வீட்டுக்கு வந்த அவந்திகா இன்னும் கோபமாகத்தான் இருந்தாள். அவளுடைய செய்கை வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைத்தவளிடம் ராகவ் ஒரேயடியாக அவள் மேல்தான் தவறு என்று கூறியதை ஜீரணிக்க முடியவில்லை.
அமைதியாக ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்தவளைப் பார்த்த சுமித்ரா அவள் வழக்கமாக அப்படி உட்கார்ந்திருக்க மாட்டாளே என்று எண்ணிக்கொண்டு அவள் அருகில் அமர்ந்தார்.
“அவந்திகா! என்னாச்சுடா? ஏன் ஒரு மாதிரியா இருக்க? எதும் பிரச்சனையா?”
அவரிடம் பேசினால் தனக்கு மனநிம்மதி கிடைக்கும் என்று நினைத்தவள் அவரது முகத்தைப் பார்த்து முறுவலித்தாள்.
“தாதி எனக்கு ஒரு கன்ஃப்யூசன்… கிளியர் பண்ணுவீங்களா?”
“ம்ம்.. கேளு”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“உங்க முன்னாடி ஒருத்தன் தன்னோட சகமனுஷனை அவனோட தகுதியைக் காமிச்சுத் தரக்குறைவா பேசுனா நீங்க என்ன பண்ணுவீங்க? அப்போ உங்களுக்கு அவங்க மேல கோவம் வருமா வராதா?”
சுமித்ரா தன் பதிலுக்காகக் காத்திருக்கும் பேரன் மனைவியைப் பார்த்தபடியே “ஒண்ணும் பண்ண மாட்டேன். நேரா அப்பிடிப் பேசுனவன் கன்னத்துல ரெண்டு அறை குடுத்து இப்பிடித்தான் உங்க வீட்ல உன்னை வளத்தாங்களானு கேட்டு இன்னும் ரெண்டு அறை குடுப்பேன்” என்று சொல்ல
அவரைக் கட்டி அணைத்துக்கொண்டவள் “தாதி நீங்க ரொம்ப ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்ட். அப்போ நானும் உங்கள மாதிரி நடந்துகிட்டா தப்பு இல்லதானே” என்று கேட்டு அவரின் கன்னத்திலேயே முத்தமிட்டாள்.
“தப்பைப் புரியவைக்கிறதுக்கு வயசு வித்தியாசமே கெடையாதுடா” என்று அவரும் அவளை அணைத்துக்கொண்டார். இருவரும் கொஞ்சிக் கொண்டிருக்கும்போது வந்து சேர்ந்தான் வருண்.
அவனைப் பார்த்து மலர்ந்த அவந்திகாவின் முகம் அவன் பின்னே வந்தவனைக் கண்டதும் கூம்பிப் போனது. முகத்தில் ஒரு அலட்சியத்துடன் அவனைப் பார்த்தவள் பின்னர் மருந்துக்குக் கூட அவனைக் கண்டுகொள்ளவில்லை. அவனுக்குமே வந்த உடனே சண்டைக் காட்சிக்குத் தயாராகும் அளவுக்குச் சக்தி இல்லை.
அமைதியாக சோஃபாவில் அமர்ந்தவன் அவன் அருகே அமர்ந்த ராதிகாவின் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான். அவர் அவனது தலையைத் தடவிக்கொடுத்தவாறு பேசவும் அவந்திகா தாதியின் காதில் “இப்போ எதுக்கு இந்தக் குட்டிப் பாப்பா அவங்க அம்மாவக் கொஞ்சிட்டு இருக்கு தாதி?” என்று கேலி பேசினாள்.
“அவனுக்கு எப்போல்லாம் மனசுக்குக் கஷ்டமா இருக்குனு நெனைக்கிறானோ அப்போல்லாம் ராதிகா மடில படுத்துப்பான்”
“ஓ! உங்க பேரனுக்கு மனசுல்லாம் வேற இருக்கா?” என்று சொல்லி வாயைச் சுழிக்கவும் தாதி சிரித்துக் கொண்டார்.
“என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?” என்று கேட்கவும் அவந்திகா தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.
“எப்பிடி கண்டுபிடிச்சீங்க?” என்று கண்ணை உருட்டி அவள் கேட்ட விதத்தில் இன்னும் சிரித்தவர் “நீ இங்க ஒரு மூலைல கன்னத்துல கை வச்சிட்டு உக்கார்றதும் அவன் அம்மா மடில படுத்துக் கொஞ்சுறதும் பாத்தாலே தெரியுது” என்று சொல்லவும் அவரின் மூளையை நினைத்து அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
“வாவ்! சுமி பேபி யூ ஆர் அ லெஜன்ட். பை தி வே இதுல தப்பு எதுவும் என் பேருல இல்ல” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள். திரும்பி அவனையே முறைக்கவும் அவள் கேட்ட கேள்விக்கும் இப்போது கூறியதற்கும் சம்மந்தம் இருப்பதாக நினைத்தார்.
“ராகவ் ஏதோ பண்ணிருக்கான்னு மட்டும் புரியுது. இதுல நான் உங்க ரெண்டு பேரையும் குறை சொல்லப் போறதில்ல. நீங்க சந்திச்ச விதமோ உங்க கல்யாணம் நடந்த விதமோ கொஞ்சம் கூட நார்மல் இல்ல. ஆனா உனக்கு ஒன்னு மட்டும் சொல்லுவேன். ராகவ் என்னைக்கும் அவனுக்குச் சொந்தமானவங்க மனசைக் கஷ்டப்படுத்த மாட்டான். அப்பிடியே தெரியாமக் கஷ்டப்படுத்திட்டாலும் அவங்களைச் சமாதானப்படுத்துற வரைக்கும் ஓய மாட்டான்” என்று பேரனைப் பற்றிக் கூறிப் பெருமைப்பட்டுக்கொண்டார்.
“ஏதோ நீங்க சொல்றீங்க. பட் நான் பாத்த வரைக்கும் சில விஷயங்கள்ல அவன் இன்னும் பிடிவாதமாதான் இருக்கான். வெறும் பத்து நாள்ல ஒருத்தன் சேஞ்ச் ஆகுறதுங்கிறது மூவில மட்டும்தான் நடக்கும். பாப்போம் உங்க பேரன் எப்போ இந்த உண்மையப் புரிஞ்சிப்பான்னு” என்று சொல்லிவிட்டு தாதியிடம் வேறு கதைகளை (வேற என்ன! அந்த ஜூஸ் கொட்டுன கதைதான்) சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
அவளை விட்டுச் கொஞ்சம் தள்ளியிருந்த சோஃபாவில் ராதிகாவின் மடியில் படுத்திருந்த ராகவ் அவளின் சிரிப்புச் சத்தம் கேட்டதும் எழுந்து தனக்குத் தலைவலிப்பதாகக் கூறிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.
சிறிது நேரத்தில் ராதிகா கையில் டீ கப்புடன் வந்தவர் அவந்திகாவிடம் “இந்த டீயை ராகவ்கிட்ட குடுத்துட்டு வாடா! தலைவலிக்குதுனு சொல்லிட்டுப் போனான்” என்று சொல்லவும் அவள் தலையசைப்புடன் வாங்கிக்கொண்டு படியேறினாள்.
உள்ளே சென்றவள் ராகவின் முன் கப்பை நீட்டினாள். அவன் ஏதும் சொல்லாமல் கப்பையும் வாங்காமல் இருக்க “உன்னோட மம்மி குடுக்கச் சொன்னாங்க” என்று சொல்லவும் அவன் பெரிதாக எதுவும் ரியாக்ட் செய்யாமல் அவனது சட்டையின் கை மடிப்பைக் கலைத்துக்கொண்டிருக்கவும் கடுப்பானவள் கப்பை அவன் அருகிலிருந்த டீபாயின் மீது வைத்துவிட்டுத் திரும்பவும் ராகவ் அந்த நாற்காலியிலிருந்து எழுந்தான்.
“அவந்திகா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”
“பேசு” என்று சொல்லிவிட்டு அவனுக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்தாள்.
“ஆக்சுவலி நீ போனதுக்கு அப்புறமாதான் லேரன் வந்து பிராப்ளம் என்னனு எனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணா” என்றவனை அலட்சியமாகப் பார்த்தவள் “ஓ….ம்ம்ம்…கண்டினியூ” என்று கைகாட்ட அவன் மேலே பேசத் தொடங்கினான்.
“தப்பு லிசா மேலதான்னு அப்போதான் எனக்குப் புரிஞ்சுது”
“அஹான்… இன்னும் உங்களுக்கு வேற என்னல்லாம் புரிஞ்சுது?”
“ஐ அக்ரீ அவ எர்ரென்ட் ஸ்டாஃப்ஸ இன்சல்ட் பண்ணிருக்கக் கூடாது” என்று சொல்லவும் அவந்திகாவுக்குப் போன கோபம் திரும்பி வந்தது.
“வாவ்! இதுவே இப்போதான் உங்களுக்கு உறைக்குதா ஆபிஸர்? இததான நானும் கரடியா கத்துனேன். ஆனா நீங்கதான் அது எதையும் கேக்கிற நெலைமைல இல்லயே” என்றாள் அவள் ஆதங்கத்துடன்.
அவன் சிகையைக் கோதிக்கொண்டவன் “அவந்திகா என்னை எப்பிடித்தான் ரியாக்ட் பண்ணச் சொல்லுற?” என்று புரியாமல் கேட்டான்.
“நீ எதுவும் பண்ண வேண்டாம் ராகவ். நான் சொல்ல வர்றது ஒன்னுதான். ஒர்க் பண்ணுற எடத்துல எல்லாரும் ஈக்வல்தான். தப்பு பண்ணா அதத் திருத்திக்கச் சான்ஸ் குடுக்கணுமே தவிர அவங்க லெவல சொல்லிக் காட்டி அவங்கள இன்சல்ட் பண்ணக் கூடாது.. தட்ஸ் ஆல்” என்று சொல்லிவிட்டுக் கையைக் கட்டி அமர்ந்து கொண்டாள்.
“ஓகே இனிமே இப்பிடி நடக்காது. ஐ ப்ராமிஸ்” என்று சொல்லவும் சமாதானமானவள் “சரி டீயக் குடிச்சிட்டுக் கப்பை குடு. அங்க மதர் இந்தியா வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என்று கூறினாள்.
“அப்போ டுமாரோ ஆபிஸ் வர்றதுல உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைதானே” என்று சொல்லிவிட்டு டீயைக் குடிக்கத் தொடங்கினான் ராகவ்.
“நான் உன்கிட்ட அப்பிடிச் சொல்லலையே! நான் இனிமே அந்த ஆபிஸ் பக்கம் வரப்போறதே இல்ல” என்று தீர்மானமாகக் கூறினாள்.
பின்னர் “திரும்பவும் ஒரு இன்சிடென்ட் இதே மாதிரி நடந்தா நான் இப்பிடித்தான் பிஹேவ் பண்ணுவேன் ராகவ். அப்புறம் உனக்குத் தேவையில்லாமக் கோவம் வரும்.. எதுக்கு இதுல்லாம்? நீ உன்னோட ஆபிஸ்ல உன்னோட ஒர்க்கைப் பாரு. நான் என்னோட ஆபிஸ்லயே இருந்துக்கிறேன். அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது” என்று ஒரு லெக்சரே அடிக்க ராகவ்தான் அவளைச் சமாளிக்க முடியாமல் திணறிவிட்டான்.
“நான்தான் இனிமே இப்பிடி ஒரு இன்சிடென்ட் நடக்காதுனு சொல்றேன்ல, உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று கேட்க அவந்திகா “கொஞ்சம் கூட இல்ல” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு அவன் கையிலிருந்த காலி கப்பை வாங்கிக்கொண்டு கீழே சென்றாள்.
கண்ணாடியைப் பார்த்தவன் “இதுல்லாம் உனக்குத் தேவையா ராகவ்? இந்த ஜான்சி ராணிய உன்னால சமாளிக்க முடியாதுனு தெரிஞ்சும் நீ கொஞ்சம் ஓவராதான் பேசிட்ட. என்ன பண்ணுறது?” என்று புலம்பியவன் அவள் பின்னேயே கீழே சென்றான்.
அங்கே அவள் பிந்துவிடம் லேப்டாப்பைக் காட்டி ஏதோ விளக்கிக் கொண்டிருக்க அவளின் எதிர்ப்புறம் அமர்ந்தவன் யோசனையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவன் அருகில் அமர்ந்தான் வருண்.
“அப்புறம் ராகவ் மன்னிப்புலாம் கேட்டு முடிச்சாச்சா?”
“பய்யா! ப்ளீஸ் கிவ் மீ அன் ஐடியா! நான் எவ்ளோவோ ட்ரை பண்ணியும் அவ ஆபிஸ்கு வர மட்டும் ஒத்துக்கவே இல்ல”
“அவ அவ்ளோ ஈஸியா ஒத்துக்க மாட்டா. எனக்கு அவந்திகாவ 4 இயர்ஸா தெரியும். ஷீ இஸ் சோ அடமெண்ட். பட் அவ பிடிவாதம் பிடிச்சா கரெக்டாதான் இருக்கும்” என்று வருண் அவந்திகாவைப் பற்றிச் சொல்ல ராகவ் “வெயிட் அ மினிட்.. இந்த ஜான்சி ராணிய உங்களுக்கு 4 இயர்ஸா தெரியுமா? ஏன் என்கிட்ட சொல்லவேயில்ல?” என்று அங்கலாய்த்தான்.
“கம் ஆன் ராகவ்! ஷீ இஸ் மை ஜூனியர் இன் காலேஜ். இதே பிடிவாதம், சுறுசுறுப்புலாம் அப்பவே உண்டு அவகிட்ட. பட் என்ன கோவம் கொஞ்சம் அதிகமா வரும்.. மனசுல எதையும் வச்சிக்க மாட்டா” என்று வருண் அவளைப் பற்றி விவரித்தான்.
“அதான் உங்கள வருண்னு நேம் சொல்லிக் கூப்பிடுறாளா? அத விடுங்க.. என்னோட பிராப்ளம்க்கு ஒரு சொல்யூஷன் சொல்லுங்க” என்றான் ராகவ் காரியத்தில் கண்ணாக.
வருண் சில கணங்கள் அமைதியாக யோசித்தவன் “உனக்குத் தெரிஞ்சு அவளுக்கு எதாச்சும் வீக்னெஸ் இருந்தா அத வச்சு ஓகே சொல்ல வை” என்று சொல்ல ராகவ் ஆர்வத்துடன் “வீக்னெஸ்? அவளுக்கு ரெண்டு விஷயத்துல அவ வீக் ஆயிடுவா. அதுல ஒன்ன ட்ரை பண்ணா போதும். தேங்க்யூ பய்யா… ஐ லவ் யூ” என்று சொல்லி அவனைக் கட்டி அணைத்தவன் வேகமாகப் படியேறினான்.
போகும் முன் அவந்திகாவின் புறம் திரும்பிச் சிரித்தவன் “நீ டுமாரோ எப்பிடி ஆபிஸ் வராம இருக்கன்னு நானும் பாக்கிறேன் ஜான்சி ராணி” என்று எண்ணிக்கொண்டே அவர்களின் அறைக்குச் சென்றான்.
அவந்திகாவோ இது எதையும் அறியாமல் அவளது தம்பி அஜ்ஜூ நான் வெஜ் சாப்பிட ஆரம்பித்த விஷயத்தை உஷாவிடமும் நேஹாவிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள்..
காலையில் டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்ட அவந்திகா ராகவ் டையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டே தன்னைப் பார்த்துச் சிரிப்பதைப் பார்த்ததும் இவன் ஏதோ பிளான் பண்ணுறான் என்று மனதில் கூறிக்கொண்டாள்.
“இப்போ நீ எதுக்கு மேன் இப்பிடி இடியட் மாதிரி சிரிக்கிற?” என்று கடுப்பாகக் கேட்டவளைப் பார்த்து “ஆபிஸ் வர மாட்டேனு யாரோ சொன்னாங்க… பட் எனக்கு முன்னாடி அவங்க ரெடியாயிட்டு இருக்காங்க” என்று கேலி செய்தான் ராகவ்.
அவன்புறம் திரும்பி உதட்டைச் சுழித்தவள் “நான் ஆபிஸ்தான் போறேன்.. பட் என்னோட ஆபிஸ்கு” என்று சொல்லிவிட்டுக் கூந்தலைச் சரி செய்து கொண்டாள்.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கீழே செல்ல இருந்தவளை அழைத்தவன் அவளுடன் அழைத்துச் சென்றான்.
கீழே சத்தமாக இருக்கவும் யாரோ வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க போல என்று நினைத்து இறங்கிய அவந்திகா அங்கே ரகுவரன், கௌசல்யாவைப் பார்த்ததும் “சித்தி” என்ற சந்தோஷக் கூவலுடன் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.
“சித்தப்பா” என்று ரகுவரனிடம் ஹைஃபை கொடுத்தவளைப் பார்த்தவர் “குட்டிமா ஆபிஸ்க்கு ரெடியாயிட்ட போல” என்று கேட்டவருக்கு அவள் பதிலளிக்கும் முன்னர் முந்திக்கொண்டான் ராகவ்.
“யெஸ் அங்கிள்! நாங்க ஆபிஸ்க்குத்தான் போறோம்” என்று சொல்லி அவந்திகாவை ஒரு பார்வை பார்த்தபடியே “கௌசிமா! எங்க ஆபிஸ் கூட இவங்க ஒரு கான்ட்ராக்ட்ல சைன் பண்ணிருக்காங்க… சோ இவங்க மூணு பேரும் இப்போ எங்க ஆபிஸ்லதான் இருக்காங்க” என்று அவர் கேட்காத விவரத்தையும் சேர்த்துக் கூற அவந்திகா அமைதியாக அனைத்தையும் வேடிக்கை மட்டும் பார்த்தாள்.
“என்னோட ஸ்டாஃப்ஸ் எல்லாரும் உங்க பொண்ணை எப்பிடிப் பாராட்டுறாங்க தெரியுமா? நீங்க எங்க ஆபிஸ்க்கு வந்து பாருங்க! அப்போதான் உங்களுக்கு அந்த ஃபீல் புரியும்” என்று சொல்ல அவர்களும் கட்டாயம் வருவதாகக் கூற அவந்திகா மனதில் ஒரு குட்டிப் பூகம்பம் வந்து போனது.
இனித் தான் விஹானுக்குப் போகாமல் இருக்க இயலாது என்பதைப் புரிந்துகொண்டவள் ராகவ்வைப் பார்த்து முறைத்தவாறே “ராகவ்! கொஞ்சம் வாங்க. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சிரித்துக்கொண்டே அவனது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே தங்கள் அறைக்குக் கூட்டி வந்தாள்.
உள்ளே வந்ததும் ராகவின் முகத்துக்கு நேராக விரலை நீட்டி “நீ சித்திய வச்சு என்னை உன்னோட ஆபிஸ்கு வர வைக்கப் பாக்கிறல்ல” என்று முகத்தைச் சுருக்கிக் கூறவும் அவளது விரலைப் பிடித்தான் ராகவ்.
“என் முன்னாடி விரல நீட்டிப் பேசாதனு எத்தனை தடவை சொல்லுறது ஜான்சி ராணி?”
“ஆவ்!! கைய விடுடா.. வலிக்குது” என்று அவனிடமிருந்து விரலைப் பிடுங்கியவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.
“நீ என்ன வேணா பண்ணிக்கோ. ஆனா நான் வர மாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்தவளைக் குறும்புடன் பார்த்துக்கொண்டே “இஸிட்? அத நீ கௌசிமாகிட்டயே சொல்லிடுறியா?” என்று கேட்டபடி “கௌசிமா” என்று சத்தமாக அவரை அழைத்தான்.
அவன் இன்னொரு முறை அழைப்பதற்குள் தன் கையால் அவன் வாயை மூடியவள் “கத்தாத! ப்ளீஸ். இப்போ என்ன நான் ஆபிஸ்கு வரணும் அவ்ளோதான. வர்றேன்” என்று சொல்லித் தன் கையை எடுத்துக்கொண்டாள்.
அவள் கையை எடுத்ததும் சட்டையில் இல்லாத சுருக்கை எடுத்துவிட்டுக்கொண்டவன் கண்ணாடியில் தன் டையைப் பார்த்துவிட்டு “அவந்திகா! கொஞ்சம் இந்த டையைச் சரி பண்ணிவிடுறியா?” என்று கேட்கவும் அவள் கொதிநிலைக்கே சென்றாள்.
“நான் உனக்கு டையைச் சரி பண்ணணுமா? முடியாதுடா”
“இஸிட்? ஓகே! அப்போ நான் கௌசிமாகிட்டயே பேசிக்கிறேன்” என்று புருவம் உயர்த்தவும் வேகமாக அருகில் வந்தவள் நன்றாகக் கட்டியிருந்த டையில் என்ன சரி பண்ண என்று யோசிக்கவும் ராகவ் அதைக் கழட்டிவிட்டு “இப்போ கட்டிவிடு” என்று குறும்புடன் கூறினான்.
அவந்திகா “நீ நல்லாதானே கட்டிருந்த. தென் எதுக்கு அதைக் கழட்டிட்டுக் கட்டச் சொல்லுற?” என்று புரியாமல் கேட்டாள்.
“நான் நல்லாதான் கட்டிருந்தேன் ஜான்சி ராணி… பட் என்னதான் இருந்தாலும் என்னோட வைஃப் அன்போட கட்டிவிட்ட மாதிரி இருக்குமா?” என்று கண் சிமிட்டினான்.
அதைக் கண்டு பல்லைக் கடித்தவள் “வாட் த ஹெல்?” என்று ஆரம்பிக்கவும் அவன் “கௌசிமா” என்று ஆரம்பித்தான்.
“ஐயோ சித்திக்கு ஆயிரம் வேலை இருக்கும் ராகவ். அவங்களை எதுக்கு அடிக்கடிக் கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்ணுற. இப்போ என்ன இந்த டையைக் கட்டணுமா? சொன்னாக் கட்டிவிடப் போறேன்” என்று சமாளித்தபடியே கட்டி விட்டாள்.
அவளின் முகபாவங்களைப் பார்த்தவனுக்கு இப்படியே நின்று கொண்டிருந்தால் கூடப் போதுமென்று தோன்றியது. அவளது முகத்தில் விழுந்த முடிக்கற்றையை ஒதுக்கிவிட்டபடியே ஆழ்ந்த குரலில் “சாரி அவந்திகா” என்று கூற டையைக் கட்டிக்கொண்டிருந்தவள் நிமிர்ந்து கண்ணை விரித்து அவனது முகத்தைப் பார்த்தாள்.
“நீ என்கிட்ட சாரி கேட்டியா?”
“இங்க நம்ம ரெண்டு பேரத் தவிர வேற யாராச்சும் உன் கண்ணுக்குத் தெரியுறாங்களா?” என்று அவளிடம் கேட்க அவள் இல்லையென்று தலையாட்டினாள்.
“அப்போ என்ன ஜான்சி ராணி? நான் உன்கிட்டதான் சாரி கேட்டுட்டு இருக்கேன்” என்று ராகவ் மெய்யான வருத்தத்துடன் சொல்லவும் அவந்திகா முகத்தில் ஒளி பரவியது…
பின்னர் “சீரியஸ்லி?” என்று சந்தேகமாக அவள் கேட்கவும் அவன் அதற்கு அவனது சிரிப்பையே பதிலாக அளித்தான்.
அந்நேரத்தில் “பய்யா!” என்ற அமரின் குரல் அவன் அறைக்குள் வந்துகொண்டிருப்பதைத் தெரிவிக்க இருவரும் விலகி நின்றனர்.
அமர் அவந்திகாவிடம் வந்தவன் அவர்களின் ரிசப்ஷன் போட்டோவைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.
அதில் இருவரும் ஜோடியாக இருந்த பெரிய போட்டோவை அந்த அறையின் மையத்தில் சுவற்றில் மாட்டினான் ராகவ்.
அந்தப் போட்டோவில் தன்னையும் அவந்திகாவையும் பார்த்தவனின் உதடுகள் தானாகவே கூறியது.. “வாட் அ லவ்லி மொமண்ட்”
“என்ன கண்ணுடா” என்று சொல்லித் தன் சிகையைக் கோதிக்கொண்டவன் தன்னையே குறுகுறுவென்று பார்த்த அவந்திகாவை என்னவென்று கண்ணாலே கேட்டான்.
“இப்போ நீ எதோ சொன்னியே?”
“நான் என்னைப் பாத்துட்டு இருந்தேன்மா. எவ்ளோ ஹாண்ட்ஸம்ல..” என்று சிலாகிக்க அவந்திகா உதட்டைச் சுழித்தாள்.
“நானும் இந்தப் போட்டோல இருக்கேன்.. இன் ஃபேக்ட் உன்னை விட இதுல நான்தான் அழகா இருக்கேன்” என்று சொல்லவும் பக்கென்று அடக்க முடியாமல் சிரித்தான் ராகவ்..
“இப்போ எதுக்குச் சிரிச்ச? ஒழுங்கா சொல்லிடு”
“ஒன்னும் இல்லையே” என்று அவளிடமிருந்து தப்பித்து வேகமாகச் செல்லவும் அவந்திகா அவன் பின்னாலே “ஹேய்! நில்லு மேன். என்னோட கேள்விக்குப் பதில் சொல்லிட்டுப் போ” என்று அவனைத் தொடர்ந்து ஓடினாள்..
அவர்களின் மனதை மற்றவர்களுக்குத் தெரிவிக்க அந்தப் போட்டோ ஒன்றே போதும். எந்தக் கோபமோ வருத்தமோ இன்றி இருவரும் மனதார ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்ட அழகான தருணம் அது.
நாட்கள் வேகமாக ஓட ஈவன்ட்டிற்கான முக்கால் வாசி வேலைகள் முடிந்த நிலையில் அவந்திகாவும் ரித்திமாவும் மட்டும் தினமும் ராகவின் அலுவலகத்துக்குச் சென்றனர்.
அங்கே இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு நன்கு பழக்கமானதால் லாராவை அவர்கள் எதற்கும் தொந்தரவு செய்யவில்லை. அவந்திகாவைப் பொறுத்தவரை வர்ஷாவும் மேடியும் அவளுடன் சேர்ந்து நன்றாகவே ஒத்துழைத்தனர்.
மேடிதான் அவள் செய்த சில காரியங்களைப் பார்த்துக் கொஞ்சம் பதற்றமாகி விடுவான். அவனுக்கு ராகவ் என்றால் எப்போதுமே தயக்கத்துடன் கூடிய ஒரு பயம் இருந்தது. அவந்திகாவும் வர்ஷாவும் அதைச் சொல்லிக் காட்டியே அவனை ஒரு வழியாக்கியதால் அவன் அவ்வப்போது ராகவின் முன்னிலையில் பதற்றமாகி விடுவான்.
ராகவ் அவர்களின் பணியில் தலையிடவில்லை. அவனுக்குத் தேவை அவர்களின் கடின உழைப்பும் கிரியேட்டிவ் மைன்ட்டும் தான். அவர்களின் வேலை திருப்திகரமாக இருக்கவே இப்போதெல்லாம் வார இறுதி மீட்டிங்கிற்குக் கூட அவர்களிடம் ரிப்போர்ட் கேட்பதில்லை அவன்…
லிசாவும் இப்போது யாரிடமும் பிரச்சனை செய்யாமல் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டதால் அவந்திகாவுக்கு ராகவிடம் விவாதம் பண்ணுவதற்கான அவசியம் வரவில்லை.
ஆனால் அவன் எரிச்சலாக்கும்படி அவள் ஒரு காரியத்தைத் தவறாமல் செய்தாள்.. அதனால் நாளொரு சண்டையும் பொழுதொரு சமாதானமுமாக அவர்களின் வாழ்க்கையும் ஜெகஜோதியாகப் போய்க்கொண்டிருந்தது….
வேலையில் மூழ்கிவிட்டால் அவந்திகா, மேடி, வர்ஷா மூவரும் சுற்றுப்புறத்தையே மறந்து விடுவார்கள். இதனாலே அவர்கள் பெரும்பாலான நாட்கள் மதிய உணவை மறந்தனர். அவர்களுக்கு அது நியாபகம் வரும்போது மாலை தேநீர் நேரம் ஆகிவிடும். அப்புறம் என்ன? டீயைக் குடித்துவிட்டு மீண்டும் வேலையைத் தொடர்வார்கள்.
இப்படியே அவர்களின் செய்கையை நீண்டநாட்கள் கவனித்த லாரா ஒரு நாள் கடுப்பில் ராகவிடம் கூறிவிட்டாள். “லிசன் ராகவ்!! எங்க இருந்து இந்த சன் டியூ ஸ்டாஃபைப் பிடிச்ச? அவகூட சேந்து மாதவ்வும், வர்ஷாவும் பண்ணுற கூத்துக்கு ஒரு அளவே இல்லாமப் போய்ட்டு இருக்கு” என்று புலம்பினாள்.
“என்னாச்சு லேரன்? ஒர்க்ல எதும் பிரச்சனையா?”
“ஐயோ! நீ வேற. ஒர்க்தான் இப்போ பிரச்சனையே… அந்த மூணு பேரும் எப்போ பாத்தாலும் அந்தக் கேபின்குள்ள ஏதாச்சும் ரைட் பண்ணிட்டு டிஸ்கஸ் பண்ணிட்டே சுத்துவாங்க. அப்புறம் திடீர்னு எங்கயாச்சும் போயிட்டு பேம்ப்ளட்ஸ், ஃப்ளாக்னு வாங்கிட்டு வருவாங்க. அதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணனும்னு சொல்லி நம்ம தேர்ட் ஃப்ளோர்ல இருக்க ஸ்டேஜைக் குப்பையாக்குவாங்க. இதுக்கு மத்தில லஞ்ச்னு ஒன்னு இருக்கிறதையே மறந்து போயிடுவாங்க.
இத நான் ஒன் வீக்கா நோட்டிஸ் பண்ணிட்டுருக்கேன். இன்னைக்கு ஒன் ஓ க்ளாக் லஞ்ச்க்குப் போங்கனு சொல்லிட்டு என்னோட லஞ்சை முடிச்சிட்டு வந்து பாக்குறேன், அவங்க அங்கதான் இருக்காங்க. அகெய்ன் ரிமைன்ட் பண்ணி 2 ஹவர்ஸ் ஆகுது. இன்னும் சாப்டாம அப்பிடி என்னதான் ஒர்க் பாப்பாங்களோ?” என்று டென்ஷனில் புலம்பித் தள்ளினாள்.
அவள் டென்ஷனாகிவிட்டால் அவளை அமைதிப்படுத்துவது கொஞ்சம் சிரமம். ராகவ் “ஓகே லேரன்! நீ டென்ஷன் ஆகாத!… நான் பாத்துக்கிறேன்” என்று அவள் தோளில் தட்டிவிட்டுச் சென்றவன் நேரே சென்ற இடம் அவந்திகாவின் கேபின்.
அவன் உள்ளே நுழைந்ததைக் கூடக் கவனிக்காமல் தீவிரமாக மூவரும் லேப்டாப்பில் எதையோ பார்த்து டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தனர்.
மேடி “இந்த கலர் ஃப்ளாக்தான் பெட்டர்” என்று சொல்லவும் அவந்திகாவும் வர்ஷாவும் அதற்கு ஒப்புதல் அளிக்கவே மூவரும் அப்போதுதான் நேரத்தைப் பார்த்தனர்.
மேடி “லேரன் சொல்லிட்டுப் போய் இவ்ளோ நேரம் ஆயிடுச்சா? ஓகே! வாங்க பேன்ட்ரில எதாச்சும் சாப்பிட்டு வருவோம்” என்று சொல்லவும் வர்ஷா “இப்போ அங்க எதுவும் இருக்காதுடா” என்று சொல்லி அவந்திகாவைப் பார்த்தாள்.
அவளோ “சரி வாங்க! இன்னைக்கும் என் கையாலதான் டீ குடிக்கணும்னு உங்க தலையெழுத்து” என்று இருவரின் தோளில் கை போட்டு எழும்பவும் ராகவ் அவர்களை முறைத்துக்கொண்டு நிற்கவும் சரியாக இருந்தது.
மேடிக்கு டென்ஷனில் நாக்குக் குழற ஆரம்பித்தது. அவன் கையைப் பிடித்து ரிலாக்ஸ் என்ற அவந்திகா ராகவைப் பார்த்து “குட் ஆஃப்டர் நூன் சார்” என்று சிரித்தமுகமாகக் கூற மற்ற இருவரும் அவளைப் பின்பற்றிக் கூறினர்.
“நூனா? குட் ஈவ்னிங்” என்று சொல்லிவிட்டு மூவரையும் முறைத்தவன் “இன்னைக்குதான் லாஸ்ட். இனிமே டைம்க்கு லஞ்ச்க்குப் போகாம இருந்தா ஐ வில் ஃபயர் போத் ஆஃப் யூ” என்று மேடியையும் வர்ஷாவையும் எச்சரித்தான் அவன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


