் கொஞ்சம் சரியாக்குங்க” என்று மேலே நோக்கியவாறு தன் குல தெய்வத்தை வேண்ட அவளின் தமிழைக் கேட்டவன், “நீ எப்படித் தமிழ்ல பேசுற?” என்று கேட்க அவள் அவனை வினோதமாகப் பார்த்தாள்.
“கோவம் வந்தா நான் என்னோட தாய்மொழியில பேச ஆரம்பிச்சிருவேன். ஏன் நான் சொன்னது எதும் உங்களுக்குப் புரிஞ்சுதா?” என்று ஐயத்துடன் அவனைப் பார்க்க அவன், “புரியல… பட் நீ கன்னடிகாதானே?” என்று கேட்டான்.
அவனுக்குப் புரியவில்லை என்றதும் நிம்மதியானவள் “நோ! ஐயாம் தமிலியன்!” என்று பெருமையாகக் கூறினாள்.
“இஸிட்? பட் நீ கன்னடால பேசுனியே?” என்று மறுபடியும் கேட்கவும் அவள், “ஏன் தமிழ்நாட்டுகாரங்க கன்னடா பேசக் கூடாதா? யூ நோ ஒன் திங்! என்னோட அம்மா மலையாளி, அப்பா தமிழ். சித்தி சித்தப்பா கூட இருக்கிறதால ஐ நோ கன்னடா. அண்ட் உஷா கூடவே இருந்ததால ஐ கேன் ஸ்பீக் ஹிந்தி அண்ட் ராஜஸ்தானி டூ…. எனி மோர் கொஸ்டீன்ஸ்?” என்று கேட்க அவன் மறுப்பாகத் தலையசைத்தான்.
ஒரு வழியாக அவன் மலரைத் தேர்ந்தெடுத்து முடித்த போது நேரம் மாலை நான்கைத் தாண்டியிருந்தது. அவன் தேர்வு செய்து முடிப்பதற்க்குள் அவந்திகா இரண்டு முறை பக்கத்திலிருந்த தாபாவில் சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டாளென்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அவன் எவ்வளவு நேரம் செலவிட்டிருப்பான் என்று…
அவன் தேர்வு செய்து முடித்ததும் மேனேஜரிடம் முகவரி மற்ற விபரங்களைக் கொடுத்துவிட்டு இருவரும் புறப்பட்டனர்.
அவந்திகா எப்படியும் சித்தி வர்றதுக்கு முன்னாடி போயிடலாம் என்று நம்பிக்கையுடன் காரில் ஏறினாள்.
அவள் நம்பிக்கையைக் குலைக்கச் செய்யவே திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. முதலில் ராகவ் அதைப் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் தூரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரிக்கவே அவனால் காரை ஓட்ட இயலவில்லை.
திடீரென்று கார் சக்கரம் எதிலேயோ புதைபட கார் நின்றது. வெளியே வந்தவன் நனைந்தபடியே பார்க்கச் சக்கரம் சேற்றில் புதைந்திருந்தது. கோபத்துடன் அவந்திகாவைப் பார்க்க அவள் தலையைக் குனிந்தாள்.
ஹைவேயில் போகலாம் என்று சொன்னவனை ஷார்ட்கட் என்று சொல்லி இந்த வழியில் வரச் சொன்னவளே அவள் தான். அவர்கள் இப்போது நின்றுகொண்டிருப்பது வீர்ப்பூர் என்ற கிராமம்.
என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றவர்களை அந்த நேரத்திலும் தொடர்ந்து வந்திருந்தான் வீர்.
“ஹோ ஷிட்” என்று காரை உதைத்தான் ராகவ். அவனுக்கு எப்படி அந்தச் சேற்றிலிருந்து சக்கரத்தை அகற்றுவது என்றே புரியவில்லை. நகத்தைக் கடித்துக்கொண்டு மழையில் நனைந்துகொண்டே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவந்திகாவை முறைத்தான்.
“ஹலோ இப்போ எதுக்கு இப்படி முறைக்கிறீங்க? நான் சீக்கிரம் போகலாம்னுதான் இந்த வழில போகச் சொன்னேன். எனக்கு என்ன மந்திரமா தெரியும்? தெரிஞ்சுருந்தா கண்டிப்பா மழை வருமானு கண்டுபிடிச்சிருப்பேன். இப்போ நம்ம சந்தன்பூர் போக முடியாதா?” என்று கவலையாகக் கேட்டாள்.
“வாட்! இந்தக் காரோட கண்டிஷன பாத்துமா நீ இப்பிடி கேக்குற? நான் ஒன்னும் ஹனுமான் இல்ல, உன்னக் கைல தூக்கிட்டு வானத்துல பறந்து சந்தன்பூர் போறதுக்கு. யூ நோ வாட்? நீ பொறக்குறப்போவே பேட் லக்க கூடவே வாங்கிட்டுப் பொறந்தியா என்ன? இந்தப் பாலைவனத்துல கூட அடைமழை பேஞ்சு நாம போகுறது தடையாகுதுனா உன் பேட்லக் எவ்வளவு பவர்ஃபுல்னு பாத்துக்கோ” என்று அவளை அந்த நிலையிலும் கடுப்பாக்கினான்.
அதை மறுத்த அவந்திகா, “சே சே நான் பொறக்குறப்போ பேட் லக்கோட பொறக்கல. ஆக்சுவலி இன்னைக்கு மதியம் ஜெய்ப்பூர் வர்றப்போ பேட் லக்க என்கூடவே கூட்டிட்டு வந்துட்டேன். சரியான கறுப்புப் பூனை” என்று அவனைப் பதிலுக்கு வம்பிழுத்தாள்.
“திஸ் இஸ் நாட் த டைம் ஃபார் ஃபைட். வீ ஹேவ் டு ஃபைண்ட் அவுட் அ ஷெல்டர் டு ஸ்டே டுநைட்” என்று அவன் கூறவும் அவளுக்கும் முதலில் தங்குமிடத்தைத் தேடுவதே சரியென்று பட்டது.
அதை யோசித்தபடியே சுற்றி முற்றிப் பார்த்தவள் அவர்கள் கார் நின்ற இடத்துக்குப் பக்கத்திலிருந்த ஒரு பெரிய வீட்டைக் காட்டி அவனையும் அழைத்துச் சென்றாள். காரைப் பூட்டிவிட்டு அவளைப் பின்தொடர்ந்தவன் அவள் கதவைத் தட்டி அங்கிருந்து ஒரு வயதான பெண்மணி வரவும் கொஞ்சம் படபடப்புடன் நின்றிருந்தான். இந்நேரத்தில் ஒரு கிராமத்துப் பெண்மணி தன்னை ஒரு சிறு பெண்ணுடன் பார்த்தால் என்ன நினைப்பார் என்ற நினைவால் வந்த தயக்கமே அது.
அதே படபடப்புடன் அவந்திகாவைப் பார்க்க அவளுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை போலும். அவனது பிஸினஸ்மேன் மூளை இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைச் சொல்லவும் அவனும் அதைப் பின்பற்றத் தயாரானான். அதன் முதல் படி அந்தப் பெண்மணி வந்ததும் அவரை அவந்திகாவுடன் பேச விடக் கூடாது. அவள் பேசினால் இன்று இரவு முழுவதும் இந்தக் கொட்டுகிற மழையில் காரிலேயே கழிக்க வேண்டியதுதான் என்று அவனை எச்சரித்தது அவனது மனசாட்சி.
அந்தப் பெண்மணி அருகில் வரவும் அவசரமாக அவந்திகாவின் தோளில் கை போட்டு அவளை அவனுடன் அணைத்தவன் தப்பித் தவறி கூட அவள் புறம் திரும்பவில்லை. அப்படித் திரும்பியிருந்தால் அந்த மழைநேரத்திலும் அவள் கண்ணிலிருந்து புறப்பட்ட அக்னியால் அவன் சாம்பலாயிருப்பான்.
வந்தவரிடம் தன்னுடைய கார் ரிப்பேர் ஆனதைத் தெரிவித்தவன் தாங்கள் இரவில் இங்கு தங்க முடியுமா என்று கேட்க அவன் நினைத்தவாறே அவர் கண்ணில் கேள்வியுடன் அவந்திகாவைப் பார்க்க அவள் பேசுவதற்குள் முந்திக்கொண்டவன், “யே மேரி பீவி அவந்திகா. பீவி நமஸ்தே போலோ (இவ என்னோட மனைவி அவந்திகா, அவங்களுக்கு வணக்கம் சொல்லுமா)” என்று அவளைப் பார்க்க
அவள் அவனைக் கடித்துத் தின்பதற்கு ரெடியாகிக்கொண்டே, “நமஸ்தே தாதி” என்று பல்லைக் கடித்தபடியே கூறவும் அந்தப் பெண்மணி அவர்கள் ஜோடிப் பொருத்தத்தைப் பாராட்டியபடியே வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
வீட்டினரிடம் அறிமுகப்படுத்திவிட்டு அவர்களுக்கு வேறு உடைகள் கொடுக்குமாறு தன்னுடைய மருமகளைக் கூறச் சிறிது நேரத்தில் அவர் தன்னுடைய மகன், மகளுடைய உடைகளைக் கொடுத்து அவர்களை அணிந்து வருமாறு விருந்தினர் அறையின் வாயிலில் விட்டுவிட்டுச் சென்றார்.
அவர் சென்றதுதான் தாமதம். உள்ளே நுழைந்தவனைச் சரமாரியாக அங்கிருந்த தலையணையால் அடிக்கத் தொடங்கினாள் அவந்திகா.
“ஹே ஆர் யூ கிரேஸி? டோண்ட் பீட் மீ. அம்மா தாயே. ப்ளீஸ்” என்று சமாளிக்க முயற்சித்தவன் அவள் கையிலிருந்த தலையணையைப் பிடுங்கி எறிய அவள் இப்போது கையால் அடிக்க ஆரம்பித்தாள்.
“ஹவ் டேர் யூ டு சே லைக் தட்? யூ இடியட். மைதாமாவு” என்று அடித்தவளின் இரு கைகளையும் முதுகுக்குப் பின்னால் வளைத்தவன், “ஒழுங்கா சொன்னா கேக்குறதுங்கிறதே உன்னோட டிக்ஸ்னரில கெடையாது போல. நான் சொல்லப் போறத காது குடுத்து கேளு” என்று கூறியவனைப் பார்த்த அவந்திகா “கேக்க மாட்டேன் மேன். என்ன பண்ணுவ?” என்று கடுப்புடன் முறைத்தாள்.
“ஓகே! அப்போ நைட் ஃபுல்லா இப்பிடியே நிக்கணும்னா ஐ டோண்ட் ஹேவ் எனி ப்ராப்ளம். உனக்கும் என்ன இப்பிடி குளோஸ் அப்ல பாக்கணும்னா நான் நோ சொல்ல மாட்டேன்” என்று ஹஸ்கி வாய்ஸில் கூற அப்போதுதான் அவந்திகா அவர்கள் நின்ற கோலத்தைக் கவனித்தாள்.
அவளுடைய கைகளை முதுகுக்குப் பின்னால் வளைத்துப் பிடித்தவனின் மார்புக்கு நேராக அவளது முகம் இருக்க (பொண்ணு கொஞ்சம் ஹைட் கம்மி) அவனது இதயத்துடிப்பு கேட்கும் அளவிற்கு இருவரும் நெருக்கமாக நின்றிருந்தனர்.

ராகவிற்கு இந்த மாதிரி இதற்கு முன் எந்தப் பெண்ணுடனும் இவ்வளவு நெருக்கத்தில் இருந்தது நினைவில் இல்லை. மழையில் நனைந்து எவ்வித செயற்கைப் பூச்சுமின்றி மின்னிய அவளது முகமும் இயற்கையிலேயே சிவந்த சின்ன இதழ்களும் அவனை ஏதோ செய்ய முகத்தை அவள் முகம் அருகில் கொண்டு சென்றவனின் அறிவு, “ராகவ் என்னடா பண்ணிட்டு இருக்க? இந்த ஜான்சி ராணி உன்னைக் கொல்லுற அளவுக்குக் கொலைவெறில இருக்கா. இந்த நேரத்துல உனக்கு ஏன்டா இப்பிடிலாம் தோணுது?” என்று அவனை எச்சரிக்க அவளை விட்டு விலகியவன் அவள் புறம் திரும்பாமலே அவன் நடந்துகொண்டதற்கான காரணத்தைக் கூற அவந்திகா அமைதியானாள்.
“என்னதான் நீங்க காரணம் சொன்னாலும் என்னோட கன்சென்ட் இல்லாம என்னை எப்பிடி நீங்க உங்களோட வைஃப்னு சொல்லலாம் மிஸ்டர் கபூர்?” என்று கேட்கவும் கைகளைத் தலைக்கு மேலுயர்த்திக் கூப்பி “ஐயாம் சாரி சாரி மேரி மா. வேற வழியில்லாம சொல்லிட்டேன்” என்று மன்னிப்புக் கேட்கவும்தான் மலை இறங்கினாள்.
“ஓகே! கொஞ்சம் வெளியே போங்க. நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும்”
“ஓகே” என்று சொல்லிவிட்டு வெளியே செல்லவும் அவள் உடையை மாற்றிவிட்டு வெளியே சென்று அவனை மாற்றுமாறு கூறிவிட்டுக் கீழே சென்று தாதியின் மருமகள் ஊர்மிளாவுக்கு உணவு தயாரிப்பில் உதவச் சென்றாள்.
பேசிக்கொண்டே இரவு உணவை முடித்துவிட்டு அவர்களையும் உறங்குமாறு சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார் தாதி. அந்த அறைக்கு வரவும் அவந்திகாவுக்கு அலுப்பு காரணமாக நன்றாக உறக்கம் வரவே மெத்தையில் படுத்து உறங்கிவிட்டாள். சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தவன் குழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்தவளைக் கண் இமைக்காமல் பார்த்தான் சில கணம். பின்னர் அவளுக்கு ஒரு போர்வையைப் போர்த்திவிட்டு அங்கிருந்த பெரிய சோஃபாவில் படுத்தவன் அப்படியே உறங்கிவிட்டான். விடிந்ததும் நடக்கப் போகும் விபரீதத்தை உணராது நிம்மதியான துயிலில் ஆழ்ந்தனர் இருவரும்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


