.
.
சிம்பிள் ஸ்பகடி பாஸ்தா ரெசிபி
தேவையானப் பொருட்கள்
- ஸ்பகடி பாஸ்தா – பாக்கெட்டில் பாதி அளவு (2 பேருக்கு)
- ஆலிவ் ஆயில் / வெண்ணெய் – தேவையான அளவு
- பூண்டு – 5 பற்கள்
- சில்லி ஃப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்
- கொத்துமல்லி தழை – ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
- சீஸ் – துருவியது
செய்முறை
- தண்ணீரில் உப்பு, சிறிதளவு சமையல் எண்ணெய் ஊற்றி ஸ்பகடியைப் போட்டுக் கொதிக்கவிடவும்.
- அல் டென்டே பதம் வந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு ஆற வைக்கவும்.
- வாணலியில் வெண்ணெய்யை உருக்கி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸை போட்டு வதக்கவும்.
- வதக்கிய கலவையில் ஸ்படி வேக வைத்த தண்ணீரை ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு ஊற்றிவிட்டு ஸ்பகடியை அதில் போட்டுக் கிளறவும்.
- பின்னர் கொத்துமல்லி தழையைத் தூவி, சீஸைத் துருவி ஒரு கிளறு கிளறிவிட்டு இறக்கவும்.
- சிம்பிளான ஸ்பகடி பாஸ்தா தயார்.
குறிப்பு
அல் – டெண்டே பதம் என்பது பாஸ்தாவை வேக வைக்கும் பதம். பாஸ்தா முழுவதுமாக வெந்துவிடக் கூடாது. ஒரு பாஸ்தாவை எடுத்துக் கத்தியால் வெட்டிப் பார்க்கையில் வெளிப்பகம் நன்றாக வெந்தும் உள்ளே சிறிதளவு வேகாத நிலையிலும் இருந்தால் அது அல் டெண்டே பதம். அடுத்தக் கட்ட சமையல் முறையில் மீண்டும் உணவுப்பொருட்களோடு பாஸ்தா சமைக்கப்படும்போது முழுவதுமாக வெந்துவிடும். (செஃப் ஃப்ரெண்ட் ஒருத்தர் சொன்ன குறிப்பு இது)
இதோ எங்க வீட்டுல செஞ்ச ஸ்பகடி (டயட் இருப்பதால நோ சீஸ்)
Share your Reaction
Topic starter
Posted : June 22, 2025 3:48 PM